தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm

» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm

» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm

» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm

» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm

» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm

» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm

» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm

» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm

» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm

» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm

» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm

» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm

» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm

» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm

» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm

» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm

» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm

» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm

» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm

» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm

» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm

» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm

» மனைவி அடங்கி நடக்க ஒரு யோசனை…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:58 pm

» மண வாழ்க்கை சந்தோஷமாய் அமைய…!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:37 pm

» என் பொண்டாட்டி ரொம்ப நல்லவ!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:22 pm

» வாழ்க்கை என்னவென்று உரிய நேரத்தில் உணர்வாய்!
by அ.இராமநாதன் Tue Oct 24, 2023 3:15 pm

» வெற்றி, தோல்வி நிரந்தரமில்லை!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:40 pm

» கடவுள் வடிவில் சில மனிதர்கள்...
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:25 pm

» வருகை பதிவேடு -காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 10:20 pm

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா!
by அ.இராமநாதன் Mon Oct 23, 2023 5:58 pm

» அறிஞர் அண்ணா பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:48 pm

» குனிஞ்ச தலை நிமிராம போகுற பொண்ணு வேணும்!
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 9:16 pm

» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Sun Oct 22, 2023 10:07 am

» புரட்சிநடிகருக்கு கவியரசு சுவையாக காதல்ரசம் சொட்ட எழுதிய 100பாடல்கள்
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:30 pm

» திருவிளக்கு போற்றி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 8:13 pm

» அன்று கேட்டவை- இன்றும் இனியவை : காணொளி
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 6:08 pm

» பல்சுவை கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:23 pm

» யாரை நம்புவது...!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:10 pm

» வாழ்க்கை இது தான்!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 3:04 pm

» அதிகம் சிந்திக்காதே…!
by அ.இராமநாதன் Fri Oct 20, 2023 2:59 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

Go down

வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல் மதிப்புரை :  நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர். Empty வெளிச்ச விதைகள் ! நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

Post by eraeravi Wed Feb 22, 2017 1:16 pm

வெளிச்ச விதைகள் !
நூலாசிரியர் : கவிஞர் இரா.இரவி !

நூல் மதிப்புரை : 
நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.

வெளியீடு ; வானதி பதிப்பகம், 23, தீனதயாள தெரு, தி.நகர்,
சென்னை- 600 017. பக்கங்கள் ; 190 விலை ரூ. 120.

******
      விஞ்ஞான வளர்ச்சிக்காக இணையத்தின் பயனை, 
      விவேகமாகப் பயன்படுத்தி வென்றவன் தமிழன்!
      பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிமலர்                                                                 தொடங்கியவன்;
      பைந்தமிழில் கவிதைகள் பதித்தவன் அடியனவன் நான்!
      இன்றுவரை எந்த வெளிநாடும் சென்றதில்லை;
      எல்லா நாட்டிலும் கவிதை ரசிகர் உண்டு எனக்கு!
      இணையத்தில் மட்டும் பதியவில்லை படைப்புகளை;
      இதயத்திலும் பதிந்தால் பெற்றது உலகுப் புகழ்!

      இப்படி, இணையத்தில் வாழும் எம் தமிழ்! என்ற கவிதையில், பொதுவாக இணையத்தில் தமிழனின் அறிவியலால் தமிழின் புகழையும், பெரும் வளர்ச்சியையும் வியந்து சுட்டியவர், அப்படியே இவரைப் பற்றி இவரே, தன்னிலை விளக்கமாக, கவிதையிலேயே தன்னை அடையாளப்படுத்தியுள்ளதிற்கிணங்க, கணிப்பொறி, இணையதளம், வலைத்தளம், மின்னஞ்சல் களம், சமூகவலைத் தளம் போன்றவற்றைக் கண்டறிந்த அறிவியலறிஞர்கள் கவிஞர் இரா. இரவிக்காகவே ஆண்டறிந்தார்களோ? என்ற என்னுடைய வினாவுக்கு விளக்கமாக, இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள முனைவர், இரா. மோகன் அவர்கள், இரவிக்குக் கடன் இணையத்தில் தமிழ்ப்பணி செய்து கிடப்பதே! என்று அணிந்துரையின் தலைப்பிலேயே குறிப்பிட்டுள்ள கூற்றுப்படி, இணையத்தில் தமிழ்மொழி வழியாகக் கவிதைகள், கட்டுரைகள், நூல்நயம் போன்றவைகளையும், 

இப்படைப்புகளின் வழியாகத் தமிழையும், அன்றாடம் அல்லும் பகலுமாக உலகின் அனைத்து மூலைகளுக்கும் கொண்டு செல்கின்ற அரும்பணியை ஒரு தவ முனிவர் போன்று செய்து வருகிறவர் என்றால், பாராட்ட வார்த்தைகளில் அடங்காது.  மிகைப்படுத்தி கூறியதாகவும் ஆகாது.

இத்துணைச் சிறப்புக்குரிய கவிஞர் இரா. இரவி அவர்கள், தொல்காப்பியர்ம, தொல்காப்பியத்தை ஒன்பான் பொருள்களில் பகுத்து எடுப்பது போலவும், ஒன்பான் விலையுயர்ந்த மணிகள் போலவும், என்  நூல்களைப் போலவும் உறவுகளின் மாண்பு; தமிழ், தமிழன், தமிழ்நாடு; சமூகப் பதிவுகள்; இயற்கைச் சித்தரிப்பு; தன்னம்பிக்கை முனை; காதல் உலகு; நாட்டு நடப்பு; சான்றோர் அலைவரிசை; உதிரிப் பூக்கள் என்று ஒன்பான் பகுதிகளாக வரையறுத்து இந்நூலை வடிவமைத்துள்ளார்.  இந்த ஒன்பான் பகுதிகளால் ஒன்பான் சுவையாக்கி மாந்த சமுதாய மேம்பாட்டுக்காக எதிர்பார்ப்போடு படையலிட்டதற்கு முதலில் நூலாசிரியருக்கு பாராட்டும் நன்றியும் உரியது.

                இந்நூல், நூலாசிரியரின் பதினாறாவது நூலாக வெளிவந்துள்ளது; ஆனால், வானதி பதிப்பகத்தில் கவிஞர் இரா. இரவியின் ஐந்தாவது நூலாக வெளியாகியுள்ளது. இந்நூலிலுள்ள கவிதைகள் தினமணியின் கவிதைமணி இணையத்தில் வெளிவந்தவை என்றும், மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் கவியரங்குகளுக்கு வழங்கிய தலைப்புகளுக்கு வரைந்த கவி ஓவியங்கள் என்றும், நூலாசிரியரின் முன்னுரையான என்னுரையில் பகர்ந்துள்ள இவர், ஏனோ பெங்களுரில் வாசித்தக் கவிதைகளைச் சுட்டிக்காட்ட மறந்துள்ளார்.

      கவிஞர் இரா. இரவி தமிழ் நாட்டரசு சுற்றுலாத் துறையின் உதவி அலுவலராக பணியாற்றுபவர், பணியில் மாற்றலாகி மதுரையிலிருந்து பெங்களுருக்கு வந்தவர், நான் ஏற்கனவே பொறுப்பாளராக செயல்பட்ட, பெங்களுர்த் தமிழ்ச் சங்கம் நடத்தும் ஏரிக்கரைக் கவியரங்கிலும், இப்பொழுது பொறுப்பாளராக இருந்து நடத்தி வருகின்ற தூரவாணி நகர் ஐ.டி.ஐ தமிழ் மன்றம் நடத்தும் பாவாணர் பாட்டரங்கிலும் வாசித்தக் கவிதைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன. இவற்றையும் சொல்லிருந்தால் பெங்களூரிலும் கவிதைப் பணியாற்றிய வரலாற்றும் பதிவாகி பெயருக்கு மெருகேறி இருக்கும் என்பது என்னுடைய கணிப்பாகும்.

      அய்க்குக் கவிரான இவர், முதன்முதலாக புதிய முயற்சியில் ஈடுபட்டு, எனக்கும் புதுக்கவிதை எழுத வரும் என்று இந்நூலை எழுதியுள்ளார்.  ஆனால் புதுக்கவிதைக்கான அடையாளமே அறிய முடியாத அளவில், வாமனன் அளந்த ஈரடியைப் போன்றும், வாயின் இரு உதடுகளைப் போன்றும், திருக்குறளின் ஈரடிகளைப் போன்றும், ஈரிரு அடிகளாகவே அனைத்து கவிதைகளையும் நெய்துள்ளார்.

      மரபுக் கவிதையாகவோ, புதுக்கவிதையாகவோ இல்லாமல் ஒரு புதிய வடிவத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்துள்ளார் என்றே நான் கருதுகிறேன்.  திரைஇசைப் பாடல்களை எல்லா கவிஞர்களும் எதுகை, மோனை, சந்தம் வைத்து எழுதியப் பாடல்களிலிருந்து வேறுபட்டு, புதுக்கவிதைகளால் சந்தங்கள் திரைஇசைப் பாடல்களின் நுழைத்த பெருமை எப்படி கவிப் பேரரசுவைரமுத்துக்குப் போய் சேருமோ, அப்படி சந்தங்களுடனும், மோனைகளுடனும், சில அடிகளில் எதுகை-களுடனும் புதிய கோணத்தில் செந்துறையாக எழுதியுள்ளதை நாம் தமிழுக்கு வந்த புதுவரவாக ஏற்றுக் கொண்டாடுவோம்.

      பெரும்பான்மையான கவிஞர்கள் எவ்வாறு காதலைப் பாடாதார் கவிஞரில்லையோ? அதேபோல, தாயைப் பற்றி பாடாதாரும் கவிஞரல்ல! என்ற அடிப்படையில் தாயைப்ப ற்றி அதுவும் நூலில் முதன்மைக் கவிதையாக எல்லோரையும் போலவே தாய்க்கு இவரும் முதலிடத்தை ஒதுக்கியுள்ளார்.

      உலகமே வெறுத்து ஒதுக்கினாலும்-அவள்
      ஒருபோதும் வெறுப்பதில்லை பெற்றவனை!

      உன்னத உறவு என்ற கவிதையில் இப்படி பதிவு செய்து உறவுகளிலேயெ தாயைப் போன்று உன்னத உறவு வேறு இல்லை என்றவர், இதற்கு சான்றாக மேலேயுள்ள இரு அடிகளை விளக்குகிறார்.  அதாவது, கருத்து வேறுபாட்டில் கணவனையோ மற்ற உறவுகளையோ வெறுத்து ஒதுக்கினாலும், தன் மகனைத் தீயவனென்று உலகமே வெறுத்து ஒதுக்கினாலும், ஒரு தாயாய்த் தன் மகனை வெறுக்காத கருணை தெய்வமாய் இருப்பான் என்ற யதார்த்தத்தைப் படைத்துள்ளார்.

      தெய்வத்தை விட மேலான தெய்வம் அன்னை தான் என்பதை அனுபவமொழியே மெய்ப்பித்துக் காட்டுகிறது.  ஆம், அரசன் அன்றே கொல்வான்;  தெய்வம் நின்று கொல்லும்; என்று, ஆனால், தாய் மகனைக் கொல்வாள் என்று எவரும் இதுவரை இயம்பியதுமில்லை; நிகழ்ந்த்துமில்லை. இதை ஆணித்தரமாக வலிமையான சொற்கூட்டால் அருமையாக அடையாளப்படுத்தியுள்ளார்.

      உன்னத உறவு தாய்தான் என்று உணரவைத்தவர்,  
      நெறிப்படுத்தி, நல்வழி காட்டுபவர் தந்தை! 
      நன்மை தீமை எடுத்து இயம்புபவர் தந்தை!

என்று நூலின் இரண்டாம் கவிதையிலேயே ஒப்பற்ற உறவு தந்தையென உணர வைத்துள்ளார். மேலே நான் சுட்டியுள்ள கவிதை அடிகளுக்கிணங்க, பிள்ளைகளை நெறிப்படுத்தி, நல்வழி காட்டக்கூடிய தந்தை பொருளீட்ட ஓடிக் கொண்டிருக்கிறார்.  பிள்ளைகளோ, நன்மை, தீமைகளை அறிய முடியாமல் தீயவர்களாய் அழிந்து கொண்டிருக்-கிறார்கள்.  கவிஞர், இரா. இரவியின் கவிதைக்கேற்ப செயல்படவேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

      தொண்டென்ற பெயரில் உலகிலுள்ள அத்துணைத் தொண்டு-களிலும் தந்நலமே நிறைந்திருக்கும். ஆனால், ஒரு தந்தையாக நின்று ஆற்றுகின்ற தொண்டில் இம்மியளவும் தன்னலமின்றி ஈகையே நிறைந்திருக்கும்;  தொண்டுகளில் தலையாயத் தொண்டாக சிறந்து விளங்குவது தந்தையின் தொண்டே என்பதையும், ஓய்வின்றி, உணவு, உடை, உறக்கம், களிப்பின்றி குடும்பத்திற்காக உழைத்துழைத்து ஓடாகும் ஒரே பிறவி தந்தை என்பதையும்,

      உழைத்து உழைத்து ஓடான போதும்-அவர்
      ஒருபோதும் சலித்துக் கொள்வ தில்லை!

என்று இப்படி கண்முன்னே தந்தையைக் காட்சியாக்கி நம்மை காண வைத்துள்ள பாங்கு மிக அழகு.

      இன்றைய நிகழ்காலம் பெண்களுக்கான காலமென்றே பகரலாம். அந்தளவிற்கு கல்வியறிவில், ஆற்றும் பணிகளில் மேலோங்கி சிறந்து விளங்குவதோடு மட்டுமல்ல, திருமணமாகி புகுந்த வீட்டில் வாழ்ந்தபோதும் கணவனுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பெற்றோரைப் பேணி தாங்கும் தூண்களாக விளங்கும் பண்பு, பாசமிக்கவர்களாக விளங்குகின்றனர்.  பெற்றோரை ஆண் பிள்ளைகள் போல் பெண் பிள்ளைகள் புறக்கணிப்பதில்லை.  இதை நான், கண்டு, கேட்டு, அனுபவப் பூர்வமாக உணர்ந்த உணர்வை,

      உயிருள்ளவரை பெற்றோரை நேசிப்பவள்;
      மணம் முடிந்தபின்னும் மறக்காதவள்!

என்று, இல்ல இளவரசி எனும் கவிதையில் கவிஞர் அழுத்தமாக உணர்த்தியுள்ளார்.

      தொலைந்து போன கடிதம் என்ற கவிதை தன்னில்;
      இழந்த  உயிர்கள் கணக்கில் அடங்காது;
      இன்னும் மீனவர் வாழ்க்கை விஷயமில்லை!
      தினம் தினம் செத்துப் பிழைக்கின்றனர்;
      தட்டிக் கேட்க நாதியே இல்லை!  

முன்னாள் முதல்வர் கடிதம் எழுதினார்;
                இந்நாள் முதல்வர் கடிதம் எழுதினார்!
                வருங்கால முதல்வரும் கடிதம் எழுதுவார்....

      இவை யாவும் தொலைந்துபோன கடிதங்களென்று நாட்டை ஆள்பவர்கள் மக்கள் மீது பற்றற்றவர்களாக பொறுப்பின்றி கணிப்பொறி காலத்திலும் கடிதம் எழுதிக் கொண்டு அத்துடன் கடமை முடிந்ததாக நிலைமையை புரிந்து கொள்ளாத உயிரின் மதிப்பை உணராதவர்-களைப் பார்த்து எள்ளி நகையாடி நையாண்டி செய்தவர்,

      தூக்கு தண்டனைக் குரிய குற்றவாளியை
      குறைந்த பட்சம் கைதுகூடச் செய்யவில்லையே!

என்று ஈழத் தமிழினத்தை அழித்துக் கொடூரன் அரசபக்சே இன்னும் கைதுகூடச் செய்யவில்லையே! என ஆதங்கத்தோடு இலங்கை, இந்தியா, ஐ.நா. வைப் பார்த்து மட்டும் கேட்கவில்லை.  உலகத்தை நோக்கி கேட்கிறார்.  என்றே நான் எண்ணுகிறேன்.

      ஆனால், ‘அவசரப்பா அகவற்பா’ என்பதற்கேற்ப, உடனடியாக எளிதாக, எழுதக்கூடிய ‘பா’ வகைதான் அகவற்பா.  சிறிது முயன்றிருந்தால் இந்த அகவலாகவே எழுதி இருக்கலாம்.  ஆம், இரண்டடிக்கு ஒரு மோனையென எழுதியவர், இரண்டடிக்கு ஒரு எதுகையும், அடிதோறும் ஈரசைச் சீர்களாக, அடிதோறும் நான்கு சீர்களாக்கி எழுதி இருந்தால் அருமையான மூன்று நயத்துடன் ஆசிரிய விருத்தமாக மிளிர்ந்திருக்கும். இனியாவது முயற்சிக்க வேண்டுமென்பது, என் விழைவு.

      இவர், மேலும் பல நூல்கள் எழுதி மேன்மேலும் பேரும், புகழும் விதைகளும் பரிசுகளும் பெற்று உயர்வதோடு சமுதாயத்தையும், உயர்த்திட பாராட்டி வாழ்த்துகிறேன்.




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2634
Points : 6338
Join date : 18/06/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நூலின் பெயர் : கவிச்சுவை நூலாசிரியர் : இரா. இரவி மதிப்புரை நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» இரா. இரவியின் படைப்புலகம் ! நூலாசிரியர் : பேராசிரியர் இரா. மோகன் ! நூல் மதிப்புரை : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» நூல் பெயர்: இறையன்பு கருவூலம். நூலாசிரியர்:அய்க்குக் கவிஞர் இரா. இரவி. ____________________________________________ நூல் மதிப்புரை: நெருப்பலைப் பாவலர், இராம இளங்கோவன், பெங்களூரு.
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
»  "ஹைக்கூ 500" நூல் ஆசிரியர்: கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை -"நெருப்பலைப் பாவலர் ", இராம இளங்கோவன்;பெங்களூரு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum