தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு

Go down

யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு Empty யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 18, 2011 1:50 pm

பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற இன்னோரன்ன காரணங்களுக்காக, ஓரிடத்திலிருந்து
இன்னோரிடத்துக்கு மக்கள் இடம் பெயர்ந்து செல்லுதல் புலப்பெயர்வு ஆகும்.
யாழ்ப்பாண வரலாற்றில் புலப்பெயர்வு ஒரு பொதுவான தோற்றப்பாடாக
இருந்துவருகிறது. யாழ்ப்பாண மக்களின் புலப்பெயர்வு மிகப் பழைய காலம் முதலே
நடந்து வருகின்றது ஆயினும் இருபதாம் நூற்றாண்டில் இது அதிகமாக உள்ளது.
யாழ்ப்பாண அரசுக்கு முந்திய காலம்

யாழ்ப்பாண
அரசுக்கு முந்திய காலத்தில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் குடியேற்றப் பரம்பல்
பற்றிய தகவல்கள் மிகவும் குறைவு. தென்னிந்தியத் தமிழ் இலக்கியங்களிலும்,
இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சத்திலும் ஆங்காங்கே யாழ்ப்பாணப் பகுதி
பற்றிய தகவல்கள் சில கிடைத்தாலும் அவை போதுமானவையல்ல. அக்காலத்தில்
யாழ்ப்பாணப் பகுதி பெருமளவு குடித்தொகை கொண்டதாக இருந்திருக்கும் எனச்
சொல்லமுடியாது. அப்போது இலங்கைத் தீவிலிருந்த யாழ்ப்பாண மக்களின்
முன்னோர்கள் பலர் யாழ்ப்பாணப் பிரதேசத்துக்கு வெளியில் வன்னிப்
பகுதிகளிலும், சிங்கள அரசர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும்
இருந்திருக்ககூடிய சாத்தியங்கள் உண்டு. வன்னியில் தற்போதைய மன்னார்
மாவட்டத்திலுள்ள மாதோட்டப் பெருந்துறையிலும் அண்டியிருந்த குடியேற்றங்கள்
பலவற்றிலும் பெருமளவில் தமிழர் இருந்தனர். அனுராதபுரம், பொலநறுவை போன்ற
பண்டைய இலங்கைத் தலைநகரங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்
வாழ்ந்துவந்தனர். மாதோட்டத் துறைமுகத்தின் செல்வாக்கு இழப்பும்,
தென்னிலங்கையின் சிங்கள அரசுகளின் தெற்கு நோக்கிய நகர்வும்
அடிக்கடியேற்பட்ட தென்னிந்தியப் படையெடுப்புக்களும் இலங்கைத் தீவில் இன
அடிப்படையிலான முனைவாக்கத்தை ஏற்படுத்தின. இவை தமிழ் மக்கள்
யாழ்ப்பாணத்துக்கு வெளியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குள் வந்த உள்நோக்கிய
புலப்பெயர்வை ஏற்படுத்தியது.

யாழ்ப்பாண அரசுக் காலம்

இந்த
முனைவாக்கம் யாழ்ப்பாண அரசுக் காலத்திலும் தொடர்ந்தது. இதனுடன் கூடவே
தென்னிந்தியாவிலிருந்தும் மக்கள் யாழ்ப்பாணத்துக்குள் வந்தனர். யாழ்ப்பாண
வரலாற்று நூல்களான யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை, வையாபாடல் போன்றவை இது
பற்றிக் கூறுகின்றன.

போத்துக்கீசர் காலப் புலப்பெயர்வுகள்

போத்துக்கீசர்
காலத்திலும் இரண்டு விதமான புலப்பெயர்வுகள் இடம் பெற்றதாகத் தெரிகின்றது.
ஒன்று போர்த்துக்கீசரின் இந்து சமயத்துக்கு எதிரான நடவடிக்கைகள்
தொடர்பானது. சமய உணர்வு மிக்க இந்து மக்கள் பலர் தங்கள் ஊர்களை விட்டு
மறைவான பகுதிகளுக்குச் சென்றமை பற்றிய வாய் வழித் தகவல்கள் உண்டு. சிலர்
இந்தியாவுக்குத் தப்பியோடியதும் உண்டு. என்றாலும் இவ்வாறான புலப்பெயர்வுகள்
பெருமளவில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதைவிட வன்னிக்கு ஊடாகப்
போக்குவரத்துச் செய்யும் போத்துக்கீசப் படைகளின் அட்டூழியங்கள் காரணமாக பல
ஊர்கள் கைவிடப்பட்டதும் போத்துக்கீசர் குறிப்புக்களில் பதியப்பட்டுள்ளன.
இவ்வாறு வெளியேறியோரில் பலரும் யாழ்ப்பாணப் பகுதியில் குடியேறியிருப்பது
சாத்தியம்.

மலாயா, சிங்கப்பூருக்கான புலப்பெயர்வு

யாழ்ப்பாணத்தில்
பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பப் பத்தாண்டுகளில் கல்வி கற்ற மத்தியதர
வர்க்கத்தின் எழுச்சி ஏற்பட்டது. அக்காலத்தில் மலாயா, சிங்கப்பூர் ஆகிய
நாடுகளில் ஏற்பட்ட சில வகையான அரச பதவிகள் யாழ்ப்பாண மக்களுக்குப்
பொருத்தமாக அமைந்ததால் பெருமளவு யாழ்ப்பாண இளைஞர்கள் இந்த நாடுகளுக்குப்
புலம் பெயர்ந்தனர். ஆரம்பத்தில் தனியாகவே சென்ற இவர்கள் தங்களை
நிலைப்படுத்திக்கொண்ட பின்னர் யாழ்ப்பாணத்துக்கு வந்து திருமணம் செய்து
தங்கள் மனைவியரையும் அங்கே அழைத்துக்கொண்டார்கள். இது யாழ்ப்பாணத்தவரின்
வெளிநோக்கிய புலப்பெயர்வின் ஆரம்ப கட்டம் எனலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum