தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தீன்குல ஹீரோக்களுக்கு

3 posters

Go down

தீன்குல ஹீரோக்களுக்கு Empty தீன்குல ஹீரோக்களுக்கு

Post by உதுமான் மைதீன் Sat Oct 23, 2010 2:14 am

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (உங்கள் மீது எக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)



அன்பிற்கினிய சகோதரர்களே! என் அருமை இளைஞர்களே! நீங்கள் நன்மையடையும் பொருட்டு சில அறிவுரைகளை அல்லாஹ் உங்களுக்கு போதித்துள்ளான்! அவற்றில் சில உங்களுக்கு கூற ஆசைப்படுகிறேன்! சற்று கவனமாக படித்து, சிந்தித்துப் பாருங்கள்!



இன்றைய நவீன யுகத்தில் சினிமா! தொல்லைக்காட்சிகள்!, இரட்டை வசன மற்றும் ஆபாச பாடல்கள்! அதற்கேற்றவாறு தங்களுடைய ஆடை அழங்காரம், பைக், செல்போன், இளம் ஆண் மற்றும் பெண்களின் மேல் காதல் எனும் கன்ராவி மோகம் போன்றவைகளின் மூலம் நீங்கள் ஷைத்தானால் தீண்டப்படலாம்! கவனமாக வாழவும்!



மேற்கண்ட பழக்கவழக்கங்களில் மாட்டிக்கொண்ட இன்றைய இளைஞர்கள் தங்களை ஹீரோக்களாக பாவித்து பெற்றோரையும் உடன் பிறந்தவர்களையும் துச்சமாக மதித்து உதாசீனப்படுத்தி வருகின்றனர். மேலும் திருமணமானவுடன் பெற்றோரை கவனிக்கத்தவறுவதும், பெற்றோரால் மணமுடித்து வைக்கப்பட்ட மனைவியை கவனிக்கத்தவறுவதும் இன்றைய காலகட்டத்தில் சாதாரணமான மாறிவிட்டது. இதனால்தான் சில வயதான வசதிவாய்ப்பற்ற பெற்றோர் திக்கற்றவர்களாக 5க்கும் 10க்கும் மற்றவர்களின் கைகளை பார்த்து ஏங்கித் தவிக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட பெற்றோறின் மகன்களோ 10 ஆயிரம் ருபாய்க்கு கேமரா செல்போன் வாங்கி மூன்றே மாதத்தில் 3-ஆயிரம் ரூபாய்க்கு விற்று ஆன்டியாகும் நிலைமைகள்!!!



பெற்றோர் தட்டிக் கேட்டால் என் பணம், என் வருமானத்தில் வாங்குகிறேன் நீ யார் அதை கேட்க? என்ற பதில் தான் அவர்களுடைய முதல் கலிமாவாக உள்ளது. ஆனால் அல்லாஹ் சொல்வதை சற்று கேட்கவும்



மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்கு பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும் ”இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புறிந்த நிஃமத்துக்காக (அருள் கொடைகளுக்காக!) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் நின்று முள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக) இருக்கிறேன்” என்று கூறுவான். (அல்குர்அன் 46:15)





அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும் பொற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான். அவ்விருவறில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை
அடைந்துவிட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம்- அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவறிடமும் கனிவான கண்ணியமான பேச்சையை பேசுவீராக!

(அல்குர்அன் 17:23)



இன்னும் நினைவு கூறுங்கள் நாம்( யாஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில் ”அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது! (உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் (களான ஏழைகளுக்கும்) நன்மை செய்யுங்கள்! மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்! மேலும் தொழுகையை முறையாக கடைபிடித்து வாருங்கள்! ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்! என்று உறுதிமொழியை வாங்கினோம் ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழிலை நிறைவேற்றாமல் அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள். இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே
இருக்கின்றீர்கள்! (அல்குர்அன் 2:83)





என் அருமைச் சகோதரர்களே! நம் அன்பிற்கினிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளை கேளுங்கள்



‘எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்தவராவார். (அவை) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரிய வராவது, ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, நெருப்பில் வீசப்படுவதை
வெறுப்பது போல் இறை நிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume:1 Book:2 : Verse 16





(அல்லாஹ்வுக்காக பெற்றோரையும் தத்தமது குடும்பத்தினரையும்
நேசிக்கக்கூடாதா!)



‘ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாம்விடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாரி Volume:1 Book:2, Verse:55)



மனைவியின் மீது உங்கள் கடமை



‘அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக கூலி வழங்கப்படுவீர். உம்முடைய மனைவியின் வாயில் (அன்புடன்) நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார். (சஹீஹுல் புகாரி Volume:1 Book:2, Verse:56)

‘உங்களில் ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் பத்து மடங்கிலிருந்து எழு நூறு மடங்கு வரை பதிவு செய்யப்படும். அவர் செய்யும் ஒவ்வொரு தீமைக்கும் அது போன்றே பதிவு செய்யப்படும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். சஹீஹுல் புகாரி Volume:1 Book:2, Verse:42



திருந்துவதற்கு வாய்ப்புகள் இந்த உலகில் உள்ளது திருந்திக் கொள்ளவும் உங்களை திருத்திக் கொள்ளவும். இறைவன் நாடினால் அடுத்த வினாடிகூட நமக்கு மரணம் சம்பவிக்கலாம் இப்போதே இந்த வினாடியே தங்களை இந்த படுபாதக பாவங்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ளவும் தங்களது சுவனப்பாதையை எளிதாக்கிக்கொள்ளவும்



அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!)


***********************************************

எங்கள் இறைவனே! எங்களையும், விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் வெறுப்பை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; மிக்க கருணையுடையவன்.- (அல் குர் ஆன்59:10)

"எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை. இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (குர்ஆன் 13:11)

உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

தீன்குல ஹீரோக்களுக்கு Empty Re: தீன்குல ஹீரோக்களுக்கு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 24, 2010 12:54 pm

பயனுள்ள தகவலை அறிய தந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி சியர்ஸ் :héhé:
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தீன்குல ஹீரோக்களுக்கு Empty Re: தீன்குல ஹீரோக்களுக்கு

Post by Rikaz (Amarkkalam) Wed Nov 24, 2010 12:57 pm

நன்றி உதுமான்
avatar
Rikaz (Amarkkalam)
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 327
Points : 440
Join date : 23/11/2010

Back to top Go down

தீன்குல ஹீரோக்களுக்கு Empty Re: தீன்குல ஹீரோக்களுக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum