தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு...
Page 1 of 1

ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொன்மை வாய்ந்த, இலக்கிய இலக்கண மரபுகளை தாங்கி நிற்கும், எந்த மொழியின் கலப்பில்லாமலும் தனித்து நின்று இயங்குகின்ற, கிளை மொழிகளை உருவாக்கிய, இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டுகளில் 55,000க்கும் அதிகமான தமிழ் தொல்லெழுத்துப் பதிவுகளைப் பெற்று மங்காத புகழோடு சிறந்து விளங்கும் செம்மொழியாம் தமிழுக்கு, கொங்கு மண்டலத்தில் ஜூன் 23 முதல் 27 வரை நடைபெறவிருக்கும் மாநாட்டை வரவேற்போம், பாராட்டுவோம்!
இதுவரை நடைபெற்ற எட்டு உலகத்தமிழ் மாநாடுகளின் (1966 மலேசியா, 1968 சென்னை, 1970 பாரீஸ், 1974 இலங்கை, 1981 மதுரை, 1987 மலேசியா, 1989 மொரீசியஸ், 1995 தஞ்சை) வரிசையில் இந்த மாநாடு நடைபெறவில்லை. உலகத்தமிழ் மாநாடுகளை நடத்துவதற்கு உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம் என்ற அமைப்பு உள்ளது. அந்தக் கழகம் 2011ல் தமிழகத்தில் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தலாம் என்ற உத்தேசத்தை அளித்தது.
ஆனால், 2011ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க தமிழக முதல்வருக்கு தமிழ்ச்செம்மொழி மாநாடு தேவைப்படுகிறது. அதனால் உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்துடனான உறவை முறித்துக்கொண்டு, முதல் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை 2010லேயே நடத்தத் திட்டமிட்டுவிட்டார். சர்வதேச தமிழ் அமைப்பின் உறவு முறிந்த நிலையில், அடுத்தடுத்த மாநாடுகள் மற்ற நாடுகளில் எப்படி நடத்தப்படும் என்பது புரியவில்லை.
1974, 1987, 1989ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநாடுகளில் முன்வைக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் இதுவரை நூல்களாகத் தொகுத்து வெளியிடப்படவில்லை.
தமிழின் தொன்மையும் தமிழரின் பண்பாடும் பாமரனுக்கும் எளியோனுக்கும் சென்றுசேரும் வகையில் சங்க இலக்கியங்கள், காப்பிங்கள், சிற்றிலக்கியங்கள், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ் கணக்கு நூல்கள், நவீன இலக்கியங்கள், தலித் இலக்கியங்கள், பெண் இலக்கியங்கள், திராவிட இலக்கியங்கள், இடதுசாரி இலக்கியங்கள் போன்றவையாவும் மெத்தப்படித்தவர்களின் கைச்சரக்குகளாகவே இருப்பதை மாற்றி, சாதாரணத் தமிழ் படிக்கத் தெரிந்தால் போதுமென்ற அளவுக்கு எளிய வகையில் சந்திபிரித்து, அருஞ்சொற்பொருளுடன், உரிய விளக்கத்துடன் மிகக்குறைந்த விலையில் அச்சிடப்பட்டு, மக்களிடம் அரசு கொண்டுச் சேர்க்கவேண்டும். இதுவே ஆட்சியிலிருப்போர் தமிழுக்குச் செய்யவேண்டிய இன்றியமையாத கடமையாகும்.
முத்தமிழான இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழை வளர்க்க, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூடுதல் முக்கியத்துவமளித்து அதற்குரிய ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் நியமிக்கவேண்டும். நாட்டுப்புறத்தமிழ், தெருக்கூத்து, வீதிநாடகம் போன்ற பாரம்பரிய பண்பாட்டு மரபுகளை பேணிக் காக்கவும் அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். தமிழில் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பை அனைத்துத் துறைகளிலும் அதிக அளவில் உருவாக்க வேண்டும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காதத் தமிழென்றுச் சங்கே முழங்கு...
மேலும், மருத்துவம் பொறியியல் படிப்புகளில் தமிழ், தொலைக்காட்சிகளில் தமிழில் பாடப்படும் பாட்டிற்கு ஆங்கிலத்தில் தீர்ப்பளிக்கும் ஊடக பண்பாட்டுத்துறையில் தமிழ், வழிபாட்டுமுறையில் தமிழ், அறிவியலில் தமிழ், மதிக்கத்தக்க மொழியாக நாடாளுமன்றத்தில் தமிழ், தமிழக உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் வழக்காடும் வழக்குரைஞர் யாருக்காக வாதாடுகிறார் என்பதே தெரியாமல் இருக்கும் முறையை மாற்ற வழக்கு மொழியாகத் தமிழ், ஊடகத்தில் தமிழ், தத்துவத்தில் தமிழ் இறுதியாக ஆட்சி மொழியாகத் தமிழ் என செல்லவேண்டிய தூரம் அதிகம். அதற்காக இந்தச் செம்மொழி மாநாடு என்ன செய்யப்போகிறது?
தமிழின் பெருமையையும் தமிழிலக்கிய செல்வங்களின் சிறப்பையும் உலகறியச் செய்ய எடுக்கப்போகும் முயற்சிகள் என்ன? உயர்தனிச் செம்மொழித்தமிழை அயல்நாட்டவரும் கற்றுக் கொள்ள எவ்விதத்தில் உதவப்படும்? தமிழ்மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கப்போகும் நிதி எவ்வளவு? என்பதுபோன்ற கேள்விகளுக்கு உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு சொல்லப்போகும் பதில் என்ன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது எது என்பதை கம்யூனிஸ்ட் தலைவரான பி.ராமமூர்த்தி விளக்குகிறார்...
"ஒரு மொழியின் வளர்ச்சியையும் செழுமையையும் கணிக்க வேண்டுமானால், அம்மொழியிலுள்ள பண்டைய நூல்களின் செழுமையைக் கொண்டு மட்டும் நிர்ணயித்துவிட முடியாது. அந்தக் காலத்திலிருந்த சமூகத்தில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு அது போதியதாக இருக்கும். ஆனால், சமூகத்தில் வளர்ச்சி ஏற்பட்டு வரும்போது, அந்தச் சமூகத்திலுள்ள பல்வேறு கருத்துக்களை, அரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், கணிதம், சமூகவியல், சட்டம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வதற்கு அம்மொழி எந்த அளவிற்குப் பயன்படுகிறது என்பதைக் கொண்டே அம்மொழியின் வளர்ச்சியை நிர்ணயிக்கமுடியும்..."
சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என பெயரிடவேண்டுமென 64 நாட்கள் உண்ணாவிரதமிருந்து, தான் இறந்தபிறகு தனது சடலத்தை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டுமெனச் சொல்லி மறைந்த காங்கிரசைச் சார்ந்த தியாகி சங்கரலிங்கனார் தமிழுக்கான தீவிர போராட்டத்தின் முன்னோடி என்றே சொல்லலாம். சட்டமன்றத்தில் முதன்முதலில் தமிழில்தான் பேசுவோமென போராடிப் பேசியவர்கள் மறைந்த தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், ஏ.நல்லசிவம். நாடாளுமன்றத்தில் செம்மொழிக்காக குரலுயர்த்திய, ரயில்வே பணிக்கான தேர்வைத் தமிழிலும் எழுத அனுமதிக்கவேண்டுமென கோரிக்கைவைத்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொ.மோகன் இன்றும் நம்மோடு இருக்கும் என்.சங்கரய்யா போன்ற தலைவர்கள் தமிழ்மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள். அவர்களை நடைபெறும் இந்தச் செம்மொழி மாநாட்டில் நினைவு கூர்ந்து, தமிழ்மொழி வளர்ச்சிக்கான வரலாற்றிலும் பதிவுசெய்து கவுரவிக்கவேண்டும்.
பொதுவாக, உலகத்தமிழ் மாநாடுகளை தமிழகத்தில் ஆட்சியிலிருப்போர் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் தமிழர்களின் மெல்லிய மொழி உணர்வை, மொழி வெறியாக்கி தேர்தலில் ஓட்டுக்காகவும் அவ்வப்போது பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஆங்கிலவழிக் கல்விநிறுவனங்களும், தனியார் கல்விநிறுவனங்களும், தடுக்கி விழுந்தால் ஆங்கிலப்பள்ளி என்ற நிலையும் உருவாகியிருப்பது, தமிழ் தமிழென மேடைக்கு மேடைக் கூப்பாடுபோட்டு, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்த திராவிடக் கட்சிகளின் வருகைக்குப் பின்னர்தான் என்ற உண்மை வரலாற்றை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பிற்கு, எந்தத்துறையும் கிடைக்காத பட்சத்தில் இறுதியாக தமிழ்த்துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவலநிலை யாரால் வந்தது? தமிழில் படித்தால் வேலைவாய்ப்பு குறைவு, தமிழில் படித்தால் அவமானம், தமிழில் படித்தால் பணம் சம்பாதிக்கமுடியாது என்ற நிலை உருவாவதற்கு காரணம் எது? நுகர்வு கலாசாரமும், உலகமயம், தனியார்மயம் மற்றும் தாராளமயத்தை அமலாக்கி மத்தியில் ஆட்சியிலிருந்துவரும் கட்சிகளும் திராவிடக்கட்சிகளும்தான் முக்கியக் காரணம்.
திரைத்துறையினரும் துதிபாடும் அரசு அமைப்புகளும் இன்னபிற அமைப்புகளும் பாராட்டுவிழா நடத்தி முடித்துள்ள நிலையில் கலைஞரின் புகழ்பாட மற்றுமொரு பிரம்மாண்டமான திருவிழா தேவைப்படுகிறது. அதனால்தான் இந்த மாநாடு நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
இந்த மாநாட்டில் புகழுரைகளும், ஆய்வுக்கட்டுரைகளும், கவிதைகளும், தமிழ்த் தொகுப்புகளும் தமிழுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆனால், கலைஞருக்கு நிச்சயமாக இருக்கும். அதற்காக மானமிகு வீரமணி, தொல்.திருமா முதல் திரையுலகினர் வரை கலைஞரின் புகழ்பாட வெறிக்கொண்டு காத்திருக்கும் மாநாடாகவே இதுத் தெரிகிறது. அதிலும் (மானமிகு) வீரமணிக்கு கொஞ்சம்கூட சலிப்புத் தட்டாமல் எப்படித்தான் புகழ முடிகிறதோ தெரியவில்லை.
இத்தகையச் சூழலில், கோவையில் நடைபெறும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞரின் புகழை மட்டுமே பாடும் மாநாடாக அல்லாமல், உண்மையில் தமிழ்மொழி குறித்தும், அதன் வளர்ச்சி குறித்தும், தமிழுக்காற்றவேண்டிய பணிகளை வடிவமைத்து அதன் வழியில் செயல்படவேண்டிய விதங்கள் குறித்தும் விவாதிக்குமென நம்புவோம்!
நன்றி: கீற்று

Similar topics
» சங்கே முழங்கு …
» ஒளிபெறும் வாழ்வும்...!
» இயற்கை உணவும் இனிய வாழ்வும்
» தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்
» வயலும் வாழ்வும் - எக்ஸ்பிரஸ் கவிதைகள்
» ஒளிபெறும் வாழ்வும்...!
» இயற்கை உணவும் இனிய வாழ்வும்
» தைப் பிறப்பும் தமிழர் வாழ்வும்
» வயலும் வாழ்வும் - எக்ஸ்பிரஸ் கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum