தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பகிர்தலின் பலம்
2 posters
Page 1 of 1
பகிர்தலின் பலம்
செல்வச் செழிப்புத் தந்த அகங்காரம் கொண்ட ஒரு பெரிய மனிதரைப் பார்த்து, ஒரு துறவி, "உங்களுக்குக் கடவுள் அளித்துள்ள பெரும் செல்வம், ஏதுமற்ற லட்சகணக்கான குழந்தைகளுக்கு நல்லது செய்யவே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றவர்களுக்கு அளிக்கப் பழகுங்கள்!" என்றார்.
இதைக் கேட்ட செல்வந்தருக்குக் கோபம் வந்தது. "எனக்குப் புத்திமதி சொல்ல இந்த சாமியார் யார்? என்று நினைத்து சென்று விட்டார்.
ஆனால், ஒரே வாரத்தில் மீண்டும் வந்து, பொதுநல தொண்டு ஒன்றுக்காக, தான் பெரும் தொகை வழங்கியது குறித்து துறவியிடம், "என்ன திருப்தி தானே? இப்போது எனக்கு நீங்கள் நன்றி சொல்லலாம்!" என்றார்.
உடனே துறவி, "நன்றி சொல்லவேண்டியது நானல்ல, நீங்கள் தான்!" என்றார் அமைதியாக.
"துறவி ஏன் அவ்வாறு கூறினார்? என்பது அந்தப் பெரிய மனிதருக்கு புரியவில்லை. எனினும் அன்றிலிருந்து தனது திரண்ட செல்வத்தை வறியவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் வாரி வாரி வழங்க தொடங்கினார்.
செல்வராகிய அந்த பெரிய மனிதரை வள்ளலாக மாற்றிய துறவி- சுவாமி விவேகானந்தர்.
வள்ளலாக மாறிய செல்வந்தர் - ஜான் டி ராக்பெல்லர் என்ற அமெரிக்க தொழிலதிபர்.
தொழில் துறையில், தனக்கு சவால் விடுபவர்களை ஒழிக்க ராக்பெல்லர் தயங்கியதே இல்லை. இரக்கமற்ற அவரது போக்கால், நசிந்து போன தொழில்களும், அழிந்து போன குடும்பங்களும் ஏராளம்.
19-ஆம், நூற்றாண்டின் பிற்பகுதியில், அமெரிக்காவில் மிகவும் வெறுக்கப்பட்ட நபர் அவரே. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அவரது கொடும்பாவியை எரித்தனர். ஆனால், அவர் மாறவில்லை.
வேடிக்கை, விளையாட்டு எதிலும் அவருக்கு ஆர்வம் கிடையாது. சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளவும் உறவினர்களோ, நண்பர்களோ... எவரும் இல்லை, அவருக்கு தெரிந்தது எல்லாம் தொழில், போட்டி,வெற்றி, பணம் ஆகியவை மட்டுமே!
விளைவு... மன அழுத்தம், கவலை, பயம் யாவும் ஒன்று சேர்ந்து அவரின் உடல்நிலையை கடுமையாக பாதித்தன. நரம்பு மற்றும் ஜீரணம் தொடர்பான நோய்கள், அவரது ஆரோக்கியத்தை முழுவதுமாக அழித்தன.
டாக்டர்கள் சொற்படி, கஞ்சி, பால் மட்டுமே மட்டுமே சாப்பிட்ட அந்தக் கோடீஸ்வரர், ஓர் பிச்சைக் காரரைப் போல் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்தச் சூழலில் தான் சிகாகோ நகரில், சுவாமி விவேகானந்தரை சந்தித்தார். அந்த சந்திப்பு, ராக்பெல்லர் பெரும் அசாதாரணமான மாற்றத்தை ஏற்படுத்தியது.
தானம் செய்வது, அவ்வளவு எளிதல்ல. " கறை படிந்த பணம்" என்று அவர் கொடுத்ததை பலரும் வாங்க மறுத்தனர். ஆனால், கலங்காமல், கொடுத்துக் கொண்டே இருந்தார். பணம் இல்லாமல் தவித்த சிறு கல்லூரி ஒன்றை, தனது கொடையால் உலகப் புகழ் பெற்ற " சிகாகோ பல்கலைக்கழகம்" ஆக்கினார்.
தவிர... உலகெங்கும் மக்கள் நலனுக்கான அறிவியல், மருத்துவ ஆராய்ச்சிகள், மூளை காய்ச்சல், மலேரியா, போன்ற மோசமான வியாதிகளுக்கு மருந்துகள் இவரின் பண உதவியால், கண்டுபிடிக்கப்பட்டன.
மோசமான தொழிலதிபர் என்ற நிலையில் இருந்து, கருணை உள்ள பரோபகாரி என்ற நிலைக்கு மாறிய ராக்பெல்லருக்கு கிடைத்தது என்ன? மன அமைதி, ஆனந்தம் , உடல் ஆரோக்கியம்!
"இவ்வாறு செய்ய வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி சொல்ல வேண்டியவர் நீங்கள்தான்!" என்று சுவாமி விவேகானதர் சொன்னதன் பொருள், அப்போதுதான் ராக்பெல்லருக்கு விளங்கியது.
53 வயதிலேயே, மருத்துவர்களால் கைவிடப்பட்ட ராக்பெல்லர், பிறகு நல்ல உடல் ஆரோகியத்துடன் வாழ்ந்து, 1937 -ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 98
சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டால், அது இரட்டிப்பாகும். துக்கத்தைப் பகிர்ந்தால், பாதியாகக் குறையும். அன்பை பகிர்ந்தால் அது, ஆண்டவனை அடைய வழிகோலும்!.
ஆகவே, செல்வம் இருப்பவர்கள், இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கல்வி அறிவு உள்ளவர்கள் இல்லாதவர்களுக்கு அறிவு புகட்டுங்கள். செல்வத்தைப் பகிர்ந்த கர்ணன், ஞானி ஆனான். வாழ்க்கையைப் பகிர்ந்த காந்தி, ஒப்புயர்வற்ற தலைவர் ஆனார்.
உடலில் உறுதியுடன், உள்ளத்தில் அன்பும் உள்ள அனைவரும் பிறருக்கு எந்த வகையிலாவது இயன்ற சேவைகளை செய்து கொண்டே இருக்க முடியும். நிம்மதியை இழந்தவர்களது வாழ்வில் இன்பத்தை ஏற்படுத்துவதால் கிடைக்கும் அமைதியும் ஆரோக்கியமும் அலாதியானவை.
joe9884- புதிய மொட்டு
- Posts : 51
Points : 129
Join date : 16/01/2011
Re: பகிர்தலின் பலம்
மிகவும் பயனுள்ள பகிர்வினை கதை மூலம் மிக சிறப்பாக விளக்கியது அருமை. தொடர்ந்து உங்கள் பயனுள்ள பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்க தலைவரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum