தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
விடுமுறை ...
2 posters
Page 1 of 1
விடுமுறை ...
எழுந்திரு ஷக்தி.. எழுந்திருப்பா...
போர்வையை விலக்கி எழுப்ப முனையும் பாட்டியின் கையைத் தட்டிவிட்டு..
மீண்டும் இறுக்கமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபக்கம்
திரும்பிக்கொண்டான் ஷக்தி..
என்ன அவன் இன்னும் எழுந்திருக்கலயா..
கரகரத்த குரலில் கேட்டுக்கொண்டே வந்தார் செந்தில்நாதன் .. ஷக்தியின் தந்தை
ஜன்னலை திறந்துவிடுங்க... னு கொண்டையை முடிந்து கொண்டே வந்த அம்மாவை
முந்திக்கொண்டு பாய்ந்து சென்று திரைச்சீலையை விலக்கினான் சசி.. ஷக்தியின்
தங்கை பையன்.
டேய்.. பார்த்துடானு அம்மா எச்சரித்து முடிய முன்னரே.. ஐயோ... என்று அலறிக்கொண்டு எழுந்தான் ஷக்தி..
ஹாஹா...ஹாஹா... னு கை கொட்டிச் சிரிக்கும் சசியின் கோமாளித்தனமும்..
சிரித்த முகத்துடன் தன்னைச் சூழ்ந்திருக்கும் உறவுகளையும்
பார்த்துக்கொண்டே.. சோம்பல் முறித்தவாறே காலைத் தூக்கத்தை
முறித்துக்கொண்டான் ஷக்தி.
ஏன்பா.. ப்ளைட்ல தானே வந்த.. ஓடி வரலியே.. இவ்ளோ டயர்டாருக்க...
எப்பவுமே நைட் லேட்டா தூங்கிப்பழகிட்டார் மாமானு... அறைக்குள் நுழைந்தாள் சித்ரா.. ஷக்தியின் மனைவி.
ம்.. சரி சரி.. அங்கேதான் ஓடி ஓடி கஷ்டப்படறான்..இங்கயாவது நிம்மதியா
எழுந்திருக்கட்டும்னு அவனுக்காகக் குரல் கொடுத்த அன்னையின் கைகளை அன்போடு
அள்ளி முத்தம் கொடுத்தவன் தலையைத் தடவி வி்ட்டு மெல்ல நகர்ந்தார்கள்
அனைவரும்..
சித்ரா.. இப்போ டைம் என்னாச்சு என்று கேட்டுக்கொண்டே அருகில் இருந்த தன் மொபைலை எடுத்தான் ஷக்தி..
6.30 னு பதில் வந்தது சித்ராவிடமிருந்து..
அடச்சே.. இவ்ளோ சீக்கிரமாவானு அலுத்துக்கொண்டான்..
என்னங்க..இன்னும் டைம் மாத்தலயா..
ம்..மாத்தலாம்.. அங்கே இப்பதான் ராத்திரி ஒரு மணி... இனிமே தான் தூங்குவோம்ல...
ம்.. இல்லைன்னா ஏதாச்சும் வடிவேல் காமெடியை போட்டுகிட்டு என் தூக்கத்தையும் கெடுத்திட்டிருப்பிங்க..
ஏன்டி.. நேரம் பார்த்து ரிபீட் அடிக்கிறியா..
சே சே. உண்மையைத்தானே சொன்னன்... என்று லேசாக புன்முறுவல் பூத்தாள் சித்ரா..
பசங்க எழுந்திரிச்சிட்டிங்காளா...
அதை ஏன் கேட்கிறீங்க.. தூங்கினாத்தானே எழுந்திருக்க..வந்ததுல இருந்து இது
யாரு .. அது யாருனு ஆளாளை அறிமுகப்படுத்த சொல்லி ஒரே பிடிவாதம்.. இப்பதானே
எல்லாரையும் பார்க்குதுங்க..
ம்..அதுவும் சரிதான்.. இங்கே இல்லாத ஏதோ ஒன்றைத் தேடி அங்கே போனோம்.. இப்போ அங்கே இல்லாத ஏதோ ஒன்று இங்கே இருக்குதுல்ல..
உண்மைதாங்க..காலைல இத்தினை மணிக்குத்தான் எழுந்திருக்கனும்..இத்தினை
மணிக்கு பசங்கள ஸ்கூல்ல விடனும்.. இத்தினை மணிக்குள்ள சமைக்கனும்.. இத்தினை
மணிக்குள்ள அதை செய்யனும்.. இத்தினை மணிக்குள்ள இதை செய்யனும்னு எனக்கொரு
இயந்திர வாழ்க்கை... சரியா இத்தினை மணிக்கு அதை இதை செய்ஞ்சு.. ட்ராபிக்ல
மாட்டிக்காம இத்தினை மணிக்கு கிளம்பனும்னு பதறிப் பதறி ஓடுவீங்க.. பகல்ல
ஒரு நிம்மதியில்ல.. ராத்திரி கூட.. சில நேரங்கள்ல வாய்க்கு ருசியா
எதையாச்சும் சமைச்சு வச்சா கூட.. நிம்மதியா சாப்பிடறது கிடையாது.. எத்தினை
மணிக்கு தூங்கினாலும் இத்தினை மணிக்கு எழுந்திரிச்சாகனுங்கற
நிர்ப்பந்தம்.... ம்... என்று ஒரு பெரிய பெருமூச்சை உள்ளிழுத்தாள் சித்ரா..
என்ன பண்ண சித்ரா.. என் படிப்புக்கும்.. நான் நினைச்ச மாதிரியான வாழ்க்கை
அமையிறதுக்கும் இங்கே அப்போ சரியா படல.. என்மேல இருந்த சுமைகள சமாளிக்கிற
வேகமான உலகம் இங்கே இருக்கல... சோ நான் நினைச்ச வாழ்க்கையை தேடி அங்கே
போனோம்.. ம்.. என்னமோ ஒரு லக்சரி இருக்கு.. நான் நினைச்ச தொழிநுட்பம்..
நான் நினைச்சு எதிர்பார்த்த லைப் ஸ்டைல்.. ம்.. எல்லாம் இருந்திச்சு..
பட்.. என்னமோ இல்லை.. அது என்னானு தெரில.. ஏன்னா நாம அதுங்கள யோசிக்கிற
அளவுக்கு அங்கே நேரமும் இல்லை.. ஆனா.. ம்.. ஆனா இங்கே வந்தா.. அங்கே இல்லாத
என்னமோ இங்கே இருக்கிறத உணரலாம்.. அந்த வெறுமை என்னாங்கறதும்..
ஒத்துக்கப்போறீங்களா... னு கேலியாகக் கேட்டாள் சித்ரா...
பதில் சொல்லாமல் புன்னகைத்த வாறே எழுந்து கதவு நோக்கி நடந்தான் ஷக்தி..
அடடே... வாங்க மாப்பிள்ளை.. அவன் தாய் மாமன் கிருஷ்ணன் குரல்..
என்னப்பா.. எங்களையெல்லாம் மறந்திட்டியா.. சித்தப்பா சாருஹாசன் குரல்..
வா தம்பி.. படுக்கைலாம் செளகரியமா இருந்திச்சா.. உங்க அளவுக்கு இங்கே வசதியிருக்கா.... அண்ணன் ரங்கன்..
டாடி... னு ஓடி வந்து அவனைக் கட்டியணைக்கும் அவன் குழந்தைகள்.. அவர்களைப்
பின் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே ஓடி வரும் ஏழெட்டுக் குழந்தைகள்..
போங்க தம்பி.. போய் குளிச்சுட்டு வாங்க.. டிபன் ரெடியாகிட்டிருக்கு.. அக்கா ஷியாமளா..
ஏன்பா.. இட்லினா விரும்பி சாப்டுவியே.. இன்னும் பிடிக்கும் தானே... அண்ணி ராதா..
அண்ணே... உங்க ப்ரன்ட்ஸ் அப்துலும் .. சாந்தனும் காலையிலயே வாறதா சொன்னாங்கணே... ஷக்தியின் தம்பி விஷால்..
தன்னைச்சுற்றி.. திடீரென நேற்று இல்லாத மாற்றம் சூழ்வதைக் கண்டு.. மெல்லக் கலங்கிய தன் கண்ணை இறுக மூடிக்கொண்டே முன் நடந்தவனிடம்..
இந்தாப்பா டவல்.. பாத்ரூம் அந்தப்பக்கம்னு வழி காட்டினார் மகேசன்.. அவன் பெரிய தந்தை..
எப்பாயாச்சும் நேரம் கிடைச்சு போன் பண்ணாலும்.. அம்மா அப்பா.. தம்பி
இதுங்களோட சத்தம் தான் கேட்கும்.. இன்னைக்கு இத்தனை பேர்
கூடியிருக்காங்கனா.. என் மேல ஒவ்வொருத்தரும் எவ்ளோ பாசம் வச்சிருப்பாங்க..
என்னமோ காணாததை கண்டதா நினைச்சுட்டு இந்த இயற்கையான .. உண்மையான சூழலை
விட்டெறிஞ்சுட்டு .. நிம்மதியா மூச்சு கூட விட முடியாத நாட்டுல
குளிர்லயும்.. பனியிலயும் கஷ்டப்படறம்... ம்.. காசு பணம் எப்ப வேணும்னாலும்
சம்பாதிச்சுக்கலாம்.. ஆனா.. பாசத்தை எப்டியா சம்பாதிக்கிறது.. அது தானா
வரனும்.. அது நம்மை போல சூழ்நிலையான நம்ம நண்பர்கள் கிட்ட இருந்து வாற
பாசம் போலயில்லை.. இந்தப் பாசத்துல ஒரு உண்மையிருக்கும்.. நம்ம பையங்கிற
உணர்வும்.. உரிமையும் இருக்கும்... அட .. நாங்க என்ன அங்கே படிச்சு அங்கே
வாழ்ந்தோமா.. இல்லியே.. இங்கே படிச்சு.. இந்தத் தகைமையோட தானே அங்கே
வாழறம்.. ம்.. என்னமோ இழந்த வாழ்க்கை.. இன்னைக்கு இத்தனை பேர் அதுவும்
விடிஞ்சதும்.. ஓஹோனு.. கலகலப்பா காட்சி தாற இந்த சுகத்தை... என்று
தனக்குள்ளேயே ஏங்கியவனாய்... ஷாம்பூவை தேய்த்துக்கொண்டான் ஷக்தி..
வாப்பா... அங்கேயும் இப்டி நம்மா உணவு வகைகள்லாம் கிடைக்குமா... என்று அப்பாவின் பாசங்கலந்த கேள்விக்கு..
ம்..கிடைக்கும்பா.. எல்லாம் ப்ரோசன்... ஏதோ இருக்குதேங்கற அளவுக்கு திருப்தியா இருக்குது..
புள்ளய சாப்ட விடுங்க.... செல்லமாக அவன் அருகில் இருந்து அப்பாவைக் கோபித்துக்கொள்ளும் அன்னையின் பாசமும் அவனை கண் கலங்கச் செய்தது..
வீடே ஒரே கலகலப்பாகக் காட்சியளித்தது..
வாசலில் நின்று அம்மாவிடம் குசலம் விசாரிக்கும் பக்கத்து வீட்டுக்காரங்க.. புழுதி வாடையை மெல்ல அள்ளி வரும் மெல்லிய காற்று..
பால்காரன்.. தபால் காரன்.. செந்தழிப்பாக மல்லிகை மணத்துடன் .. புன்னகை
பூத்த முகத்துடன் அங்கும் இங்கும் அவசரமாக ஓடித்திரியும் வீட்டுப்
பெண்கள்..
அங்கே கொலை.. இங்கே கொள்ளையென செய்தி தாங்கி பத்திரிகை.. அங்கே இடைத்தேர்தல் இங்கே சாதிச்சண்டையென்று ஓலமிடும் வானொலி..
கடவுளே இல்லைனு சொல்லும் கொள்கை.. ஆனா காலங்காட்டிலயும் சோதிடம் சொல்லும் டிவி நிகழ்ச்சி..
இப்படி தன்னைச்சுற்றி மீட்டிச்செல்லும் அத்தனை உணர்வுகளுடன்
ஒன்றரக்கலந்து... இழந்த எதையோ அடைந்த திருப்தியுடன் மூச்செடுத்து அவன்
முடிப்பதற்குள்..
என்னங்க.. என்னங்க என்று ரகசியமாய் சித்ராவின் குரல்..
நிலை குலைந்தவனாய்... அவள் பக்கம் திரும்பி ... என்ன என்று கேட்க..
அங்கே பாருங்கனு அவள் தலையசைக்க..
திரும்பிப் பார்த்தவன்... ஒரு தடவை சுதாரித்து அங்கும் இங்கும் விழிகளை உருட்டினான்..
என்னங்க... அவசரப்படுத்தும் அவள் மனைவி..
விமானத்திலிருந்து பயணிகள் இறங்கிக்கொண்டிருக்கிறார்கள்...
ஊருக்கு வந்தாச்சு.. அவன் மனம் பேசியது.. எதற்கும் இதுவாவது நிஜம் தானா என்று சுற்று முற்றும் பார்த்தான் ஷக்தி..
விமான நிலைய விடயங்கள் எல்லாம் முடிந்து.. பகேஜ் எடுத்து.. குடிவரவு
உத்தியோகத்தர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலளித்து.. வெளியில்
வந்ததும் பளார் என முகத்தில் வந்து மோதிக்கொண்ட ஊர்க்காற்றை.. அப்படியே
முடிந்த வரை வாயாலும் மூக்காலும் உள்ளிழுத்து... ஒரு நிம்மதிப்
பெருமூச்செடுத்தான் ஷக்தி..
சார்.. டாக்சி..
இல்லையென்று தலையசைத்தாலும் அவன் கண்கள் எதையோ தேடியது... இன்று ஊருக்கு
வரப்போகிறோம்... அதுவும் கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு..
என்று ஒரு வாரத்துக்கு முன்னாலேயே சொல்லியாச்சு... சோ.. தன் தம்பி
வந்திருப்பான் என்று நம்பிக்கையோடு தேடியது அவன் கண்கள்...
என்னங்க.. நேரமாகுது.. நாங்களே ஒரு டாக்சி பிடிச்சு போகலாமே..
இல்லை சித்ரா... வராம விட மாட்டானே... னு விட்டுக்கொடுக்க மனசில்லாமல் கண்களை அங்குமிங்கு அலைபாய விட்டான் ஷக்தி..
இனி முடியாது எனும் நிலையில்.. ஒரு வாடகை வண்டியை ஏற்பாடு செய்து..
ஊருக்குக் கிளம்பிய வழியெல்லாம் அவனுக்குள் ஆயிரம் யோசனைகள்.. ஒன்றா இரண்டா
பண்ணிரன்டு வருஷம்..அப்போ நாங்க இருந்த நிலைமை.. ம்.. அடுத்த வேலை சோறு
கூட அப்பா பட்ட கடன்ல ஓடிட்டிருந்துது.. சொல்லிக்கற அளவுக்கு யாருக்குமே
நல்ல நிலைமையில இல்ல.. நண்பர்கள் அவங்க இவங்க உதவியோட கஷ்டப்பட்டு நான்
படிச்ச படிப்புக்குள அப்போ இங்கே இருந்தா எந்த முன்னேற்றமும் இல்லைனு ..
கடன வாங்கி .. லண்டன் போய்.. எந்த ஒரு நல்லது கெட்டதும் இல்லாம..
புள்ளைங்கள ஒரு ஹாலிடேல கூட எங்கேயும் கூட்டிப்போகாம.. வாயக் கட்டி..
வயிற்றைக் கட்டி.. நாம எப்டி இருந்தாலும் பரவால.. இங்கே நம்ம குடும்பம்
நல்லாருக்கனும்னு கஷ்டப்பட்டோம்... ம்.. என்று மூச்செடுத்துக்கொண்டே...
சித்ராவையும்.. மடியில் களைப்பில் உறங்கும் குழந்தைகளையும் பார்த்தான்
ஷக்தி...
ஊரும் வந்தது.. வீடும் வந்தது..
ஏறி வந்த வண்டியை அனுப்பிவிட்டு வாசல் வந்து நின்றவனை வரவேற்கக்கூட யாருமில்லை...
உங்க வீடுதானே .. வாங்க உள்ளே போவோம்னு ... சமாளித்து அவனை உள்ளிழுத்தாள் சித்ரா...
வாங்க.. பயணம்லாம் ஓகே தானே.. கையில் தினசரியிடன்... ஒற்றை வார்த்தையில்
பேசி முடித்த அவன் தந்தையின் வரவேற்பு அவன் உள்ளத்திற்குள் ஏதோ செய்தது..
வாங்க அண்ணி.. வாணே... னு மிக மிக சாதாரணமாக தன் வேலையில் கவனத்துடன் நகர்ந்த அவன் தம்பி..
தூங்கி விழும் குழந்தைகளுடனும்.. தவிப்புடனும் அருகில் இருக்கும் சித்ரா...
ஷக்திக்கு ஓ... என அலற வேண்டும் போல.... கதற வேண்டும் போல இருந்தது...
என்ன.. நான் அவ்ளோ இளக்காரமா போனேனா... போன்ல கூட தேனும் பாலுமா பேசுவாங்களே... னு அவன் நினைத்துக் கொண்டே இருக்கும் போது..
கொஞ்ச நேரம் அப்டி உட்காருங்கப்பா... அந்த ரூமை ரெடி பண்றேன்னு.. இனிமேல் தான் தயாராக்கப் போகும் அவன் தங்கை..
யாருக்குமே எந்த அலட்டலும் இல்லை.. ஏன்.. ஒருவேளை நான் ஒரேயடியா இங்கே
வந்து செட்டிலாகப்போறேன்னு சொன்னதுனாலயா... அவனுக்குள் ஆயிரம் கேள்விகள்.
சித்ரா... இங்க வா.. னு ஏதோ அங்கேயே வாழ்ந்துக்கிட்டிருக்கிற மருமகளை கூப்பிடறா மாதிரி .. சமையலறையிலிருந்து குரல்..
கடைசி இழுவையுடன் ... சிகரெட்டை வீசிக்கொண்டே... ம் .. என்னப்பா ஷக்தி..
மாமாக்கு லண்டன்லருந்து என்ன கொண்டு வந்திருக்கனு கேட்டுக்கிட்டே... உள்ளே
வரும் அவன் தாய் மாமன்...
என்ன.. நான் தான் அன்பு .. பாசத்துக்கெல்லாம் வேற விதமான வரையறை வச்சிருக்கேனா... ஷக்தியின் மூளை அவனிடம் கேள்வி கேட்டது..
அதற்கடுத்து நடந்த அத்தனை நிகழ்வுகளும்.. ஏதோ கடமைக்காக நிகழ்வதாக உள்ளார
உணர்ந்து கொண்ட ஷக்தியின் மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை.. எப்போதுமே
எல்லோருக்குமே வழங்கல் நிலையம் போன்று .. ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால்
இருந்தாலும்.. சதா இங்கே உள்ளவங்க நல்லாருக்கனும்னு நினைத்தது
மாத்திரமன்றி.. கேட்கும் போது.. பெருந் தொகையாகவும்.. கேட்காத போதும்
சரியாக மாதா மாதம் தன் சக்திக்கு மேற்பட்ட தொகையாகவும் என்று.. தான்
உழைத்து.. தான் வாழ்வதை விட.. எப்போதும் இங்கேயே அவன் முழு எண்ணத்தையும்
குவித்திருந்த அவன் மனசுக்குள்... ஏதோ ஒரு விதமான குற்ற உணர்வு ....
மெல்லெனத் துளிர் விட ஆரம்பித்தது..
பாசத்தைப் பங்கு போட ஓடோடி வரும் உறவைத் தேடி வந்தவனுக்கு....
அவனிடமிருந்து பெற்றுக்கொள்ள முடிந்ததை அள்ளிக்கொள்ள மாத்திரம்... ஒருவர்
பின் ஒருவராக வந்து சேர்ந்த உற்றத்தையும் .. சுற்றத்தையும் பார்த்து..
அடுத்த எழுபத்திரண்டாவது மணி நேரத்திற்குள் .. அவன் மனம் வேறு வகையான
முடிவை எட்டிக்கொண்டது..
ஹலோ.. ரவி.... ஹேய்.. ஷக்திபா..
மறுமுனையில் ரவி.. ஷக்தியின் நண்பன்.. லண்டனில் பயண முகவராகப் பணியாற்றுகிறான்..
அடுத்த அரை மணி நேரத்தில்..
சித்ரா... பசங்க எங்க...
அதோ... நின்டன்டோ விளையாடிட்டிருக்காங்க...
ஊர்ல இருந்தாலும் இதைத்தான் பண்ணிருப்பாங்கனு தன் மனதுக்குள் எண்ணிக்கொண்டான்...
அன்று மதியம்... நாங்க ஊருக்கு கிளம்புறம்னு அவன் சொன்னப்ப... அதுகூட அங்கே
பெரிய மாற்றத்தை கொண்டு வரல.. ஆனாலும் ஷக்தி ஏற்கனவே தயாரா இருந்ததுனால..
அவனுக்கு அதுல எந்த சஞ்சலமும் ஏற்படல.... இருந்தாலும் சித்ரா தான் அடிக்கடி
அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டாள்..
பேசாம தூரத்துலயே இருக்கலாம்.. ஒரு வேளை இங்கே வராமலே இருந்திருக்கலாம்..
சின்னச் சின்னதா ஒரு இருநூறு பவுண் சேர்த்திருந்தா கூட..இங்கே ஏதாவது
தேவைனு சொல்றப்ப.. மறு பேச்சே இல்லாம அதுவும்.. அதுக்கு மேலால ஒரு ஐம்பதுமா
கிரடிட் கார்ட்ல இருந்து எடுத்தாவது அனுப்பி வைப்பாரு.. ம் .. உலகத்துல
எல்லாத்துக்குமே ஒரு விலை இருக்குனு... அவளும் ஆழ் மனதுக்குள்
ஏங்கிக்கொண்டாள்...
மறு நாள்.. மீண்டும் விமான நிலையத்திற்கு வாடகை வண்டியிலேயே வந்து இறங்கினார்கள் ஷக்தியும் குடும்பமும்..
என்னங்க.. நீங்க ஓகேயா... சீக்கிரமா போறமேனு... லேசாக பேச்சுக்கொடுத்தாள் சித்ரா..
புன்னகைத்துக்கொண்டே .. ம் .. போலாம்... என்று உள்ளே அழைத்துச் சென்று...
சிங்கப்பூர் ஏர்லைனில் செக் இன் செய்த போதுதான்.... லண்டனுக்குப்
போகவில்லை.. சிங்கப்பூர் செல்கிறோம் என்பதை உணர்ந்தாள் சித்ரா..
டாடி.. ஆர் வீ.... சிங்கப்பூர்... னு தயங்கித் தயங்கி கேட்ட மகள் ஸ்வேதாவை... வாரியணைத்து முத்தமிட்டவன்..
யெஸ்... We are going on Holiday !! னு உற்சாகமாக சொல்ல... மடித்த முஷ்டியை
உள்ளிழுத்து.. யெஸ் என்று சந்தோஷத்தில் குதூகலித்தார்கள் குழந்தைகள்..
சித்ராவின் தோளில் கையைப் போட்டு... குழந்தைகளையும் மிக நெருக்கமாக அணைத்தபடி உள்ளெ செல்கிறான் ஷக்தி..
HAPPY HOLIDAY MATE !!
நன்றி நிலா நிலாமுற்றம்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: விடுமுறை ...
ஆமா எல்லாமே ரொம்ப மாறிடிச்சு . நம்மூரும் தான் ஏதும் கொடுத்தால் தான் உறவா? இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: விடுமுறை ...
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum