தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது

2 posters

Go down

 மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது Empty மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது

Post by RAJABTHEEN Sun Oct 31, 2010 11:19 am

ஹதீஸ் எண்: 1
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம், ஜலம் கழிக்க செல்லும் போது தூரமாக சென்று விடுவார்கள் என்று முகீரா பின் ஷுஃபா (ரளி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இந்த ஹதீஸை இமாம் தாரிமீ, நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி ஆகியோரும் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளனர். இமாம் திர்மிதி (ரஹ்) சரியான அழகான ஹதீஸ் என்று கூறுகின்றார்கள்.)

ஹதீஸ் எண்: 2
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம், ஜலம் கழிக்க (செல்ல) விரும்பினால் தன்னை யாரும் பார்க்காதவாறு தொலைவிற்கு சென்றிடுவார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரளி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இதன் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறும் கூபா நாட்டைச் சார்ந்த இஸ்மாயில் பின் அப்துல்மலிக் என்பவர் மக்காவில் வசிப்பவர் ஆவார். இவரை பலர் குறை கண்டுள்ளனர். இந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும் பதிவு செய்து உள்ளார்கள்.)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது Empty Re: மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது

Post by RAJABTHEEN Sun Oct 31, 2010 11:19 am

சிறுநீர் கழிக்க ஏற்றவாறு இடத்தை அமைத்தல்.

ஹதீஸ் எண்: 3
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அவர்கள் பஸரா நகருக்கு வந்த போது அவர்களிடம், அபூமூஸா அவர்(கள் அறிவிக்கின்ற ஹதீஸ்)களைப் பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனே அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரளி) அவர்கள், அபூமூஸா (ரளி) அவர்களிடம் சில விசயங்களைக் கேட்டு கடிதம் எழுதினார். அவர்களுக்கு அபூமூஸா (ரளி) அவர்கள் (பின்வருமாறு பதில்) எழுதினார்கள்:
நான் ஒரு நாள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுடனிருந்தேன். அப்போது அவர்கள் சிறுநீர் கழிக்க எண்ணி, ஒரு சுவருக்கு அடியில் உள்ள மிருதுவான தரைக்கு சென்று சிறுநீர் கழித்தார்கள். பின்பு உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்க விரும்பினால், சிறுநீர் கழிப்பதற்காக தக்க இடத்தை தேடி (தெளிவு செய்து) கொள்வாராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தமக்கு ஒரு பெரியவர் அறிவித்ததாக அபத்தய்யாஹ் என்பார் அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இதில் அறியப்படாத ஒருவர் இடம் பெற்றுள்ளார்.)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது Empty Re: மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது

Post by RAJABTHEEN Sun Oct 31, 2010 11:20 am

கழிவறையில் நுழையும் போது சொல்ல வேண்டியவை

ஹதீஸ் எண்: 4
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு செல்லும் போது அல்லாஹும்ம இன்னீ அவூது பிகமினல் குபுஸி வல் கபாயிஸி என்று சொல்பவர்களாக இருந்தனர்.
மற்றொரு அறிவிப்பில் 'அவூதுபில்லாஹி மினல்குபுஸிவல் கபாயிஸி' என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் மூன்றாவது அறிவிப்பாளராக (ஹம்மாதுக்கு பதிலாக) அப்துல் வாரிஸ் என்பார் இடம் பெறுகின்றார்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 5
மேற்கண்ட இரண்டு விதமான சொற்களும் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம் பெற்றுள்ளது.

ஹதீஸ் எண்: 6
(மனிதர்கள் மலம், ஜலம், கழிக்க ஒதுங்குகின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள் (ஜின், ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும். எனவே உங்களில் ஒருவர் (அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர், 'அவூது பில்லாஹி மினல் குபுஸி வல்கபாயிஸி' என்று கூறுவாராக! என அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும், நஸயீ அவர்கள் தனது ஸுனன் அல்குப்ராவிலும் பதிவு செய்துள்ளார்கள்.

(குறிப்பு: 'அல்லாஹ்விடம் நான் ஆண், பெண் ஷைத்தான்களின் (தீங்குகளை) விட்டும் காவல் தேடுகிறேன்' என்பதே 4,5,6 ஹதீஸ்களின் அரபி வாசகங்களின் கருத்தாகும்.)
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது Empty Re: மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது

Post by RAJABTHEEN Sun Oct 31, 2010 11:20 am

மலம் ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குதல் கூடாது.

ஹதீஸ் எண்: 7
உங்களுக்கு மலம், ஜலம் கழிக்கும் ஒழுக்கமுறை உட்பட (ஒழுக்க பண்புகள்) அனைத்தையும் உங்களுடைய நபி அவர்கள் கற்றுத் தந்தார்களா? என்று (ஸல்மான்) அவர்களிடம் வினவப்பட்ட போது, அவர் (பின்வருமாறு) பதில் அளித்தார்: ஆம்! நாங்கள் மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் போது, கிப்லாவை முன்னோக்குவதையும், வலது கையால் துப்புரவு செய்வதையும், எங்களில் யாரும் மூன்று கற்களுக்கு குறைவாக (எடுத்துச் சென்று துடைத்து) சுத்தம் செய்வதையும், விட்டை அல்லது எலும்புத் துண்டைக் கொண்டு சுத்தம் செய்வதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, திர்மிதி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 8
உங்களிடத்தில் (மார்க்க நெறிகளை) உங்களுக்கு கற்றுத் தருகின்ற தந்தையின் தரத்தில் உள்ளவன் தான் நான்! எனவே உங்களில் ஒருவர் மலம் (ஜலம்) கழிக்க சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கவோ அல்லது பின்னோக்கவோ, மேலும் (அப்போது) தன் வலது கரத்தினால் துப்புரவு செய்யவோ வேண்டாம்' என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு (துடைத்து சுத்தம் செய்யும் போது) மூன்று கற்களை (பயன்படுத்துவதை) ஏவி, விட்டை எலும்பு (ஆகியவற்றை பயன்படுத்துவதை) தடை செய்தனர். எனவே நாங்கள் கிப்லாவை விட்டும் வேறு திசையில் திரும்பி (அந்த கட்டிடத்தில் நுழைய நேர்ந்ததற்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடிக் கொள்வோம் என்று அபூஹுரைரா (ரளி) அறிவிக்கின்றனர்.

(குறிப்பு: இந்த ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

ஹதீஸ் எண்: 9
நீங்கள் மலம் (அல்லது சிறுநீர்) கழிக்கச் சென்றால் மலம், ஜலம் கழிக்கும் போது நீங்கள் கிப்லாவை முன்னோக்க வேண்டாம். எனினும் நீங்கள் கிழக்கோ மேற்கோ நோக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் சிரியாவிற்கு வந்த போது அங்குள்ள கழிப்பு அறைகள் கிப்லாவை நோக்கி கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். கிப்லாவை விட்டும் (வேறு திசையில்) திரும்பிக் கொண்டோம். அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடிக் கொண்டோம். இதை அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரளி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு: இது மக்காவாசிகளை கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். இந்த ஹதீஸை புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது)

ஹதீஸ் எண்: 10
சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது நாங்கள் பைத்துல் மக்தஸ், கஃபா என்ற இரு கிப்லாக்களை முன்னோக்குவதை அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது Empty Re: மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது

Post by MOHAMED91 Thu Jun 28, 2012 12:43 am

அனைத்தும் அருமையான ஹதீஸ்கள் நன்றிங்க
MOHAMED91
MOHAMED91
மல்லிகை
மல்லிகை

Posts : 95
Points : 127
Join date : 17/05/2012
Age : 33
Location : தோட்டம்

Back to top Go down

 மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது Empty Re: மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது

Post by RAJABTHEEN Fri Jun 29, 2012 1:03 am

 மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது 35578
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

 மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது Empty Re: மலம் ஜலம் கழிக்க மறைவாக இடத்திற்கு செல்வது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum