தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சார்லி சாப்ளின்

Go down

சார்லி சாப்ளின் Empty சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:27 pm

சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ( Sir Charles Spencer Chaplin ) (ஏப்ரல்
16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின்,
ஹாலிவுட் திரையுலகின் மிகப்புகழ் பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர்,
இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர்,
திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு.


இளமைப் பருவம்


சாப்ளின்,
லண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும்
மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் "மியூசிக் ஹால்" கலைஞர்கள்.
சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்தே இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது.
சாப்ளின் அவர் அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார்.1896-இல் ஹாரியட்டிற்கு
வேலை ஏதும் கிடைக்காத நிலையில்,சார்லியும் அவரது சகோதரர்சிட்னியும்
லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது.பின்னர்
இருவரும்அநாதைகளுக்கான பள்ளி(Hanwell School for Orphans and Destitute
Children) ஒன்றில்வளர்ந்தனர். இதற்கிடையில் இவர் தந்தை குடிப்
பழக்கத்தினால் உடல் நலம் குன்றி சாப்ளினின் 12-ஆவது வயதில் மரணம்
அடைந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில்
இருந்த "கேன் ஹில் அசைலம்"(Cane Hill Asylum) என்ற மன நலம்
பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப் பட்டார்.பின்பு இவரும்
1928 இறந்தார்.
சாப்ளின் 5 வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன்
முதலில் 1894-இல் மியூசிக் ஹால்-இல் அவர் தாய்க்கு பதிலாக ஒரு வேடத்தில்
நடித்தார்.சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக
இருந்த பொழுது, இரவுகளில் அவரது தாய் ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில்
நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயது இருந்த
பொழுது,சிட்னி லண்டன் ஹிப்போட்ரோமில் "சின்ட்ரெல்லா " பாண்டோமைமில் ஒரு
பூனையாக(நகைச்சுவைக் கதாப்பாத்திரம்) நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார்.
1903-இல் "ஜிம்,அ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்"(Jim, A Romance of Cockayne)
நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது -
செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித் தாள் விற்கும் சிறுவன் பில்லி
வேடம்.இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ்(Casey's Court Circus)
நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும் , Fred Karno's Fun Factory slapstick
நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார்.அமெரிக்காவின்
குடிபெயர்ப்புப் பதிவுகளின் படி கார்னோ குழுவுடன் October 2, 1912 -இல்
அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும்
இருந்தார்-இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம்
ஒரே அறையில் தங்கினர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:27 pm

திரையுலக வாழ்க்கை


சாப்ளினின்
திறமையை தயாரிப்பாளர் மாக் செனட் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன்
திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார்.
முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது
சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னை பழக்கிக் கொண்டு
கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார்.இவரது அசாதாரன வளர்ச்சிக்குக்
காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும்,
நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்
பட்ட உரிமையுமாகும்.இவரது வளர்ச்சியையும், இவரது நிர்வாகியாக பணி புரிந்த
சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பள பட்டியல் எடுத்துக்காட்டியது.
காலம்; நிறுவனம் சம்பளம்
1914 கீஸ்டோன் வாரத்திற்கு $150
1914-1915 எசானே ஸ்டூடியோஸ் (Essanay Studios),இலினாய்ஸ்,சிகாகோ வாரத்திற்கு $1250 மற்றும் $10,000 சேர்வதற்கான ஊக்கத் தொகை
1916-1917 ம்யூச்சுவல்(Mutual) வாரத்திற்கு $10000 மற்றும் $150,000 சேர்வதற்கான ஊக்கத் தொகை
1917 பர்ஸ்ட் நேஷனல் (First National) $1 மில்லியன் ஒப்பந்தம்($1 மில்லியன் ஊதியம் பெற்ற முதல் நடிகர்)
இவர்
1919 -இல் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ் மற்றும் கிரிபித்துடன்
இணைந்து யுனைடட் ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோ (United Artists studio)-வை
துவங்கினார்.
1927-இல் டாக்கீஸ்(ஓசையுடன் கூடிய திரைப்படங்கள்) வெளிவரத்
துவங்கி மிகவும் பிரபலம் அடைந்தாலும் 1930 வரை சாப்ளின் பேசும் படங்களில்
இருந்து ஒதுங்கியே இருந்தார்.சாப்ளின் சினிமாவின் பல துறைகளில்
கைத்தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952-இல் வெளிவந்த "லைம்லைட்"(Limelight)
திரைப்படத்தில் நடன அமைப்பும், 1928 திரைப்படம் "தி சர்க்கஸ்" (The Circus)
-இன் தலையங்க இசை அமைப்பும் இவரே செய்தார்.இவர் இசையமைத்த பாடல்களில் அதிக
புகழ் பெற்றது ஸ்மைல்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:28 pm

தி கிரேட் டிக்டேடர்


இவரது முதல்
டாக்கீஸ் 1940-இல் வெளியான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator).
இது அடால்ஃப் ஹிட்லரையையும் அவரது ஃபாசிஸ்ட் கொள்கையையும் எதிர்த்து குரல்
கொடுத்த படம்.இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு
வருடம் முன்பு அங்கு வெளியிடப் பட்டது.இதில் சாப்ளின் இரு வேடங்கள்
பூண்டிருந்தார் - ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத
இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை
இரு முறைப் பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை
உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால்
ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார்
இவரது
கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க்" (1957) , "தி சாப்லின்
ரெவ்வூ" (1959) மற்றும் சோ·பியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ
கௌண்டஸ் ·ப்ரம் ஹாங்காங்".
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:28 pm

திருமணங்கள்



இவரது திரையுலக
வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பல முறை தன் தனிப்பட்ட
வாழ்வினால் பெரிதும் பாதிக்கப் பட்டது. [[அக்டோபர் 23]] [[1918]]-இல்
இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார்.
இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண
வாழ்க்கை 1920-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில்
"[[தி கோல்ட் ரஷ்]]" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது,
பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். [[நவம்பர் 26]],[[1924]]-இல்
க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு
மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்ததுடன்
விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி
சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத்
துவங்கியது.{{cn}} மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப்
பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால், இவரை எதிர்த்து
பிரச்சாரங்கள் நடை பெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட்
கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக
வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில்
நடிகை [[ஜோன் பேரி]]யுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை
துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே
1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார்.
இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும்,
அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்
கொள்ளப் படவில்லை; குழந்தை 21 வயது வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்
பட்டார். சில நாட்கள் கழித்து, [[ஐகன் ஓ'நீலி|ஐகன் ஓ'நீலின்]] மகள், ஓனா
ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது
அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல
வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:28 pm

கம்யூனிச சிந்தனைகளும் குற்றச்சாட்டுகளும்


சாப்ளினின்
அரசியல் சிந்தனைகள் இடது சாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது
திரைப்படங்களில், முக்கியமாக "மாடர்ன் டைம்ஸ்" (Modern Times)
பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை
சித்தரித்தது."மெக்கார்த்திச காலங்களில்" இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப்
புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஷ்ட்-எனவும்
சந்தேகிக்கப்பட்டார்;ஜே.எட்கார் ஹூவர் எஃப்.பி.ஐ-யிடம் இவரை
கண்கானிக்குமாறு உத்தரவிட்டு,அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க
முயற்சித்தார். சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும்,
அவர் பிரிட்டிஷ் குடுயுரிமையினையே நீட்டித்தார். 1952-இல் சாப்ளின்
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.இதனை தெரிந்து கொண்ட ஹூவர்
ஐ.என்.எஸ்(Immigration and Naturalization Service)-உடன் பேச்சு வார்த்தை
நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தார்.
ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும் படி நேர்ந்தது-பெரும்பாலும்
வெவே,சுவிஸர்லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972-இல்,சிறுது காலம் தனக்கு
அளிக்கப் பட்ட கௌரவ ஆஸ்கார் விருதை பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:28 pm

சாப்ளினின் மரணம்



சாப்ளின்,
1977 ஆம் ஆண்டு, கிருஸ்மஸ் தினத்தன்று அவரது எண்பத்தி எட்டாவது வயதில்
வேவேவில் இறந்தார். இவரது உடல் வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே
கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டது. மார்ச் 1,1977 ஆம் ஆண்டு இவரது
உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து
திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று,திருடர்கள் பிடி
பட்டனர்.சாப்ளினின் உடல் பதினோறு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின்
அருகில் கைப்பற்றப் பட்டது.இவர் நினைவாக இவரது சிலை ஒன்று வெவேவில்
அமைக்கப் பட்டது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:28 pm

விருதுகளும் கௌரவிப்புகளும்


சாப்ளின்
கௌரவ ஆஸ்கார் விருதினை இருமுறை பெற்றார். மே 16 1922-இல் ஆஸ்கார்
விருதுகள் வழங்கப் பட்ட பொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை நிறுவப்
படவில்லை. சாப்ளின் "தி சர்க்கஸ்" திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் மற்றும்
சிறந்த இயக்குனர் விருதுகளுக்கு தேர்வு பெற்றார். இவருக்கு விருது
கிடைக்காதென்று இருந்த நிலையில்,அவருடைய "versatility and genius in
acting, writing, directing and producing The Circus"-ஐப் பாராட்டி
சிறப்பு விருது அளிக்கப் பட்டது. அதே வருடம், இன்னொரு சிறப்பு விருது,"தி
ஜாஸ் சிங்கர்" படத்திற்காக வழங்கப் பட்டது.இரண்டாவது ஆஸ்கர் 44
ஆண்டுகளுக்குப் பின் 1972-இல் "சினிமாவை இந்நூற்றாண்டின் கலை
வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்கிற்காக" வழங்கப் பட்டது.
சாப்ளின்
Monsieur Verdoux திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான
விருதிற்காகவும், "தி கிரேட் டிக்டேடர்" திரைப்படத்திற்காக சிறந்த
நடிகர்,சிறந்த திரைப்படம்,சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளுக்காக தேர்வு
செய்யப்பட்டாலும்,விருதுகள் பெறவில்லை.1972-இல் சிறந்த இசையமைப்புக்கான
விருதை கிலயர் ப்லூம் நடித்திருந்த லைம்லைட்(1952) திரைப்படத்திற்காக
பெற்றார்.1952-இல் எடுக்கப் பட்டாலும் மெக்கார்த்திசத்தினால்
சாப்ளினுக்கெளுந்த பிரச்சனைகளால் லாஸ் ஏஞல்ஸ்-இல் வெளிவரவில்லை.1972-இலே
தான் விருதிற்கு தேர்வாவதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்தது. "லைம்லைட்"
திரைப்படத்தில் பஸ்டர் கீட்டனும் நடித்திருந்தனர் - இதுவே இவ்விரு
நகைச்சுவை மேதைகளும் முதலும் கடைசியுமாக சேர்ந்து தோன்றிய திரைப்படம்.
மார்ச்
4,1975 அன்று பிரிடிஷ் அரசு இவருக்கு "சர்" பட்டதினை வழங்கியது. இதனை
இரண்டாம் எலிசபத் அரசி அளித்தார். இவருக்கு இந்த கௌரவம் வழங்கக் கோரி 1956
ஆம் ஆண்டே பரிந்துரைக்கப் பட்டாலும், இதனை British Foreign Office திட்ட
வட்டமாக மறுத்தது - சாப்ளினின் கம்யூனிஸ்ட் என்றும், அவரை கௌரவிப்பதன்
மூலம், அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் ஏற்கனவே விரிசல் ஏற்பட்ட உறவு
பாதிக்கப் படும் என்று விவாதிக்கப் பட்டது.அக்காலத்தில் தான் பனிப் போர்,
அதன் உச்சக் கட்டத்தில் இருந்தது; மேலும் சூயஸ் காவாயினை கைப் பற்றும்
முயற்சியும் ரகசியமாக திட்டமிடப் பட்டு வந்தது.
சாப்ளின் "ஹாலிவுட் வாக்
ஆ·ப் ·பேமில்"(HollyWood Walk Of Fame) -இல் இடம் பெற்றார்.1985
இங்கிலாந்த் அரசு,இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு
கௌரவித்தது. 1994 ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்பெல்ட்(Al Hirschfeld) வடிவமைத்த
அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது
வாழ்க்கை "சாப்ளின்" என்ற திரைப்படமாக்கப் பெற்றது. இதனை இயக்கியவர்
ஆஸ்கார் விருது பெற்ற சர்.ரிச்சர்ட் அட்டன்பரோ(Sir Richard Attenborough).
இதில் நடித்தவர்கள் ராபர்ட் டௌனி ஜூனியர்(Robert Downey Jr),டான்
ஐக்ராய்ட்(Dan Aykroyd), ஜெரால்டின் சாப்ளின்(Geraldine
Chaplin)-சாப்ளினின் மகள் சாப்ளினின் தாயாக நடித்திருந்தார்,சர் அந்தோனி
ஹாப்கின்ஸ்(Sir Anthony Hopkins),மில்லா ஜோவோவிச்(Milla Jovovich),மொய்ரா
கெல்லி( Moira Kelly),கெவின் க்லைன்(Kevin Kline),டயானா லேன்(Diane
Lane),பெனிலோப் ஆன் மில்லர்(Penelope Ann Miller),பால் ரைஸ்(Paul
Rhys),மரீசா டோமை(Marisa Tomei),நான்சி ட்ராவிஸ்(Nancy Travis) மற்றும்
ஜேம்ஸ் வுட்ஸ்(James Woods).
2005-ஆம் ஆண்டு நடை பெற்ற "The Comedian's
Comedian" கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலைச் சிறந்த இருபது நகைச்சுவை
நடிகர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:28 pm

சாப்ளின் பற்றிய சுவையான செய்திகள்(Trivia)


சாப்ளினின்
கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப்
பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும் பொழுது பெரிதும்
வியப்புற்றனர்.
சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக் காரர் சாமி ரிஷவெஸ்கி (Sammy Reshevsky.)-யிடம் பயின்றார்.
சாப்ளினின்
புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பல நடத்தப்
பட்டு வந்தன. சாப்ளின் ஒரு முறை அப்போட்டி ஒன்றில் ரகசியமாகப் பங்கு
பெற்றார்.இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Apr 15, 2011 4:29 pm

திரையாக்கங்கள்
நடிகராக நடித்த குறும்படங்கள்



1914
Between Showers
A Busy Day
Caught in a Cabaret
Caught in the Rain
Cruel, Cruel Love
Dough and Dynamite
The Face on the Barroom Floor
The Fatal Mallet
A Film Johnnie
Gentlemen of Nerve
Getting Acquainted
Her Friend the Bandit
His Favorite Pastime
His Musical Career
His New Profession
His Prehistoric Past
His Trysting Place
Kid Auto Races at Venice
The Knockour
Laughing Gas
Mabel at the Wheel
Mabel's Busy Day
Mabel's Married Life
Mabel's Strange Predicament
Making a Living
The Masquerader
The New Janitor
The Property Man
Recreation
The Rounders
The Star Boarder
Tango Tangles
Those Love Pangs
Twenty Minutes of Love
1915
The Bank
Charlie Chaplin's Burlesque on Carmen
By the Sea
The Champion
His New Job
His Regeneration
In the Park
A Jitney Elopement
Mixed Up
A Night Out
A Night in the Show
Shanghaied
The Tramp
A Woman
Work
1916
Behind the Screen
The Count
The Fireman
The Floorwalker
One A.M.
The Pawnshop
Police!
The Rink
The Vagabond
1917
The Adventurer
The Cure
Easy Street
The Immigrant
1918
The Bond
Chase Me Charlie
A Dog's Life
Triple Trouble
1919
A Day's Pleasure
Sunnyside
1921
The Idl
1921
The Idle Class
1922
Pay Day
1923
The Pilgrim
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சார்லி சாப்ளின் Empty Re: சார்லி சாப்ளின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum