தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆளுமையின் அதிசயம் -மகேஸ்வரி சற்குரு

Go down

ஆளுமையின் அதிசயம்  -மகேஸ்வரி சற்குரு Empty ஆளுமையின் அதிசயம் -மகேஸ்வரி சற்குரு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Mar 12, 2011 7:18 pm

அரசு அலுவலகங்களில் உள்ள கதவுகள் சிலவற்றில் ‘தள்ளு’ என்று
எழுதியிருக்கும். இதைக் கிண்டல் செய்து எத்தனையோ மேடைகளில் பலர் பேசியதும்
உண்டு. ஆனால் வெற்றிக்கான கதவுகள் திறக்க வேண்டுமென்றால் தள்ளுதல்
இருக்கவேண்டும். தள்ளுதல் சாத்தியமாவது நம் ஆளுமை சக்தியால்தான்.


சிலந்தி வலைப்பின்னலாக இருக்கின்ற வாழ்க்கையில் எப்படி எப்படி நாம்
போகப் போகிறோம் என்பதுதான் கணக்கு. கணக்கிடலை மிகச் சரியாக செய்வதுதான்
ஆளுமையின் அதிசயம்! நம்மீது வீசப்படுகின்ற விமர்சனங்கள் என்ற கற்களை
மைல்கற்களாக மாற்றும் அதிசயம் ஆளுமைத் திறனால் முடியும். ஆளுமை என்பதற்கு
ஒரு சிலர் வகுத்துக்கொண்டுள்ள நியதி எவருடனும் நட்புணர்வுடன் பேசாமல்,
பந்தாவோடு இருப்பது என்று. அதில்லைங்க! மற்றவர்களுடன் பேசாமல் இருப்பது
அல்ல ஆளுமை, மற்றவர்களால் (நாம்) பேசப்படுவதுதான் ஆளுமை! அதுதான் ஆளுமையின்
அதிசயமும் கூட.
வெற்றியை கற்றுக்கொடுக்கும் குரு யார் தெரியுமா? என்று ஒரு S.M.S.
பதில் பெற்றோர்? உறவினர்? ஆசிரியர்? எதுவும் இல்லை. வெற்றியைக் கற்றுக்
கொடுக்கும் குரு தோல்வி! தோல்விக்கும் நமக்கும் இடையேயான போட்டியில்
ஜெயிக்க வேண்டியது நாம்தான். இரண்டுமுறை (2000, 2007) உலக செஸ் சாம்பியன்
பட்டம் பெற்ற விஸ்வநாதன் ஆனந்த், அக்டோபர் 2008ல் நடந்த 12 சுற்றுகள் கொண்ட
போட்டியில் 10வது சுற்றுப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.
ஆனாலும் அடுத்த 2 சுற்றுக்களில் மிகச் சிறப்பாக காய் நகர்த்தி ரஷிய வீரர்
விளாடிமிர் கிராம்னிக்குடன் டிரா செய்தார். மீண்டும் உலக சாம்பியன் பட்டம்
பெற்றார். மூன்று முறை உலக சாம்பியன் ஆன நம்பிக்கை நட்சத்திரம்.
காத்திருப்புகள் மட்டும் சரித்திரம் படைப்பதில்லை. காத்திருக்கும்போது
நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதுதான் சரித்திரம் படைக்கும் என்றார்
மகாத்மா காந்தி. உடைகள் ஆளுமைப் பண்பை அதிகப்படுத்திக்காட்டும் என்பது
ஒருபுறம் இருந்தாலும், உடைகளை மீறிய விஷயம் இரண்டு உண்டு (1) எளிமை! (2)
சொற்கள்! சரியாக பயன்படுத்தப்படும் ஒரு சொல் அணுசக்தியைவிட பலமடங்கு ஆற்றல்
கொண்டது. அஹிம்சா என்ற ஒரு சொல் மந்திரம் அவருடைய ஆளுமைத்திறனை உலகிற்குக்
காட்டியது. இந்திய ரூபாய் தாள்களில் மோனாலிசா புன்னகையைவிட சிறந்த
புன்னகையைத் தரமுடிந்தது.
22 வயது சாதனைப் புயல் ஷெர்லே ஷெங்! பிறந்தபோது மற்ற குழந்தைகள்
போன்றுதான் இருந்தாள் ஷெர்லே. சில மாதங்களில் ஏற்பட்ட கடும்
காய்ச்சலுக்குப் பிறகு கால்கள் முடமாயின. 11 வயதுவரை மருத்துவமனைதான்
வாழ்க்கை என்றாகிப் போனது. பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. 12 வயதிலே 180
நாட்கள் சிறப்புக் கல்வி பயின்றாள். தன்னுடைய வாழ்க்கைத் தோல்விகள் மீது
ஆக்ரோஷமான தாக்குதல். கிடைத்தது வெற்றி. எழுத்துலகம் ஷெர்லேயிடம்
மண்டியிட்டது. ஷெர்லே எழுதிய 9 புத்தகங்களுக்கு விருது கிடைத்தது. 97ஆம்
வருடம் சிறுகதைகளின் ராணியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டாள். 99ல் ‘வானவில்லின்
வண்ணங்கள்’ என்ற கவிதைக்கு விருது கிடைத்தது. 2006ல் நியூயார்க் டைம்ஸ்
நடத்திய சர்வதேச கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்றாள். சீனப்பெண்
ஷெர்லேவின் எழுத்தில் இருந்த ஆளுமைத் திறனை கண்டு அமெரிக்கா அதிசயித்தது.
எழுத்தாளர், கவிஞர், நம்பிக்கை நட்சத்திரங்களை அள்ளித்தரும் பேச்சாளர்,
சமூக நிகழ்ச்சி ஒருங் கிணைப்பாளர், ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்றுனர்,
இத்தனை பரிமா ணங்களையும் பெற்ற ஷெர்லேக்கு மீண்டும் ஓர் இடி!
17 வயதில் கண்பார்வை போனது. என்னுடைய கண்பார்வை திரும்ப
கிடைத்துவிடும். அறிவியல் துறையில் சாதிப்பேன்! ஹார்வர்டு
யூனிவர்சிட்டியில் டாக்டரேட் வாங்குவேன்!
இவருடைய ஆதங்கம் எல்லாம் மருத்துவர் மேல்தான். என்னுடைய உடல்சார்ந்த
பிரச்னைகளை மருத்துவர்கள் காது கொடுத்துக் கேட்டிருந்தால் நான் இவ்வளவு
சிரமங்களை அனுபவித்து இருக்கவேண்டி இருக்காது. என் அன்னை வருத்தங்களையும்
சுமக்க வேண்டி இருக்காது. இந்த நெருடலையும்கூட சாதனையாக மாற்றியதுதான்
ஷெர்லே ஷெங்கின் ஆளுமைத்திறன். அதுமட்டுமா! பெற்றோர் குழந்தைகள் நலனுக்கு
வழக்காடும் வழக்கறிஞராக உள்ளார்.
ஷெர்லேவின் வெற்றி வாசகம்:
“நான் பார்வை இழந்துவிட்டாலும் என்னால் இந்த உலகை பரந்து விரிந்த
நிலையில் பார்க்க முடிகிறது. கால்கள் ஊனமாக இருந்தாலும் என்னால் சிகரத்தில்
ஏறமுடியும். என்னுடைய நம்பிக்கை என்கின்ற கயிறு என்னைப் பிடித்து
இழுத்துவிடும்”.
“வையத் தலைமை கொள்” என்ற பாரதியின் வரிகளை நிஜமாக்கியவள் ஷெர்லே ஷெங்!
நன்றி மகேஸ்வரி சற்குரு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆளுமையின் இலக்கணம் – விவேகானந்தர்
» நூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரநூல் : இலக்கிய இணையர் படைப்புலகம் நூலாசிரியர் : கவிஞர் இரா இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.வி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
» நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
» ஏர்வாடியாரின் கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சனம் : மகேஸ்வரி, கோவை !
» ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை: ப. மகேஸ்வரி, பாரதியார் பல்கலை, கோவை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum