தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )
3 posters
Page 1 of 1
இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )
வசந்த காலம் வந்துவிட்டதை குயில் கூவி தெரிவித்தது. வானம் மேக மூட்டத்துடன் இருக்க, சூரியன் பூமியில் பட அவசரபட்டு கொண்டிருந்தான்.
பிரவீன், டேய்... பிரவீன் !! எழுந்திருடா விடிஞ்சாச்சு!!.
அம்மா குரல் கேட்டு கண்விழித்தான் பிரவீன். சோம்பல் முறித்து பிரஷ் யையும் பேஸ்டையும் எடுத்துகிட்டு வெளியே வந்தான்.
சூரிய கதிர் கொஞ்சம் கொஞ்சமாக பூமியில் பிரசன்னமாகி கொண்டிருந்தது. சாலையில் சிறு சிறு சத்ததோடு மக்கள் நடமாடிகொண்டிருந்தனர். பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் பெல் சத்தம், இட்லி மாவு விற்பவரின் குரல், நடுவே வர்ஷா கல்லூரிக்கு போறதையும் பார்த்தான்.
இந்த இடத்தில் ''வர்ஷா''வை பற்றி. "வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரம் போல் வர்ஷா அவ்ளோ அழகு". இன்னும் சினிமா காரர்கள் யாரும் பாக்கலை, பார்த்திருந்தால்... ''ஏலம் எடுத்து நடிக்க வச்சிருபாங்க வர்ஷாவை''. இரண்டு பேரும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்தித்து கொள்வார்கள். வர்ஷா தூரத்துல வந்தாலே நம்மாளு நண்பரை யாரும் பக்கத்துல சேர்க்காம தனியா வருவான். ரெண்டு பேரும் ஓரக் கண்ணால பார்த்துட்டு போய்டுவாங்க.
அவ போன உடன், "மச்சி, இருங்கடா நானும் வரேன்" என பசங்க கூட வருவான்.
டேய் மச்சி, ஏன்டா? இன்னும் அவ கிட்ட லவ்வ'' சொல்லாம இருக்க? சொல்ல வேண்டியது தானே டா.
டேய்... இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் மச்சி, நல்லா படிக்கட்டும், எனக்கும் வேலை ஒண்ணு நல்லதா கிடைச்சபிறகு போய் பொண்ணு கேட்கிறேன் என எப்பவும் நியாயாமா பேசுவான் பிரவீன்...
டேய்!! நீ அவ்ளோ நல்லவனாடா?
டேய் அடங்குங்கடா... இது பிரவீன்.
"அடங்குங்கடா"... இது பிரவீன் அடிக்கடி சொல்ற வார்த்தை...
அது ஒரு சனிக்கிழமை மாலை பஸ் ல வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தான் பிரவீன். நல்ல கூட்டம், வெளிய மழை கொட்டிகொண்டிருந்தது. தேரடில வர்ஷாவும், அவ அம்மாவும் பஸ் ல ஏறுனாங்க. எதேச்சையா அவங்களைப் பார்த்த பிரவீன், அவங்களை கூப்ட்டு, "அம்மா.! இங்க உட்காருங்க"ன்னு தன்னோட சீட்டை கொடுத்தான். சாரல் அடித்து கொண்டிருந்தது இருக்கையில். ஜன்னலை கஷ்ட பட்டு மூடி தன்கைகுட்டையை கொடுத்தான் அவர்களிடம்.
"டேய்.! பிரவீனு"...பின்னாடி சீட்ல இருந்து அவன் பிரெண்ட் திவாகர் குரல் கொடுக்க, "டேய் அடங்குரியா!! என்பது போல் ஒரு முறை முறைத்தான் பிரவீன்.
மழை நின்று விட்டது. வீடும் வந்தது. ரெண்டு பேரும் எப்பவும் போல பார்த்துகிட்டே வீட்டுக்கு வந்துட்டாங்க...
வீடு,
பிரவீன் உள்ளே நுழைய, "மழையே மழையே தூவும் மழையே இது காதல் தானா'' ன்னு "ஆதி" சிந்து மேனனிடம் டூயட் பாட, சத்தமாக வைத்தான் பாடலை... உள்ள இருந்து, "டேய்!சத்தத்தை குறைடா" ன்னு அம்மா கத்த, அதை அவன் காதில் வாங்கி கொள்ளவே இல்லை.
ஒருநாள் பஸ் ல இருந்து பிரவீன் இறங்கும் போது, ஒரு பெண் குரல் கேட்டு திரும்பியவன், என்ன ?என்னையா கூப்டீங்க? என்றான்.
ஹ்ம் நான் ,நான்...சொல்லுங்க!என்ன விஷயம்?
இல்லை அது வந்து... வந்து..."சீக்கிரம் சொல்லுப்பா"... நான் கிளம்பனும்.
இல்லை, "என் பேரு அனிதா". இருகட்டுங்க, நல்ல பேரு. என்ன விஷயம்?
நான் உங்கள ரொம்ப நாளா பாலோ பண்றேன். சோ, உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நான் உங்கள லவ் பண்றேன். அதான்...
ம்ம்ம்... "உங்களை நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லை". உங்க பேர் என்ன சொன்னிங்க?... ம் அனிதா, ம் அனிதா, "என்ன பண்றீங்க நீங்க?."
"பாரதி ஆர்ட்ஸ் காலேஜ்" ல பைனல் இயர் படிக்கிறேன்...
ஹ்ம் அதை ஒழுங்கா பண்ண வேண்டியது தானே... ஏன் காதல் அது இதுன்னு... "ஒழுங்கா படிக்கிற வேலைய பாருங்கம்மா'' ''ஏன் இப்படி...
ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளுங்க...
நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்... "இது என்னது கைல?"
சாக்லேட்...!! இங்க கொடு அதை பிடிங்கி கொண்டு இனிமேல் லவ் கிவ்வுனு உன்னை இந்த இடத்துல பார்த்தேன்... ஒழுங்கா பத்திரமா வீட்டுக்கு போங்க... என சொல்லிவிட்டு, பிரவீன் வீட்டிற்க்கு வந்து விட்டான்.
காலை எப்பவும் போல அதே மாவு விற்பவர் குரல், பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் பெல் சத்தம் என நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. வர்ஷாவின் படிப்பும் முடியும் நிலையில் இருந்தது. பிரவீனும் நிறைய இன்டர்வியுவ பார்த்திட்டு அவனுக்கு பிடிச்ச ஐ டி கம்பெனில ஜாயின் பண்ணிருக்கான்... அவன் பர்ஸ் ல இருக்குற விசிடிங் கார்ட் ல ''மங்கள் இன்போசிஸ் ''ன்னு இருக்கும். அண்ணாநகர், அதான் அவன் வேலை செய்யுற அலுவலகம்.
ஒரு நாள் வர்ஷா அந்த தெருவுல போய்கிட்டு இருக்கும் போது, "பிரவீன், அவ பக்கத்துல போய் ஹே... வர்ஷா நான் உனக்காக பார்க் ல காத்திட்டு இருப்பேன் நீ மறக்காம வந்திரு" என சொல்லிச் செல்ல, வர்ஷா ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் சென்று விட்டாள்.
மாலை விதவிதமான ரோஜா பூக்களை வாங்கிகொண்டு, பிரவீன் பூங்காவிற்கு கிளம்பினான்... நடுநடுவே அந்த பூக்கள் வாடாமல் இருக்க தன் மூச்சு காற்றை அந்த பூ வைத்திருந்த பையில் அடைத்தான். பஸ்ல இருந்தவங்க எல்லாரும் ஒரு மாதிரியா பார்க்க, "ம்... இல்ல... ஒண்ணுமில்லை..." என சமாளித்தான்.
வானவில் பார்க்!
தனியே அமர்ந்திருந்தாள் வர்ஷா. அருகில் சென்றவன், "ஹே வர்ஷா! ரொம்ப நேரம் வெயிட் பண்றியா?"இல்லை. "இப்பதான் வந்தேன்!" இதுதான் வர்ஷா அவனிடம் பேசும் முதல் வார்த்தை.சரி. எதுக்கு என்னை, "இங்க வர சொன்னிங்க?"
முதல்ல இதை பிடிங்க என தான் வாங்கி வந்த ரோஜா பூக்களை கொடுத்தான் பிரவீன்.அமைதியாக வாங்கியவள், "என்ன இத்தனை வாங்கிட்டு வந்து இருக்கீங்க"...இல்லை, எல்லாமே நல்லா இருந்தது. அதான்...
எனக்கு ரோஜா பிடிக்கும்னு எப்படி தெரியும்?
ம்... ஒரு முறை பார்த்தேன், அம்மா கூட இதுக்காக சண்டை போட்டதை...
அய்யோ!!, ஆமாவா... ம்... "சரி தேங்க்ஸ்"...
இட்ஸ் ஓகே, "என்ன விஷயம்?, இங்க வர சொல்லி இருக்கீங்க?"...
இரு, சொல்றேன்... "என்னை உனக்கு பிடிக்குமா?"
லேசாய் தலை அசைத்தாள் வர்ஷா, ம்... "பிடிக்கும்".
நீ, என்னை கேட்க மாட்டியா?
ஓ... "சொல்லுங்க, "என்னை உங்களுக்கு பிடிக்குமா"?
கொஞ்சம் இல்லை, ரொம்ப பிடிக்கும்... மூணு வருஷத்து லவ்வாச்சே...
என்னது !!
ஹே... இரு, "ஏன் ஷாக் ஆகுற"? நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன். நீயும், "என்னை உனக்கு பிடிக்கும்"னு சொல்லிட்ட... வேற என்ன, "நீயும் உண்மைய சொல்லிடு"...
இல்லை, "இந்த காதல், கல்யாணம்'' னா எங்க வீட்ல சம்மதிக்க மாட்டாங்க...
உனக்கு என்னை பிடிச்சிருக்குல... மத்ததை நான் பார்த்துக்குறேன். உங்க அப்பா, அம்மா சம்மதம் ஏற்கனவே நான் வாங்கிட்டேன்.
என்ன?... ஆமாவா?... உண்மையா சொல்றீங்க?...
ம்!! உண்மைதான்... அன்னைக்கு, "உன் கூட பஸ்ல உங்க அம்மா வந்தாங்கள அன்னைக்கு தான்".
எப்படி பேசினிங்க ?
நேரா போனேன், "அம்மா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"னு சொன்னேன். அவங்களும் என்னனு கேட்டாங்க ? நான், "உங்க பொண்ணை மூணு வருஷமா லவ் பண்றேன்." இன்னும் வர்ஷா கிட்ட சொல்லலை. படிப்பு முடியட்டும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்... நீங்க சம்மதிச்சா நாளைக்கே என் அம்மா ,அப்பாவை பேச வர சொல்லுவேன். "என்ன சொல்றீங்க", உங்க சம்மதம் என்ன?னு கேட்டேன்...
அம்மா, என்ன சொன்னாங்க அதுக்கு?
"இரு, சொல்றேன்... சரி தம்பி, "உன்னை பார்த்தா நல்ல பையன் போலதான் இருக்கு" முறையாதான் வந்து பேசுற... நான் வர்ஷா அப்பா கிட்ட சொல்லிட்டு உனக்கு சொல்றேனே!!னு சொன்னாங்க...
ரெண்டு நாள் கழிச்சி, நீ வீட்ல இல்லாத போது நானும், அப்பா அம்மாவும் போய் உங்க வீட்ல பொண்ணு கேட்டுட்டோம்... "இப்ப உனக்கு சம்மதமா?"...
ஹையோ !!ஆமாவா?... "நான், இதை எதிர் பார்க்கவே இல்லை"...
என்ன பண்றது, வாழ்க்கைல நாம எதிர் பார்ப்பது சில சமயம் நடக்காது, எதிர் பார்க்காத சில விஷயம் இது போல நடந்துடும்". சரி தானே...
ம்ம்... ஆமோதித்தாள் வர்ஷா.
சரி, "நான், உங்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் ஒழுங்கா சொல்றியா"? வர்ஷா.
என்ன கேட்கணும், கேளுங்க.?
இல்லை. "என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா? என்னை நம்புறியா?"
ம்... ரொம்ப நம்புறேன்... அன்னைக்கு, நான் உங்களை பஸ்ல பார்த்தேனே... அப்பவே முடிவு பண்ணிட்டேன். அனிதா உங்க கிட்ட பேசினாலே அப்ப...
உனக்கு எப்படி தெரியும் அது?
அனிதாவைப் பேசச் சொன்னதே நானும், என் பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து தானே!!...
அடிப்பாவி, "நீ என்னை விட விவரமா தான் இருக்க !!உன்னை என்ன பண்றேன் பார்" என சொல்லி கொண்டே பிரவீன், வர்ஷாவை துரத்த செல்லமாய் ஒருவரை ஒருவர் தட்டி கொண்டனர். பூங்கா விட்டு வெளியே வரும் போது இருவரும் கை கோர்த்தபடியே வெளியே வந்தனர்.
மறுநாள், தீபாவளி மாலை பிரவீன் தன் கைபேசியில் இருந்து ஒரு குறுந்தகவலை வர்ஷாவிற்கு அனுப்பினான்,
''விண்ணில் பறக்கும் ராக்கெட்டுகள் பல அனுப்பிவிட்டேன்
ஒரே ஒரு முறை உன் வீட்டு மாடிக்கு வந்து விட்டு செல்லேன்
மனம் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிடும் தீபாவளியை ''
அதை படித்த வர்ஷா வேகமாக மாடிக்கு வந்து பிரவினை பார்க்க, கீழிருந்து கிளம்பிய வானவேடிக்கை ஒன்று உஷ்ஷ்ஷ் ஷ் .எனும் சத்தத்தோடு வெடித்து அழகாய் மேலே பூப்போல் இருவரின் மேலும் கொட்டுவதை போல் சிதறியது...
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )
ரொம்ப அருமையான கதை தம்பி பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் படைப்புகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )
நன்றி திரு .யூ அண்ணா !!
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )
சண்முகம் கதை நல்லா இருக்கு
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )
நன்றிங்க [You must be registered and logged in to see this image.]
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
Re: இது காதல் விளையாடும் தெரு(சிறு கதை )
தொடர்ந்து எழுதுங்க சண்முகம்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
shanmugam- புதிய மொட்டு
- Posts : 72
Points : 124
Join date : 29/11/2010
Age : 36
Location : Chennai
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Similar topics
» சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.
» தெரு.....
» தெரு ஓவியம் உதயமாகுது!
» நம்மவூர்த் தெரு அழுகிறதே!
» அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா?
» தெரு.....
» தெரு ஓவியம் உதயமாகுது!
» நம்மவூர்த் தெரு அழுகிறதே!
» அங்காடித் தெரு அவ்வளவு மோசமான படமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum