தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்)

4 posters

Go down

49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்) Empty 49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்)

Post by சிசு Tue Apr 12, 2011 5:31 pm

நம் ஊர் புரளிகளுக்கு புகழ்பெற்ற ஊர். முனி அடித்த கதைகளில் ஆரம்பித்து கடைசி வீட்டு பெண் ஓடிப்போன கதை வரைக்கும் சகலமும் இங்கே அதிகம்! இதே போல் பல புரளிகளை உள்ளடக்கி உலவிக் கொண்டிருப்பதுதான் 49-O என்ற, இணையத்தை தற்போது கலக்கிவரும் விதிமுறை!

இந்தக் கட்டுரை, "நம்ம ஊர் கட்சிகளுக்கெல்லாம் மாற்றாக 49-O இருக்கும் அதுனால 49-Oவைப் போடுங்க" என்று பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கும் அப்பாவிகளுக்காக! முக்கியமாக இணையத்தில் இந்த 49-O பற்றி தவறான கருத்துக்களை தெரியாமலே பரப்புபவர்களுக்காக!

49-O என்பது சட்டமோ, அரசாங்க வேட்பாளரோ அல்ல. தேர்தலில் கள்ள ஓட்டு போடும் ஏமாற்றுவேலையை தடுப்பதற்காக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961ல் (The Conduct of Elections Rules, 1961) உள்ள ஒரு விதிமுறை(Rule) தான் இந்த 49-O!


ஒரு வாக்காளருக்கு தான் வசிக்கும் தொகுதியில் நிற்கும் எந்த வேட்பாளரையும் பிடிக்கவில்லையென்றால் ஓட்டுப் போடாமல் வீட்டிலேயே இருந்துகொள்வார். ஆனால் அவருடைய ஓட்டை வேறு யாரேனும் தங்கள் விருப்ப கட்சியின் வேட்பாளருக்கு போட்டுவிடுவார்கள். இதுதான் காலம் காலமாக நடக்கும் நம் தேர்தல் சம்பிரதாயம், கலாச்சாரம்! ஆனால் அதைத் தடுப்பதற்காகத்தான் 49-O என்று ஒன்று உள்ளது. 1961 முதலே அமலில் இருந்தாலும் தற்போது ஊடகங்களில் reachஆல் நம் வாயில் மாட்டிய அவலாக அகப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது. இதைப் பற்றிய பல புரளிகளுக்கு முற்றுப்புள்ளி தான் இந்தக் கட்டுரை.

நாம் 49-Oவில் நம் ஓட்டைப் பதிவு செய்ய வேண்டுமென்றால் அந்த குறிப்பிட்ட பூத் ஆஃபீசரை அணுகி நம் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். அவர் வழக்கமாக ஒரு ஓட்டு பதியப்படும்முன் நடத்தப்படும் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி சரிபார்ப்பு (identification verifications) வேலைகளையும் செய்து முடித்து நமக்கு ஒரு ஃபார்ம்(form) அளிப்பார். அந்த ஃபார்ம் (form) 17A. அதில் அந்த ஆஃபீசரின் மேற்பார்வையில் 49-O பதிவதற்கான காரணத்தை (remarks) நம்முடைய காரணத்தை எழுதிவிட்டு அதில் நம் கட்டைவிரல் ரேகையையும் பதிவ செய்யவேண்டும். இப்படி செய்வதால் நாம் எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போடவில்லையென்றாலும் நாம் ஓட்டுப் போட்டதாகப் பதிவாகிவிடும். அதனால் நம் ஓட்டை வேறு யாராலும் கள்ள ஓட்டாகப் போட முடியாது!

ஆனால் இம்முறையில் ரகசியங்கள் காக்கப்படாது. நாம் எந்த வேட்பாளரையும் தேர்ந்தெடுக்காமல் இருக்கும் விஷயம் தெள்ளத்தெளிவாக, கிட்டத்தட்ட அந்த 'பூத்'தில் உள்ள எல்லொருக்குமே தெரியும்.

இதை மாற்றத்தான் 2004ஆம் ஆண்டும் நம் தேர்தல் ஆணையம், அதற்கு பல பேரிடமும், சமூக அமைப்புகளிடமும் இருந்து வந்த '49-Oவிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்று சொன்ன மனுக்களை மதித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சில மாற்றுகளை செயல்படுத்துமாறு சிபாரிசு செய்ததது. அதாவது ஓட்டுப் போடும் இயந்திரத்தில் எல்லா வேட்பாளர்களின் பெயருக்குப் பின் கடைசியாக "மேற்கண்ட எவருக்கும் இல்லை" (None of the above) என்ற பட்டனையும் வைக்க வேண்டுமென சிபாரிசு செய்திருந்தது. இதைச் செய்வதன் மூலம் ரகசியம் முழுமையாகக் காக்கப்படும். ருஷ்யாவில் இந்த நடைமுறை உள்ளது. ஆனால் இந்த சிபாரிசு மீதான நடவடிக்கை என்ன ஆனது என இந்த நொடி வரைக்கும் செய்தி இல்லை. அதனால் இந்தத் தேர்தலிலும் பழைய form முறையே பயன்பாட்டில் இருக்கும்!

இப்போதுதான் மிகவும் முக்கியமான விஷயம். எதனால் பலர் "49-O போடப்போறேன்", அல்லது "49-O போடுங்க"னு சொல்கிறார்கள் என்றால், ஒரு தொகுதியின் வெற்றி வேட்பாளர் பெரும் வாக்குகளை விட அத்தொகுதியில் 49-O வாக்குகள் அதிகம் பதிவாகியிருந்தால், அந்த வேட்பாளரின் வெற்றி தள்ளுபடி செய்யப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும் என நினைக்கிறார்கள்! இது முற்றிலும் தவறு. இப்படி நடக்க எந்த சட்டமும் கிடையாது. வெற்றி வேட்பாளர் 49-Oவை விட குறைவாய் ஓட்டு வாங்கியிருந்தாலும் அவரே வெற்றி பெற்றார் என அறிவிக்கப்படுவார்.

இன்னும் கற்பனை வளம் அதிகம் உள்ல சிலர் 49-Oவில் விழும் வாக்குகள் வெற்றி வேட்பாளரை விட அதிகமாய் இருந்தால் அந்தத் தேர்தலில் நின்ற அனைத்து வேட்பாளர்களும் வாழ்க்கை முழுதும் தேர்தலில் நிற்க முடியாதபடி 'life time ban' செய்யப்படுவார்கள் என்று நம்புகிறார்கள்! இது முழுக்க முழுக்க தவறு. இப்படியும் எந்த விதிமுறையும் கிடையாது!

வெற்றி வேட்பாளரின் வாக்குகளை விட ஒரு தொகுதியில் 49-O அதிகமாக விழுந்திருந்தால் கூட உங்கள் வாக்கு பதிவாகியிருந்தாலும் அது செல்லாத வாக்கே. நீங்கள் 49-Oவில் உங்கள் வாக்கைப் பதிவு செய்வதால் உங்கள் வாக்கு முறைகேடாகப் பயன்படவிருந்ததை தடுத்திருக்கிறீர்கள், அவ்வளவே!

மேலும் எத்தனை பேர் 49-Oவில் வாக்கைப் பதிந்தார்கள் என்பதைக் கூட வாக்கு எண்ணிக்கை அறிவிக்கும் போது அறிவிக்க மாட்டார்கள். அவ்விவரத்தை நாம் 'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தியே அறிய முடியும். தயவு செய்து இனி 49-O பற்றிய தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம். உங்கள் வாக்கு தவறாகப் பயன்படுத்துவதை விரும்பவில்லையெனில் கண்டிப்பாக 49-Oவைப் பயன்படுத்தி உங்கள் வாக்கைப் பதியுங்கள். அல்லது காலம் காலமாக ஜனநாயகத்தின் வேதவாக்கான 'select the better candidate' என்ற வழக்கத்தின் படி உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள். நன்றி.

கொசுறு: தற்போது மக்களிடம் ஓட்டுப் போடச் சொல்லி விளம்பரம் செய்யும் தேர்தல் ஆணையம் அவ்விளம்பரத்தில் "உங்கள் விருப்ப கட்சிக்கு வாக்களியுங்கள்" என விளம்பரம் செய்கிறது. "உங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களியுங்கள்" என்றல்லவா இருக்க வேண்டும். சுயேட்சைகளையெல்லாம் தேர்தல் ஆணையம் புறக்கணிக்க சொல்கிறதா? :-(

நன்றி:
வானம் எனக்கொரு போதி மரம்....
சிசு
சிசு
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City

Back to top Go down

49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்) Empty Re: 49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Apr 12, 2011 7:17 pm

சிந்திக்க தூண்டுகிறது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்) Empty Re: 49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்)

Post by அரசன் Tue Apr 12, 2011 8:07 pm

கட்டமைப்பில் மாற்றம் தேவை என்றே தோன்றுகிறது ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்) Empty Re: 49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்)

Post by gafoor1984 Tue Apr 12, 2011 8:12 pm

நல்ல தகவல் .நன்றி
gafoor1984
gafoor1984
ரோஜா
ரோஜா

Posts : 169
Points : 231
Join date : 26/03/2011
Age : 39
Location : முத்து நகர்

Back to top Go down

49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்) Empty Re: 49-O. புரளிகளும், உண்மைகளும்! (கண்டிப்பாக படியுங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum