தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

» சந்தேகம் தெளிவோம்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 12:33 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Go down

இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி Empty இலக்கிய அலைவரிசை ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

Post by eraeravi Thu Dec 11, 2014 11:59 pm

இலக்கிய அலைவரிசை !

  • நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா. மோகன் !
    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
    வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.  vanathipathippagam@gmail.com.  044 24342810

    *****
           நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக, துறைத்தலைவராக, தகைசால் பேராசிரியராக பணிபுரிந்து கொண்டே எழுத்து, பேச்சு என இரண்டு துறையிலும் தனி முத்திரை பதித்து வந்தவர் .  தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்ற காரணத்தால் பகுதி நேரமாக இருந்த இலக்கியப் பணி முழுநேரமாகி விட்டது.  ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு இலக்கிய இமயம் மு.வ.வின் செல்லப்பிள்ளையான நூலாசிரியர் முழு வீச்சுடன் இலக்கியத்தில் மு .வ . போலவே தடம் பதித்து வருகிறார்.  117 நூல்களின் ஆசிரியர் என்பது அளப்பரிய சாதனை.  எழுதுவது, பேசுவது இந்த இரண்டையும் உயிர்மூச்சாகக் கொண்டு நாளும் இயங்கி வரும் ஆளுமையாளர்.

           தமிழ்த்தேனீ என்ற பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர்.  தமிழ்மொழியில் உள்ள தேனை வாசகர்களுக்கு விருந்தாக ஒவ்வொரு நூலிலும் வைத்து வருகிறார்கள்.  ‘இலக்கிய அலைவரிசை’ என்ற இந்த நூலில் ஆளுமை அலைவரிசை, இலக்கிய அலைவரிசை, கவிதை அலைவரிசை, செம்மொழி அலைவரிசை, சிந்தனை அலைவரிசை ஆகிய அய்ந்து உட்பிரிவுகளுடன் ஒவ்வொரு பிரிவிலும் 6 கட்டுரைகளும் மொத்தம் 30 முத்தாய்ப்பான கட்டுரைகள் உள்ளன.

         ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் முக்கியமான மேற்கோள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என சிறப்பு மிக்க கட்டமைப்பு. வாசித்தால், வாசிக்கும் வாசகர்களுக்கு பிரமிப்பு.  ஒவ்வொரு கட்டுரையும் 10 நூல்களுக்கு சமம்.  எனவே நாம் 300 நூல்கள் படித்த உணர்வு.

           எப்படி இவருக்கு நேரம் வாய்க்கிறது என்று நான் வியப்பதுண்டு.  மாதாமாதம் கவிதை உறவு, புதுகைத் தென்றல், மனித நேயம் போன்ற சீரிதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார்கள்.  தினமலர் நாளிதழிலும் என் பார்வை என்ற பகுதியில் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வருகிறார்கள்.  வாசகர்கள் பார்வையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.  இந்த நூலில் உள்ள கட்டுரைகளை சீரிதழ்களிலும், நாளிதழிலும் படித்திருந்த போதும் மொத்தமாக நூலாகப் படித்த போது சுவையாக இருந்தது.  சீரிதழ்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் இந்த நூல் படித்து அறிந்து கொள்ளலாம்.

           ஆவணப்படுத்துவதில் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு நிகர் தமிழ்த்தேனீ இரா. மோகன் தான் என்று அறுதியிட்டுக் கூறலாம்.  அவர் நூல் பற்றி வந்த விமர்சனங்களை தொகுத்து. பகுத்து, வகுத்து வாசகர்கள் பெயருடன் அணிந்துரையாக நூலின் தொடக்கத்திலேயே பதிப்பித்தது நல்ல யுத்தி.  தினமலரில் வாசகர் பார்வையில் நான் எழுதிய மடலும் இந்த நூலில் உள்ளது.  கண்டு மனம் மகிழ்ந்தேன்.  என்னிடம் இல்லாத என்னைப் பற்றிய தகவலும் அவரிடம் இருக்கும்.எனக்கு தந்து உதவுவார்கள் . 

           வள்ளலாரின் கொள்கைகள் மிக உயர்ந்தவை.  அவற்றைக் கடைபிடித்தால் நாட்டில் நிம்மதி நிலவும். அவர் பற்றி கட்டுரை படித்து பிரமித்தேன்.  ஒவ்வொரு கட்டுரையிலும் பல்வேறு தகவல்கள் உள்ளன.  அரசு வேலைக்கு போட்டித் தேர்வு எழுதுவோர் இந்த நூல் படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம்.  அந்த அளவிற்கு தமிழ் தொடர்பானவை உள்ளன.

           ஏழைக்குழந்தைக்கு பசியாற்றி கல்வியும் வழங்கிய கல்வி வள்ளல் படிக்காத மேதை காமராசர் பற்றிய கட்டுரை, காவியக் கவிஞர் வாலியின் வைர வரிகளுடன் தொடங்கி உள்ளார்.  நான் எழுதிய ஹைக்கூவும் நினைவிற்கு வந்தது.

     காமராசர் 
     காலமானதால் 
     காலமானது பொற்காலம் !

    வாலி ! கவிதை இதோ !

    நேர்மையில் – ஒரு 
    நெருப்புத் தமிழன் எனக் காலம் கணித்த 
    இந்த கருப்புத் தமிழன் ... 
    பெரியார் பார்வையில்  பச்சைத் தமிழன் 
    ஆனால் அவன்-ஒரு வெள்ளைத் தமிழன் ; 
    வெள்ளை மனமுடை – பிள்ளைத்தமிழன்                                                  
           மேற்கண்ட கவிதையே காமராசரை நம் மனக்கண்முன் கொண்டு வந்து விடுகிறது. 

                மகாகவி பாரதியாரின் வைர வரிகளுக்கு செயல்வடிவம் தந்தவர் காமராசர் என்பதை கட்டுரை உணர்த்துகின்றது.

           அன்ன யாவினும் புண்ணியம்
           ஆங்கு ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் !

           ஆம், ஓர் ஏழைக்கே புண்ணியம்.  பல இலட்சம் ஏழைகளுக்கு எழுத்தறிவித்தவர் காமராசர்.

           தொண்டையே செல்வமாகக் கருதிய மாமனிதர் திரு.வி. கலியாணசுந்தரனார் பற்றிய கட்டுரை மிக நன்று.  நூலில் உள்ள எல்லாக் கட்டுரைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன்.

           ஆண்களில் பலர் மனைவி இறந்தவுடன் குழந்தைகள் இருந்தாலும் மறுமணம் செய்து விடுகின்றனர். எவ்வளவு உயர்ந்த குணம் படைத்த பெண்ணாக இருந்தாலும் தன் குழந்தை போல கணவரின் குழந்தை மீது அன்பு செலுத்துவதில்லை என்பதே உண்மை.  மாற்றான் தாய் கொடுமை குழந்தைகளின் வாழ்க்கையையே திசை மாற்றி விடுகின்றது. 

           இளம்பெண் விதவையானால் மறுமணம் புரியலாம்.  ஆனால் ஆண், மனைவி இறந்தால், குழந்தைகள் இருந்தால் மறுமணம் புரியவே கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து.  என் தாத்த மறுமணம் செய்தது பேரனாகிய என் வாழ்க்கை  வரை பாதிப்பை ஏற்படுத்தியது.
          
           திரு.வி.க. அவர்கள் கமலாம்பிகை அம்மையாருடன் ஆறு ஆண்டுகள் மட்டுமே குடும்ப வாழ்க்கை வாழ்ந்து குழந்தைச் செல்வம் இரண்டு .  இறந்து விட்டார்கள்.  ஆயினும் இறுதி வரை மறுமணமின்றி திரு.வி.க. வாழ்ந்தார் என்ற தகவல் நூலில் படித்த போது அவர் பற்றிய மதிப்பு மேலும் மேலும் உயர்ந்தது. இப்படி பல ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.  ஆண்கள் திரு .வி .க .என்ற ஆளுமையின் உயர்ந்த பண்பை , ஒழுக்கத்தை  கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தியது கட்டுரை .
      
           ‘கரும்பு தின்ன கூலியா வேண்டும்?’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப மு.வ. பற்றி எழுதிட, மு.வ.-வின் செல்லப்பிள்ளைக்கு இனிக்கும்.  உணர்வோடு படைத்த கட்டுரை மிக நன்று.         பதச்சோறாக ஒன்று.

    பத்மஸ்ரீ பட்டம் பெற மறுத்தல் :

           1965ஆம் ஆண்டு இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து மாணவர் உலகம் போராடிய நேரம்.  அப்போது நடுவண் அரசு மு.வ.-வுக்குப் பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது. இந்தி மொழித் திணிப்பை எதிர்க்கும் மாணவர்களைக் கொடுமைகளுக்கு உள்ளாக்கக் காரணமாக நடுவண் அரசு இருக்கிறது.  அவர்கள் அளிக்கும் இந்தச் சிறப்புப் பட்டம் எனக்குத் தேவை இல்லை” என்று கூறி பட்டத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார் மு.வ.
            
    இது நடந்தது அன்று. ஆனால் இன்று எனக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பதையும், பரிந்துரைக்கு ஆள் பிடித்து வாங்குவதையும் நினைத்து பார்க்க மு.வ. அவர்கள் உள்ளத்தில் உயர்ந்து நிற்கிறார்.நாம் அறியாத பல தகவல்கள் நூலில் உள்ளன . 

           அய்ந்து இயலில் ஒரு இயல் மட்டுமே மேற்கோளில் காட்டி உள்ளேன்.  நூலில் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை, மேற்கோள்கள் நிரம்ப உள்ளன.  ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் பழமொன்ரியு ஒன்று.

           கொள்ளி வைக்க ஒரு பிள்ளை
           வேணுமாம் ; ஒரு பெண் வைத்தால்
           எரிய மாட்டாயா நீ!

           ஹைக்கூ உலகில் தடம் பதிக்கும் கவிஞர் ஆரிசன் ஹைக்கூ ஒன்று.

     தமிழுக்குத் தீட்டாம் 
     ஆலயம் தொழுவது 
     சாலவும் நன்று எப்படி?

           வளர்ந்தவர்கள், வளர்கிறவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா படைப்பாளிகளையும் பாராட்டும் தாயுள்ளம் படைத்த நூலாசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.


avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2633
Points : 6335
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலக்கிய முற்றம் நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் 2 : கவிஞர் இரா. இரவி !
» இலக்கிய அமுதம் ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» தமிழ் உலா! நூல் ஆசிரியர் : பேராசிரியர் ‘தமிழ்த்தேனீ’ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கவிதை வெளியினிலே ! நூல் ஆசிரியர் : முனைவர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum