தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



'இளைஞன் 2010' உங்கள் இளமை முழுமையாக வேண்டுமா?

2 posters

Go down

'இளைஞன் 2010' உங்கள் இளமை முழுமையாக வேண்டுமா? Empty 'இளைஞன் 2010' உங்கள் இளமை முழுமையாக வேண்டுமா?

Post by உதுமான் மைதீன் Thu Oct 21, 2010 2:45 pm

இளமை இதோ... இதோ...' என்று உடம்பும் மனசும் றெக்கை கட்டிப் பறக்கும் வயசு

டீனேஜ் பருவம்! மாயா ஜாலங்கள் சாத்தியம் என்று நம்பும், பட்டாம்பூச்சிகள் நுழைய ஜன்னல் திறந்துவைக்கும், படிப்பு என்றாலே அலர்ஜி... மற்ற அனைத்துக்கும் எனர்ஜி என தத்தித் தாவும் மனசு... அலைபாயும் வயசு. எல்லாம் ஓ.கே! ஆனால், இந்த உற்சாகம் மட்டுமேதான் இளமையின் அடையாளமா? அதோடு, கொஞ்சம் உத்வேகமும் சரிவிகிதத்தில் கலந்தால்தானே அது பெர்ஃபெக்ட் இளமை. 2,000 செல்போனில்கூட கேமரா, வீடியோ, எம்.பி-3, வயர்லெஸ் எஃப்.எம், 2 ஜி.பி மெமரி கார்டு, ப்ளூ டூத் என ஏகப்பட்ட 'அடிப்படை வசதி'கள் எதிர்பார்ப்பவர்கள் நாம். அப்படி இருக்க, வேலைவாய்ப்புச் சந்தையில் 'மிக மதிப்புள்ளவனாக'த் தன்னை ஓர் இளைஞன் சந்தைப்படுத்த என்னென்ன தகுதிகள் அவசியம்? அட, வேலைவாய்ப்புச் சந்தையை விடுங்கள்... 'இளைஞன் 2010' ஆக இருப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் என்னென்ன? கொஞ்சமே கொஞ்சம் பட்டியல் படிக்கலாமா?

"கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஒன்றைத்தான் அனைத்து நிறுவனங்களும் தாங்கள் தேர்வு செய்கிற விண்ணப்பதாரரிடம் எதிர்பார்க்கின்றன. இதுவரை கற்றது போதும் என்று ஒருவர் நினைத்துவிட்டால், அத்துடன் அவர் வளர்ச்சி நின்றுபோகிறது. அவர் நிறுவனத்துக்கும் தேவைப்பட மாட்டார்!" என்று சின்ன எச்சரிக்கையுடன் துவக்குகிறார் naukri.com நிறுவனத்தின் தேசிய மேலாளர் சுரேஷ்குமார். 'www.naukri.com'ல் தங்கள் 'ரெஸ்யூம்'களைப் பதிவேற்றாத இளைஞர்கள் மிகவும் சொற்பமே. துறை வாரியாகத் தேவையான திறன்களைப் பட்டியல் இடுகிறார் சுரேஷ்குமார்.

டிரைவிங்

"இந்தக் காலத்தில் பைக் இல்லாத இளைஞர்களை ஓரங்கட்டிவைப்பது வேறு யாருமே இல்லை. அதே இளைஞர் பட்டாளம்தான்! காலேஜ், ஆபீஸ் என்று அலைந்து திரிய, 'ப்ராமிஸா ஃப்ரெண்டுப்பா' என்று சமாளிக்கும் தோழிகளை பில்லியன் ரவுண்ட் அடிக்க... தவிரவும் இன்னதென்று இல்லாமல் எல்லா தேவைகளுக்கும் 'சக்கரம்' கொடுக்கும் தோழன் உங்கள் டூ வீலர். இன்று உலகமே ஜெட் வேகத்தில் செல்ல... நீங்கள் கால் நடையாக, பொடி நடையாக அலைந்துகொண்டு இருந்தால் அது வேலைக்கே ஆவாது. ஆகவே, முதல் தகுதியாக, 'எல்' போர்டு மாட்டி 'எட்டு' போட்டு வண்டி ஓட்டக் கற்றுக்கொள்ளுங்கள். டூ வீலர் மட்டுமல்ல... கார், வேன் என்று துவங்கி முடிந்தால் லாரி, பொக்லைன், ரயில், கப்பல் வரைகூட ஓட்ட கற்றுக்கொள்ளலாம். இயக்கம் இல்லாமல் இந்த உலகம் இல்லை. அதை இயக்குபவர்களுள் நீங்களும் ஒருவராக இருங்கள். மெர்சிடிஸ் பென்ஸ் காருக்கு டிரைவராக இருப்பவர், சாஃப்ட்வேர் இன்ஜினீயரைக் காட்டிலும் அதிக சம்பளம் பெறுபவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அதே சமயம், வாகனங்கள் ஓட்டத் தெரிந்தால் மட்டும் போதாது. அதன் வகைக்கு என தக்க டிரைவிங் லைசென்ஸும் அவசியம். பல மார்க்கெட்டிங் துறை வேலைகளுக்கு டிரைவிங் லைசென்ஸ்தான் 'கேட் பாஸ்' ஆக இருக்கும்!"

கணிப்பொறியைக் காதலி

"ஆங்கில அறிவுக்கு நிகராக இன்று கணிப்பொறி, இணைய பரிச்சியமும் அவசியம், அத்தியாவசியம். இன்டர்நெட் என்றவுடனே ஆர்குட், ஃபேஸ்புக், டிவிட்டர், யூ டியூப் டவுன்லோடுகள் மட்டும்தான் என்று நினைத்தால், வெரி ஸாரி. ஒரு இடத்தில் வேலைக்குச் சேரும்போது உங்க இணைய அறிவைச் சோதிக்க இ-மெயிலில் ஒரு ஃபைலை அட்டாச் செய்து அனுப்பச் சொல்லலாம். அல்லது தமிழில் ஒரு பத்தியை டைப் அடிக்கச் சொல்லலாம். அந்தச் சமயத்தில், உங்கள் இ-மெயில் இணைப்புகள்பற்றி தெரியாமல் இருந்தாலோ அல்லது தமிழ் யூனிகோட் எழுத்துரு பற்றிய அறிமுகம் இல்லாவிட்டாலோ... டிகிரி படிப்பை ஃபர்ஸ்ட் கிளாஸில் முடித்திருந்தாலும், உங்களைப் படிப்பற்றவர் போலத்தான் நடத்துவார்கள். சமூக வலைதள நிகழ்வுகள்பற்றிய 'அப்டேட்' அறிவும் அவசியம். அதற்காக அதிலேயே பழியாகக் கிடந்து, மூழ்கித் திளைத்து, நேரத்தை விரயமாக்கவும் கூடாது. சமயங்களில், உங்கள் சமூக வலைதள சேட்டைகள், உங்கள் இமேஜ் அல்லது வேலைக்கு உலை வைப்பதாகக்கூட அமையும். இது தவிர எக்ஸல், பவர் பாயின்ட் போன்ற சில அடிப்படைப் பயன்பாடுகளும் தெரிந்து இருக்க வேண்டும். இணைய அறிமுகம் இருந்தாலும், கணிப்பொறி கீ-போர்டு பயன்படுத்தத் தெரியவில்லை என்றால், 10 நிமிட வேலை 10 மணி நேரம் வரைகூட இழுத்தடிக்கும். நேர்முகத் தேர்வில் கணிப்பொறி முன் அமர்ந்திருக்கும் உங்களிடம், ஒரு செல்போன் நம்பரை டைப் செய்யச் சொல்லும்போது, அதை டைப் செய்ய கீ-போர்டில் ஆங்கில எழுத்துக்களுக்கு மேலே உள்ள விசைகளைப் பயன்படுத்துகிறீர்களா அல்லது வலதுபுறம் இருக்கும் விசைகளையா என்பதைக்கூட எதிர்பார்ப்பார்கள். மவுஸையே அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்துவதைவிட 'கீ-போர்டு ஷார்ட் கட் கீ'க்களைப் பயன்படுத்துகிறீர்களா என்பதையும் கவனிப்பார்கள்.

இனிப்பாகவே இருந்தாலும், அதை கலர் பேப்பரில் சுற்றித்தானே சாக்லேட்டாகக் கொடுக்கிறார்கள். அதே ஃபார்முலாதான். நீங்கள் அறிவாளியாக, திறமைசாலியாக இருக்கலாம். அதைத் தக்க தருணத்தில் அழகாக வெளிப்படுத்தவும் தெரிய வேண்டும். ஆல் தி பெஸ்ட்!" என்று வாழ்த்துடன் முடிக்கிறார் சுரேஷ்குமார்.

கல்லூரி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தன்னம்பிக்கைப் பயிற்சிகள் நடத்திவரும் 'மைன்ட் டைனமிக்ஸ்' மையத்தின் தலைவர் முத்தையா ராமநாதன் ஆரோக்கியமான உடலைக் கைக்கொள்ள சில விஷயங்களைப் பட்டியல் இடுகிறார்.

நீச்சல்

"உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஒரே நேரத்தில் பயிற்சி அளிக்கும் கலை நீச்சல்தான். உற்சாகமான மனநிலை, தொந்தி இல்லாத மெலிந்த உடல்வாகு, முதுகு - மூட்டு வலிகள் இல்லாமல் இருப்பது போன்றவை நீச்சலின் பயன்கள். ஆபத்து சமயங்களில் நீருக்குள் தத்தளிப்பவர்களை இழுத்து கரையில் போடும் அளவுக்கு நீச்சலில் ஆழமான பயிற்சிகள் பெறுவது நலம்!"

தற்காப்புக் கலைகள்

"கராத்தே, ஜூடோ போன்று ஏதேனும் ஒரு தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்வது உடலையும் மனதையும் நெறிப்படுத்தும். கராத்தே தெரியும் என்பதற்காக வம்புச் சண்டைகளுக்குப் போவது எல்லாம் கற்ற கலைக்குத் துரோகம் செய்வது போன்றது. ஆபத்தான, அதிலும் மிகவும் தேவையான சமயத்தில் மட்டுமே கற்றுக்கொண்ட கலையைப் பிரயோகிக்க வேண்டும்!"

அடிப்படை மெக்கானிசம்

இருள் வேளை, நெடுஞ்சாலை... ஓட்டிச் செல்லும் பைக் திடீரென மக்கர் செய்கிறது. தலைவிதியே என்று இரண்டு கி.மீ. தள்ளிச் சென்று மெக்கானிக் கடையில் கொடுத்தால், 'ஸ்பார்க் ப்ளக்' தூசியை 'பூபூ'வென ஊதிப் பொருத்தி வண்டியைச் சரி செய்து கொடுப்பார்கள். சின்ன அடிப்படை மெக்கானிசம் தெரியாததால், எவ்வளவு மன உளைச்சல், நேர விரயம். இதேபோல ஃப்யூஸ் போனால் கழற்றி மாற்றுவது, கார் டயர் பஞ்ச்சர் பார்ப்பது, பல வகை செல்போன்களின் அடிப்படைக் கோளாறு நீக்கத் தெரிந்துஇருப்பது போன்றவை இக்கட்டான தருணங்களில் உங்கள் மதிப்பை ஏகத்துக்கும் அதிகரிக்கும்!"

பன்னாரி அப்பேரல்ஸ் நிறுவனத்தின் மனித வளத் துறைத் தலைவர் ஜீவானந்தம், கார்ப்பரேட் மாணவர்கள் அவசியம் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அடிப்படைகளை விவரிக்கிறார். "மனித வளத் துறை போன்ற பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும்போது, தொழிற்சாலைச் சட்டங்கள், பணியாளர் சட்டங்கள் போன்றவை ஓரளவுக்காவது தெரிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வேலைக்கு மட்டுமே என்று இவற்றைப் படிக்க வேண்டாம். ஓர் இந்தியக் குடிமகனாக சில நடைமுறைச் சட்டங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இன்றைய சூழலில் நுகர்வோர் சட்டம், தகவல் அறியும் சட்டம், போன்றவற்றைத் தெரிந்து கொள்வது மிக அவசியம். அது உங்கள் கடமையும்கூட. விதிகளைத் தெரிந்துவைத்திருந்தால்தான் நம் உரிமை களுக்காகவும் குரல் கொடுக்க முடியும்!"

நிதி திட்டமிடுதல் மற்றும் கையாளுதல்

" 'நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு 10,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதை அந்த நிறுவனத்தின் சார்பாக வங்கி, பங்குச் சந்தை ஆகியவற்றில் பயன்படுத்த வேண்டும். எப்படி முதலீடு செய்வீர்கள்?' - இப்படி ஒரு கேள்வி இன்டர்வியூ சமயத்தில் கேட்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? எந்தப் பதற்றமும் இல்லாமல், 20 சதவிகிதத்தை இதில் முதலீடு செய்யலாம், 40 சதவிகிதத்தை அதில் செல்லுத்தலாம், 10 சதவிகிதத்தை கடனாகத் திருப்பிச் செலுத்தலாம் என்று திட்டமிடுகிற அறிவு வேண்டும். இதற்கு நீங்கள் எம்.பி.ஏ., படித்துஇருக்க வேண்டிய அவசியம் இல்லை. குடும்பத்தில் சாதாரணமாகக் கையாளப்படும் பட்ஜெட் தெரிந்திருந்தால் போதும். நீங்கள் சரியாக முதலீடு செய்கிறீர்களா என்பது வேறு விஷயம். நிறுவனங்கள் எதிர்பார்ப்பது நிதி பற்றிய அடிப்படைப் புரிதல்களைத்தான். இதற்கு தினசரி வணிக செய்தித்தாள்களைக் கவனித்து வந்தாலே போதுமான விஷயங்களைக் கிரகித்துக்கொள்ளலாம்!"

அடிப்படைக் கணிதம்

"இன்று எந்தத் தேர்வு முறையிலும் 'ஆப்டிட்யூட்' எனப்படும் அடிப்படைக் கணித தேர்வுகள் முக்கிய இடம் பிடிக்கின்றன. மனித வளத் துறையிலும் 'பெர்ஃபார்மன்ஸ் மேனேஜ்மென்ட்' என்பதில் உங்களின் திறமைகள் எண்களின் வழிதான் கணக்கிடப்படும். இந்த அடிப்படைக் கணித அறிவுடன், டெஸ்ட் ஆஃப் ரீசனிங் போன்ற லாஜிக்கல் சம்பந்தமான கேள்விகளும் கேட்கப்படும். ஒரு சூழ்நிலையை உங்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடிகிறதா என்பதை அறியவே இத்தகைய சோதனைகள். இந்தத் திறன்களை மேம்படுத்த பல புத்தகங்கள் இருக்கின்றன. சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படுகின்றன!"

முதலுதவி

"கல்லூரி, அலுவலகம், சினிமா தியேட்டர், சாலை என எங்கும், எப்போதும், எவரேனும் விபத்தில் சிக்கலாம். அப்போது ஆம்புலன்ஸ் வரும் வரை பாதிக்கப்பட்டவருக்குத் தேவையான சிகிச்சைகளை அளிப்பது ஓர் உயிரையே காப்பாற்றும். 'ஹ... எனக்கு எல்லாம் அந்த நிலைமை வரவே வராது!' என்று நீங்கள் அசட்டையாகவே இருக்க முடியாது. உங்களுக்கோ உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கோ எந்தச் சமயத்திலும் அந்த நிலை ஏற்படலாம். அப்போது நீங்கள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கவோ, முதலுதவி செய்யக் கற்றுக்கொண்டோ இருக்க முடியாது. அடிப்படை முதலுதவி செய்யத் தெரிந்தவர், பாதி கடவுள் அல்லது பாதி மருத்துவருக்குச் சமம். முதலுதவி பயிற்சியைப் பல மருத்துவமனைகள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எந்தச் சிரமும் இன்றி நீங்கள் கற்றுக்கொள்ளலாம்!"

என்ன நண்பர்களே... நீங்கள் அடுத்து என்ன கற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? கிடார் வாசிக்கவோ, சமூக சேவை நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ, ஜெர்மன் மொழியைப் படிப்பதோ... இப்படி ஏதேனும் ஒன்றில் உங்களை முழுமையாக ஈடுபடுத்தி, உங்களின் திறமைக் கும் அறிவுக்கும் உரமேற்றிக்கொண்டே இருங்கள். மேற்குறிப்பிட்ட தகுதிகள் இருந்தாலே 'ஒருவன் இளைஞன்' என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இவைகூட இல்லாதவர்கள் இளைஞன் என்ற வரையறைக்குள் எப்படி அடங்குவார்கள்?

ஸோ, கெட் ரெடி ஃபோக்ஸ்!
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

'இளைஞன் 2010' உங்கள் இளமை முழுமையாக வேண்டுமா? Empty Re: 'இளைஞன் 2010' உங்கள் இளமை முழுமையாக வேண்டுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Oct 21, 2010 2:49 pm

அருமையான பகிர்வு பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum