தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



2ஜி முறைகேடு: 'மெளனச் சாமி' மன்மோகன்-உண்மைகளை மறைத்த ராசா-பிஏசி குற்றச்சாட்டு

2 posters

Go down

2ஜி முறைகேடு: 'மெளனச் சாமி' மன்மோகன்-உண்மைகளை மறைத்த ராசா-பிஏசி குற்றச்சாட்டு Empty 2ஜி முறைகேடு: 'மெளனச் சாமி' மன்மோகன்-உண்மைகளை மறைத்த ராசா-பிஏசி குற்றச்சாட்டு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Apr 28, 2011 2:30 pm

டெல்லி: ஆ.ராசா நியாயமற்ற முறையில் சட்ட விரோதமாக தனது விருப்பம் போல் 2ஜி
ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கீடு செய்ய பிரதமர் பச்சைக் கொடி காட்டியதாகவே
தெரிகிறது என்று நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தனது வரைவு அறிக்கையில்
குற்றம் சாட்டியுள்ளது.

2ஜி
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்திய பாஜக
தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பொதுக்கணக்கு குழுவின் விசாரணை
வரைவு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் முறையான
ஆலோசனைகளை வழங்கவில்லை. தவறு நடக்க இருப்பதை பிரதமர் அலுவலகம்
முன்கூட்டியே அறிந்து சொல்ல தவறி விட்டதாகவும், அமைதியாக இருந்து நடந்த
தவறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் கருத வேண்டி உள்ளது.

அலைவரிசை
ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த சில பிரச்சனைகள் குறித்த தனது உண்மையான
கவலைகளையும், அதே சமயத்தில் கண்டிப்பான சில ஆலோசனைகளையும் தெரிவித்து
2007ம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் மன்மோகன் சிங் எழுதிய கடிதத்தை
தொலைத்தொடர்பு துறை மந்திரி ஆ.ராசா அலட்சியப்படுத்திவிட்டார்.

உண்மைகளை மறைத்த ராசா:

ஸ்பெக்ட்ரம்
அலைவரிசையை ஏல முறையில் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டதாகவும், ஆனால்
அப்படி ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது பற்றி தொலைத்தொடர்பு கமிஷனோ அல்லது
தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமோ சிபாரிசு செய்யவில்லை என்றும்
பிரதமருக்கு ஆ.ராசா தகவல் தெரிவித்ததன் மூலம் அவர் பாதி உண்மையை தெரிவித்து
பாதி உண்மையை மறைத்திருக்கிறார். தனது நோக்கத்தை அவர் மறைத்து விட்டார்.
இதன் மூலம் அவர் பிரதமரை தவறாக வழி நடத்தி இருக்கிறார்.

இந்தப்
பிரச்சனையில் பிரதமர் அலுவலகம் தலையிடுவது இல்லை என்று பிரதமர் அலுவலகம்
முடிவு செய்ததன் மூலம் ஆ.ராசா நியாயமற்ற முறையில் சட்ட விரோதமாக தனது
விருப்பம் போல் அலைவரிசையை ஒதுக்கீடு செய்ய பிரதமர் பச்சைக்கொடி
காட்டியதாகவே தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு பற்றி
முடிவு செய்வதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை அமைக்குமாறு சட்ட அமைச்சர்
யோசனை தெரிவித்ததை பிரதமர் அலுவலகம் அறிந்திருந்தது. ஆனால் சில
காரணங்களுக்காக அப்படி குழு அமைப்பதை ராசா விரும்பவில்லை. இதனால்தான்
அந்தக் குழுவை அமைப்பதற்கு பிரதமர் அலுவலகம் எந்த முயற்சியும்
மேற்கொள்ளவில்லை. மொத்தத்தில் பிரதமர் அலுவலகம் முறைகேடுகள் நடைபெறுவதை
தடுத்து நிறுத்த தவறி, வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்திருக்கிறது.

ஸ்பெக்ட்ரம்
அலைவரிசை ஒதுக்கீடு லைசென்ஸ் வழங்குவது தொடர்பாக அப்போதைய வெளியுறவுத்துறை
அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய குறிப்பில்,
அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான கொள்கையை மாற்றி அமைப்பது பற்றியும், புதிய
வரைமுறைகளை வகுத்து அவற்றை பின்பற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும்
குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அவர், ராசாவுக்கு தவறான யோசனை எதுவும்
வழங்கவில்லை என்று தெரிகிறது.

ஆனால் ராசா சில உண்மைகளை மறைத்து
பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை பற்றாக்குறை
காரணமாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் பெறும் கடைசி தேதியை 2007ம் ஆண்டு
செப்டம்பர் 25ம் தேதி என்று நிர்ணயித்ததாக பிரதமருக்கு கடிதம் எழுதிய ராசா,
மற்றொரு சந்தர்ப்பத்தில் சில புதிய நிறுவனங்களுக்கு போதிய அலைவரிசை ஒதுக்க
முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெக்ட்ரம்
அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி
அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய
கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த சில தகவல்கள் மிகவும் துரதிருஷ்டமானவை
என்று பொதுக்கணக்கு குழு கருதுகிறது.

அரசு கஜானாவுக்கு பணத்தை
கொண்டு வந்து அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் நிதியமைச்சர்.
அலைவரிசை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு காரணமானவர்கள்
மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள
வேண்டிய இடத்தில் இருந்த ப.சிதம்பரம், இது முடிந்து போன பிரச்சனை என்று
விட்டு விடுமாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது மிகவும்
துரதிருஷ்டமானது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த
முறைகேட்டில் அரசு கஜானாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது அம்பலத்துக்கு வந்த
பிறகு கூட பொருளாதார விவகார துறையின் செயலாளர் இந்த பிரச்சனையை மத்திய
கேபினட் செயலாளரின் கவனத்துக்கோ அல்லது நிதி அமைச்சகத்தின் கவனத்துக்கோ
கொண்டு செல்லத் தவறி விட்டார். இதுபற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் பொதுக்
கணக்கு குழு விசாரணை நடத்திய போது அவர்களில் சிலர் பதில் எதுவும் சொல்லாமல்
அமைதி காத்தனர். சிலர் இந்த பிரச்சனையை முடிந்த விவகாரமாக கருதி மறந்து
விடுமாறு கேட்டுக்கொண்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த
அறிக்கைக்கு திமுக, காங்கிரஸ் ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்துள்ள
நிலையில், பொதுக்கணக்கு குழுவின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் இந்த
அறிக்கை குறித்து கடும் மோதல் நடக்கும் என்று தெரிகிறது.

21 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிட்டத்தட்ட சமமாக எண்ணிக்கையில் உள்ளனர்.

நன்றி தேட்ஸ் தமிழ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

2ஜி முறைகேடு: 'மெளனச் சாமி' மன்மோகன்-உண்மைகளை மறைத்த ராசா-பிஏசி குற்றச்சாட்டு Empty Re: 2ஜி முறைகேடு: 'மெளனச் சாமி' மன்மோகன்-உண்மைகளை மறைத்த ராசா-பிஏசி குற்றச்சாட்டு

Post by கவிக்காதலன் Sun May 01, 2011 7:55 pm

ஆச்சரியம்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

Back to top

- Similar topics
» ஏர்ஏசியா முறைகேடு : சிதம்பரம், அஜித்சிங் மீது சிபிஐ வழக்கு
» 2ஜி விவகாரம்: ஜோஷியின் அறிக்கைக்கு காங்-திமுக பிஏசி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு
» போலீசாருக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு; ஒன்றின் விலை ரூ.2 லட்சம்!!!
» வி‌ஸ்வரூப‌ம் எடு‌க்கும் டிஎ‌ன்‌பிஎ‌ஸ்‌சி முறைகேடு செ‌ன்னை உ‌ள்பட 42 இட‌ங்க‌ளி‌ல் ல‌‌ஞ்ச ஒ‌ழி‌ப்பு‌த்துறை‌யின‌ர் சோதனை
» நிதி முறைகேடு: லலித்மோடிக்கு சென்னை போலீஸ் சம்மன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum