தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm

» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm

» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm

» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm

» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm

» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm

» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm

» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm

» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm

» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm

» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm

» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm

» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm

» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm

» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm

» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm

» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm

» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm

» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm

» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm

» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm

» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm

» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm

» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm

» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm

» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm

» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm

» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm

» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm

» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm

» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm

» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm

» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm

» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm

» மாங்குயிலே பூங்குயிலே
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:05 pm

» . கோடைக்கால காற்றே …
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:04 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்

Go down

நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன் Empty நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்

Post by RAJABTHEEN Mon Mar 28, 2011 12:34 am

நினைவோடை


இம்மாதம் 18_ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழுத்தாளன். திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார். 85 வயதில்_இடையே ஏறத்தாழ ஒரு பத்தாண்டு காலம். அவர் இந்த நிஜ உலகில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். திட நினைவில்லாத தடுமாற்ற உணர்வு நிலை.Nagulan2 ‘‘நீங்கள் தானே மாதவன்? நான் நாஞ்சில் நாடனுடன்தான் பேசிக் கொண்டிருந்ததாக நினைத்தேன்… சுந்தரராமசாமி இப்பொழுதெல்லாம் வருவதே இல்லை… பார்த்து நாளாயிற்று…’’ இப்படியாக

கவிதா சண்முக சுப்பையா, நீல.பத்மநாபன், இருவரும் இங்கே அவருக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்திலுள்ளவர்கள். இதில் அவருக்கு நெருக்கமான சுப்பையா காலமாகிவிட்டார். மரணம் பற்றி, திருமணம் பற்றி, இல்லறம் பற்றி, தாயன்பு பற்றி, சகோதர பந்தங்கள் பற்றியெல்லாம், அதீதமான_அழுத்தமான, அற்புதமான தத்துவ தீர்மானங்களை வகுத்திருந்தார், இந்த பிரம்மசாரி!

தமிழில் கவிதைகள் எழுதினார். ஆங்கிலத்திலும் அந்த அளவில் வீச்சோடு தீட்சணமாக கவிதை நூற்கள் படைத்த இவர், கதைகளிலும் நாவல்களிலும்தான் பெரும்பான்மை பெற்றிருந்தார் எனலாம். க.நா.சு., கு.ப.ராஷகோபாலன், ந. முத்துசாமி என்றெல்லாம் பழகிய வட்டமும், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன் என்றிவ்வாறு நட்பு தொடர்பும் பெற்றிருந்தாலும் யாரையும் முன் மாதிரியாகவோ, ஏற்றி வைத்து ஒப்புக் காட்டவோ செய்யாத பண்பு நலம் நகுலனுடையது!

‘நினைவுப்பாதை’ தொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்’ என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர். நான் எனது ‘கிருஷ்ணப்பருந்து’ நாவலை முன்னுரைக்காக அவர் முன் வைத்தபோது_ எழுதிய நானே அறியாத ஒருவித நீரோட்ட உணர்வைச் சுட்டிக் காட்டி எனது பலத்தையும் பலவீனத்தையும் பகுத்துக் காட்டி… ‘அஹ்ஹா…’ என்று, அவருக்கே உரித்தான அந்த ‘மாஸ்டர் பீஸ்’ சிரிப்பைக் காணிக்கை ஆக்கினார்.

கதைகள் வடித்திடும் அவரது விதேக விசித்திரங்களில், சுசீலா, நவீனன், கேசவமாதவன், எஸ்.நாயர் போன்ற ‘கோட்டுப் பாத்திரங்கள்’ அதிகமாக உலவினர். அனேகமாக, அவரது படைப்புகள், சுய சிந்தனைகளின் திரட்சிப் பாதை வழியாகவே பயணம் செய்தன. இந்த வறட்சி, ‘பைங்கிளி’ கதை பழகிய தமிழ் வாசகனுக்கு எட்டாத, புரியாத அறியாமையாகப்பட்டது.

இனி அவரது விசித்திரமான கதைத் தலைப்போடு (ஒரு ராத்தல் இறைச்சி.) ஆரம்பமாகும் ஒரு கதையின் துவக்கம், அவரது உண்மை உலகைக் காட்டுவதாக, தத்ரூபமாக அமைந்திருப்பதைப் பார்ப்போம்: ‘‘என் பெயர் நவீனன். சென்ற 25 வருஷங்களாக எழுதி வருகிறேன். நான் எழுதியது ஒன்றாவது பிரசுரமாகவில்லை. அப்படிச் சொல்வதுகூட பிசகு. சுமார் 15 கதை, குறுநாவல், கவிதை, பிரசுரமாகியிருக்கும். இவற்றில் 13_க்கு ஒரு வித சன்மானமும் கிடைக்கவில்லை. 14_ஆவது கதைக்கு வந்த செக்கை கமிஷன் கழித்து கையில் கிடைத்தது 4ரூ.25.பைசா… நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவர் பெயர் சுசீலா. அவளுக்குக் கல்யாணம் நடந்தது. இப்பொழுது அவள் என் தாயார். இதை நினைக்கும் பொழுதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன் Empty Re: நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்

Post by RAJABTHEEN Mon Mar 28, 2011 12:34 am

இருந்தாலும் கல்யாணம் நடைபெறுவதும் குழந்தை பெறுவதும் சர்வசாதாரண நிகழ்ச்சிகள் என்பதும் எனக்குத் தெரியாததில்லை… நான் கடந்த ஐந்து வருஷமாக ஒரு நாய் வளர்த்து வந்தேன். அது ஒரு நாட்டு நாய். மங்கின செங்கல் வர்ணம். வளையாத காதுகள், குள்ளமும் இல்லை உயரமுமில்லை. நல்ல முரட்டுத் தேகம். அதற்கு நான் ராஜி என்று பெயர் வைத்திருந்தேன். அதற்கு இப்பொழுது வயோதிகம் தட்டி விட்டது. இருந்தாலும், அது என்னிடம் அன்பாக இருந்தது. சில நாட்கள் நான் அதனுடன் பேசுவேன்…’’ …நகுலனின் ஒட்டுமொத்தமான _ அவரே குறிப்பிடுவது போல பத்துப் பதினைந்து படைப்புகளின் உள்படிமான உணர்த்தல்களுக்கு எடுத்துக் காட்டு …. இவை. நகுலன், உரக்க மந்திர உச்சாடனம் செய்யாத வால்மீகம் மூடி வளர்ந்த தத்துவஞானி. வாய்வீரம் பேசாத வாள் வீச்சுக்காரன். மணம் உள்பொதிந்த விடிகாலையின் பாதிவிரிந்த மலர். அவரது அந்தரங்கமே அவரது கவிதைகள், கதைகள், நிஜவாழ்வின் ஈரவிறகுகள் போன்ற குமைவுகளை படிமங்களாகக் கொண்டு அவர் இலக்கியம் படைத்தார்.

‘இன்னார் போல் அவர்…’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை!
குமுதம் தீராநதி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum