தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
தம்பி நீ உலகத்தை ஜெயிப்பாய்
Page 1 of 1
தம்பி நீ உலகத்தை ஜெயிப்பாய்
அண்மையில் நடந்த காமென்வெல்த் போட்டியில் வில்வித்தையில் ஆண்களுக்கான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் வெளிக்கொணர்ந்த தமிழகத்தைச் சார்ந்த ஸ்ரீதரைப் பற்றி நாமெல்லாரும் அறிந்திருக்கலாம். பாராட்டியிமிருக்கலாம். ஆனால் அவரிடத்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொரு காரியம் என்னவென்றால்...
அது அவருடைய தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான். தர்மபுரி மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஸ்ரீதருக்கு ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் தொடர அவருடைய குடும்பத்தின் வறுமை வாய்ப்பளிக்கவில்லை. தன் குடும்பத்தின் வயிற்றுப் பசியை போக்க தன் குடும்பத் தொழிலான நெசவுத்தொழிலில் ஈடுபட்டார் ஸ்ரீதர். படிப்பை பாதியிலே விட்டு விட்டாலும், தன் கைகள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டாலும், வறுமை தன் குடும்பத்தை வாட்டி வதைத்தாலும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ண அலைகளை மட்டும் எந்த சூழ்நிலையாலும் தடை பண்ண முடியவில்லை. பிரைவேட்டாக படித்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்.
சிறுவயது முதல் வில் வித்தையில் ஆர்வம் கொண்ட ஸ்ரீதருக்கு, வில் ஒன்று வாங்கி பயிற்சி செய்ய வேண்டும் என்ற நெடுநாள் ஆசையை கடன் வாங்கி தான் நிறைவேற்ற வேண்டியதாயிருந்தது. பெற்ற கடன் தொகையும் புதிய வில் வாங்க போதுமானதாய் இல்லாததினால் பழைய வில்லொன்றை வாங்கி கருத்துடன் பயிற்சி செய்தார். காமென்வெல்த் பரிசோதனை போட்டிக்குச் செல்ல நினைத்த ஸ்ரீதருக்கு தான் வாங்கிய பழைய வில் உலகத்து வில்வீரர்கள் கொண்டு வரும் வில்லுக்கு சற்றும் ஈடாகாது என்றுணர்ந்து பழகிய நண்பர்களிடம் வில்லொன்றை இரவலாக வாங்கி பரிசோதணைப் போட்டிக்குச் சென்றார். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதமல்லவா? குடும்பத்தின் வறுமைச் சுழல் ஒரு பக்கம், வில் வாங்க வழியில்லை நீயெல்லாம் எங்கடா வில்வித்தையில் தேறப்போற என்ற ஏளனப் பேச்சு மறுபக்கம். இதன் மத்தியிலும் கையிலிருக்கும் வில் இரவலாய் இருந்தாலும் எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை அது எனக்குச் சொந்தமானது என்ற மனஉறுதியுடன் சென்றவர் பரிசோதணைப் போட்டியில் வெற்றி பெற்று காமென்வெல்த் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பை எட்டிப் பிடித்தார். எட்டிப் பிடித்த வாய்ப்பு தட்டிப் போய் விடாமல் கவனமுடன் வில்லெறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றதுடன், இந்தியா இதுவரை 28 ஆண்டுகளாக வில்வித்தையில் எட்டிப்பிடிக்காத பதக்கத்தை பெற்றுத் தந்து இந்தியாவை தலைநிமிரச் செய்தார் ஸ்ரீதர். பாருங்கள் எத்தனையோ சூழ்நிலைகள் தனக்கு பாதகமாய் இருந்த போதும் அது பற்றி கவலைப்படாமல் தன்னம்பிக்கையுடன் பாதக சூழ்நிலைகளை தனக்குச் சாதகமாக்கி வெற்றி பெற்ற ஸ்ரீதரின் தன்னம்பிக்கையை எண்ணிக் கொள்ளுங்கள்.
இதுமட்டுமல்லாமல், நம்மெல்லாராலும் போற்றப்படும் உலகம் போற்றும் உத்தம தலைவர், நம் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையில் தான் எத்தனை எதிர்க்காற்றுகள். கடினமாய் படித்து, உழைத்த உழைப்பின் பயனாக ல் படிப்பதற்கு இடம் கிடைத்தது. ஆனால் அதில் சேர்வதற்கு கல்விக்கட்டணமாக ரூ.1000/- தேவைப்பட்டது. கல்விக் கட்டணம் கட்டும் நிலையில் தன் குடும்பம் இல்லை என்பதையறிந்து, கடினமாய் உழைத்துப் பெற்ற கல்வி வாய்ப்பு காசில்லாமல் கருகிப்போய் விடுமோ என்றெண்ணி வேதனைப் பட்டார். சகோதரனின் துயரறிந்த அவரது சகோதரி தன்னுடைய வளையல்களையும் சங்கிலியையும் அடமானம் வைத்து பணம் கொடுத்தாராம். இப்படி எத்தனையோ கஷ்டங்கள் வந்தபோதும் துவண்டு போகாமால் தனக்குள் "நாட்டுப் புறப் பையனாகிய நான், ஒரு நாள் வானத்து உச்சியை எட்டுவேன்" என்று சொல்லி தனக்குத்தானே தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வாராம்.
இப்படி தடைகளை தகர்த்து தடைக்கற்களை படிக்கற்களாய் மாற்றி விஞ்ஞானியாய் பணியாற்றியபோது நாட்டுப்புறத்தானாகிய இவன் என்ன சாதிக்கப்போகிறான் என்று சிலர் எள்ளி நகையாடினாலும் சோர்ந்து போகாமால் நானும் ஒரு நாள் உலகம் போற்றும் உன்னத தலைவனாக மாறுவேன் என்று தனக்குள் இருந்த தன்னம்பிக்கையை தளரவிடாமல் வீறு நடைபோட்டு உலகத்தில் சாதித்தும் காட்டி விட்டார் அப்துல் கலாம். இன்னும் எத்தனையோ பேர் தன்னம்பிகையை கைவிடாமல் நாடு போற்றும் தலைவர்களாக மாறியுள்ளனர். நோபல் பரிசு பெற்ற ஆல்பிரட் ஐன்ஸ்டீன் கல்லூரி காலத்தில் நுழைவுத் தேர்விலேயே தோல்வியுற்றவர் தான், தோல்வியுற்ற போதும் துவண்டு விடாமல் மீண்டும் எழுதி கல்லூரியில் கால் வைத்தது மட்டுமல்லாமல் உலகமே வியக்கும் வண்ணம் நோபல் பரிசையும் தட்டிச்சென்றார்.
இப்படி உலகம் போற்றும் உன்னத தலைவர்கள் தங்கள் வாழ்க்கையில் காணப்பட்ட தடைகளைத் தாண்டி சாதணைகளைப் படைத்திருக்கும் போது, உன்னதராம் இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நீங்கள் "திடன் கொள்ளுங்கள் உலகத்தை ஜெயித்தேன்"(யோவான் 16-33) என்று அவர் வாக்களித்திருக்கும் போது, தோல்வியினால் துவண்டு கிடப்பது எப்படி? தங்கள் மேல் வைத்த நம்பிக்கையை தளர விடாமல் உலகத்தின் தலைவர்கள் உலகத்தை ஜெயித்து வெற்றி வாகை சூடும் போது, உலகத்தை ஜெயித்தேன் என்று தோல்வியே காணாத கர்த்தரை நம்பியிருக்கிற நீங்கள் எப்படி உலகத்தில் தோல்வி யடைவீர்கள்.
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும் நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்(மி யோவான்:5-4) என்று வேதம் சொல்லும் போது நீ உலகத்தை ஜெயிக்காதிருக்கிறது எப்படி? நானே திராட்சை செடி நீங்கள் கொடிகள் ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளைக் கொடுப்பான் (யோவான்:15-5) என்றிருக்க நான் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாதவன் என்று உன்னையே நொந்து கொள்வது எப்படி? உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடோ போ உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா? (நியாதி:6-14)என்று தேவனே வாக்கு கொடுத்திருக்க நான் பெலவீனன் என்று உனக்குள்ளே சொல்லிக்கொள்வது எப்படி? முன்னேற வேண்டும் என்ற தனியாத ஆசை எனக்குண்டு ஆனால் என்னுடைய வீட்டின் வறுமையோ என் தனியாத ஆசையை ஒரு நாளும் நிறைவேறாத ஆசையாக மாற்றி விடுமோ என பயப்படுகிறேன் என்று நீ சொல்லுகிறாய். ஆனால் கர்த்தரோ நான் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துவேன், ராஜாக்களோடு உட்காரப் பண்ணுவேன் ( மி சாமுவேல் :2-8) என்றல்லவோ சொல்லுகிறார். எனவே நாளை என்ன நடக்கும் என்று பயப்படாதே இன்றைய நாளில் இறைவனோடு இணைந்து செல், தூயவனாய் தூயவரோடு துணிந்து செல், விசுவாசத்தோடு விரைந்து செல். அப்படி அன்பரோடு அகமகிழ்ந்து செல்லும் போது நாளைய தினம் மாத்திரமல்ல பூமியில் நீ வாழ்ந்திருக்கும் நாளெல்லாம் வெற்றியின் நாளாக கர்த்தர் மாற்றுவார் என்பதில் மாற்றமில்லை. ஏனென்றால் நம்மை அழைத்தவர், வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவரல்லவா.

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு பிறமொழியைக் கலக்காதே தம்பி! தம்பி! பிழைபட்டுத் தமிழ் தவிக்கும் வெம்பி! வெம்பி! கவிஞர் இரா. இரவி. ******
» உலகத்தை மாற்ற நினைப்பவர்கள்
» உன்னை நீயே புரிந்து கொள் உலகத்தை அறிந்து கொள்...
» தம்பி நீ வரவேண்டும்
» விடியலில் எழு, தம்பி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum