தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
5 posters
Page 1 of 1
மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
[You must be registered and logged in to see this link.]
ஆஹா இனி நம்ம பாட்டுக்குப் சிவனே என்று இருக்கலாம். கொஞ்ச நாளா, எங்கடை
பதிவுகளுக்கு வந்து அறு அறு என்று எங்களையெல்லாம் அறுத்துத் தள்ளிய, நோண்டி
நொங்கெடுத்த நம்ம நிரூபன் பயபுள்ளை இனிமே வலைப் பதிவிற்கு வரமாட்டான்.
சொந்தச் செலவிலையே சொர்க்க லோகம் போகப் போறான் என்று நீங்கள் மகிழ்ச்சியாக
இப் பதிவினைப் படிக்கத் தொடங்குகிறீர்கள் என நினைக்கிறேன்.
கடந்த வாரம், இதமான பாடல்களைக் கேட்டவாறு உறக்கங் செல்கிறேன். உறங்கியதும்
திடீரென கனவு வருகிறது. எங்கள் வீட்டு முற்றத்தில் என் அப்பா, இரண்டு
தங்கைகள், நான், தம்பி என எல்லோரும் கூடி நிற்கிறோம். அப்பா பேசத்
தொடங்குகிறார்.
‘பிள்ளைகளே! எனக்கும் வயசு போகிறது. இனி உங்களின் எதிர் காலத்தை நீங்களே
தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் ஒவ்வொருவரினதும் எதிர்க்காலக் கனவுகள்
என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்?
‘முதலாவது தங்கை பதிலுக்கு ‘’அப்பா நான் யூனிவர்சிற்றி முடித்து
எக்கவுண்டன்(Accountant) ஆக வரப் போகிறேன்; அது வரைக்கும் வீட்டிலை இருந்த
படியே கம்பஸிற்கும்(பல்கலைக் கழகத்திற்கும்) போய், ரியூசனும் கொடுக்கப்
போறேன்’’ என்று கூறி முடித்தாள்.
இரண்டாவது தங்கை: அப்பா ‘நான் ஏலெவல் முடிய ஐரி(Information Technology) படிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ என்று கூறினாள்.
அடுத்தது என் முறை: ’’என் கைவசம் டெலிகொம் நிறுவனத்தில் வேலை இருந்தாலும் நான் சாமியாராகலாம் என்று முடிவெடுத்துள்ளேன்’’ என்று கூறினேன்.
அப்பா எதுவும் பேசவில்லை. அடுத்தது தம்பி பதில் கூறும் முறையாக இருந்தும்
அவனும் எதுவும் பேசவில்லை. யாருமே எதுவும் பேசாதிருக்கும் போது, வெறும்
நிசப்தம் மட்டுமே அவ் விடத்தில் நிலவியது. அப்பா மௌனத்தைக் கலைத்தார்.
‘டோய் நிரூபா! நீ தெருப் பொறுக்கியாகி சாமியாராகப் போறியோ. இது அப்பா.
பதிலுக்கு நான், ஏனப்பா, சாமியாராகிறதில என்ன தப்பு. நாட்டிலை எத்தினை
சாமியார் இருக்கீனம். சாமியாரைப் பற்றி தப்பா சொன்னீங்க. சங்கை
அறுத்திடுவேன் என்று மிரட்டுகிறேன்.
அப்பா கோபம் கொண்டவராய், விழிகள் சிவக்க, டோய் யாரைப் பார்த்து,
எதிர்த்துப் பேசுறாய். வீட்டை விட்டு வெளியேறு என்று விரட்டுகிறார். நான்
வீட்டை விட்டு வெளியேறி, ஒரு ஆச்சிரமத்தை மலைகள் நிறைந்த, ஆறுகள் தவழ்ந்து
குளிர்ச்சி பரப்பும் ஜம்புகா ஹிம்புகா தேசத்தில் உருவாக்குகிறேன்.
’’பாணபத்திர பன்னிச் சாமியார்’ என எனக்கு நானே ஒரு பெயரைச் சூட்டிக் கொள்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
எனது அடியார்களை, சீடர்களை எனக்காக தேடும் நோக்கோடு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கிறேன்.
‘ஜம்புகா ஹிம்புகா பிரதேசத்தில்
இதோ வந்து விட்டார் உங்கள்
பாண பத்திர பன்னிச் சாமியார்-
பாவங்களை மன்னிப்பார் இந்தச் சாமியார்
உங்களுக்குப் பிடித்துள்ள
சன்னி, ஏழரை, எட்டரை
தோசங்கள், குறை பாடுகள் அனைத்தும் நீங்க வேண்டுமா?
இன்றே வருக என்னிடம்!
பெண்களுக்கான குறைபாடுகள்,
கணவன் மனைவி பிரச்சினைகள்,
காதலன் காதலி அந்தரங்க விடயங்கள்
அனைத்தையும் நொடிப் பொழுதில் நீக்கித் தருவேன்!
நீங்கள் விரும்பியவரை விரும்பிய இடத்திற்கு அழைக்க வேண்டுமா?
உங்களுக்குப் பிடிக்காதவரை உலகை விட்டு அனுப்ப வேண்டுமா?
அனைத்திற்கும் இன்றே என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்.
பாணபத்திர பன்னிச் சாமியார்!
தொடர்புகளுக்கு:
சங்கிசா, பங்கிசா ஆச்சிரமம்
முங்கால் வீதி
ஜம்புகா ஹிம்புகா
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 07772229994
பத்திரிகையில் விளம்பரம் போட்ட பின்னர் என் புகழ் உலகெல்லாம் பரவத்
தொடங்கிறது. எனக்குத் தொண்டு செய்யச் சீடர்கள் வருகிறார்கள். என்னைச் சூழ
அமைச்சர்கள், மந்திரிகள் படங்கள் தொங்குகின்றன. அனைவருமே எனக்கு அடிமைகளாக
அல்லது அடியார்களாக நான் சொல்வதைக் கேட்கத் தயாராகுகிறார்கள்.
பிரபல மின் டீவி என்னைப் பேட்டி காண வருகிறது. போதையில், அபிசேகம், சைவ
தீர்த்தம் எனும் பெயரில் நான் மெண்டிஸ் சாராயத்தை அடித்து விட்டு
உளறுகையில் அவற்றினை அருள் வாக்கு என கலர் டிஸ்பிளே போட்டு தொலைக் காட்சி
ஒளிபரப்புகிறது.
என் தத்துவங்கள் ‘சொன்னவர் யார்’’ என்ற தலைப்புடன் பத்திரிகைகளில் பெரிய எழுத்தில் வருகிறது.
[You must be registered and logged in to see this link.]
நான் சொன்ன தத்துவங்கள்.
’கண்ணைத் திற காட்சி தெரியும்!
’அன்னையும் பிதாவும் பின்னடிக்கு இடஞ்சல்!
‘ஆலயம் போவது அரட்டைக்கு அழகு!
‘கல்லைக் கண்டால் நீ நாயைக் காண மாட்டாய்
காசைக் கண்டால் நீ கடவுளைத் தேட மாட்டாய்!
பணம் இல்லையேல் நீ பக்தனாகுவாய்
பணமிருந்தால் நீ சாராய பார் நண்பனாகுவாய்!
என்னுடைய தத்துவங்களையும், அருள் வாக்குகளையும் கேட்டு பக்தர்கள்,
அடியவர்கள், சீடர்கள் பெருகத் தொடங்குகிறார்கள். பணம் மலை மலையாகக் குவியத்
தொடங்குகிறது. வைப்பிலிட மத்திய வங்கியில் இடம் போதாத காரணத்தால், சுவிஸ்
வங்கியில் என் சீடர்களின் உதவியுடன் பணத்தினை வைப்புச் செய்கிறேன். திடீரென
வீதியில் நாய் குலைக்கும் சத்தம் கேட்கிறது. கனவு கலைகிறது. அடச்
சீ....கறுமம். இது கனவாகி விட்டதே என்று நொந்து கொள்கிறேன்.
பின்னர் சிந்தித்துப் பார்த்தேன். சாமியாராகுவதில் என்ன தப்பு? ஆன்மீகப்
பணி செய்வது அகிலத்திற்கு நல்லது தானே! நிஜத்திலை சாமியாராகினால்
எப்படியிருக்கும் எனும் நினைப்பில் நினைவுகளைத் திருப்பினேன்.
நம்ம ஊருக் கோவில்களிலை ஐய்யர் வரவில்லை என்றால் அவரது மகன்மார் தமிழில்
பூஜை செய்வதில்லையா? அது போல என்னாலும் தமிழில் பூசை செய்ய முடியும் தானே.
இதோ கைவசம் இருக்கிறதே மந்திரம், கவலை எதற்கு!
பூஜை பண்ணும் போது மந்திரம் ஓத வேண்டும்.
[You must be registered and logged in to see this link.]
ஓம் சுக்கிலாம் பரதம்...விஷ்ணு..
பூ உனக்கு, பொங்கல் எனக்கு
அவல் உனக்கு, அரிசி எனக்கு
தேன் உனக்கு, தேங்காய் எனக்கு
சாந்தி உனக்கு, சரோஜா எனக்கு
ஓம் சாந்தி சாந்தி, சாந்தி நமக!
பூஜை நடந்து முடிந்ததும், தேவாரம் பாட வேண்டும்.
வேட்டி போட்ட பொடியன் - நீ வெறுங் கதைகள் பேசி
நாட்டினையும் கெடுக்கும் நல்ல தமிழ் அறிஞன்’
உனைப் பாட்டில் வைத்துச் சொன்னால் தமிழுக்கே கேடு- நீ
பாவையிடம் தோற்றால் பாவமெல்லாம் தீரும்!
இப்படியும் இப்போதைய இளைஞர்கள் போன்று பாடலாம் தானே.
அடுத்ததாக என்ன செய்ய வேண்டும். பூஜை முடிய திருநீறு, சந்தனம் கொடுக்க
வேண்டும். ஆண்களுக்கென்றால் திருநீற்றைக் கையில் கொடுத்து விட்டு,
பெண்களுக்கு மட்டும் விபூதியை நெற்றியில் பூசி, சந்தனத்தையும் வைத்து விட
வேண்டும்.
பெண்களுக்கு திருநீறு, சந்தனம் வைக்கிற சாட்டிலை காலோடை காலைத் தெரியாமல்
உரச வேண்டும். (இது எங்கள் ஊர் ஒரு சில ஐயர் மார் செய்யும் லீலை)
அட இது நமக்கு கை வந்த கலை தானே. இதுவும் நம்மாலை முடியும்,
[You must be registered and logged in to see this link.]
அடுத்து; நதிர்தனா......திரணனா............தனனனா.......தா என்று பாட்டுப்
போட்டு விட்டு, நடிகையொருத்தியை அழைத்து வந்து கை, கால் பிடிக்க வைத்து,
ஒயில் மசாஜ் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால் வீட்டிற்கு ஆட்டோ வரும்
என்பது நிச்சயம் ஆதலால் அப் பணியை என் சீடர்களிடமே கொடுத்து விடுகிறேன்.
இறுதியாக இன்னொரு விடயமும் very important ஒன்று இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வாறீங்களா?
சுவாமிஜி, எனக்குத் தீராத வயிற்று வலி என்று அழுதழுது என்னிடம் வரும்
பக்தைகளிற்கு பொக்குளில் தேசிக்காயை வைத்து மந்திரம் சொல்லி தேய்த்து,
போலிஸிடம் அக்கப்பட வேண்டும். அதற்கும் ஐயாம் றெடி.
இப்படியான திறமைகள் இருந்தால் தான் சாமியாராக முடியும். இத்தகைய
சாமியார்களைத் தானே நாங்கள் தினமும் கண்டு மகிழ்கிறோம். அப்ப இதே வழியைப்
பின்பற்றினால் நானும் ஓர் சாமியார் தானே!
மகா ஜனங்களே! சாமியாராக நான் றெடி!
என் சீடர்களாக நீங்கள் றெடியா!
********************************************************************************
பாணபத்திர பன்னிச் சாமியும், நம்ம கோண புத்திர கொடிகா சாமியும் நாற்பது
கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு மலை உச்சியினைப் பார்த்துப் பேசிக்
கொள்கிறார்கள்.
பாண: ஏய் கோணா சாமி, அங்கை பார்த்தியா, அம்புட்டுத் தொலைவிலை உள்ள மலையிலை
என் ஞானக் கண்ணுக்கு ஒரு எறும்புக் கூட்டம் வரிசையாகப் போய்க்
கொண்டிருப்பது தெரிகிறது. உன் ஞானக் கண்ணில் ஏதாவது தெரிகிறதா கோணா சுவாமி.
கோணா: நீங்க வேற, அந்த மலையுச்சியிலை வரிசையாப் போற எறும்புக் கூட்டம்
இருக்கே, அதுங்க எவ்வளோ வடிவா தேங்காய்ப் பூவை வாயிலை கவ்விக் கொண்டு,
ஊர்ந்து போகுது பார்தீங்களா. இப்ப சொல்லுங்க. என்னோடை ஞானக் கண்ணா, உங்க
ஞானக் கண்ணா ரொம்ப பவர் புல்லு!
[You must be registered and logged in to see this link.]
nirupanblog- புதிய மொட்டு
- Posts : 30
Points : 50
Join date : 30/03/2011
Age : 40
Location : Jaffna
Re: மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
முழு பதிவையும் இங்கேயே போடலாமே....!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
எப்பிடி பாஸ்... எந்த தடங்கலும் இல்லாம எல்லாமே ஒரு கோர்வையா இப்படி கற்பனை பண்ண முடியுது..??? கொஞ்சம் பொறாமையாத்தான் இருக்கு.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
இப்போதான் கலக்கல்...!!!
வேண்டுகோளுக்கிணங்க முழு பதிவையும் இங்கேயே போட்டமைக்கு நன்றி நிருபன்...!!!
வேண்டுகோளுக்கிணங்க முழு பதிவையும் இங்கேயே போட்டமைக்கு நன்றி நிருபன்...!!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மகா ஜனங்களே! நான் சாமியாராகப் போகிறேன்!
கலக்கிட்டீங்க நிரூபன்... வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறீங்க... திருநீறு கொடுத்தல்... மந்திரம் சொல்லுதல் எல்லாம் சூப்பராக சொல்லிட்டீங்க... யாழ்ப்பாணத்தில நான் கேள்வியேபடாத அட்ரஸும் சொல்லிட்டீங்க...
முதல்ல நீங்க சாமியாராகுங்க... பின்பு பக்தர்களைப்பற்றி யோசிக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
முதல்ல நீங்க சாமியாராகுங்க... பின்பு பக்தர்களைப்பற்றி யோசிக்கலாம்... [You must be registered and logged in to see this image.]
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Similar topics
» நான் எதிர்திசையில் போகிறேன்
» நான் உனக்கு தாயாக போகிறேன்
» யாரையும் காணோம்... நான் போகிறேன்..!
» நான் காணாமல் போகிறேன் – கவிதை
» நான் ராஜாவாகப் போகிறேன்...திரை விமர்சனம்
» நான் உனக்கு தாயாக போகிறேன்
» யாரையும் காணோம்... நான் போகிறேன்..!
» நான் காணாமல் போகிறேன் – கவிதை
» நான் ராஜாவாகப் போகிறேன்...திரை விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum