தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை

3 posters

Go down

தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை  Empty தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 04, 2011 5:52 pm

நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். மேலும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும். பொதுவாகப் பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நம்பிக்கை குறைந்தவர்;களாகவோ அல்லது நம்பிக்கையற்றவர்களாகவோ இருப்பதை நடைமுறையிற்...

கண்டுகொள்ள முடிகின்றது. பொதுவாக தன்னம்பிக்கை குறைந்தவர்கள் அல்லது தன்னம்பிக்கை அற்றவர்கள் என அடையாளப்படுத்தப் படுகின்றவர்கள் வாழ்க்கையில் பெரும்பாலான நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதனை அவதானிக்க முடியம். மனிதர்கள் அடிப்படையாகவே மகிழ்வாகவும், உளத்திருப்தியுடனும் இருப்பதற்கே விரும்புகின்றனர். அவ்வாறு மகிழ்ச்சி, உளத்திருப்தியை நோக்கியதான நகர்வுகளின் போதெல்லாம் முட்டுக்கட்டைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில்; மகிழ்ச்சியும் உளத் திருப்தியும் மனிதனை விட்டு துரத்தியடிக்கப்படுகிறது. இதற்கான அடிப்படைக் காரணம் நம்பிக்கையீனம்(Lack of Faith) என அடையாளப்படுத்தப் படுகிறது.


தன்னம்பிக்கை குறைவதற்கான அடிப்படைக் காரணம்.

* தன்னைப்பற்றியுள்ள தாழ்வு மனப்பான்மை.
* உள நோய்கள்.
* சமூக, கலாசார மற்றும் சூழல் தாக்கங்கள்.
* தொடர்ச்சியான தோல்விகள்.
* சாராய, சிகரட் மற்றும் ஏனைய போதைப்பொருட்களின் பாவனை.
* தோல்வி மனப்பான்மை.

வாழ்க்கையில் அன்றாடம் இடம்பெறுகின்ற செயற்பாடுகளாக இருக்கலாம் அல்லது நேர்முகப்பரீட்சையாக இருக்கலாம் அல்லது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சவாலாக இருக்கலாம், இவற்றுள் தோல்வி ஏற்பட்டவுடனேயே நம்பிக்கை வீணடிக்கப்படுகிறது. உதாரணமாகப் பரீட்சையை எடுத்துக் கொண்டால், பரீட்சை என்ற பொழுது தன்னையறியாத ஒருவகையான பயம் மனதில் ஏற்படத்துவங்குகின்றது. இத்தகைய பய உணர்வானது அதிகமான சந்தர்ப்பங்களில் தோல்வியை நோக்கியே கொண்டுசெல்கின்றது. இவ்வாறானவற்றுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருப்பதே காரணமாக அமைகின்றது. நவீனகால உளவியலாளர்கள் குறிப்பிடுவதுபோல ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் தன்னம்பிக்கையென்ற விடயமே காணப்படுவதாகவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும் போது வெற்றிகான பண்புகள் அதிகரிப்பதாகவும், தன்னம்பிக்கை குறையும் போது தோல்விக்கான பண்புகள் அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. சுருக்கமாகக் குறிப்பிடுவதானால் தன்னம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கைக்கும் காப்புறுதியாக அமைகின்றது.


எந்தவொரு இலக்கையும் அடைவதற்கு அல்லது ஒரு வெற்றியாளனாக மாறுவதற்கு முதலில் இருக்கவேண்டியது மன உறுதியென அடையாளப்படுத்தப்படுகின்ற தன்னம்பிக்கையாகும். குறிப்பாக ‘எந்தவொரு செயலிலும் வெற்றிபெறுவோம்’ என்ற உறுதியான நம்பிக்கையானது வாழ்க்கைக்குப் பாதுகாப்பைத் தருகிறது. அத்தோடு எந்தவொரு காரியத்தையும் அடைவதற்கு முன்பும் ‘வெற்றிபெறுவேன்’ அல்லது ‘வெற்றிபெறுவோம்’ என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது மிக மிக முக்கிமானதொன்றாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வேண்டுமாயின் அவ்விலக்கை அடைவதற்கு மாத்திரம் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்து உழைக்க வேண்டும். குறிப்பாகக் கூறுவதானால் தன்னிடமுள்ள எதிர்மறை எண்ணக்கருக்களை(Negative) நேர் எண்ணக்கருக்களாக(Positive) மாற்றியமைத்துக் கொள்வது இன்றியமையாதது.


சிலர் எவ்விடயத்தையெடுத்துக் கொண்டாலும் நேர் எதிராக சிந்திப்பதனையே பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். எத்தகையதொரு செயலை எடுத்தாலும் என்னால் முடியாது அல்லது இச்செயல் எனக்குக் கடினமாக இருக்கிறது என்ற நம்பிக்கையீனமாகவும் தோல்வியுணர்வு படைத்தவராகவும் கருத்துக்களை வெளிப்படுத்துவதனை அவதானிக்க முடிகிறது. எந்த சூழ்நிலையிலும் தோற்றுவிடுவேனோ என்று சிந்திக்காதீர்கள் நான் ஒரு வெற்றியாளன் என்ற நம்பிக்கைளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது கடினமான விடயமாக இருந்தாலும், பிரச்சினைக்குரிய விடயமாக இருந்தாலும் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்ல வழிபிறக்கும். குறிப்பாகக் கூறுவதானால் தன்னம்பிக்கைக்கும் வெற்றிக்கும் இடையில் பெரியதொரு தொடர்பு காணப்படுகிறது.
உலகில் அரிய பல சாதனைகளைப் படைத்தவர்கள் சாதனை படைத்தது அவர்களது வலிமையினாலல்ல. அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றியது அவர்களது கடின உழைப்பும் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் என்பதனை யாரும் மறுக்கமுடியாது.

நாம் எந்தப்பணியை மேற்கொள்கிறோம் என்பது முக்கியமில்லை. அந்தப் பணியில் நம்முடைய ஆற்றலை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் நமக்குள் இருக்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தி வளர்த்துக்கொள்வதென்பது நம்முடைய ஆர்வத்தையும, முயற்சியையும், நம்பிக்கையையும் பொறுத்தே அமைகிறது. குறிப்பாக நாம் விரும்பியது கிடைக்கவில்லையெனில், கிடைத்ததைவைத்து விரும்பக்கற்றுக் கொள்ளவேண்டும். பொதுவாக நமக்குள்ளே ஏற்படுகின்ற நம்பிக்கையீனமானது தாழ்வு மனப்பான்மை, அச்சம், சந்தேகம், எதிர்காலத்தைப் பற்றிய அவநம்பிக்கை போன்றவற்றுக்கு வித்திடுகிறது. இதன் விளைவாக நம்மிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்த முடியாமல் போகின்றது. வெற்றியை நோக்கிப் பயணிப்பவர் எப்பொழுதும் தனது பணிகளைப் பின்போடுவதனைவிட்டும் தவிர்த்துக்கொள்வதோடு தன்னம்பிக்கையை அதிகம் வளர்த்துக் கொள்வார்.

தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள்.

* வெற்றியையையும் தோல்வியையும் சமமாக பார்க்கப் பழகிக் கொள்ளுங்கள்.
* எச்சூழ்நிலையிலும் உங்களது திறமைகளைப் பிறருடன் ஒப்பிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
* கடந்த காலத்தில் ஏற்பட்ட தோல்விகளை நினைத்து சோர்வு கொள்ளாதீர்கள்.
* தடைகள் அனைத்தும் வெற்றியின் முதற்படி என்ற மனப்பாங்கை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.
* எதுவும் தன்னால் முடியும் என்ற என்னத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* நாம் அடைய எண்னும் இலக்குத் தொடர்பாகத் தெளிவையும் நிதானத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
* எந்தவொரு செயலிலும் உறுதியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
* உடற்பயிற்சி செய்வதனைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நாம் எப்போதும் எம்மை ஒரு வெற்றியாளனாக அடையாளப்படுத்திக்கொள்வதோடு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை முதன்மைப் படுத்திக்கொள்வது முக்கியமாகும். அப்போதுதான் நாம் தன்நம்பிக்கையாளராக மாற முடியும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை  Empty Re: தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை

Post by அ.இராமநாதன் Fri Mar 04, 2011 6:06 pm

[You must be registered and logged in to see this image.]
--

பயனுள்ள கட்டுரை பதிவிட்டமைக்கு நன்றி...

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா,
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா ...என்று
தளராமல் போராடினால் வெற்றி நிச்சயம்..!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை  Empty Re: தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Mar 04, 2011 6:08 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
--

பயனுள்ள கட்டுரை பதிவிட்டமைக்கு நன்றி...

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா,
தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா ...என்று
தளராமல் போராடினால் வெற்றி நிச்சயம்..!

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை  Empty Re: தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை

Post by கவிக்காதலன் Fri Mar 04, 2011 10:00 pm

மிகவும் பயனுள்ள கட்டுரை! நன்றி!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை  Empty Re: தன்னம்பிக்கை : வெற்றியின் அடிப்படை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum