தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆஸ்துமா என்றால் என்ன?

Go down

ஆஸ்துமா என்றால் என்ன? Empty ஆஸ்துமா என்றால் என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 5:13 pm

ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள்
என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள்
ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களி‌ன் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம்
கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும்
ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில்
எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போ‌ன்றவை
செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக
செயல்படும்.

இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது
சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு
காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது.
சுவாச‌க் குழா‌ய்க‌ள் சுரு‌ங்குவதா‌ல், அத‌ன் வ‌ழியாக கா‌ற்று‌ச்
செ‌ன்றுவரு‌ம்போது அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்‌கிறது. மேலு‌ம், நம் உடலில்
உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.

இதன்
விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி
இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை
அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அ‌திகமாக‌க்
காணப்படும்.

ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா
நோய்கண்டவ‌ர்க‌ள் பல‌ர் இந்த நோயினை கட்டுப்பா‌ட்டி‌ல்
வை‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம்
இரு‌க்கு‌ம். அ‌ப்போது உ‌ரிய மரு‌த்துவ‌ம் செ‌ய்து கொ‌ண்டு மற்றவர்களை போல
சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.

ஆஸ்துமாவின் பாதிப்பு
மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு
ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை.
(உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில், அவசர
மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும்
கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.

எனவே ஒருவர்
ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து,
முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா
வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும்.
மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உட்கொள்ள வேண்டிய
மருந்துகளை பரிந்துரைப்பார்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆஸ்துமா என்றால் என்ன? Empty Re: ஆஸ்துமா என்றால் என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 5:13 pm

நோயின் காரணங்கள்

நாம் சுவா‌சி‌க்கு‌ம் கா‌ற்று உ‌ட்பட
சுற்றுச்சூழலில் காணப்படுகிறது ‌சில பொரு‌‌ட்க‌ள், ஆஸ்துமா வியாதிக்கான
அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான
சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா
பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று
போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ்
கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.

பொது வகையான அலர்ஜின்ஸ் (ஒவ்வா பொருட்கள்)

1. மிருகங்களின் (உடலின் மேல்) உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)
2. தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் இரு‌க்கு‌ம் தூசியில் காணப்படுபவை)
3. கரப்பான்பூச்சி
4. மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்
5. மேல் பூசு பொருட்கள் - பெயின்ட், டிச்டம்பர் போன்றவை
6. சிகரட் புகை
7. காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்
8. குளிர்ந்த காற்று அல்லது த‌ட்பவ‌ெ‌ப்பநிலை மாற்றம்
9. வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை
10. நருமண மூட்டப்பட்ட பொருட்கள்
11. கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)
12. ஆஸ்பரின் மற்றம் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்
13. உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள் (உலர்ந்த பழவகைகளில் அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)
14.
வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது
ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு
கொண்டு செல்லும்.
15. இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.
16. நோய்தொற்றுதல்
17. குடும்ப பின்னணி
18. குழந்தைகள் புகை‌யிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌ம் புகையை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது.
19.
ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க
நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.
19. உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆஸ்துமா என்றால் என்ன? Empty Re: ஆஸ்துமா என்றால் என்ன?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Apr 25, 2011 5:14 pm

நோயின் அடையாள அறிகுறிகள்

மூச்சுத்தினறல் - திடீரென ச‌ளி ‌பிடி‌த்த‌ல், கா‌ய்‌ச்ச‌ல் போ‌ன்ற பாதிப்புக்குள்ளாகுதல், இது அடிக்கடி ஏற்படுதல்
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல்
குளிர்ச்சியான
பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை
மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானாகவே
மறைந்துவிடும்
மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல்
இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல்
சாதாரணமாக வேலைக‌ள் செ‌ய்யு‌ம்போது மூச்சு இறைப்பினால் உட‌ல்‌நிலை மோசமாகுத‌ல் போ‌ன்ற அ‌றிகு‌றிக‌ள் காண‌ப்படு‌ம்.

பரிசோதனைகள்

எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (பி.எப்.டி.) போ‌ன்ற ப‌ரிசோதனைக‌ள் மூல‌ம் ஆ‌ஸ்துமாவை‌க் க‌ண்ட‌றியலா‌ம்.

கா‌ய்‌ச்சலை
அள‌‌ப்பத‌ற்கு தர்மாமீட்டர் உள்ளது போ‌ல், ஆஸ்துமாவிற்கும் பீக்ப்ளே
மீட்டர் என்னும் ஒரு கருவி உ‌ள்ளது. இதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ஒரு
நுரை‌யீர‌ல் எ‌வ்வளவு சீராக காற்றை வெளியே விடுகிறது எ‌ன்பதை
அளவெடு‌க்கலா‌ம்.

சிகிச்சை முறை

சரியான சிகிச்சை முறையினால்,
ஆஸ்துமாவை சுலபமாக குணப்படுத்த முடியும். குண‌ப்படு‌த்த முடியு‌ம் எ‌ன்பது
சாதாரண வாழ்க்கையை வா‌ழ்வத‌ற்கான சூழலை ஏ‌ற்படு‌த்துவது. ஆ‌ஸ்துமா
நோயா‌ளிகளு‌க்கு, இன்ஹேலர் பேருத‌வி பு‌ரியு‌ம். ‌கையட‌க்க இ‌ன்ஹேலரை
எ‌ப்போது‌ம் உட‌ன் வை‌‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம்போது
அதனை நேரடியாக நுரை‌யீரலு‌க்கு‌ள் உ‌ட்சுவா‌சி‌த்து‌க் கொ‌ண்டு இய‌ல்பாக
சுவா‌‌சி‌க்க முய‌ற்‌சி செ‌ய்யலா‌ம். முடியு‌ம்.


எதுவாக இரு‌ந்தாலு‌ம் மரு‌த்துவ‌ரி‌ன் ப‌ரி‌ந்துரை‌யி‌ன்படியே செ‌ய்ய வே‌ண்டு‌ம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஆஸ்துமா என்றால் என்ன? Empty Re: ஆஸ்துமா என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum