தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மன்னரும் குயவரும்...
2 posters
Page 1 of 1
மன்னரும் குயவரும்...
வங்க நாட்டின் தலைநகரான பிரம்ம தேசத்தில் குப்புசாமி என்பவன் குயத்தொழில் செய்து வந்தான். ஒரு நாள் அவன் வசித்து வரும் தெரு வழியாக இளவரசன் சித்ரசேனனும் படை வீரர்களும் குதிரையில் வேகமாகச் சென்றனர். குதிரையின் கால்பட்டு தெரு ஓரங்களில் வைத்திருந்த மண்பாண்டங்களும் சூளையிட்ட வெந்த மண்பாண்டங்களும் நொறுங்கின.
வீட்டினுள்ளிருந்து ஓடி வந்த குப்புசாமி "இளவரசே! இளவரசே!' என்று குரல் கொடுக்க திரும்பிப் பாராமல் குதிரையில் வேகமாகச் சென்றான் சித்ரசேனன். செய்து வைத்த பானை, சட்டியெல்லாம் உடைந்ததைக் கண்டு துடித்தான் குப்புசாமி. மனம் பதறினான்.
இதை இப்படியே விடக் கூடாது என நினைத்த குப்புசாமி, மறுநாள் அரச சபைக்குச் சென்று மன்னன் மது சூதனனிடம் இளவரசன் சித்ரசேனன் தனது மண்பாண்டங்களை உடைத்து விட்டு வந்ததைப் பற்றி முறையிட்டான்.
மன்னன் மதுசூதனனோ, ""குப்புசாமி நீ சாலை ஓரங்களில் மண்பாண்டங்களை வைத்திருந்தது உன் தவறுதான். இருந்தாலும் நீ என்னிடம் வந்து முறையிட்ட காரணத்தால், மந்திரியாரே குப்புசாமியை நமது கஜானாவிற்கு அழைத்துச் சென்று முறைப்படி தங்க நாணயங்களை நஷ்ட ஈடாகக் கொடுத்து அனுப்பி வை'' என்றார்.
""அப்படியே ஆகட்டும் மன்னா!'' என்ற மந்திரி காளிங்கராயன் குப்புசாமியை கஜானா இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றான்.
""குப்புசாமி இதோ பார் அறை முழுவதும் தங்க நாணயங்கள். இதை நாங்கள் அப்படியே எடுத்துக் கொடுப்பதில்லை. அதோ பார் ஒரு பெரிய இரும்புக் குண்டு. அந்தக் குண்டை நீ தூக்க வேண்டும். பின்னர் அந்தக் குண்டை எடை தராசில் வைக்க வேண்டும். அந்தக் குண்டு எடைக்கு தங்கக் காசுகளை உனக்குத் தருவேன் போய்த் தூக்கு'' எனக் கூறி சிரித்தார் மன்னர் காளிங்கராயன். இரும்புக் குண்டு முழுவதும் எண்ணை தடவப்பட்டு வழ வழ என்றிருந்தது.
""அடப்பாவிகளா! குண்டே பெரியது இதில் எண்ணை வேறு தடவி வைத்திருக்கிறீர்களா. இப்படியுமா ஏழைகளை ஏமாற்றி மோசம் செய்வீர்கள். எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போது பேசிக் கொள்கிறேன்'' என்று கோபத்துடன் வெளியேறினான் குப்புசாமி. பின்னால் நின்றிருந்த மந்திரி, வீரர்கள் சிரித்தனர்.
""ஒரு நாள் மன்னா நமது அரண்மனையில் உள்ள அம்மன் கோயிலில் நூற்று எட்டு பானைகள் வைத்து பொங்கலிட வேண்டும்'' என்றார் மகாராணி மங்கையர்கரசி.
""என்ன மங்கை திடீரென்று சொன்னால் எப்படி?'' என்றார் மன்னர் மதுசூதனன்.
""அதெல்லாம் எனக்குத் தெரியாது. உடனே பூஜைக்கு பானைகள் வேண்டும்'' என்றார் மங்கையர்கரசி.
உடனே வீரர்களை குயத்தெருவிற்கு அனுப்பினார் மதுசூதனன். சென்ற வீரர்கள் வெறுங்கையோடு திரும்பி வந்தனர்.
""என்ன பானைகள் வாங்கி வரவில்லையா?'' என்றார் மதுசூதனன்.
""மன்னா பானைகள் குயவன் குப்புசாமியிடம் தான் இருக்கிறது. ஆனால், தாங்களும், மந்திரியாரும் வராமல் கொடுக்க முடியாது'' என்றான்.
""மந்திரியாரே! இப்போது என்ன செய்வது?'' என்றார் மதுசூதனன்.
""மன்னா பானைகள் வராவிட்டால் பொங்கலிட முடியாது, தெய்வ குத்தமாகி விடும். மேலும், மகாராணியிடம் பதில் சொல்ல முடியாது. நாமே நேரில் செல்வோம்'' என்றார் மந்திரி.
குப்புசாமியின் வீட்டின் முன் சென்று குதிரையில் இருந்து இறங்கினர் மதுசூதனனும், காளிங்கராயனும். குப்புசாமி நிமிரிந்து பார்க்காமல் சட்டி பானை செய்வதில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தான்.
காளிங்கராயன், ""குப்புசாமி மன்னர் வந்திருக்கிறார்'' என்றார். குப்புசாமி மன்னனைப் பார்த்து, ""வணக்கம் மன்னா!'' என்றபடியே வேலையல் மூழ்கினான்.
""குப்புசாமி மகாராணியாருக்கு பொங்கல் பூஜை செய்ய நூற்று எட்டு பானைகள் தேவைப்படுகின்றன. அதற்கான பொற்காசுகளை வாங்கிக் கொண்டு பானைகளை வீரர்களிடம் ஒப்படை'' என்றார் மன்னர்.
""மன்னா! எனக்கு ஒரு பொற்காசு கூட வேண்டாம். ஆனால், ஒரே ஒரு நிபந்தனை'' என்றான் குப்புசாமி.
என்ன என்றனர் காளிங்கராயனும், மதுசூதனனும் ஒரே குரலில்.
""மந்திரியார் களிமண் சேறு மிதித்து கொடுக்க அதில் ஒரே ஒரு சட்டிப் பானை மன்னர் கையால் செய்ய வேண்டும். அப்படி செய்து விட்டால் நூற்று எட்டு இல்லை ஆயிரத்தெட்டு பானை இலவசமாக தருகிறேன்'' என்றான்.
பக்கத்திலே வேறொரு சக்கரத்தில் குப்புசாமியின் பத்து வயது மகன் சட்டிப் பானை செய்து கொண்டிருப்பதை பார்த்தார் மன்னர்.
இந்த சிறுவன் சட்டிப் பானை செய்யும் போது என்னால் செய்ய முடியாதா? என நினைத்த மன்னர், ""காளிங்கராயா நீ சேறு மிதி'' என கட்டளையிட மந்திரி சேற்றில் இறங்கி மிதிக்க, மன்னர் களிமண் உருண்டையை சக்கரத்தின் நடுவில் வைத்து சுற்ற தொடங்க சட்டிப் பானை உருவாகவில்லை. மாறாக, மன்னர், மந்திரியின் உடல் முழுவதும் சேறானது தான் மிச்சம்.
""ஒரு சட்டிப் பானை செய்வதில் இவ்வளவு கஷ்டமா? அன்றைக்கு சட்டிப் பானையை தன் மகன் நொறுக்கிய போது குப்புசாமி மனம் எப்படி சங்கடப்பட்டிருக்கும். நானும் அவனை கேவலப்படுத்தி ஏமாற்றி விட்டேனே!'' என தன் தவறை உணர்ந்தார் மன்னர்.
""தொழிலில் எல்லா தொழிலுமே சமம் தான் என புரிந்து கொண்டேன். எனவே, என்னை மன்னித்து விடு'' என்று குப்புசாமியைப் பார்த்து கைக் கூப்பினார் மன்னர்.
""மன்னா! நீங்கள் திருந்தியதே போதும். உங்களது பூஜைக்கு நான் சட்டிப் பானைகளை என் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறேன்'' எனக் கூறி இரு கை கூப்பி வழியனுப்பி வைத்தான் குப்புசாமி.
[You must be registered and logged in to see this image.] கோ.ஜெகதீஷ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மன்னரும் குயவரும்...
பகிர்வுக்கு நன்றி...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மன்னரும் குயவரும்...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum