தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம்

3 posters

Go down

முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் Empty முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம்

Post by 3tamil78 Wed Nov 03, 2010 9:52 am


முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம்

நீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் “ஓட்டிச்” சொல்லப்பட்டனர்.
இந்திய இனங்களிலேயே இந்தச் “சிறப்பைப்” பெற்ற ஒரே இனம் தமிழினம் தான். எனவே, இந்திய இனங்களிலேயே, கணிசமான அளவு பல வெளிநாடுகளில் வாழும் ஒரே இனம், தமிழினம் தான். இலங்கையிலே வந்தேறி சிங்களவர், மண்ணின் மைந்தர்களான தொல்குடித் தமிழர்களை வதை செய்ய, இந்தியா தனது விடுதலை நாள் முதல் இன்றுவரை, உதவியது என்பது வரலாறாய் உள்ளபோது, மேற்குறிப்பிட்ட தேசங்களில் வாழும் தமிழர்களைக் காக்க, இந்தியாவிடம் நாம் இனியும் மன்றாடி நிற்க இயலாது. அந்நாடுகளிலுள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க தமிழர்களுக்கான ஒரு தேசம் தேவை.
தமிழர்களுக்கான ஒரு வலுவான தேசம் இன்றியமையாதது. இந்தியா என்ற ஒற்றை நாட்டில், 544 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 40 தமிழ் உறுப்பனர்களால் தமது இன உரிமைகளைக் காத்துக் கொள்ள இயலாது. கச்சத்தீவை நம்மால் காக்க இயலவில்லை. இந்தியாவின் தெற்கே தமிழ்நாடு. இலங்கையின் வடக்கே தமிழீழம். இடைப்பட்ட பாக் நீரிணை தமிழனுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால், சம்மந்தமே இல்லாத சிங்களவன் அங்கு தமிழக மீனவர்களைத் துரத்துகிறான், கொல்கிறான். வெட்கக்கேடு 150 ஆண்டுகளாக, ஆங்கிலேயர்களால் அடிமைகளாக அழைத்துச் சொல்லப்பட்டு, இலங்கையைப் பொன்னாக்கிய இந்தியத் தமிழர்களை சிங்களன் நாடற்றவராக்கிய போது, இந்தியா அதை ஆமோதித்தது.
6,00,000 இந்தியத் தமிழர்களை அது அகதிகளாக இந்தியாவிற்கு அழைத்துக் கொண்டது. அதைத் தடுக்க நம்மால் இயலவில்லை. அமைதிப்படை என்ற பேரில் ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களை வேட்டையாடியது. நம்மால் தடுக்க இயலவில்லை. தற்போது தமிழ் மக்களின் ஒரே அரணாக இருந்த புலிகளையும் வீழ்த்தி, அம்மண்ணின் மைந்தர்களான தமிழர்களை, வந்தேறிகளான சிங்களவருக்கு அடிமையாக, நாதியற்ற இனமாக இலங்கையில் இந்தியா தான் வைத்திருக்கிறது. அனைத்து இந்திய ஒத்துழைப்போடு நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில், கடந்த ஓராண்டில் மடிந்தவர் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான அப்பாவித் தமிழர்கள். இந்தக் கொடும் பழியிலிருந்து இந்தியாவால் மீள இயலாது! இலங்கையில் இரண்டே இனங்கள்.
தமிழ் சிறுபான்மை இனம். சிங்களப் பேரினம். அங்கு தமிழனை, சிங்களவன் நேரிடையாகத் தாக்குகிறான். தமிழர் நிலத்தை அபகரிக்கிறான். அது போன்று பல்லின இந்தியாவால் செய்ய இயலாது. இங்கே அது மறைமுகமாக பல்வேறு முகங்களில் நடைபெறுகிறது. சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்து, தமிழனின் சொந்தக் கடலில், தமிழ் மீனவர்களைப் படுகொலை செய்ய இந்தியா உதவுகிறது. கருணாநிதி போன்ற எட்டப்பர்களை பணத்தையும், பதவியையும் காட்டி உருவாக்கி அவர்களின் மூலமாக நமது வளங்களை ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியா விற்கிறது. பார்ப்பன, பனியா இந்தியாவும் ஒரு ஏகாதிபத்திய நாடு தான். அது தமிழரது உரிமைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கிறது. டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற எண்ணற்ற ஏகாதிபத்தியங்களை வளர்த்துவிடத் தான் இந்திய சட்டங்கள் பயன்படுகின்றன.
இங்குள்ள பெரும்பான்மை ஏழை மக்களை இலவசங்களை எதிர்நோக்கும் பிச்சைக்கார இனமாக வைத்திருக்கத்தான் அதன் சட்டங்கள் பயன்படுகின்றன. தமிழர்கள் தமது அறிவாலும். கடின உழைப்பாலும் ஒப்பீட்டளவில் பொருளாதாரத்தில் உயர்ந்துள்ளனர். அத்தகைய நமது நிலத்தை நோக்கி மற்ற இனமக்கள் கும்பல் கும்பலாகப் பிழைக்க வருகிறார்கள். இங்கே வரும் அம்மக்கள், வந்த மாத்திரத்திலேயே வாக்குரிமை பெற்று, இங்குள்ள அரசை அமைப்பதிலும் பங்கு வகிக்கின்றனர். இது நீண்ட காலத்தில் நமது தாயகத்தை இழப்பதில் கொண்டு போய் முடிக்கும். நமது வளங்களை அவர்கள் சுவீகரித்துக் கொள்வார்கள், கொண்டிருக்கிறார்கள். தமிழரின் பெருமை பேசும் தஞ்சை பெரிய கோயிலிலுக்கு அறங்காவலர், இன்றும் ஒரு மராத்தியன் என்பது ஒரு சிறு சான்று.
தமிழ்ப்பகுதியில் தஞ்சம் புகுந்த ஆரியன் தமிழரின் இசையைக் களவாடி கர்நாடக சங்கீதம் என்றது மட்டுமில்லாமல் தமிழ் என்ற தீட்டு மொழியில் பாடல் பாடக்கூடாதென்று சொன்னான். பலநூறு வருடங்களாக நடத்தியும் காண்பித்தான். தமிழரின் நாட்டியக்கலையை, தேவதாசி முறை ஒழிக்கப்பட்ட பிறகு கைப்பற்றி, தமது பாரம்பரியக் கலையாக ஆக்கிக் கொண்டனர் ஆரியர்கள். பார்ப்பனீயத்தால் தமிழருக்கு ஏற்பட்ட நசிவுகளை முழுமையாக விளக்க, இக்கட்டுரையில் இடமில்லை. மாற்றானை நமது மண்ணிலே அனுமதித்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு இவை சில ஆணித்தரமான சான்றுகள். ஈழத்தில் வந்தேறிய சிங்களன், அம்மண்ணின் மைந்தர்களைப் படுகொலை செய்து, அவர்களின் தாயகத்தைப் பறிப்பது மற்றுமொரு ஆணித்தரமான சான்று.
இந்தியாவிலேயே தமிழினம் மட்டும் தான் தனித்துவமான மொழியும், பண்பாடும் கொண்ட இனம். ஆரியம் அன்றிலிருந்து இன்று வரை தமிழரின் மீது அளவில்லா பொறாமை கொண்டு நம்மை ஒரு பகையினமாகக் கருதுகிறது. தமிழ் மொழியை அழிப்பதிலும், தமிழரின் தாயகத்தை விழுங்குவதிலும் அது நீண்ட கால செயல்திட்டத்தோடு செயல்படுகிறது. உலகம் தழுவிய தமிழர்களின் நலன்களைப் பேணவும், தமிழரின் நிலம், மொழி, பண்பாடு இவற்றைக் காக்கவும், பேணவும் நமக்கான தேசங்கள் இன்றியமையாதன. இதை உணரும் நாம் தமிழ் தேசியத்தை அடைய, இனி என்ன செய்ய வேண்டும் என்று ஆராய வேண்டும். பாரதி, இந்திய விடுதலை அடைவதற்கு முன்பே, ” ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று” பாடியது போல, தற்போதே நாம் தன்னுரிமை பெற்றுவிட்டதாகக் கொண்டாடத் தொடங்க வேண்டும்.
அத்தகைய கொண்டாட்டங்கள் மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். தன்னுரிமைப் போராட்டங்களுக்கு மக்களைத் தயார் படுத்தவும் உதவும். கொண்டாட்டம் என்றாலே அதற்கான ஒரு அடையாள நாள் தேவை. அந்தப் பொன்னான நாளைக் கண்டறிய வேண்டியது அடுத்த கடமை. சுதந்திரத்திற்குப் பிறகு, பொட்டி ஷ்ரீராமுலு என்ற தெலுங்கரின், தெலுங்கு மொழி மக்களுக்கு தனிமாநிலம் வேண்டி பட்டினிப் போராட்டம் செய்து உயிர்நீத்த பின்னணியில், 1956 நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, சென்னை மாகாணமாயிருந்த பகுதிகள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டன. இந்த நாளை கர்நாடகா ராஜ்யோத்சவா நாளாகக் கொண்டாடுகிறது. நவம்பர் 1ல் தொடங்கும் அவர்களது கொண்டாட்டம் ஒரு மாதம் முழுக்க சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில், மாநிலத்திற்கான கொடியும் உள்ளது. அந்தக் கொடியை, பெரிய சாலைகளிலிருந்து பிரியும் தெருக்களின் முச்சந்திகளில், நிரந்தரக் கொடிக்கம்பம் கட்டி, பறக்க விடுகின்றனர். இது போன்ற விழாக்கள் ஆந்திரா, கேரளாவிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படுகின்றன. அங்கும் மாநிலங்களுக்கான கொடிகளும் உள்ளன. இந்த மாநிலங்களிலெல்லாம் அரசு விடுமுறையும் விடப்படுகிறது. ஆனால், நாசமாய்ப்போன தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கட்சிகள், இந்த நாளைக் கொண்டாடுவதும் இல்லை, இவர்கள் தமிழகத்திற்கான ஒரு கொடியையும் இன்றுவரை உருவாக்கவில்லை. தமிழகத்தில் தான், இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையில் கட்சிகள் உள்ளன, சாதிக் கட்சிகளையும் சேர்த்து.
ஆனால், இந்த அரம்பர்கள் கூட்டம், இதுவரை தமிழ் மக்களுக்கான ஒரு பொதுக் கொடியை உருவாக்கவில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. இதிலே மனதைப் பதறவைக்கும் முரண் என்னவென்றால், தமிழ் நாட்டில் மட்டும் தான் “திராவிட தேசம்” கோரப்பட்டது. பிரிவினை கோரும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தை ஜவகர்லால் நேரு கொண்டுவரப் போகிறார் என்றவுடன் தி. மு. க. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது, அண்ணாவின் காலத்திலேயே தான். பிறகு வந்த கருணாநிநி மாநில சுயாட்சி கோஷமிட்டார். இதை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்திய கருணாநிதி, ஒரு கொடியையாவது உருவாக்கி இருக்க வேண்டாமா? மற்ற மாநிலங்களைப் போல, நவம்பர் 1ல் மாநில விடுமுறை விட்டிருக்க வேண்டாமா? இந்த நாளை மற்ற மாநிலங்களைப் போல, ஒரு சிறப்பான நாளாகக் கொண்டாடி இருக்க வேண்டாமா? ஆனால், இந்த “மஹா புருஷன்” ஓணம் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் விடுமுறை விடுகிறார்.
ஹோலிப் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறார். இதையெல்லாம் செய்து மாற்றானிடம் ஓட்டுப் “பொறுக்கும்” இவர், தமிழுக்காக செய்ததெல்லாம் வெற்று ஆரவாரம் தான்! கருணாநிதியின் “நச்சு” அரசியல் இப்போது தான் பலருக்கும் தெளிவாகப் புரிகிறது! இந்த மஹாபுருஷன், தான் ஒரு (இந்திய) அடிமை, தன்னால் என்ன செய்ய முடியும் என்பார். அதேநேரம், இந்தியாவின் கொள்கைதான் தனது கொள்கை என்றும் சொல்லுவார். ஒரு அடிமை தனது ஆண்டையின் கொள்கையை ஏற்கிறார் என்றால், அந்த அடிமையின் தராதரம் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சரி……! இனி செய்வதைக் காண்போம்!! மேற்சொன்னது போல, நவர்பர் 27 ஐ நாமும் ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாடலாம். தமிழரைப் பொருத்தவரை நவம்பர் மாதம் ஒரு சிறப்பான மாதமும் கூட.
இந்த மாதத்தில் தான் மாவீரர் தினமும் கொண்டாடப்படுகிறது. தமிழரின் தீப ஒளித்திருநாளான “கார்த்திகை தீபமும்” இந்த மாதத்தில் தான். உலகத்தில் தமிழினத்தின் பெருமையை சொன்ன தமிழ்த் தேசியத்தை உருவாக்கித்தந்த மேதகு பிரபாகரன் அவதரித்ததுவும் இந்த புனித மாதத்தில்தான். நவம்பர் “தமிழ்த் தேசிய நாள்” நவம்பர் தொடங்கும் இந்தத் “தமிழ்த்தேசிய நாள்” கொண்டாட்டத்தை நவம்பர் மாதம் முழுக்க, அரங்கக் கூட்டங்களாகவும், பொதுக்கூட்டங்களாகவும் கொண்டாட வேண்டும். அதில் தமிழரின் மாண்புமிகு வரலாறு, பண்பாடு, மொழிச் சிறப்பு, பண்டைய இலக்கியங்கள், பண்டைய அறவியல், பண்டைய அறிவியல், பண்டைய சமூதாயவியல் என்ற தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள், கலைநிகழ்ச்சிகள் நிகழ்த்தப் படவேண்டும்.
எதிர்காலத் திட்டமிடல் கருத்தரங்குகளும் நடத்த வேண்டும். மரபியல் அடிப்படையில், தென்னிந்தியர்கள் அனைவருமே தமிழர்களே! ஆனால், தமிழ் என்பதை உச்சரிக்கத் தெரியாத ஆரியர்களால் தான் தற்போதைய “திராவிடம்” என்ற சொல் படிப்படியாக உருப்பெற்றது. ஆனால், கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் ஆரியரால் திட்டமிட்டு, இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட மொழிகள். தங்களின் அடையாளங்களை இழந்த இம்மக்களை இனி தமிழர்கள் என்று அழைக்க இயலாததால், திராவிடம் என்ற தமிழர் மரபினத்தை அன்று ஆரியரால் பிழையாக அழைக்கப்பட்ட, பொதுப் பெயராலேயே அழைக்கின்றனர். பெரியார் அவர்கள் தமிழும் சமஸ்கிருதமும் சேர்ந்து உருவான மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லாம், எனவே அவர்கள் எல்லோருமே தமிழர்கள் தான் என்றும், இம்மக்கள் அனைவரும் தமிழர்களாகவே தங்களை உணரவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
ஆனால், அவ்வம்மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களை திராவிடர்கள் என்று கூடக் கருதாமல், தங்களைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் என்றே கருதுகின்றனர். (அங்கெல்லாம் திராவிடம் என்ற சொல்லாட்சி கொண்ட ஒரு அரசியல் கட்சிகூட இல்லை.) இது அவர்களின் அறியாமையைக் காண்பிக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் தங்களைத் தமிழர்களாக உணர்வார்களா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. அதை ஆரியம் அனுமதிக்காது! ஆனால், தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் இத்தகைய மக்கள் மட்டும் தங்களை திராவிடர் என்று அழைத்துக் கொண்டுள்ளனர். அறியாமையால், தமிழகத் தமிழனும் தன்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்கிறான். திராவிடர் என்று, ஒரு அரசியல் உத்தியாக, பெரியார் பயன்படுத்திப் பிரபலப் படுத்திய சொல்லாட்சி அவராலேயே கைவிடப்பட்டு, “தனித் தழிழ்நாடு” கேட்டு தனது இறுதிக் காலம் வரை போராடினார்.
அவர் ஒரு அப்பட்டமான தமிழத்தேசியர்! எனவே, தமிழரை வீழத்திய திராவிடம் என்ற சொல்லாட்சியை இனிக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். திராவிட அரசியல் பச்சோந்திகள் தங்களை “தேசத்தால் இந்தியன், இனத்தால் திராவிடன், மொழியால் தமிழன்” என்று தமிழனைக் காயடிப்பதை இனித் தடுத்தே ஆகவேண்டும். தமிழகத்தில் நெடுநாட்களாக வாழும் அனைத்து திராவிடர்களும் தமிழர்களே! எனவே, திராவிடம் என்ற சொல்லை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி எறிவோம்! கர்நாடக, ஆந்திர, கேரள மக்கள் மட்டுமே தங்களை திராவிட இனம் என்று, விரும்பினால், இன்று அழைத்துக் கொள்ளட்டும். ஆதியிலிருந்து தமிழர்கள் தமிழர்களே! இவர்களைத் திராவிடர்கள் என்றழைப்பது அடிப்படையிலேயே பிழையானது.
அப்படிப் பிழையாக அழைத்துக் கொண்டதால் தான் தமிழர்கள், தங்களைத் தமிழர்கள் என்று உணரமுடியாமல் வந்தேறிகளின் ஆட்சியில் அடிமைகளாக வாழ்கின்றனர். அனைத்து திராவிட அரசியலையும் முற்றுமாக வீழ்த்துவோம்! உலகின் தாயினமான நமக்கு ஒரு தேசம் இன்றியமையாதது! அது இன்றுவரை இல்லாதிருப்பது கேவலமானது. ஒப்பற்ற தமிழ் மொழியையும், பண்பாட்டையும், பண்டைய தமிழிலக்கியங்களையும் உலகெலாம் பரப்புவோம். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும், தூய நல்வழி (சுத்த சன்மார்கம்) சொன்ன தமிழருக்கு இந்த உலகை நல்வழிப் படுத்தும் இன்றியாமையாத கடமையும் உள்ளது! அது நம்மால் மட்டுமே முடியும். அதற்கான கருவிகள் நம்மிடம் தான் உள்ளன! இதற்கு அடிப்படைத் தேவை தமிழ்த் தேசியம்! அதன் முதற்படி தமிழ்த்தேசிய அடையாள நாள் கொண்டாட்டங்கள்! அதற்கான செயல்பாடுகளைச் செய்யத் தொடங்குவோம்.
வெல்க தமிழ்த் தேசம்!

[You must be registered and logged in to see this link.]

இணையத்தில் மான மறவர்கள், மாத்தமிழ் மாவீரர்களுக்கு அகல் அஞ்சலி செலுத்துவோம்
[You must be registered and logged in to see this link.]

முத்தமிழ்வேந்தன்
சென்னை
avatar
3tamil78
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 50
Points : 150
Join date : 07/10/2010

Back to top Go down

முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் Empty Re: முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 03, 2010 10:53 am

முன்கூட்டியே தகவலை தந்தமைக்கு நன்றி தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் Empty Re: முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம்

Post by parthie Wed Nov 03, 2010 2:04 pm

[You must be registered and logged in to see this link.] இணயத்தை நம் தமிழ் தோட்டம் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்
parthie
parthie
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 402
Points : 484
Join date : 04/09/2010
Age : 38
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் Empty Re: முகவரி தந்த தலைவன் பிரபாகரன், தமிழ்த் தேசிய அடையாளம் நவம்பர் 27 - இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum