தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல்
3 posters
Page 1 of 1
நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல்
[You must be registered and logged in to see this image.]
புதுடில்லி:
உலக கோப்பை தொடரில் இன்று டில்லியில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா,
நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் பலம்குன்றிய நெதர்லாந்து அணியை
நொறுக்கித்தள்ள இந்திய அணி காத்திருக்கிறது.
இந்தியா, இலங்கை, வங்கதேச
மண்ணில் பத்தாவது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டில்லியில் உள்ள
பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில்
(பகலிரவு), தோனி தலைமையிலான இந்திய அணி, "கத்துக்குட்டி' அணியான
நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.
15 ஆண்டுகளுக்கு பின்:
முதல்
லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, இங்கிலாந்துக்கு
எதிரான போட்டியை "டை' செய்தது. பின் அயர்லாந்தை அடக்கிய முனைப்புடன் இன்று
நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இதில், வெற்றி பெறும் பட்சத்தில் 7
புள்ளிகளுடன், சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணில் நடக்கும் உலக
கோப்பை தொடரில் "நாக்-அவுட்' சுற்றான காலிறுதிக்கு முன்னேறலாம். முன்னதாக
கடந்த 1996ல் இந்தியா-பாகிஸ்தான்-இலங்கை மண்ணில் நடந்த தொடரில், அரையிறுதி
வரை இந்திய அணி முன்னேறியது.
பலமான பேட்டிங்:
இந்திய
அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக சதம் கடந்த
சேவக், அதன்பின் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இன்று எழுச்சி பெற
வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதேபோல மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், அபார
ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், மீண்டும் ஒரு சதம் கடந்து
சாதிக்கலாம். "சூப்பர் பார்மில்' உள்ள காம்பிர், அதிரடி காட்டும்
பட்சத்தில் ரன் மழை பொழியலாம். அயர்லாந்துக்கு எதிராக "ஆல்-ரவுண்டராக'
ஜொலித்த யுவராஜ் சிங், இன்றும் சாதிக்கலாம். இவருடன் கேப்டன் தோனி, விராத்
கோஹ்லி, யூசுப் பதான் உள்ளிட்டோர் "மிடில்-ஆர்டரில்' அசத்தும் பட்சத்தில்,
400 ரன்களுக்கு மேல் சுலபமாக எட்டலாம். சுரேஷ் ரெய்னா வாய்ப்பு பெறும்
பட்சத்தில், "ஆல்-ரவுண்டராக' அசத்தலாம்.
ஜாகிர் ஆறுதல்:
முதலிரண்டு
போட்டியில் பவுலிங்கில் ஏமாற்றிய இந்திய வீரர்கள், அயர்லாந்துக்கு எதிராக
சிறப்பாக செயல்பட்டு ஆறுதல் அளித்தனர். இருப்பினும் இனிவரும் போட்டிகள்
சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால், பவுலிங்கில் கூடுதல் கவனம்
செலுத்தினால் நல்லது. அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான், இதுவரை 8
விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளித்து வருகிறார். இவருக்கு முனாப் படேல்,
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வேகங்கள் ஒத்துழைப்பு அளித்தால் கூடுதல் பலம். காயம்
காரணமாக கடந்த போட்டிகளில் விளையாடாத ஆஷஸ் நெஹ்ரா, இன்று வாய்ப்பு பெறும்
பட்சத்தில் வேகத்தில் சாதிக்கலாம்.
ஹர்பஜன் ஏமாற்றம்:
மிகவும்
எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இதுவரை 2 விக்கெட்
மட்டுமே கைப்பற்றி உள்ளார். மற்ற அணிகளில் உள்ள முன்னணி
சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வேட்டை நடத்திவருகின்றனர். ஆனால் சொந்த
மண்ணில் அனுபவ ஹர்பஜன் திணறி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. பியுஸ் சாவ்லா,
அஷ்வின் உள்ளிட்டோர் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சிறப்பாக செயல்பட
வேண்டும். யுவராஜ் சிங், யூசுப் பதான் உள்ளிட்ட பகுதிநேர
சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தி ஆறுதல் அளிப்பது கூடுதல் பலம்
சேர்த்துள்ளது.
கட்டாய வெற்றி:
இங்கிலாந்து,
வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு எதிராக தோல்வி கண்ட
நெதர்லாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி பெற
வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதில் தோல்வி அடையும் பட்சத்தில்,
நெதர்லாந்து அணியின் காலிறுதி வாய்ப்பு பறிபோகிவிடும்.
டசாட்டே நம்பிக்கை:
இங்கிலாந்துக்கு
எதிரான போட்டியில் சதம் கடந்து அசத்திய டசாட்டே, அதன்பின் பெரிய அளவில்
சாதிக்கவில்லை. இன்று இவர், இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளிக்கும்
பட்சத்தில், மீண்டும் ரன் மழை பொழிய வாய்ப்பு உள்ளது. கடந்த போட்டிகளில்
ஏமாற்றிய கெர்வெஜீ, பார்ரெசி உள்ளிட்ட துவக்க வீரர்கள், இன்று எழுச்சி பெற
வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். "மிடில்-ஆர்டரில்' டாம் கூப்பர்,
ஜூய்டெரன்ட், கேப்டன் போரன், டி குரூத் உள்ளிட்டோர் கைகொடுத்தால் நல்ல
ஸ்கோரை பெறலாம்.
பலவீனமான பவுலிங்:
நெதர்லாந்து
அணியின் பந்துவீச்சு எதிர்பார்த்தபடி சிறப்பாக இல்லை. இதனால்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நல்ல ஸ்கோரை பெற்றிருந்த போதிலும்
வெற்றி பெற முடியவில்லை. "ஆல்-ரவுண்டர்' டசாட்டே, கடந்த மூன்று போட்டியில் 6
விக்கெட் வீழ்த்தி நம்பிக்கை அளித்து வருகிறார். இன்றும் இவர் விக்கெட்
வேட்டை நடத்தலாம். இவர்களை தவிர புக்காரி, வெஸ்ட்டிஜ்க், லூட்ஸ், சீலார்
உள்ளிட்டோரும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் நல்லது.
எட்டு ஆண்டுகளுக்கு பின்...
சர்வதேச
ஒருநாள் மற்றும் உலக கோப்பை அரங்கில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் ஒரே ஒரு
முறை மட்டும் மோதி உள்ளன. இன்றைய போட்டி மூலம் சுமார் எட்டு ஆண்டுகளுக்கு
பின், 2வது முறையாக (2003, 2011) மோத உள்ளன. கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை
தொடரில், முதலில் பேட் செய்த இந்திய அணி 204 ரன்களுக்கு "ஆல்-அவுட்' ஆனது.
பின்னர் பவுலிங்கில் அசத்திய இந்தியா, நெதர்லாந்தை 136 ரன்களுக்கு
சுருட்டியது.
* நெதர்லாந்துக்கு எதிராக அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள்
வரிசையில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் (52 ரன்கள்) உள்ளார். நெதர்லாந்து
சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் சேர்த்த வீரர்கள் வரிசையில் டான்
வான் புங்கே (62 ரன்கள்) முன்னிலை வகிக்கிறார்.
* நெதர்லாந்துக்கு
எதிராக அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் ஜவகல்
ஸ்ரீநாத், அனில் கும்ளே தலா 4 விக்கெட் வீழ்த்தி முன்னிலை வகிக்கின்றனர்.
நெதர்லாந்து சார்பில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய
பவுலர்கள் வரிசையில் டிம் டி லீடி (4 விக்.,), அடீல் ராஜா (2 விக்.,)
ஆகியோர் உள்ளனர்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல்
பொருத்திருந்து பார்க்கலாம்
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நெதர்லாந்தை நொறுக்குமா இந்தியா! *டில்லியில் இன்று மோதல்
வாழ்த்துக்கள் இந்தியா வெற்றி பெற்று விடும் என்று தான் நான் நினைக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-இலங்கை இன்று மோதல்
» சிந்து நதி கமிஷன் கூட்டம்: டில்லியில் இன்று துவக்கம்
» கோப்பை யாருக்கு? இந்தியா, இலங்கை மோதல்
» மும்பையை கரை சேர்ப்பாரா சச்சின் * இன்று பஞ்சாப்புடன் மோதல்
» சென்னை கிங்ஸ் வெற்றிநடை தொடருமா! * இன்று கொச்சி அணியுடன் மோதல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum