தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?

2 posters

Go down

உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ? Empty உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?

Post by உதுமான் மைதீன் Fri Oct 22, 2010 2:38 am

அனிதா அந்த நிறுவனத்தின் மரியாதைக்குரிய அதிகாரி. அவரிடம் சுமார் நாற்பது பேர் வேலை பார்க்கிறார்கள். அலுவலகத்தில் அவருக்கு எப்போதுமே தனி மரியாதை உண்டு. வேலையை முடிப்பதிலாகட்டும், ஊழியர்களைக் கவனிப்பதிலாகட்டும் அவர் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

எப்போதும் சிரித்த முகமாய் இருக்கும் அனிதாவுக்கு கொஞ்ச நாளாவே மூட் அவுட். எதிலும் பற்றற்ற தன்மை அவருடைய வேலையிலும் தெரிந்தது. எதிலும் போதிய கவனம் இல்லை. கொடுக்கின்ற வேலைகளிலும் தாமதம். அதுவரை தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு சூப்பர் மேனேஜராய் இருந்த அவர் அடிக்கடி கோபப்பட ஆரம்பித்தார்.

இதையெல்லாம் கவனித்து வந்த அனிதாவின் மேனேஜர் சாம்பமூர்த்திக்கு உள்ளூர ரொம்பக் கவலை. அவர் கொஞ்சம் வயதானவர். தனது முப்பது ஆண்டு கால அனுபவத்தை மீசையிலும் தலையிலும் வெள்ளையாய் எழுதி வைத்திருப்பவர். கடந்த ஆறு வருடங்களாக அனிதாவின் மேனேஜர் அவர் தான். ஒரு நிர்வாகி என்பதற்கும் மேலாக ஒரு மகளைப் போன்ற பாசத்தைக் கண்களில் எப்போதுமே வைத்திருப்பார். அனிதாவின் தடுமாற்றங்கள் அவருக்கு ரொம்பவே கவலையளித்தது. ஒரு நாள் மாலைப் பொழுதில் அவர் இண்டர்காமில் அனிதாவை அழைத்தார்.

அனிதா கண்ணாடிகளால் சூழப்பட்டிருந்த சாம்பமூர்த்தியின் அறைக்கதவைத் தட்டினாள்.

“சொல்லுங்க சார்”

“உக்காரும்மா, கொஞ்சம் பேசணும்”

அனிதா குழப்பத்துடன் அவருக்கு மேஜைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“அனிதா எப்படிம்மா இருக்கே ?”

“என்னசார் திடீர் கேள்வி.. நல்லா இருக்கேன் சார் “

“அனிதா… உன்னை எனக்கு ஆறு வருஷமா தெரியும். வேலையில நீ எப்பவுமே சோடை போனதில்லை. ஆனாலும் சொல்ல வேண்டியது என்னோட கடமை” சாம்பமூர்த்தி சொல்லி விட்டு சற்று இடைவெளி விட்டு தொடர்ந்தார்.

“இப்போ நாலஞ்சு மாசமா உன்னைக் கவனிக்கிறேன். ரொம்பவே குழப்பமா இருக்கே. கவனம் சிதறுது. உற்சாகம் காணாம போயிடுச்சு. அடிக்கடி சோர்வாயிடறீங்க. வாட் ஹேப்பண்ட் ?”

“ஒண்ணும் இல்லையே சார்… “ அனிதா சொல்ல சாம்பமூர்த்தி புன்னகைத்தார்.

“வீட்ல ஏதும் பிராப்ளமா ?”

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை சார்… “ சொல்லி முடிக்கும் போதே அனிதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அனிதாவின் கண்களில் முளைத்த கண்ணீர் சாம்பமூர்த்தியை சங்கடப்படுத்தியது.

“சரிம்மா.. நீ ஒரு வாரம் லீவ் போட்டு உன்னோட ஹஸ்பண்ட் கூட எங்கேயாவது போய்ட்டு வா. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிடும். “ அவர் சொல்ல அனிதா தலை கவிழ்ந்தாள்.

“ஹஸ்பண்ட் கூட போறதா ? ஹஸ்பண்டை விட்டுட்டுப் போகணும்ன்னு அவர் நினைக்கிறாரு. டைவர்ஸ் கிடைக்குமான்னு கேக்கறாரு சார் ?” அனிதாவின் குரல் தழுதழுக்க சாம்பமூர்த்தி அதிர்ந்து போனார்.

அனிதாவுடன் பேசப் பேச அவளுடைய சூழல் அவருக்குப் புரிய ஆரம்பித்தது. பிரச்சினை ஒண்ணும் புதுசில்லை. காலம் காலமாக பெரும்பாலான தம்பதியர் சந்திக்கின்ற பிரச்சினை தான். அவரு வீட்ல ஒரே பையன். அப்பா கிடையாது. அம்மா தான் எல்லாமே. காலைல காபி போடறதுல இருந்து, கால் தடுக்கினா மருந்து போடறது வரை எல்லாமே அம்மா தான். இப்போ கூடவே ஒரு ஆள் மனைவி !

கல்யாணம் முடிந்து இரண்டு வாரம் அம்மாவை தனியே விட்டு விட்டு ஹனிமூன் போனபோது தான் அவருக்கும் அம்மாவை மிஸ் பண்ணும் உணர்வு வந்திருக்கிறது ! கூடவே இருந்தபோது ஒன்றும் தோன்றவில்லை. எங்கோ தூரத்தில் அம்மாவை விட்டு விட்டு மனைவியின் அருகில் அமர்ந்து செய்த படகுச் சவாரி சேகருக்கு ரசிக்கவில்லை.

“ஏங்க சோகமா இருக்கீங்க, என்னாச்சு ? உடம்பு சரியில்லையா ”

“இல்லே அனிதா, மனசு சரியில்லை. அம்மா பாவம் அங்கே தனியா இருந்து என்ன பண்றாங்களோ ?”

சேகரின் பதில் அனிதாவுக்கு எரிச்சலைக் கிளப்பியது. “ஹனிமூன் நேரத்துல கூட அம்மா நெனப்பு தானா ?” என அனிதாவின் மனம் புகைந்தது.

அந்த சின்ன நெருப்புப் பொறி தான். எப்படா ஹனிமூன் முடியும் என காத்திருந்தது போல கணவன் பதறி அடித்து வீட்டுக்கு ஓடியதும். வந்ததும் வராததுமாய் அம்மா, அம்மா என உருகியதும் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பிளட் பிரஷரை ஏற்றி விட்டது. அது மாமியார் மீதான வெறுப்பாய் முளைக்கத் துவங்கியது.

எல்லாவற்றையும் விட்டு விட்டு கணவனே கதியென வந்து நிற்கிறேன். அவருக்கு அம்மாவின் தோளில் தொங்கணுமா ? என அனிதாவுக்குள் எழுந்த குரல்கள் தினம் தோறும் கொஞ்சம் கொஞ்சமாய் வளர, அவளுடைய நிம்மதியே போய் விட்டது.

அதன்பின் எது செய்தாலுமே தான் நிராகரிக்கப் படுவதாகவும், மாமியார் தான் மரியாதைக்குரியவராய் இருப்பது போலவும் அவளுக்குள் காட்சிகள் விரிந்தன. அது கணவன் மனைவியிடையே விவாதம், ஊடல், சண்டை என வளர்ச்சியடைந்தது.

“உன்னைக் கட்டிகிட்டதோட என் நிம்மதியே போச்சு. எனக்கு அம்மா தான் முக்கியம். உன்னால அதை சகிச்சுக்க முடியாட்டா டைவர்ஸ் பண்ணிக்கலாம்” என சேகர் சொன்ன வார்த்தை தான் அவளை ஒட்டு மொத்தமாக உலுக்கி விட்டது. அலுவலகத்திலும் அவளுடைய கவனம் ஒட்டு மொத்தமாய்ப் போய்விட்டது.

அனிதா, தனது கவலைகளையெல்லாம் சாம்பமூர்த்தியிடம் கொட்டினாள். அவருக்குப் புரிந்து போய்விட்டது. தனது அனுபவத்தின் மூலைகளிலிருந்து அனிதாவின் பிரச்சினைகளுக்கான விடைகளை எடுக்க ஆரம்பித்தார்.

அனிதாவின் கதை இன்றைய பெரும்பாலான பெண்களுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்பது தான் உண்மை.

“அம்மாவா, நானா ? இரண்டுல ஒண்ணு முடிவு பண்ணுங்க” என கோஷமிட்டு விவாகரத்துப் படியேறுபவர்கள் எக்கச்சக்கம் என்கின்றனர் மேரிடல் கவுன்சிலிங் வல்லுனர்கள். யூகேவில் நடந்த ஆய்வு ஒன்றில் 60 சதவீதம் பெண்களுக்கு மாமியாருடன் சண்டையாம். அது வாழ்நாள் முழுதும் ஒரு வித மன அழுத்தத்தைக் கொடுக்கிறதாம். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் டெரி அப்டர் நடத்திய ஆய்வின் முடிவு இது. எனவே மாமியார் மருமகள் பிரச்சினை ஏதோ இந்தியப் பிரச்சினை என்று நினைக்கவேண்டாம். மாமியார்கள் இருக்கும் எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் சர்வதேசப் பிரச்சினை இது !

அவரது ஆய்வில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் தங்கள் கணவன்மார் அம்மாப் பிள்ளையாக இருக்கிறார்கள் என குறைபட்டுக் கொண்டனர். அதே சமயம், மூன்றில் இரண்டு பங்கு மாமியார்களோ, தங்கள் பையன் தங்களை தனிமைப்படுத்துகிறான், பொண்டாட்டி தாசன் ஆகிவிட்டான் என வருந்துகின்றனர். எனவே இது ஒரு விதத்தில் அக்கரைப் பச்சை அனுபவம் தான். ஒவ்வொருவரும் அடுத்தவர் பார்வையில் பார்க்க ஆரம்பிக்கும் போது பல விஷயங்கள் எளிதில் புலனாகும். சிக்கல்கள் தீரத் துவங்கும்.

தன் பிள்ளை தன்னைக் கவனிக்கவில்லையோ என அம்மா கவலைப்பட ஆரம்பிக்கும் முதல் புள்ளி பல சிக்கல்களின் பிள்ளையார் சுழி. அந்த சிந்தனையே வராமல் தடுத்தால் சிக்கலே இல்லை என்கிறார் கிரெட்சன் எனும் ஆலோசகர்.

அம்மாவிடம் பையன் பாசமாய் இருப்பது இயல்பு. அப்படி இல்லாமல் இருந்தால் தான் கவலைப்பட வேண்டும். சரியாக வளர்க்கப்படாத மகன் சரியான பாதையில் செல்லாமல் இருக்க வாய்ப்பு அதிகம். எனவே அம்மாவின் மீது பாசமான பையன் என்பது ஒரு குறையல்ல. அது நல்ல விஷயம் எனும் எண்ணம் தான் முதலில் பெண்களுக்கு வரவேண்டும்.

“மனைவியா ? அம்மாவா ? யாருக்கு ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என ஆண்குழந்தைகளோட அம்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள். என் கணவன் அவரோட மனைவிக்கும், என் பிள்ளை அவனோட அம்மாவுக்கும் என்பார்கள். அதாவது எல்லா பெண்களுக்கும் தன் கணவன் தன்மீது அன்பு செலுத்த வேண்டும், அதே போல தனது மகனும் தன் மீது அன்பாய் இருக்க வேண்டும் எனும் ஆழமான ஆசை உண்டு. கணவனைப் பொறுத்தவரை தனது மனைவியை அவன் முழுமையாக ஏற்று அன்பு செய்ய வேண்டும். அது தனது அம்மாவை நிராகரித்துத் தான் நடக்க வேண்டும் என்பதில்லை.

இந்த சிக்கலில் மிக நுட்பமான பகுதியைச் சொல்கிறேன். உங்க கணவன் அவரோட அம்மா கிட்டே ரொம்ப நெருங்கக் கூடாதா ? ஒரு சின்ன வழி, நீங்க அவரோட அம்மா கிட்டே அதிகமா நெருங்கறது தான். குழம்ப வேண்டாம். தனது தாயைப் பார்த்துக் கொள்ள தன் மனைவி இருக்கிறாள் எனும் நிம்மதி கணவனுக்கு மிகப்பெரிய நிம்மதியாம். அது கணவன் தன் மனைவியிடம் அதிகம் நெருங்கும் காரணியாகிவிடும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே நிலை தான் மறு பக்கமும். தனது அம்மாவை தன் புருஷன் நன்றாகக் கவனிக்கிறார் என்றால் அந்த நிம்மதி மனைவிக்கு மிகப்பெரிய சுகம்.

வயதான காலத்தில் மகனின் ஆதரவை எதிர்பார்க்கும் தாய்க்கு அந்த ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது மகனுடைய கடமையும் கூட. ஆனால் அது மனைவியின் உரிமைகளை மீறியதாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே பிரச்சினை. திருமணம் ஆன புதிதிலேயே புதுமணப் பெண் நினைத்தால் இத்தகைய பிரச்சினைகள் பிற்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

முதலாவதாக மாமியாரைப் பற்றி கணவனிடம் குறை கூறுவதை நிறுத்த வேண்டும். தொன்னூற்று ஒன்பது விழுக்காடும் அதைக் கணவன் நம்பப் போவதில்லை. அப்படியே நம்பினாலும் அது அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா என்றால் இல்லை !. எல்லோருமாகச் சேர்ந்து அன்பாக வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமானது. சண்டையிட்டு ஒருவர் வெல்வதல்ல.

யோசித்துப் பாருங்களேன். எப்போ கடைசியா உங்க மாமியாரைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை உங்க கணவன் கிட்டே பேசியிருப்பீங்க. முக்கால் வாசி பேரோட வாழ்நாள்லயே அப்படி ஒரு விஷயம் நடந்திருக்காது. மாமியாரைப் பற்றி நல்ல விஷயங்களை கணவனிடம் சொல்ல ஆரம்பியுங்கள். இயல்பானதைப் பேசினா போதும். “உங்க அம்மா கையால ரசம் சாப்பிட்டா மனசு நிறைஞ்சு போயிடுதுன்னு சொல்லுங்களேன்”. சொல்றது போலித்தனமா இருக்கக் கூடாதுங்கறது முக்கியம்.

உங்க மாமியார் உங்களை விட வயசில பெரியவங்க. அவங்க ஒரு கால் நூற்றாண்டு காலம் கஷ்டப்பட்டு தன்னோட மகனை வளர்த்திருக்காங்க. அவங்க வாழ்க்கையில விலை மதிக்க முடியாத சொத்தான மகனை உங்க கிட்டே தந்திருக்காங்க. அதை மதிங்க. யாருக்கு அதிகம் உரிமைங்கறதெல்லாம் தேவையற்ற விவாதம். எந்தக் கண் தனக்குத் தேவைன்னு தலை கிட்டே போனா என்ன முடிவு கிடைக்கும் ? எனவே அவங்களோட வயசுக்கு மரியாதை கொடுங்க. பொறுமையும், புன்னகையும் பெண்களோட மிகப்பெரிய ஆயுதம். மறக்க வேண்டாம்.

உங்க மாமியாரோட ரொம்ப நேரம் செலவிடுங்க. உங்க அம்மாகூட இருக்கும்போ எப்படி இயல்பா உற்சாகமா பேசுவீங்க ? அதே உற்சாகம் பிளஸ் அன்போட மாமியார் கிட்டே பேசிப் பாருங்க. வயசானவங்களுக்கு முக்கியமான தேவை, பேசறதுக்கும் கேட்கறதுக்கும் ஒரு நல்ல துணை தான். அந்த துணையா நீங்க இருங்களேன் !

உங்க பிள்ளைகளுக்கு உங்க தாத்தா பாட்டி செல்லம் கொடுக்கிறாங்களா ? ஜங்க் ஃபுட் குடுக்கிறாங்களா, டி வி போட்டு குடுக்கிறாங்களா ? டென்ஷன் ஆகாதீங்க. தாத்தா பாட்டிக்குன்னு சில விருப்பங்கள் உரிமைகள் உண்டு. நீங்க அந்த பருவம் வரும்போ புரிஞ்சுப்பீங்க. அதனால அந்த சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் உலக மகா பிரச்சினைகள் போல எடுத்து பேசாதீங்க. அவர்களோட சின்னச் சின்ன சந்தோஷங்களுக்கு மதிப்பு கொடுங்க.

உங்க வீட்ல இருக்கும்போ எப்படி இயல்பா கலகலப்பா இருப்பீங்களோ அப்படியே புகுந்த வீட்லயும் இருக்க முயற்சி பண்ணுங்க. அது ரொம்பவே பயனளிக்கும். அவர்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. நீங்கள் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை முறை வேறு. இப்போது இரண்டு பேரும் ஒரே வீட்டில் இருக்கப் போகிறீர்கள், ஒரு வகையில் இது ஒட்டுச் செடி போன்ற அனுபவம். எனவே நன்றாக ஒட்டிச் சேர டைம் வேணும். அவசரப் படக் கூடாது. ஒட்டலையே என வெட்டிவிட்டால் சர்வமும் நாச மயம் !

அம்மாக்களைப் பொறுத்தவரை மகன் ஆனந்தமாக இருக்கவேண்டும் எனும் எண்ணமே பிரதானமாய் இருக்கும். ஒருவேளை மனைவி அவனை நன்றாகக் கவனிக்கவில்லையோ எனும் கவலை ஒரு புறம் இருக்கலாம். அல்லது அதிகமாய்க் கவனித்து நம்மை விட்டுப் பிரித்து விடுவாளோ எனும் பயம் இன்னொரு புறம் இருக்கலாம். இது மாமியார் மருமகள் இடையேயான ஆழமான உரையாடல்களுக்குப் பின்பு தான் இயல்பு நிலையை அடையும்.

மாமியார்கள் பிரச்சினைவாதிகளாய் மாற பல காரணங்களை உளவியலார்கள் சொல்கின்றனர். தனது கணவன் தன்னை சரியான அளவுக்குக் கவனிக்காத ஏக்கம். சின்ன வயதிலேயே தான் இல்லாமல் மகனால் எதுவும் செய்ய முடியாது என உருவாக்கும் பிம்பம். தனது மகனிடமோ, மகளிடமோ உருவாக்கும் குற்ற உணர்வு. இப்படி பல காரணங்களை அவர்கள் அடுக்குகின்றனர். சில மருமகள்கள் தன்னை விட மாமனாரிடம் அன்பாய் இருப்பது கூட மாமியாருக்கு எரிச்சலைக் கிளப்புமாம்.

சரி, ஒரு சின்ன கேள்வி. உங்களில் எத்தனை பேர் உங்கள் மாமியாருக்கு நீங்களாக விரும்பி ஒரு திடீர் பரிசு கொடுத்து அசத்தியிருக்கிறீர்கள் ? தலையைச் சொறிய வேண்டாம். பதில் எல்லோருக்கும் தெரிந்தது தான். அப்புறம் என்னங்க ? கணவன் அம்மா பிள்ளையா இருக்கிறதுல என்ன ஆச்சரியம் இருக்கப் போவுது ?

மகிழ்சியான குடும்ப வாழ்க்கை மாமியாருடன் இணக்கமாகவும், அன்பாகவும் இருக்க உதவும். தனது தாயுடன் நல்ல அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் பெண்களில் 78 சதவீதம் பேர் மாமியாருடன் இணக்கமாக இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. அதே போல குடும்ப வாழ்க்கையில் ஆனந்தமாய் இருப்பவர்களில் 57.9 % பேர் தங்கள் மாமியார் ரொம்ப நல்லவங்க எனும் சர்டிபிகேட் தருகிறார்கள். அவர்கள் சொல்லும் சிம்பிள் அட்வைஸ், மாமியார் சொல்ற விஷயத்தை அம்மா சொன்னா என்ன ரியாக்ஷன் தருவீங்களோ, அதை மட்டும் தாங்க என்பது தான் !

அடுத்தவர்களுடைய குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசும் பழக்கத்தை மூட்டை கட்டி வையுங்கள். அது நல்ல ஆரோக்கியமான பழக்கம் அல்ல. “அவர்களுடைய பழக்கம் அவர்களுக்கு” என எடுத்துக் கொள்ளும் இளகிய மனம் இருக்கட்டும். “ என் பையனுக்கு என் சாப்பாடு ரொம்பப் புடிக்கும்” ன்னு மாமியார் சொன்னா, “ஆமா.. என் சாப்பாடு மட்டும் புடிக்காதா “ ன்னு எதிர் கொடி புடிக்காதீங்க. அடிக்கடி போன் பண்ணினா, எப்பவும் அம்மா கூட பேசறது தான் வேலையான்னு முகத்தைத் தூக்கி வெச்சுக்காதீங்க. அம்மா கிட்டே சிரிச்சுப் பேசினா “உங்க ஆளுங்க கிட்டே பேசும்போ மட்டும் எப்படித் தான் இந்த சிரிப்பு வருதோ” ன்னு நக்கல் அடிக்காதீங்க.

சுருக்கமா சொல்லணும்ன்னா ஈகோவைக் கழற்றி வைத்து விட்டு ஆனந்தமான வாழ்க்கை வாழவேண்டுமென முடிவெடுத்து களமிறங்குங்கள். பிரச்சினைகளெல்லாம் பறந்தோடிப் போய்விடும் என்பது மட்டும் நிஜம்.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ? Empty Re: உங்க கணவர் அம்மா பிள்ளையா.. ?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 22, 2010 11:08 am

:héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum