தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மழை என் பாட்டியை போல
+2
arony
sagampari
6 posters
Page 1 of 1
மழை என் பாட்டியை போல
பட்டுத்தெரித்த நீர் திவலைகள்
நெஞ்சினிலே நினைவலைகள்
மழை என் பாட்டியை போல
எப்போது வந்தாலும்
வரவேற்பையும் வசைபாடுதலையும்
கூடுதலாகவே தரும்...! பெறும்...!
எனக்கும் பாட்டிக்குமான நாட்கள்
சூர்ப்பனகைக்கும் மகிஷிக்குமானது
என்ன இப்படி என்கிறீர்களா?
அம்மா ஆசிரியப்பணியிலும்
அப்பா அரசாங்கப் பணியிலுமாக
வீட்டிலும் பணியின் நிழல் தொடர,
எனக்கோ பாட்டிதான் எல்லாமும்!
தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பித்தால்
வெடிபோடுவது வெளியில் அல்ல
பாட்டியின் கோட்டை அடுப்பில்தான்
புகை அமர்த்த ஊதினால்
பொட்டுவெடி பறையடிக்கும்
சர வெடியின் அதிரடியில்
சல்லடை சல்லடையாகிவிடும்
விளைவாக பாட்டியின் கச்சேரி
அப்புறம் என்னுடைய எதிர் பாட்டு
இத்தனைக்கும் பிறகு
தோல்வி வெற்றியை கணக்கிடாத
எதிரணி தலைவர்கள்போல கைகுலுக்கி
அறுசுவை(?) விருந்தாடுவோம்
பாவம்! நானும் இல்லைஎன்றால்
பிறகு யார்தான் பட்சணங்களை சாப்பிடுவது.
பாட்டிக்கும் அம்மாவிற்குமான போரில்
நான் அவளுக்கு எதிர் முகாமில்
புதிய ஆள்போல் முகம் திருப்புவேன்
தேர்தல் வாக்குறுதிகள் போல
இலவச அறிவிப்பு தருவதோடு நில்லாமல்
உண்மையிலேயே தின்பண்டங்கள் தந்து
மறுபடியும் ஆட்சியை பிடித்து...
எனக்காகவே அம்மாவிடம்
சமாதான படலமும் ஆரம்பிக்கும்
பாட்டியின் இனிய பக்கமும் உண்டு
பேறு காலத்தின் தேவைகளுக்கு
எல்லோரும் தேடுவதும் அவளைத்தான்
இரவு பகல் எந்த நேரமும்
தாயையும் பிள்ளையையும்
தாதிபோல பக்குவம் பார்த்து சீராட்ட
தள்ளாமையை தள்ளி வைப்பாள்.
எனக்கும் அவள்தான் துணை.
எப்படியிருந்தாலும் அவள் என் பாட்டி!
என்னுடய பேரன்கள் எப்படியென்றால்.....?
இன்றைய முதியோர் இல்ல உலகத்தில்
சின்ன குழந்தைகளான பாட்டிகளும்
பெரியவர்களாகிவிட்ட பேரன்களும்
சந்திப்பதும் இல்லை சண்டையிடுவதுமில்லை!
நெஞ்சினிலே நினைவலைகள்
மழை என் பாட்டியை போல
எப்போது வந்தாலும்
வரவேற்பையும் வசைபாடுதலையும்
கூடுதலாகவே தரும்...! பெறும்...!
எனக்கும் பாட்டிக்குமான நாட்கள்
சூர்ப்பனகைக்கும் மகிஷிக்குமானது
என்ன இப்படி என்கிறீர்களா?
அம்மா ஆசிரியப்பணியிலும்
அப்பா அரசாங்கப் பணியிலுமாக
வீட்டிலும் பணியின் நிழல் தொடர,
எனக்கோ பாட்டிதான் எல்லாமும்!
தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பித்தால்
வெடிபோடுவது வெளியில் அல்ல
பாட்டியின் கோட்டை அடுப்பில்தான்
புகை அமர்த்த ஊதினால்
பொட்டுவெடி பறையடிக்கும்
சர வெடியின் அதிரடியில்
சல்லடை சல்லடையாகிவிடும்
விளைவாக பாட்டியின் கச்சேரி
அப்புறம் என்னுடைய எதிர் பாட்டு
இத்தனைக்கும் பிறகு
தோல்வி வெற்றியை கணக்கிடாத
எதிரணி தலைவர்கள்போல கைகுலுக்கி
அறுசுவை(?) விருந்தாடுவோம்
பாவம்! நானும் இல்லைஎன்றால்
பிறகு யார்தான் பட்சணங்களை சாப்பிடுவது.
பாட்டிக்கும் அம்மாவிற்குமான போரில்
நான் அவளுக்கு எதிர் முகாமில்
புதிய ஆள்போல் முகம் திருப்புவேன்
தேர்தல் வாக்குறுதிகள் போல
இலவச அறிவிப்பு தருவதோடு நில்லாமல்
உண்மையிலேயே தின்பண்டங்கள் தந்து
மறுபடியும் ஆட்சியை பிடித்து...
எனக்காகவே அம்மாவிடம்
சமாதான படலமும் ஆரம்பிக்கும்
பாட்டியின் இனிய பக்கமும் உண்டு
பேறு காலத்தின் தேவைகளுக்கு
எல்லோரும் தேடுவதும் அவளைத்தான்
இரவு பகல் எந்த நேரமும்
தாயையும் பிள்ளையையும்
தாதிபோல பக்குவம் பார்த்து சீராட்ட
தள்ளாமையை தள்ளி வைப்பாள்.
எனக்கும் அவள்தான் துணை.
எப்படியிருந்தாலும் அவள் என் பாட்டி!
என்னுடய பேரன்கள் எப்படியென்றால்.....?
இன்றைய முதியோர் இல்ல உலகத்தில்
சின்ன குழந்தைகளான பாட்டிகளும்
பெரியவர்களாகிவிட்ட பேரன்களும்
சந்திப்பதும் இல்லை சண்டையிடுவதுமில்லை!
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மழை என் பாட்டியை போல
முடிவு கவலைக்குரியதே....
நல்ல கற்பனை.
நல்ல கற்பனை.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மழை என் பாட்டியை போல
sagampari wrote:இன்றைய முதியோர் இல்ல உலகத்தில்
சின்ன குழந்தைகளான பாட்டிகளும்
பெரியவர்களாகிவிட்ட பேரன்களும்
சந்திப்பதும் இல்லை சண்டையிடுவதுமில்லை!
அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி....
இன்றைய பாட்டிகளும், பேரன்களும் ஒன்றாக இருப்பது, நடப்பு தலைமுறை நம்மிடம்தான் உள்ளது...
செல்வன்- மல்லிகை
- Posts : 77
Points : 98
Join date : 24/03/2011
Re: மழை என் பாட்டியை போல
கற்பனை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மழை என் பாட்டியை போல
//மழை என் பாட்டியை போல
எப்போது வந்தாலும்
வரவேற்பையும் வசைபாடுதலையும்
கூடுதலாகவே தரும்...! பெறும்...!//
வாவ்.... அருமையான உவமை.
//தள்ளாமையை தள்ளி வைப்பாள்.//
வார்த்தைப் பிரயோகம் கவர்கிறது.
என் பாட்டி(யையும்) நினைவூட்டுகிறது கவிதை. ஆனால் நான் பட்டாசு கொளுத்தியதில்லை . பாட்டியின் ஆதரவிலும், அணைப்பிலும், அன்பிலும் வாழும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது.? சுருக்கம் விழுந்து சொரசொரவென்ற கையின் அன்பு வருடலில் உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்குமே... அந்த கணம் அற்புதம்.
//சந்திப்பதும் இல்லை சண்டையிடுவதுமில்லை!//
அந்த உலகின் ஆனந்தத்தை அறியாதவரை பேரன்கள் பாட்டியின் அருமையை அறியப்போவதில்லை. வருத்தமே மேலோங்குகிறது.
மழை என் பாட்டியை போல - பிளாஷ் பேக் ...
எப்போது வந்தாலும்
வரவேற்பையும் வசைபாடுதலையும்
கூடுதலாகவே தரும்...! பெறும்...!//
வாவ்.... அருமையான உவமை.
//தள்ளாமையை தள்ளி வைப்பாள்.//
வார்த்தைப் பிரயோகம் கவர்கிறது.
என் பாட்டி(யையும்) நினைவூட்டுகிறது கவிதை. ஆனால் நான் பட்டாசு கொளுத்தியதில்லை . பாட்டியின் ஆதரவிலும், அணைப்பிலும், அன்பிலும் வாழும் பாக்கியம் எத்தனை பேருக்குக் கிடைக்கிறது.? சுருக்கம் விழுந்து சொரசொரவென்ற கையின் அன்பு வருடலில் உடலும் உள்ளமும் ஒருசேர சிலிர்க்குமே... அந்த கணம் அற்புதம்.
//சந்திப்பதும் இல்லை சண்டையிடுவதுமில்லை!//
அந்த உலகின் ஆனந்தத்தை அறியாதவரை பேரன்கள் பாட்டியின் அருமையை அறியப்போவதில்லை. வருத்தமே மேலோங்குகிறது.
மழை என் பாட்டியை போல - பிளாஷ் பேக் ...
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மழை என் பாட்டியை போல
நன்றி அரோனி
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மழை என் பாட்டியை போல
இன்றைய பாட்டிகளும், பேரன்களும் ஒன்றாக இருப்பது, நடப்பு தலைமுறை நம்மிடம்தான் உள்ளது... //
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மழை என் பாட்டியை போல
யூஜின்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மழை என் பாட்டியை போல
வரிக்கு வரி கருத்துரை c -su வந்தாலே நன்றி
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Re: மழை என் பாட்டியை போல
அருமை!!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மழை என் பாட்டியை போல
நன்றி கவிக்காதலன்
sagampari- ரோஜா
- Posts : 184
Points : 253
Join date : 26/03/2011
Age : 60
Location : MADURAI
Similar topics
» பாட்டியை நீ ரொம்பக் கஷ்டப்படுத்திட்டியோ??
» பாட்டியை காணவில்லை
» பாட்டியை பார்க்க இத்தாலி போறேன்: டுவிட்டரில் ராகுல்
» பாட்டியை காணவில்லை
» பாட்டியை பார்க்க இத்தாலி போறேன்: டுவிட்டரில் ராகுல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum