தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

5 posters

Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by குணமதி Sat Oct 30, 2010 11:14 am

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

பல தலைமுறையாகத் தொடர்ந்து வரும் குலத்தொடர்ச்சி, கொடியும் மரமும் போல் நீண்டும் தொடர்ந்தும் இருத்தலால் அதனைக் கொடியென்றும், கொடிவழி என்றும் மரபு என்றும் கூறுவது வழக்கம். தொடர்ந்து வரும் பழக்க வழக்கங்களையும் சொல் வழங்கும் வகையையும் மரபு என்பதுண்டு.

௧.மரபு
சொல் வழக்காற்றில், ஒரு பொருளை எச்சொல்லால் எவ்வாறு நம் முன்னோர் -உயர்ந்தோர் - வழங்கினார்களோ, அப்பொருளை அச்சொல்லால் அவர் வழங்கியவாறு பயன்படுத்துவதே மரபு எனப்படும்.
எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே – என்பது நன்னூல் நூற்பா.
நாய் எழுப்பும் ஒலியைக் குரைத்தல் என்பது மரபு. மாந்தர் உரைப்பதைப் பேசுதல் என்பது மரபு.
நாய் பேசியது – இத்தொடர் மரபுக்கு மாறாக அமைந்துள்ளதால் மரபு வழுவாகும். நாய் குரைத்தது – என்பது மரபு வழா நிலை.
அறிஞர் ஒரு பொருளைக் கூறியவாறே கூறுவது மரபு எனப்பட்டது. அதற்குத் தக்கவாறு மொழியை வழங்குவது மரபு வழாநிலையாகும்.
குதிரைக்குட்டி, ஆட்டிடையன், யானைப்பிளிறல், முருங்கைக்கீரை, கோழிப் பண்ணை என்பவற்றை குதிரைக்கன்று, ஆட்டுப்பாகன், யானைக்கனைப்பு, முருங்கைஇலை, கோழித்தொழுவம் எனக் கூறுதல் மரபுப்பிழையாகும். மற்றவைகளும் இவ்வாறே.

௨. பொதுவினை மரபு வழாநிலை
வெவ்வேறு வினைகளுக்குரிய பல பொருள்களையும் ஒருசேரத்தழுவி நிற்கின்ற ஒரு பொதுச்சொல்லும், வெவ்வேறு வினைக்கு உரிய பொருள்களை எண்ணி நிற்கும் பல சிறப்புச் சொற்களும் தமக்குள் ஒன்றற்கு உரிய சிறப்பு வினையை வேண்டாமல், எல்லாவற்றிற்கும் உரியதொரு பொது வினையைக் கொண்டு முடியும்
1.அணி என்பது கவிக்கப்படுவது கட்டப்படுவது இடப்படுவது பூணப்படுவது முதலியவற்றிற்கு எல்லாம் பொதுச்சொல்லாதலின் அதனை அணிந்தார் எனப் பொதுவினை கொடுத்துச் சொல்லவேண்டும்.
2. சிறப்புச்சொற்களை எண்ணும் பொழுது, முடியும் குழையும் கணையாழியும் அரைஞாணும் அணிந்தார் எனப் பொதுவினையால் முடிக்க வேண்டும்.

௩. சிறப்புவினை மரபு வழாநிலை
வினையும் சார்பும் இனமும் இடமும் பொருந்திப் பொருள் விளங்காத பலபொருள்களைக் குறிக்கும் ஒரு சொல்லைச் சிறப்புச் சொல்லோடு கூட்டிச் சொல்ல வேண்டும்.
‘மா’ - என்பது மாமரம் வண்டு குதிரை திருமகள் எனப் பலபொருள் தரும் ஒரு சொல்.
1.மா பூத்தது – என்று சொல்லும்போது, மரம் என்று பூத்தது என்ற வினையால் விளக்கமாகும்.
மா வீழ் மலர் – என்ற இடத்தில் வண்டு என்று சார்பால் விளக்கமாகும்.
தேர் கரி மாக் காலாள் – என்று கூறுகையில் குதிரை என்பது இனத்தால் விளக்கமாகும்.
மா வாழ் மார்பன் – என்றவிடத்து, திருமகள் என்று இடத்தால் விளக்கமாகும்.
2.மா ஏறினான் – என்று சொல்லும்போது பொருள் புரியாததால், விளக்கமாகப் புரிவதற்காகப் ‘பாய்மா ஏறினான்’, ‘மாமரம் ஏறினான்’ எனச் சிறப்புச் சொல்லோடு சேர்த்துச் சொல்ல வேண்டும்.

௪. தொடர்மொழிகள் ஒலிப்பு வேறுபாட்டால் பொருள் தெளிதல்
எழுத்து மாறாமல், பொருள் வேறுபடச் சொல்லும் சொற்றொடர்கள் சொல்லுகின்ற வகையினால் பொருள் விளக்கமாகும்.
செம்பொன்பதின்பலம் என்பதை, செம்பொன் பதின்பலம் என்று சொன்னால், செம்பொன் பத்துப்பலம் என்றும், செம்பு ஒன்பதின்பலம் என்றால், செம்பு ஒன்பது பலம் என்றும் விளங்கும்
புத்தியிலாதவன், புத்தியில் ஆதவன் - என்பது இன்னொரு எடுத்துக்காட்டாகும்.

௫. மரபு வழாநிலையும் வழுவமைதியும்
ஒருபொருட் பன்மொழியை அறிவோம். ஒரு பொருளின் மேல் பல பெயர்கள் வருகின்றபோது அவற்றின் இறுதியில் பொருள் ஒன்றே என்பது தோன்ற ஒரு முடிக்கும் சொல் கொடுத்துக் கூறுவர். சில இடங்களில், பொருள் ஒன்றே என்று தெரியும் போது, தனித்தனி முடிக்கும் சொல் கொடுத்தும் கூறுவர்.
1. ஆசிரியர் மொழிஞாயிறு தேவநேயர் விளக்கினார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இவன்.
- இவை, இறுதியில் ஒரு வினையும் பெயரும் கொடுக்கப்பட்டன.
2. அன்னை மொழியே வாழ்கவே, அழகு மொழியே வாழ்கவே, முன்னை மொழியே வாழ்கவே, முழுசெம் மொழியே வாழ்கவே -என்பதில் அன்னை மொழி, அழகு மொழி, முன்னை மொழி, முழுசெம் மொழி என்பன தமிழ் என்பது தெரிய நின்றதனால் பெயர் தோறும் வாழ்க என ஒரு வினை தரப்பட்டது.

௬. சிறப்புப்பெயர்களின் பின் இயற்பெயர் வருதல்
குறிஞ்சி முதலிய ஐவகைத் திணையும், நிலமும், குலமும், குடியும், உடைமையும், குணமும், தொழிலும், கல்வியும் சிறப்புப்பெயரொடு இயற்பெயரையும் ஏற்கும்போது, இயற்பெயர் பின்வருதலே சிறப்பு. (முன்வருவது வழுவமைதியாகும்)

பின் இயற்பெயர் - முன் இயற்பெயர்
குன்றவன் குமரன் - குமரன் குன்றவன் -திணை
சோழியன் சுடர்மணி - சுடர்மணி சோழியன் -நிலம்
பனவன் துரோணன் - துரோணன் பனவன் -குலம்
பாண்டியன் நெடுமாறன் - நெடுமாறன் பாண்டியன் -குடி
பொன்னன் நம்பி - நம்பி பொன்னன் -உடைமை கரியன் கம்பன் - கம்பன் கரியன் -குணம்
நடையன் நல்லான் - நல்லான் நடையன் -தொழில்
ஆசிரியன் அமுதன் - அமுதன் ஆசிரியன் -கல்வி

௭. சுட்டுப்பெயர் வருமிடம்
படர்க்கையில் உயர்திணை, அஃறிணை, விரவு(பொது)ப் பெயர்களோடு சுட்டுப்பெயர் சேரும்போது, வினையாகிய முடிக்குஞ்சொல் வருமாயின், அச்சுட்டுப்பெயர் பின்னே வரும்; முடிக்குஞ்சொல் பெயராக வருமாயின், அச் சுட்டுப்பெயர் முன்னேயோ பின்னேயோ வரும்.
எதுத்துக்காட்டு :
1. முடிக்குஞ்சொல் வினையாயின்...
செழியன் வந்தான், அவனுக்கு உணவிடுக
எருது வந்தது, அதற்குப் புல்லிடுக
சிவப்பன் வந்தான், அவனுக்கு உணவிடுக; சிவப்பன் வந்தது, அதற்குப் புல்லிடுக
2. முடிக்குஞ்சொல் பெயராயின்...
நம்பி அவன், அவன் நம்பி
குதிரை அது, அது குதிரை
சாத்தன் இவன் இது சாத்தன்

௮. அடுக்குத்தொடர்
அடுக்குத் தொடர், அசைநிலைக்கு இரண்டும் விரைவு, கோவம், மகிழ்ச்சி, அச்சம், துன்பம் முதலிய பொருள்களின் நிலைக்கு இரண்டும் மூன்றும், இசைநிறைக்கு இரண்டும் மூன்றும் நான்குமாக அடுக்கி வரும்.
1.அன்றே அன்றே - அசைநிலை
2.உண்டேன் உண்டேன்; போ போ போ – விரைவு, பொருள்நிலை
எய் எய்; எறி எறி எறி - கோவம், பொருள்நிலை
வாழ்க வாழ்க; வருக வருக வருக - மகிழ்ச்சி, பொருள்நிலை
பாம்பு பாம்பு; தீத் தீத் தீ - அச்சம், பொருள்நிலை
உய்யேன் உய்யேன்; வாழேன் வாழேன் வாழேன் –துன்பம், பொ.நி.
3. “ஏ ஏ இவளொருத்தி பேடியோ”
“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்”
“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ” – இவை இசைநிறை.
அடுக்குத்தொடர் இரட்டைக் குழந்தைகள் போல் வேறுபட்டுத் தனியே பொருள் தரும்.
ஒரு சொல்லைப் பலமுறை சொல்லுதல் வழுவாயினும் இன்ன இடங்களில் சொல்ல்லாமெனல் வழுவமைதியும் இந்த எல்லையை மீறக்கூடாதெனல் வழுவாமல் காத்தலுமாம்.

௯. மரபுவழாநிலை: இரட்டைக்கிளவி
இரட்டைக்கிளவி அவ்விரட்டிப்பில் பிரிந்து தனித்து ஒலிப்பதில்லை.
குறுகுறு நடந்து; துடிதுடித்துத் துள்ளிவரும்
இரட்டைக்கிளவி இலையிரட்டையும் பூவிரட்டையும் போல வேறுபடாமல் ஒன்றுபட்டுத் தனியே பொருள் தராது. இரட்டைக்கிளவியில் இரண்டு தடவைக்குமேல் ஒலி அடுக்கி வராது.

௧௦0. மரபுவழுவமைதி- ஒருபொருள் குறித்துவரும் பலசொற்கள்
ஒரு பொருளின்மேல் பல பெயர் சொல்லும்போது அப்பொருளி னின்றும் பிரிதல் இல்லாதவற்றை நீக்காமற் கொள்ள வேண்டும்.
ஆசிரியர் மதுரைகிழார் தமிழண்ணல் வந்தார்.
‘தென்மொழி’ நிறுவுநர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் பேசினார்.
ஒருபொருளைக் குறித்து வருகின்ற பல சொற்கள், அவ்வாறு வருவதற்குக் காரணம் இல்லையானாலும், சிறந்து (செவிக்குச் சொல்லின்பம் தோன்ற) நிற்பதால் மரபுவழு என்று நீக்கப்படா.
மீமிசை ஞாயிறு; உயர்ந் தோங்கு பெருமலை; குழித் தாழ்ந்த கண்; வெங் கொடும் போர்.

௧௧. மரபு வழுவாமற் காத்தல்- முற்றும்மை வேண்டும் இடம்
இவ்வளவென்று அளவறியப்பட்ட பொருளையும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளையும் முடிக்கும் சொல்லோடு சேர்த்துச் சொல்லும்போது, உம்மை சேர்த்துக் கூறல் மரபு.
1.தமிழ்நாட்டு மூவேந்தரும் வந்தார்; இருவினையும் சேரா;
முத்தமிழும் வல்லார். – இவ்வளவென்று அறிந்த பொருள் முற்றும்மை பெற்றன.
2. முயற்கொம்பு வானப்பூ என்றும் இல்லை; ஒளிமுன் இருள் எங்கும் இல்லை. – உலகில் இல்லாப் பொருள்கள் முற்றும்மை பெற்றன.
3.கண் இரண்டும் குருடு; எருது இரண்டும் கிழம் – பெயர் கொண்டு முடியும்போது உம்மை பெற்றன.
ஐந்தலை நாகம், நான்மறை முதல்வர் என்ற இடங்களில்இவ்வளவு என்று அறிந்த பொருளாயினும் வினைப்படுத்திச் சொல்லாமையால் உம்மை பெறவில்லை.

௧௨. மரபுவழுவமைதி – செயப்படுபொருள் முதலியவற்றைக் கருத்தாவாகக் கூறுதல்
செயப்படுபொருளைச் செய்தது போல – கருத்தாவைப்போல வைத்து அதன்மேல் அக்கருத்தாவின் வினையை ஏற்றிச் கூறுதல் வழக்கிற்கு உரியதாகும்.
இம் மாடு யான் வாங்கியது; இச் சோறு காமராசர் கொடுத்தது;
இவ் உளி நான் செதுக்கியது.
இவ் வீடு பாவேந்தர் இருந்தது.
இத் தொழில் நீ செய்தது.

௧௩. மரபு வழுவாமற் காத்தலும் மரபுவழுவமைதியும்
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறு அடைமொழிகளால் அடுக்கப்பட்ட சொற்கள் உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இரண்டிடத்தும் இனமுள்ளனவாயும் இனமில்லனவாயும் வரும்.
இனமுள்ளன - இனமில்லன
நெய்க்குடம், பொருட்பெண்டிர் - உப்பளம் - பொருள்
குளநெல், காட்டாறு - ஊர்மன்றம் - இடம்
தைவிளக்கு, முந்நாட்பிறை - நாளரும்பு - காலம்
பூமரம், கலவமாமயில் - இலைமரம் - சினை
செந்தாமரை, வெண்டாமரை - செம்போத்து - குணம்
ஊன்றுகோல், குடிக்கூலி - முழங்குகடல் - தொழில்
இனமுள்ளவற்றை அடை சேர்க்காது கூறின் குறித்த பொருள் விளங்காமல் பொதுவாய் இருக்கும்; உப்பளம் முதலியன அடை மொழி சேர்க்காமலும் பொருளை உணர்த்தும் இனமில்லன வற்றின் அடைமொழிகள் இயற்கை அடைமொழிகள் எனவும் கூறப்படுகின்றன
இனமுள்ளவற்றை அடைகொடுத்துக் கூறுதல் வழாநிலை ஆகும். இனமில்லனவற்றை அடைகொடுத்துக்கூறல் வழுவமைதி ஆகும்.

௧௪. அடைமொழி மரபு வழுவாமற் காத்தல்அடைமொழி இனத்தைத் தருவதோடு மட்டுமன்றி, அவ் இடத்திற்குப் பொருந்துமானால் இனமில்லாததையும் தரும்.
கோழி கூவிற்று என்றால் மற்ற பறவைகள் கூவவில்லை என்றும் பொருளைத் தருவதோடு பொழுது விடிந்தது என்ற பொருளும் பொருள்தருகிறது.
குடம் தூக்கிச் சென்றவன் வீழ்ந்தான் என்பதும் இன்னொரு எடுத்துக்காட்டு.

௧௫. மரபு வழாநிலை மரபுவழுவமைதி – அடைமொழிகள் முதல்சினைகளை அடுத்து வருதல்
அடைமொழியும் ஒரு சினையும் ஒரு முதலுமாய் முறையே ஒன்றை ஒன்றுச் சிறப்பித்து வருதலும், இரண்டு அடைமொழி ஒரு முதலைச் சிறப்பித்து வருதலும் வழக்கமாகும். இரண்டு அடைமொழி ஒரு சினையைச் சிறப்பித்து வருதலும் இவ் வரம்பு கடந்து வருதலும் செய்யுளுக்கு உரிய வழக்கமாகும்.
1. வேல்கை முருகன்; செங்கால் நாரை; முழங்குதிரைக் கடல் – இவை ஓர் அடைமொழியும், ஒரு சினையும், ஒரு முதலுமாகி ஒன்றை ஒன்றுச் சிறப்பித்து வந்தன.
(வேல் – அடைமொழி, கை – சினை, முருகன் முதல்)
2. மனைச் சிறு கிணறு, சிறு கருங் காக்கை – இவற்றில் இரண்டு அடைமொழிகள் முதலைச் சிறப்பிக்கின்றன.
3. செய்யுள்: ’சிறு பைந் தூவி’, ‘கருநெடுங்கண்’ - இவற்றில் இரண்டு அடைமொழிகள் சினையைச் சிறப்பிக்கின்றன.
4. செய்யுள்: ‘பொருந்தோள் சிறு மருங்குல் பேரமர்க்கண் பேதை’
‘சிறு நுதல் பேரமர்க்கண் செய்யவாய் ஐயநுண்ணிடையாய்’ – இவை வரம்பு கடந்து வந்தன.
இவற்றில் முதலது மரபு வழுவாமற் காத்தலாகும்; மற்றை மூன்றும் மரபுவழுவமைதியாகும்.

௧௬. இயற்கைப்பொருள் மரபுவழுவமைதி
இயற்கைப்பொருளை, ஆக்கமும் காரணமும் கொடுக்காமல் இத்தன்மையதென்று சொல்ல வேண்டும்.
(எ-டு) மெய் உள்ளது; பொய் இல்லாதது; நீர் தண்மையானது; பால் வெண்மையானது; பயிர் பசியது.
இயற்கைப்பொருளை இத்தன்மையது என்று வரும் வினையால் கூறுவதால், இது வழுவமைதி ஆயிற்று.

௧௭. செயற்கைப்பொருள் மரபு வழாநிலை வழுவமைதி
செயற்கைப்பொருள், காரணச்சொல் முன்னும் ஆக்கச்சொல் பின்னுமாகவும், காரணச்சொல் தொக்கு நிற்க ஆக்கச் சொல்லுடனும், ஆக்கச்சொல் தொக்கு நிற்கக் காரணச் சொல்லுடனும், இவ் இருவகைச் சொல்லும் தொக்கு நிற்கவும் வரும்.
1. எரு இட்டு களைபறித்து நீர் பாய்ச்சியதால் பயிர் நல்லவாயின.
(முன் காரணச் சொல்லும் பின் ஆக்கச் சொல்லும் பெற்றது)
2. பயிர் நல்லவாயின – காரணச் சொல்லின்றி ஆக்கச் சொல் பெற்றது.
3. எரு இட்டு களைபறித்து நீர் பாய்ச்சியதால் பயிர் நல்ல – ஆக்கச் சொல்லின்றிக் காரணச்சொல் பெற்றது.
4. பயிர் நல்ல – காரணச்சொல், ஆக்கச்சொல் இரண்டும் தொக்கு நின்றன.
இவற்றுள், முதலாவது மரபு வழாமல் காத்தலும் மற்றை மூன்றும் மரபுவழுவமைதியும் ஆகும்.

௧௮. விடை மரபுவழுவாமற் காத்தல்
தம்மிடத்து இல்லாத பொருளை இல்லையென்று சொல்லப் புகும்போது, வினவப்பட்டதற்கு இனமாய்த் தம்மிடத்து உள்ள பொருளைக் கூறி, அச் சொல்லைக்கொண்டு அதனை இல்லை என்று சொல்லியும், இருக்கிற பொருளாயின் இவ்வளவு உண்டென்றும் வினாவும் விடையுமாகிய சொல் சுருக்கம் கருதிச் சொல்லுவர்.
1.‘பயறு உள்ளதோ கடைக்காரரே!’ என்றவர்க்கு அது இல்லை என்பவர், ‘உழுந்து உண்டு’, ‘உழுந்தும் துவரையும் உண்டு’ என அதன் இனத்தைச் சொல்வர்.
இந்த இனமொழிகள், பயறு இல்லை எனும் விடைப் பொருளைத் தருவதுடன், மேலே ‘உழுந்து உள்ளதோ?’, ‘துவரை உள்ளதோ?’ என்னும் வினாக்களும், அவற்றின் விடைகளும் பெருகாமற் செய்தமை காண்க.
2.‘பயறு உள்ளதோ கடைக்காரரே!’ என்றவர்க்கு அது உண்டு என்பவர் ‘இரண்டு மூட்டை உண்டு’, ‘இருபத்தைந்து அயிரியெடை (கிலோ) உண்டு’ என அதன் அளவைச் சொல்வர்.
இந்த அளவைமொழிகள், பயறு உண்டு என்னும் விடைப் பொருளைத் தருவதுடன், மேலே ‘எவ்வளவு உண்டு?’ என்னும் வினாவும் அதற்கு விடையும் பெருகாமற் செய்தமை காண்க.

௧௯. ஈ தா கொடு என்பன
ஈ என்பது இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடத்தில் ஒன்றை இரக்கும் போதும், தா என்பது ஒப்போன் தனக்கு ஒப்பானவனிடத்தில் ஒன்றை வேண்டும் போதும், கொடு என்பது உயர்ந்தவன் தன்னின் இழிந்தவனிடத்தில் ஒன்றைப் பெற விரும்பும் போதும் வரும்.
தந்தையே ஈ - இழிந்தோன் இரப்பு
தோழா தா – ஒப்போன் இரப்பு
மைந்தா கொடு – உயர்ந்தோன் இரப்பு

உ0 . மரபுவழுவமைதி - குறிப்பாற் பொருள்தருதல்
வெளிப்படையால் அன்றிக் குறிப்பினால் பொருளறியப்படுகிற சொற்களும் சில உண்டு.
‘குழைகொண்டு கோழியெறியும் வாழ்க்கையர்’ என்ற இடத்தில் கோழி எறிவரென்பது தலைமைப் பொருளாகாமல் பெருஞ்செல்வ வாழ்க்கையர் என்பது குறிப்பினால் உணரப்படுதல் காண்க.

௨௧. மரபு வழாநிலை வழுவமைதி – அஃறிணையை உயர்திணைபோல வைத்துக் கூறுதல்
கேளாதவற்றைக் கேட்பவைபோலவும், பேசாதவற்றைப் பேசுபவைபோலவும் இயங்காதவற்றை இயங்குபவைபோலவும் (இவையல்லாத வேறு தொழில்களைச் செய்யாதவற்றைச்) செய்பவைபோலவும் அஃறிணையிடத்தும் சொல்லப்படும்.
1.’நன்னீரைவாழி அனிச்சமே’ – கேட்பதுபோலச் சொல்லப்பட்டது.
2. ’பகைமையைக்கண் உரைக்கும்’ – பேசுவதுபோலச் சொல்லப்பட்டது
3. ‘இவ்வழி அவ்வூர்க்குப்போகும்’ – இயங்குவதுபோலச் சொல்லப்பட்டது
4. ‘தன்னெஞ்சே தன்னைச்சுடும்’ – செய்வதுபோலச் சொல்லப்பட்டது

௨௨. உருவகத்திலும் உவமையிலும் திணைகள் மாறிவருதல்
உருவக அணியிலும் உவமை அணியிலும் உயர்திணை அஃறிணைகளும் சினை முதல்களும் தம்முள் மாறிவருதலையும் இன்னும் சொல்லாது விடப்பட்டவற்றையும் பேணிக்கொள்க.
1.’அரசனாகிய அரிமாவிற்குப் பகைவர் கூட்டமாகிய யானைகள் அஞ்சி ஓடின’
என்று உருவகத்தில் உயர்திணை அஃறிணையோடு மயங்கியது. ‘கல்வி மங்கூயூ நல்லோர் விரும்புவர்’ என்று அஃறிணை உயர்திணையோடு மயங்கியது.
2.’அவனுக்குத் தம்பியர் இருவரும் இரண்டு தோள்கள்’ என்று உயர்திணை முதல் உயர்திணைச் சினையோடு மயங்கிற்று. ‘தோளாகிய மலை’ என்று உயர்திணைச் சினை அஃறிணை முதலோடு மயங்கியது.
3. ‘மயில்போலும் மங்கை’ என்று உவமையில் உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று. ’நெற்பயிர்கள் கல்வியாளர்போல் வணங்கிக் காய்த்தன’ என உஃறிணை உயர்திணையோடு மயங்கிற்று.
4. ‘கயல்போலும் கண்’ என உயர்திணைச்சினை அஃறிணைமுதலோடு மயங்கிற்று. ‘தளிர்போலும் மேனி’ என உயர்திணமுதல் அஃறிணைச் சினையோடு மயங்கிற்று.
5. ‘இவன் சரசுவதிக்கு ஒப்பானவன்’ எனப்பால் மயங்கக்கூறுதலும், செங்கோல், வீரக்கழல் என்று ஒருபொருளின் தன்மையை வேறொரு பொருளின்மேல் வைத்துக்கூறுதலும், அரசு வேந்து அமைச்சு தூது ஒற்று என உயர்திணையை அஃறிணை வாய்பாட்டாற் கூறுதலும் பிறவும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
உதவியவை: 1. பவணந்தி அடிகளாரின் நன்னூல்.
2. பல்வேறு அறிஞரின் நன்னூல் உரைகள்.
உதவியார்க்கு மனமார்ந்த நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------------------------



Last edited by குணமதி on Sat Oct 30, 2010 6:23 pm; edited 1 time in total
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty Re: மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by RAJABTHEEN Sat Oct 30, 2010 11:59 am

உங்களின் அனைத்துவிதப்பதிவுகளும் எனக்கு ரொம்ப பயனளிக்கின்றது.தொடர்ந்து தாருங்கள்.
பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டி பதிவாக நான் உண்ர்கிறேன். மகிழ்ச்சி
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty Re: மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by வ.வனிதா Wed Jan 05, 2011 4:35 pm

குணமதி அவர்களே நான் உங்களின் விவரத்தை தெரிந்து கொள்ளலாமா ? உங்களின் இந்த வழு மற்றும் வழா நிலை மிகவும் பயனுள்ளதாயிருந்தது ! நன்றி !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty Re: மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by கலைநிலா Wed Jan 05, 2011 5:47 pm

RAJABDEEN wrote:உங்களின் அனைத்துவிதப்பதிவுகளும் எனக்கு ரொம்ப பயனளிக்கின்றது.தொடர்ந்து தாருங்கள்.
பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டி பதிவாக நான் உண்ர்கிறேன். மகிழ்ச்சி
சியர்ஸ் நன்றி நன்றி நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty Re: மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by குணமதி Wed Jan 05, 2011 8:52 pm

RAJABDEEN wrote:உங்களின் அனைத்துவிதப்பதிவுகளும் எனக்கு ரொம்ப பயனளிக்கின்றது.தொடர்ந்து தாருங்கள்.
பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டி பதிவாக நான் உண்ர்கிறேன். மகிழ்ச்சி

நன்றி நண்பரே.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty Re: மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by குணமதி Wed Jan 05, 2011 8:55 pm

க.வனிதா wrote:குணமதி அவர்களே நான் உங்களின் விவரத்தை தெரிந்து கொள்ளலாமா ? உங்களின் இந்த வழு மற்றும் வழா நிலை மிகவும் பயனுள்ளதாயிருந்தது ! நன்றி !

மிக்க நன்றி.

என்னைப் பற்றிய விளக்கம் தக்க நேரத்தில் உங்களுக்குத் தெரியவரும்!
உங்கள் நல்லெண்ணத்திற்கு மீண்டும் நன்றி.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty Re: மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by குணமதி Wed Jan 05, 2011 8:56 pm

kalainilaa wrote:
RAJABDEEN wrote:உங்களின் அனைத்துவிதப்பதிவுகளும் எனக்கு ரொம்ப பயனளிக்கின்றது.தொடர்ந்து தாருங்கள்.
பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டி பதிவாக நான் உண்ர்கிறேன். மகிழ்ச்சி
சியர்ஸ் நன்றி நன்றி நன்றி

நன்றிக்கு நன்றி.
avatar
குணமதி
மல்லிகை
மல்லிகை

Posts : 91
Points : 145
Join date : 22/06/2010

Back to top Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty Re: மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jan 07, 2011 11:31 am

குணமதி wrote:
க.வனிதா wrote:குணமதி அவர்களே நான் உங்களின் விவரத்தை தெரிந்து கொள்ளலாமா ? உங்களின் இந்த வழு மற்றும் வழா நிலை மிகவும் பயனுள்ளதாயிருந்தது ! நன்றி !

மிக்க நன்றி.

என்னைப் பற்றிய விளக்கம் தக்க நேரத்தில் உங்களுக்குத் தெரியவரும்!
உங்கள் நல்லெண்ணத்திற்கு மீண்டும் நன்றி.
மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி Empty Re: மரபு, மரபுவழு, மரபு வழாநிலை, மரபுவழுவமைதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum