தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உனக்காகவே ...

5 posters

Go down

உனக்காகவே ... Empty உனக்காகவே ...

Post by வ.வனிதா Mon Mar 07, 2011 12:59 pm

[You must be registered and logged in to see this image.]

ஆளில்லாப் பொட்டல்காட்டில்
அரங்கேற்றம் ஓர் காதல்காதை...!
இரு குருகுகள் முணுமுணுக்கும்
குறுந்தொகைப் பாடல்,

"யாயும் யாயும் யாராகியரோ"என்று....

எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும்
விளங்க மறுக்கும் புரியாத புதிராய்
உன்மீது என் காதல்...!

என் சகாப்தத்தை
சம்பந்தப்பட்ட உன்னிடமே
சற்றும் விரிக்கமுடியவில்லை
என்னால்...

மற்றவர்களுக்கு மட்டும்
என் காதல் முழுமதியாய்
முகங்காட்டிவிடுமா? என்ன ?

பசிக்கும் தருணமெல்லாம்
உன் நினைவுகளே அடிசிலாகி
என் பசியாற்றிச் செல்கின்றன...!

என்றும் ஊமையாய் உறங்கிய
என் மனம் இன்றிலிருந்து
உறக்கத்தில் உரையாடல்
நிகழ்த்துகிறது உன்னிடம்....

எந்நேரமும் மௌனம் பந்தலிட்ட
என் இதழ்களுக்குத் தெரியாது....
வெட்கப் பூட்டை முத்தச்சாவியால்
பூட்டி உன் இதயத்துள்
புதைத்தாய் என்று...

என் காலம் முழுதும்
உனக்குக் கண்ணாடியாகக்
காத்திருக்கிறேன்...

உன் சிரிப்பையும் சினத்தையும்
உள்ளவாறு பிரதிபலித்திடுவேன்..!
தினம் என்னில் உன்னைப்
பார்த்துவிட்டுச் செல்ல
மறந்துவிடாதே!

என் செங்குருதியில் உள்ள
இரு சிவப்பணுக்கள் ஒன்றுகூடும்
போதெல்லாம் தோன்றும்
ஒற்றை நினைவு இனி
நீ மட்டுமே !

உள்ளமுவந்து உறுதியளிக்கிறேன் ...

இனி என் பிறப்பும் இறப்பும்
உனக்காகவே!
புகழும் இகழும் உனக்காகவே!
மகிழ்வும் நெகிழ்வும் உன்னுடனே!

உன் இன்பத்தில் மறைந்திருந்து
துன்பத்தில் துணை நிற்பேன் !

இறைவா!
என் கோரிக்கைஏற்று அருளிடு,
எனக்கான என்னவரை....!
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உனக்காகவே ... Empty Re: உனக்காகவே ...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 07, 2011 1:06 pm

//எவ்வளவுதான் விளக்கம் சொன்னாலும்
விளங்க மறுக்கும் புரியாத புதிராய்
உன்மீது என் காதல்...!//


//
எந்நேரமும் மௌனம் பந்தலிட்ட
என் இதழ்களுக்குத் தெரியாது....
வெட்கப் பூட்டை முத்தச்சாவியால்
பூட்டி உன் இதயத்துள்
புதைத்தாய் என்று...//

மிக அருமையாக உங்களவரை நினைத்து எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள், வாழ்த்த வார்த்தைகளே இல்ல அருமையான வரிகள் அனைத்துமே


உங்கள் வாக்குறுதி நிறைவேறட்டும் இறைவனை நானும் பிராத்திக்கிறேன்

//
இனி என் பிறப்பும் இறப்பும்
உனக்காகவே!
புகழும் இகழும் உனக்காகவே!
மகிழ்வும் நெகிழ்வும் உன்னுடனே!

உன் இன்பத்தில் மறைந்திருந்து
துன்பத்தில் துணை நிற்பேன் !

இறைவா!
என் கோரிக்கைஏற்று அருளிடு,
எனக்கான என்னவரை....!//
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உனக்காகவே ... Empty Re: உனக்காகவே ...

Post by வ.வனிதா Mon Mar 07, 2011 2:22 pm

நன்றி தோழரே ! நீங்கள் கூறியது மிக்க சரியே !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உனக்காகவே ... Empty Re: உனக்காகவே ...

Post by சிசு Mon Mar 07, 2011 2:42 pm

//எந்நேரமும் மௌனம் பந்தலிட்ட
என் இதழ்களுக்குத் தெரியாது....
வெட்கப் பூட்டை முத்தச்சாவியால்
பூட்டி உன் இதயத்துள் புதைத்தாய் என்று...
//

வரிகளே சிவக்கிறது வெட்கத்தில்...

//என் செங்குருதியில் உள்ள
இரு சிவப்பணுக்கள் ஒன்றுகூடும்
போதெல்லாம் தோன்றும்
ஒற்றை நினைவு இனி நீ மட்டுமே !//

காதல் வழிகிறது வரிகளில்... (Obviously in your heart too...)

வழக்கம்போல், வழக்கத்திலில்லாத சில புதிய வார்த்தைகள் இதிலும்...
//இரு குருகுகள்//
//அடிசிலாகி//
அர்த்தங்களை சொல்லுங்களேன்....

ரசித்தேன்... அருமை.
ருசித்தேன்... இனிமை.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

உனக்காகவே ... Empty Re: உனக்காகவே ...

Post by வ.வனிதா Mon Mar 07, 2011 3:39 pm

நன்றி சிசு ! அதன் அர்த்தங்கள் குருகுகள் என்றால் பறவைகள் ! அடிசில் என்பது அரிசி (சோறு ) இதான் ! மிக்க நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உனக்காகவே ... Empty Re: உனக்காகவே ...

Post by நிலாமதி Mon Mar 07, 2011 7:35 pm

உணர்வுகள் மிகவும் அழகாய், அன்பாய் , காதலாய் வந்திருக்கிறது. பாராடுக்கள்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

உனக்காகவே ... Empty Re: உனக்காகவே ...

Post by கவிக்காதலன் Mon Mar 07, 2011 11:27 pm

//உன் சிரிப்பையும் சினத்தையும்
உள்ளவாறு பிரதிபலித்திடுவேன்..!
தினம் என்னில் உன்னைப்
பார்த்துவிட்டுச் செல்ல
மறந்துவிடாதே!//

அருமையாக இருக்கு...! கதல் கவிதைகளில் கலக்குறீங்க...! கலக்கல் கலக்கல்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உனக்காகவே ... Empty Re: உனக்காகவே ...

Post by வ.வனிதா Tue Mar 08, 2011 11:39 am

ஏதோ உங்களிடம் இருந்து சிறிது திருடிவிட்டேன் என்று நினைக்கிறேன் ! எண்ணங்களை ! நன்றி அனிஷ்
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

உனக்காகவே ... Empty Re: உனக்காகவே ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum