தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

4 posters

Go down

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி Empty இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 08, 2011 11:40 pm

[You must be registered and logged in to see this image.]

தர்மபுரி:தர்மபுரி
அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய
பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள்
தெரிவிக்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம் முத்தம்பட்டி கோவிந்தாபுரம்
கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி. அவர் கடந்த 35 ஆண்டுக்கு முன் இறந்து
விட்டார். அவரது மனைவி காவேரியம்மாள் (120). அவர்களுக்கு 10 குழந்தைகள்.
அதில், ஆறு குழந்தைகள் இறந்து விட்டன. தற்போது, முத்து (85), காளியப்பன்
(65), சின்னசாமி (62) என்ற மகன்களும், மாதம்மாள் (60) என்ற மகளும் உள்ளனர்.
அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை 120 பேர்.காவேரியம்மாள் 120
வயதிலும் கைத்தடி ஏந்தி கிராமத்தில் சமையல் செய்து, தனியாக குடித்தனம்
நடத்தி வருகிறார்.

மூன்று தலைமுறைகளை கண்ட காவேரியம்மாள், இது
வரையில் மருத்துவமனை பக்கம் ஒதுங்கியது கூட கிடையாது.அவருக்கு தற்போது
புதிதாக பல் முளைத்திருப்பதை கண்ட அவரது உறவினர்கள், கிராம மக்கள், அவர்
மறு பிறவி எடுத்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று
காவேரியம்மாளுக்கு சடங்கு செய்து, அவரிடம் ஆசி பெற்றனர்.கிராமத்தில் எந்த
விசேஷம் நடந்தாலும் காவேரியம்மாளிடம் முதல் ஆசி பெற்று செல்கின்றனர். இன்று
வரையில் தனக்கு தேவையான சமையல், வீட்டு வேலைகள் வரை அவரே செய்து
கொள்கிறார்.
அவரது மகன்கள், மகள் வீட்டுக்கு அழைத்த போதும், "தன்னால்
முடியும் வரையில் சமைத்து சாப்பிடுவேன்' எனக்கூறி தனியாக குடித்தனம் நடத்தி
வரும் காவேரியம்மாள், தனது கடந்த கால வாழ்க்கை குறித்து கூறியதாவது:எனக்கு
ஒன்பது வயது இருக்கும் போது துரைசாமியை திருமணம் செய்து வைத்தனர்.
திருமணத்துக்கு பின் 14வது வயதில் பூப்படைந்தேன். ஆரம்பத்தில் எனது சொந்த
ஊரான தர்மபுரி அடுத்த எர்ரப்பட்டியில் குடியிருந்தோம். கோவிந்தாபுரம்
வனப்பகுதியில் கட்டைகள் வெட்டும் கூலி வேலைக்கு நானும், என் கணவரும்
வந்தோம்.
தொடர்ந்து வேலை இருந்ததால், கோவிந்தாபுரத்தில் குடியேறி விட்டோம்.சோளம்,
தினை, கேழ்வரகு ஆகியவற்றை உணவு செய்து சாப்பிட்டோம். தற்போது, சாதம், களி,
மட்டன் சாப்பிடுகிறேன்.கடுமையான உழைப்பும், நல்ல உணவும் என்
ஆரோக்கியத்துக்கு காரணம் என நினைக்கிறேன்.
இது வரையில் ஊசி
போட்டதில்லை, மாத்திரைகள் சாப்பிட்டதில்லை. வீட்டில் நான் மூத்தவள்
என்பதால், என் மகன்கள் முதல் உறவினர்கள் வரையில் எனக்கு மிகுந்த
மரியாதையும், அன்பும் காட்டி வருவது எனக்கு ஆரோக்கியத்தை
கொடுத்துள்ளது.அரிசி சாதம் சமீபத்தில் தான் சாப்பிடுகிறேன். கம்பு,
கேழ்வரகு கூழ் தான் எனக்கு முக்கிய ஆகாரம். கிராம மக்களும், உறவினர்களும்
நான் மறு பிறவி எடுத்திருப்பதாக எனக்கு சடங்குகள் செய்து, நான் இன்னும் பல
ஆண்டு வாழ பூஜைகள் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.முதியோர் உதவி தொகைக்கு
விண்ணப்பம் கொடுத்தேன். எனக்கு அதிகம் வயதாகி விட்டது எனக்கூறி முதியோர்
உதவி தொகை கொடுக்க மறுத்து விட்டனர். அரசு எனக்கு முதியோர் உதவி தொகை வழங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
உடல் நல பாதிப்பு: டாக்டர்

காவேரியம்மாளுக்கு
நடந்த சடங்கு, பல் முளைத்திருப்பது குறித்து தர்மபுரி கமலம் மருத்துவனை
டாக்டர் சுப்பிரமணியனிடம் கேட்ட போது, ""பெண்கள் இரண்டாம் முறை பூப்படைவது
என்பது சாத்தியம் இல்லை. அவருக்கு கர்ப்பப்பையில் கட்டி அல்லது வேறு ஏதாவது
கோளாறு இருக்கலாம். அவரது உடல் நிலை நன்றாக இருப்பதால், அதன் பாதிப்பு
தெரியாமல் உள்ளது. அதே போல் பல் முளைப்பதும் சாத்தியம் இல்லை.
ஈறுப்பகுதியில் உள்ள சதைகள் தேய்ந்து எலும்புகள் வெளியே தெரிவதை பல்
முளைத்திருப்பதாக கூறியிருக்கலாம். உடனடியாக டாக்டரை பார்த்து
சிகிச்சையும், ஆலோசனையும் பெறுவது நல்லது,'' என்றார்."அவரது உடலில்
ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உடல் நலப்பாதிப்பு' என, டாக்டர் கூறியதை
காவேரியம்மாளின் உறவினர்களிடம் கூறி, மருத்துவ சிகிச்சை அளிக்க நாம்
வலியுறுத்தியதை, அவரது உறவினர்கள் ஏற்று, சிகிச்சைக்கு அழைத்து செல்வதாக
கூறினர்.

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி Empty Re: இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

Post by நிலாமதி Wed Mar 09, 2011 7:09 am

வைரம் பாய்ந்த உடல் என்பார்கள். இன்னும்
நீண்ட காலம் வாழனும் :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி Empty Re: இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

Post by தோழி பிரஷா Wed Mar 09, 2011 8:21 am

nilaamathy wrote:வைரம் பாய்ந்த உடல் என்பார்கள். இன்னும்
நீண்ட காலம் வாழனும் :héhé:
நீண்ட காலங்கள் வாழனும்
தோழி பிரஷா
தோழி பிரஷா
நடத்துனர்
நடத்துனர்

Posts : 5348
Points : 6428
Join date : 08/02/2011
Age : 43
Location : canada

Back to top Go down

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி Empty Re: இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

Post by அ.இராமநாதன் Wed Mar 09, 2011 10:05 am

[You must be registered and logged in to see this image.]
--
வாழட்டும வளமுடன் பல்லாண்டு..
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி Empty Re: இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 09, 2011 11:09 am

வாழட்டும வளமுடன் பல்லாண்டு..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி Empty Re: இளமையோடு வலம் வரும் 120 வயது பாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum