தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Wed Dec 02, 2015 9:31 pm

எல்லோர்க்கும் பிடிக்கும் !


நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !
9942658054.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


மதுரை பதிப்பகம், 6, காமராசர் தெரு, பழங்காநத்தம்,
மதுரை–625 003.
விலை: ரூ. 30
*****
       அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  பின் அட்டையில் விரைவில் திறப்பு விழா காண உள்ள மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் படமும் உள்ளது.  பாராட்டுக்கள்.

       உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர்
க.பசும்பொன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக உள்ளது.  ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் அவர்களின் வாழ்த்துரை நூலிற்கு பலம் சேர்க்கின்றது.

       உலகப்பொதுமறையான திருக்குறளின் வெற்றிக்கு பல காரணங்கள்.   அவற்றில் ஒன்று அறம் பாடியது.  நூலாசிரியர் கவிஞர் வாசகனும் அறம் பாடி உள்ளார்.  தத்துவம், தன்னம்பிக்கை எனப்பல பொருள்களில் ரத்தினச் சுருக்கமாக எழுதி உள்ளார்.

       தோல்வி என்பதும் நிரந்தரமல்ல
       வெற்றி என்பதும் நிரந்தர்மல்ல
       முயற்சி ஒன்றே வெற்றியாகும்.



       தோல்விக்கு துவளாதீர்கள் ; நிரந்தரமன்று , விரைவில் வெற்றி வரும்... என்று நம்பிக்கை விதைக்கும் விதமாகவும், வெற்றி நிரந்தரம் என்று கர்வம் கொள்ள வேண்டாம், நிரந்தரமன்று, அடுத்து தோல்வியும் வரலாம் அன்று எச்சரிக்கை செய்யும் விதமாகவும், முயற்சி மட்டும் தொடர்ந்தால் வெற்றி சாத்தியம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார். 

நூலாசிரியர் கவிஞர் வாசகன் அவர்களிடம், ஏதாவது ஒரு செயல் சொன்னால் மறுப்பு எதுவும் சொல்லாமல் முடித்து விடுவோம் என்பார்.  வெற்றி, தோல்வி பற்றிய கவலை மனதில் கொள்ள மாட்டார்.  புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்து இருப்பவர்.  திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார்.  திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.  திரைப்படம் தயாரிப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்து வருகிறார். கிராமியக்கலைஞர்கள் பலர் திரைப்படத்தில் வருவதற்கு பாலமாக இருக்கிறார். 

அவரது செயல் போலவே சிந்தனையும் இருப்பதால் எல்லோர்க்கும் பிடிக்கும் மனிதர், "எல்லோர்க்கும் பிடிக்கும்" என்று தலைப்பிட்டு நூல் எழுதி உள்ளார்.  பாராட்டுக்கள்.

       திருக்குறள் போல இரண்டே வரிகளில் வாழ்வியல் கருத்துக்களை நன்கு விதைத்துள்ளார்.

       மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை
       மதி மந்திரத்தால் அமைவதே வாழ்க்கை !



       மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை என்று எழுதி, மூட நம்பிக்கைகளைச் சாடி பகுத்தறிவை விதைத்துள்ளார்.  சிந்திக்கும் மதியால் வாழ்க்கை சிறக்கும் என்பதை எடுத்து இயம்பி உள்ளார்.

       கல்வியின் பெருமை அன்றே பாடி இருக்கிறார்கள்   .  அவற்றை வழிமொழிந்து இவரும் பாடி உள்ளார், பாருங்கள்.

       பணம் பங்கிட்டுப் பார் குறையும்
       கல்வியைப் பங்கிட்டுப் பார் பெருகும்.



       கற்ற கல்வியை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதன் காரணமாக ஒருபோதும் குறையாது, கூடும் .அதுதான் கல்வியின் சிறப்பு.  அதனால் தான் சொன்னார்கள், ‘கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று.

       குடும்பம் ஒரு கோயில்
       கண்ணாடியைப் போல பாதுகாத்து வா !



       குடும்பத்தின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்தி உள்ளார்.  வசன கவிதைகளாக உள்ளன.  வேண்டிய வைர வரிகளாக உள்ளன.நீதி நெறி போதிக்கும் விதமாக பல சிந்தனை எழுதி உள்ளார் .

       மற்றவர்க்குப் பள்ளம் தோண்டாதே
       பக்கத்தில் இருக்கும் உனக்கொரு பள்ளம்.



       அம்மா, அப்பா, மனைவி போன்ற நெருங்கிய உறவுகளிடம் சொல்ல முடியாதவற்றையும் நண்பனிடம் சொல்லுவோம்.  நண்பனுக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு.  அப்படிப்பட்ட நண்பனின் நன்மை என்ன? என்பதை உணர்த்திடும் வரிகள்.

       உண்மையாக இருக்கும் ஒரு நண்பனிடம்
       உள்ளத்தைத் திறந்து விடு ; மருத்துவர் செலவு மிச்சம்.



       நண்பனிடம் மனம் விட்டு பேசினால், நோய் வராது, மகிழ்ச்சியாக வாழ்வாய் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.

       அரசியல்வாதிகளின் ஆடை வெள்ளையாக உள்ளது, ஆனால் அவர்களின் மனம் அழுக்காக உள்ளது என்பதை உணர்ந்து வடித்த கவிதை நன்று.

       வெள்ளை ஆடை தூய்மையானது தான்
       எல்லோரும் பயன்படுத்தும்போது கருப்பு
       ஆடையாக மாறி விடுகிறது.



       உடை வெள்ளையாக இருந்தால் மட்டும் போதாது.  உள்ளமும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிறார்.  பாராட்டுக்கள்.

       பல்கி பெருகி விட்ட கையூட்டு நாட்டுக்கு நல்லதல்ல என்பதை வலியுறுத்தும் விதமாக, எல்லோருக்கும் எச்சரிக்கை செய்யும் விதமாக எழுதியது நன்று.

       லஞ்சம் ஒன்றே இன்றுள்ள அரசியல் சூத்திரம்
       லஞ்சம் கொடுக்காதே,
       லஞ்சம் வாங்காதே!



       லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிருங்கள் என்று வலியுறுத்தியது சிறப்பு!


       துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் எழுதி உள்ளார்.

       எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கலங்காதே
       எல்லா துன்ப நோய்க்கு காலம் தான் சிறந்த மருந்து !



       இன்று குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்குகின்றோம்.  நாளை சுவாசிக்கும் காற்றை விலை கொடுத்து வாங்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். 

சொர்க்கம் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறது.  விண்ணுலகில் அல்ல, விஞ்ஞான உலகம் இன்று.  சொர்க்கம் விண்ணில் இல்லை, விண்ணில் இருந்திருந்தால் விண்ணிற்கு சென்றவர்கள் சொல்லி இருப்பார்கள்.  விஞ்ஞான உலகம் இது.  சொர்க்கம் மண்ணில் தான் உள்ளது.  நாம் வாழும் வாழ்க்கையில் உள்ளது என்று வாழ்வியல் நெறி போதித்து மூடநம்பிக்கைகளிலிருந்து முற்றாக விடுபட வழி சொல்லி உள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு   விழாவில் வரவேற்புரை நான்தான் .விழாவிற்கு நூல் ஆசிரியர் கவிஞர் வாசகன் வெற்றிக்கு துணை நிற்கும் அவரது மனைவி ,மாமனார் ,மகள் ,மகன் என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

     "எல்லோர்க்கும் பிடிக்கும்" என்ற இந்த நூலில் நூலாசிரியர் கவிஞர் வாசகன், 111 சிந்தனைகள் மின்னல்கள் வடித்துள்ளார்.  பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன்.  நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள்.  பாராட்டுவீர்கள்.  வாசகனை வாசகர்கள் பாராட்டுவர்.  நூல் வடித்த வாசகனுக்கு பாராட்டுக்கள்.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நெஞ்சத்தில் ஹைக்கூ... நூல்ஆசிரியர் : கவிஞர். இரா. இரவி. நூல் விமர்சனம் : செல்வி. இர. ஜெயப்பிரியங்கா. நூல் வெளியீடு : திருமதி. இர. ஜெயச்சித்ரா.
» புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் நூல்ஆசிரியர் : கவிஞர் ஈழபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மழை எனும் பெண்! நூல்ஆசிரியர் : கவிஞர் அ. ரோஸ்லின் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வானம் என் வாசலில் ! கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன்.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum