தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி

5 posters

Go down

வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி  Empty வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி

Post by lakshman Tue Mar 29, 2011 11:25 am

தேர்தல் காலமென்றாலே அரசியல் கட்சிகளுக்குப் பிரச்சனைதான். அள்ளிஇறைப்பதற்குப் பணம் தேவைப்படும் என்பதைவிடவும், மக்களிடம் கொடுப்பதற்கு வாக்குறுதிகள் தேவை என்பதே அவர்களுக்கு இப்போதுள்ள முக்கியமான பிரச்சனை. கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைதான் காரணமென்று சொல்லப்பட்டது. ‘இந்தத் தேர்தல் வெற்றியின் ஹீரோ தேர்தல் அறிக்கைதான்’ என்று அதைப் பல தலைவர்களும் வர்ணித்தார்கள். கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளின் பலத்தைவிடவும், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டம், கூட்டுறவு கடன் தள்ளுபடி, ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் போன்ற வாக்குறுதிகள்தான் அதற்கு மக்களின் ஆதரவை பெற்றுத் தந்தது என்பதே பலருடைய கணிப்பாகும்.

தேர்தல் காலத்தில் வழங்கப்படும் வாக்குறுதிகள் தேர்தல் முடிந்ததும் காற்றில் பறந்துவிடும் என்பதே பொதுவாக மக்களின் எண்ணமாக இருந்து வந்தது. அந்த வாக்குறுதிகளை அரசியல்கட்சிகளும் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை, மக்களும் அதை பெரிதாக நம்புவதில்லை என்பதுதான் கடந்த கால யதார்த்தம். ஆனால் 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளும், அதனால் கிடைத்த வெற்றியும் இந்த அணுகுமுறையை இப்போது மாற்றிவிட்டன. மக்களைக் கவரும் வாக்குறுதிகளைத் தந்தால் அவர்களது ஆதரவைப் பெறமுடியும் என்று இப்போது அரசியல் கட்சிகள் எண்ண ஆரம்பித்துவிட்டன.

தேர்தல் அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு பெரிய கட்சிகளில் ‘திங்க் டேங்க்’ என சொல்லப்படும் அறிவுஜீவிகளின் குழு இருக்கும். இப்போது இதற்காக கார்பரேட் கம்பெனிகள்கூட முளைத்துவிட்டன. ஆனால் அத்தகைய ‘ஆடம்பரங்கள்’ சிறிய கட்சிகளுக்கு இருப்பதில்லை. கூட்டணி அரசியலே யதார்த்தம் என ஆகிவிட்ட இன்றைய சூழலில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தமக்கென்று தனித்தனியே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டாலும்கூட கூட்டணிக்கு தலைமைத் தாங்குகிற கட்சியின் தேர்தல் அறிக்கையே முக்கியமாகக் கவனிக்கப்படும். இப்போது பெரிய கட்சிகள் ஒரு பக்கம் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக்கொண்டு, மறுபக்கம் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கின்ற வேலையில் மும்முரமாக இருக்கின்றன. அவற்றில் என்னென்ன வாக்குறுதிகள் இடம்பெறப்போகின்றன என்பதை மக்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கிறார்கள்.

அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிக்கும்போது மக்களின் விருப்பம், தேவை ஆகியவற்றைக் கேட்டறிந்து அதை முடிவு செய்வதில்லை. எதெல்லாம் கவர்ச்சியாக இருக்குமோ அதைத்தான் வாக்குறுதியாக அளிக்கிறார்கள். இதனால் மக்களுடைய ஜீவாதாரமான பிரச்சனைகள் போதிய அளவு கவனம் பெறாமல் போய்விடுகின்றன. மக்கள் தமது பிரச்சனைகளை எடுத்துச்சொல்வதற்குப் போதுமான வாய்ப்பும் இருப்பதில்லை. இவ்வாறு புறக்கணிக்கப்படுகின்ற பிரச்சனைகளில் முக்கியமானதாக விளங்குவது பெண்களின் பிரச்சனையாகும்.

நமது வாக்காளர்களில் ஏறத்தாழ பாதி அளவினராக இருக்கும் பெண்களுடைய பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தந்து அணுகுவதில்லை. சட்டமன்ற, பாராளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்குகிறோம் என எத்தனையோ ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் கூறிவந்தபோதிலும் அதற்கான மசோதாவை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வருவது இதற்கொரு உதாரணம். இடஒதுக்கீடு வழங்கப்பட்டால் பெண்கள் தம்முடைய பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண முடியும். ஆனால் இதற்கான வாய்ப்பை அரசியல் கட்சிகள் கொடுக்க மறுத்துவருகின்றன.

மகளிர் இடஒதுக்கீடு பிரச்சனையைவிடவும் முக்கியமான இன்னொரு விஷயம் இப்போது தெரியவந்திருக்கிறது. குழந்தைத் திருமணம் என்பது உலகிலேயே அதிகமாக இந்தியாவில்தான் நடக்கிறது என்ற உண்மையை ‘லான்ஸெட்’ என்ற மருத்துவ இதழ் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் நடைபெறும் திருமணங்களில் ஏறத்தாழ நாற்பத்தைந்து சதவீத திருமணங்கள் பெண்ணுக்கு சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட பதினெட்டு வயது ஆவதற்கு முன்பே நடந்து விடுகிறது என அந்த பத்திரிகையில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று கூறுகிறது. ‘நேஷனல் ஃபேமிலி ஹெல்த் சர்வே’ மூலம் பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.

இந்தியாவில் பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஆந்திரா, உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறுவயதிலேயே பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பது சகஜமானதாக இருக்கிறது. கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நிலைமை சற்றே பரவாயில்லை என்றபோதிலும், இவையும்கூட விதிவிலக்குகள் அல்ல. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்னும் பல பகுதிகளில் குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருந்து வருகிறது. கிராமப்புறங்களில் இப்போதும் கோலோச்சுகிற அறியாமையே இதற்கு முக்கியமான காரணமாகும். விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு பொட்டுக்கட்டி விடுவது, தவளையோடு கல்யாணம் செய்துவைப்பது போன்ற மூடப்பழக்கங்கள் நடைமுறையில் இருப்பதை பத்திரிகைச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. பெண்களின் கல்வி நிலை மோசமாக இருக்கும் பகுதிகளில் குழந்தைத் திருமணம் அதிகமாக இருக்கிறது என்பதைப் பல்வேறு ஆய்வுகளும் நிரூபித்திருக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள, பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கேற்ற சட்டபூர்வமான வயது பதினெட்டு என்பது 1978ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதாகும். குழந்தை திருமணம் பற்றி முதலில் அக்கறை காட்டியவர்கள் நம்மை ஆட்சி செய்த வெள்ளைக்காரர்கள்தான். அவர்கள்தான் 1929ஆம் ஆண்டில் குழந்தைத் திருமணங்களை தடை செய்வதற்கான சட்டத்தை முதன்முதலாகக் கொண்டுவந்தார்கள். அப்போது பெண்ணுக்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட திருமண வயது பதினான்கு, அது 1940ஆம் ஆண்டில் பதினைந்து என உயர்த்தப்பட்டது.

சிறுவயதில் திருமணம் செய்து வைப்பதால் பெண்களுக்கு பல்வேறு விதமான சுகாதாரக்கேடுகள் வருவது மட்டுமல்லாமல், அவர்களது உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. முறையாக கல்வி கற்பதற்கும், உளவியல் ரீதியான வளர்ச்சிக்கும் அது தடையாக இருக்கிறது. சிறுவயதில் திருமணமாகிச் செல்லும் பெண்கள் உடனடியாகவே கர்ப்பம் தரிப்பதால் அவர்களுக்குக் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவர்களது உடல் பக்குவப்படாத நிலையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதால் உடல் ரீதியில் மட்டுமின்றி, உளவியல் ரீதியாகவும் அவர்கள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை மருத்துவ ஆய்வுகள் எடுத்துக்கூறுகின்றன. 2001ஆம் ஆண்டு எடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் பெண்கள் பதினைந்து வயதுக்குள்ளாகவே குழந்தை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவிலுள்ள பெண் எய்ட்ஸ் நோயாளிகளில் பெரும்பாலானோர் பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.

குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு சட்டம் இருந்தபோதிலும், பதினெட்டு வயதுக்குக்கீழ் உள்ள பெண்ணோடு செய்யப்படும் திருமணத்தை ரத்து செய்வதற்கு தற்போது வழியேதும் இல்லை. அவ்வாறு ரத்து செய்தால் அது அந்தப் பெண்ணுக்கு மேலும் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்திவிடும் என்பதால் நீதிமன்றங்கள் அத்தகைய திருமணங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்தே வருகின்றன. குழந்தைத் திருமணத்திற்கு உதவியாக இருப்பவர்களைத் தண்டிப்பதற்கு தற்போது சட்டத்தில் இடமிருந்தாலும், அது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது.

இந்திய சட்ட ஆணையம் கடந்த ஆண்டு குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் செய்யப்படவேண்டிய திருத்தங்கள் சிலவற்றை அரசுக்கு பரிந்துரைத்தது. பதினாறு வயதுக்கு கீழ் உள்ள பெண்ணோடு செய்யப்படும் திருமணத்தை சட்டபூர்வமாக ரத்து செய்ய வேண்டும்; இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375ஐ திருத்தம் செய்து சட்டரீதியாக உடலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கக்கூடிய வயது பதினாறு என ஆக்கவேண்டும்; அனைத்து விதமான மதங்களிலும் திருமணங்களைக் கட்டாயமாக பதிவு செய்வதற்கு ஆணையிட வேண்டும்; இந்து திருமணச் சட்டத்தின் ஷரத்துகளும் குழந்தை திருமணத் தடைச் சட்டத்தின் பிரிவுகளும் முரண்படாதபடி உரிய திருத்தங்கள் செய்யப்படவேண்டும் முதலான யோசனைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் அவற்றை மத்திய அரசு கவனித்ததாகத் தெரியவில்லை. அரசியல் கட்சிகளும் அதற்காக குரலெழுப்பவில்லை.

பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் இந்த நேரத்திலாவது அரசியல் கட்சிகள் இதுபற்றி அக்கறை காட்ட வேண்டும். தாங்கள் ஆட்சிக்கு வந்தால் குழந்தைத் திருமணங்களை முற்றாகத் தடைசெய்வோம். இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும், சட்ட ஆணையமும் வழங்கியுள்ள ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு சட்ட வடிவம் கொடுப்போம் என தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கின்ற கட்சிக்கு பெண்களின் ஆதரவு கிடைக்கும் என்பது நிச்சயம். வாக்குகளைப் பெறவாவது இந்த வாக்குறுதியை அரசியல் கட்சிகள் அளிக்குமா?

நன்றி : எழுத்தாளர் ரவிக்குமார்
lakshman
lakshman
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 67
Points : 145
Join date : 19/03/2011
Age : 35
Location : ஜாகீர் நாயக்கன் பாளையம்

Back to top Go down

வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி  Empty Re: வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி

Post by அரசன் Tue Mar 29, 2011 1:02 pm

இலவசம் தான் கிடைக்கும் ....
நல்ல திட்டங்கள் கிடைக்கா ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி  Empty Re: வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Mar 29, 2011 2:10 pm

அரசன் wrote:இலவசம் தான் கிடைக்கும் ....
நல்ல திட்டங்கள் கிடைக்கா ...

அது தானே இல்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி  Empty Re: வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி

Post by கவிக்காதலன் Wed Mar 30, 2011 12:28 am

நமது வாக்காளர்களில் ஏறத்தாழ பாதி அளவினராக இருக்கும் பெண்களுடைய பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தந்து அணுகுவதில்லை.
அதான் மிக்ஸி கொடுக்க போறாங்களே...! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

தமிழகம் எங்கே போய்க்கிட்டு இருக்குனே தெரியல...! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி  Empty Re: வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Mar 30, 2011 12:43 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி  Empty Re: வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி

Post by சிசு Wed Mar 30, 2011 3:03 pm

கவிக்காதலன் wrote:
நமது வாக்காளர்களில் ஏறத்தாழ பாதி அளவினராக இருக்கும் பெண்களுடைய பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் முக்கியத்துவம் தந்து அணுகுவதில்லை.
அதான் மிக்ஸி கொடுக்க போறாங்களே...! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

தமிழகம் எங்கே போய்க்கிட்டு இருக்குனே தெரியல...! <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

தமிழகம் இருட்டை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. (மின்வெட்டு மட்டும் அல்ல)
எல்லா இருளையும், இறுதியில் ஒளி வெல்லும் என்பது(ம்) இயற்கையின் நியதி.

//திரியிருந்தும் எண்ணையிருந்தும் இன்னும் இருட்டுக்குள்ளே நம்ம திருநாடு.
தீக்குச்சியை இவன் உரசிவைப்பான் என்று எழுதட்டுமே உன்னை வரலாறு//

இந்த "உன்னை" யார் என்பதுதான் இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வி.
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி  Empty Re: வாக்குகளைப் பெற ஒரு வாக்குறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum