தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
6 posters

Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by அ.இராமநாதன் Sun May 01, 2011 2:17 pm

நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான தாதா சாகேப் பால்கே
விருது பெற்ற இயக்குநர் கே பாலச்சந்தருக்கு நாடு
முழுவதிலுமிருந்து பாராட்டுக்களும் வாழ்த்துகளும் குவிகின்றன.
-
விருது பெற்றது குறித்து பாலச்சந்தர் கூறும்போது, "சிவாஜிக்கு
பிறகு எனக்கு இவ்விருது கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்விருதை தமிழ் ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்", என்றார்.
பாலச்சந்தருக்கு நடிகர்கள், இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
-
கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்:-
[You must be registered and logged in to see this link.]
==
தஞ்சைத் தரணியின் நன்னிலம்- நல்லமாங்குடி அக்ரஹாரத்தில் நமக்காகப் பிறந்தது 9, ஜீலை 1930-ல். ஆம், 80 வயது கே.பி-யின் கலையுலகப் பொது வாழ்வு அங்கே சிறு வயதில் திண்ணை நாடகங்களில் தான் ஆரம்பம்!

· சென்னை ஏ.ஜி.ஆபிஸில் 12 ஆண்டுகள் பணிபுரிந்து கொண்டே, நாடகங்கள் நடத்தி வந்தார். `மேஜர் சந்திரகாந்த்’ மிகப் பிரபலமான நாடகம். `எதிர்நீச்சல்’, `நாணல்’, `விநோத ஒப்பந்தம்’ போன்றவை மிகுந்த வரவேற்பைப் பெற்ற நாடகங்கள்!.

· கமல், ரஜினி, சிரஞ்சிவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி!.

· இதுவரை 101 படங்கள் இயக்கி இருக்கிறார். முதல் படம், `நீர்க்குமிழி’, `பொய்’ வரை பட்டியல் நீள்கிறது!.

· ஆரம்ப காலத்தில் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது கோபாலபுரத்தில் கலைஞர் இல்லத்துக்கு அருகே, மூன்றாவது தெருவில் கலைஞரைச் சந்திக்க நினைத்து, நாடகங்களில் பிரபலமான பிறகுதான் அந்தக் கனவு நனவானது!.

· தேசிய விருது, மாநில விருது, பத்மஸ்ரீ, அண்ணா விருது, கலைஞர் விருது, கலைமாமணி, ஃபிலிம்பேர், பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் என ஏராளமான அங்கீகரிப்புகள் பாலசந்தருக்கு உண்டு!.

· மனைவியின் பெயர் ராஜம், கவிதாலயா தயாரிப்புப் பணியில் இருக்கிற புஷ்பா கந்தசாமி, கைலாசம், பிரசன்னா என மூன்று குழந்தைகள். மிகுந்த இடைவெளிவிட்டுப் பிறந்ததால் பிரசன்னா மட்டும் ரொம்பச் செல்லம்!.

· பி.எஸ்சி, முடித்துவிட்டு முத்துபேட்டையில் ஓர் ஆண்டு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறார். `தென்றல் தாலாட்டிய காலம்’ என அதை ஆசையாகக் குறிப்பிடுவார்!.

· தோட்டக் கலையில் ஆர்வம், யார் உதவியையும் எதிர்பார்க்காமல், வீட்டையும் தோட்டத்தையும் தானே பெருக்கிச் சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புவார்!.

· ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யாகிருஷ்ணன் என பாலசந்தர் அறிமுகப்படுத்திய கதாநாயகிகளின் பட்டியல் இன்னும் நீளம்!.

· எம்.ஜி.ஆரின் `தெய்வத்தாய்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். சிவாஜியை வைத்து `எதிரொலி’ என ஒரே ஒரு படம் இயக்கியிருக்கிறார். அடுத்து, இவரே ஹிட் ஹீரோக்களை உருவாக்கியது வரலாறு!.

· மலையருவியும் கடற்கரையும் பாலசந்தரின் படங்களில் நிச்சயம் இடம்பெறும். `அச்சமில்லை அச்சமில்லை’ படத்தில் நடிகர்களின் பெயர்ப் பட்டியலில் பெயரையும் சேர்த்தவர்!.

· விநாயகர்தான் இஷ்ட தெய்வம், பள்ளி நாட்களில் தெரு முனையில் இருந்த விநாயகர் கோயிலுக்கு அர்ச்சகராக இருந்த அனுபவமும் உண்டு. வீட்டுக்குப் பெயர் கூட `விநாயகா’!

· பாலசந்தரின் தந்தை 18 ரூபாய் சம்பளத்தில் கிராம அதிகாரியாக இருந்து இவரை கல்லூரி வரை படிக்கவைத்து கலெக்டர் ஆக்க வேண்டும் என்பதற்காக. திரைத் துறையில் தான் பெரிய உயரக்கு வந்ததை அப்பா பார்க்கவில்லையே என்ற வருத்தம் இன்னுமும் இருக்கு டைரக்டருக்கு!.

· 1972 மார்ச் 10-ம் தேதி வரை செயின் ஸ்மோக்கர், மார்ச் 11-ம்தேதி சிறு மாரடைப்பு வர, புகைப் பழக்கத்துக்கு விடை கொடுத்தார்!

· கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 56 படங்கள் தயாரித்து இருக்கிறார். ரஜினியில் ஆரம்பித்து, ஜீவன் வரைக்கும் அவர் தயாரிப்பில் நடிக்காதவர்களை எண்ணி விடலாம்!.

· தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் படங்கள் இயக்கி இருக்கிறார் பாலசந்தர். `ஏக் துஜே கேலியே’ மூலம் கமல் ஹிந்திக்குப் போனார். எஸ்.பி.பி. பாடிய `தேரே மேரே பீச் மே’ இன்றைக்கு வரைக்கும் ஆல் டைம் ஹிட்!.

· பாலசந்தரை மானசீகமாக மிகவும் பாதித்த நடிகர் எம்.ஆர்.ராதா. நாடகங்களில் அவரது அநாயாசமான நடிப்பை எப்பவும் சிலாகிப்பார்!.

· அண்ணா அவர்களை பாலசந்தருக்குப் பிடிக்கும். `இரு கோடுகள்’ படத்தில் அவரைக் காட்டுவதற்குப் பதிலாக, அவரது குரலைவைத்து படமாக்கிய காட்சி வெகுவாக ரசிக்கப்பட்டது!.

· சீரியல்களில் சின்னதாக முகம் காட்டிய பாலசந்தர், டைரக்டர் தாமிராவின் `ரெட்டச் சுழியில்’ நண்பர் பாரதிராஜாவுடன் இணைந்து பெரும் பாத்திரத்தில் நடிக்கிறார்!.

· இன்னமும் சினிமாவின் உலகம் சினிமா பார்ப்பதும், படிப்பதும், திரையுலகம் சம்பந்தப்பட்டவர்களைச் சந்திக்கவும் தான் விரும்புவார். உறவினர்களுக்கு ஒரு புன்னகை, கையசைப்பு அவ்வளவுதான்!.

· படங்களில் பார்த்து, அவை மனதைப் பாதித்துவிட்டால். உடனே அந்த இயக்குநருக்கு நீண்ட பாராட்டுக் கடிதம் எழுதுவார். நேரிலும் சந்தித்துப் பேசி தட்டிக்கொடுப்பார். `16 வயதினிலே’ பார்த்துவிட்டு பாரதிராஜாவின் காலில் விழுவேன் என பாலசந்தர் பேசிவிட, பதறி விட்டார் பாரதிராஜா!.

· ஷீட்டிங் இருந்தால் காலை நாலரை மணிக்கே எழுந்து விடுவார், இல்லாவிட்டால் ஆறு மணி. இவரின் சுறுசுறுப்பை இன்றைய இளைஞர்களிடம் கூட காண முடியாது!.

· ஒரே ஒரு தடவை பெப்ஸி தலைவராக இருந்திருக்கிறார். நீண்ட நாள் பிரச்னைகளைக்கூட சுமுகமாகத் தீர்த்துவைத்த பெருமை உண்டு!.

· தூர்தர்ஷனில் 1990 –ல் வெளிவந்த இவரது `ரயில் சிநேகம்’ இன்றளவும் பேசப்படும் தொடர். கை அளவு மனசு, ரகுவம்சம், அண்ணி போன்றவையும் இவரது பரபரப்பான தொடர்களாகும். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் ஆரம்ப விதை போட்டார்!.


தொகுத்து வழங்குபவர்
திருமதி ஆனந்திராம்குமார்
நன்றி:
ஆனந்த விகடன்





அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 01, 2011 2:25 pm

தகவல்களை தொகுத்து வழங்கிய ஐயாவுக்கு பாராட்டுகளும் நன்றியும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by arony Sun May 01, 2011 3:52 pm

நல்ல தகவல்கள்... செயின் ஸ்மோக்கர்.. புகைப்பதை நிறுத்தியது மிக நல்ல விஷயம்..
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by செய்தாலி Sun May 01, 2011 4:25 pm

ஆரம்ப சினிமா காலகட்டங்களில் பொய்யான ஒரு கதையையோ கருத்தையோ தன் சினிமாவில்
தினிக்காதவர் நல்ல சமூக சிந்தை உள்ள இயக்குனர் (நிறைய பழைய படங்கள் உதாரணம் )

இந்த வசனம் யார் எழுதியது என்று எம் ஜி ஆர் அவர்கள் கேட்கும் படி
வசனகர்த்தாவாக இருக்கும்போதே பராட்டபட்ட்வர்

நல்ல பதிவு நன்றி ஐயா
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by ஹாசிம் Sun May 01, 2011 5:40 pm

நல்ல பதிவு நன்றி
ஹாசிம்
ஹாசிம்
மல்லிகை
மல்லிகை

Posts : 107
Points : 175
Join date : 19/03/2011

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by அ.இராமநாதன் Sun May 01, 2011 8:01 pm

[You must be registered and logged in to see this image.]
-
பதிவினை ரசித்தவர்களுக்கு நன்றி...
-
பாலச்சந்தர் இயக்கிய படங்களின்
பட்டியல்
============================

நீர்க்குமிழி
மேஜர் சந்திரகாந்த்
இரு கோடுகள்
பூவா தலையா
பாமா விஜயம்
தாமரை நெஞ்சம்
நான் அவனில்லை
புன்னகை
எதிர் நீச்சல்
சிந்து பைரவி
அபூர்வ ராகங்கள்
தண்ணீர் தண்ணீர்
அச்சமில்லை அச்சமில்லை
அக்னிசாட்சி
வறுமையின் நிறம் சிகப்பு
புதுப்புது அர்த்தங்கள்
வானமே எல்லை
ஜாதிமல்லி
நூற்றுக்கு நூறு
கல்கி
பார்த்தாலே பரவசம்
பொய்
& etc...
================================
சிரஞ்சீவியின் நடிப்பில் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய
ருத்ரவீணா வெற்றி பெறவில்லை எனினும், கமலஹாசன்
நடிப்பில் உன்னால் முடியும் தம்பி என்னும் பெயரில் வெளியான
அதன் தமிழாக்கம் வெற்றியும், பாராட்டுக்களும் பெற்றது.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by arony Sun May 01, 2011 8:53 pm

பாலச்சந்தர் தானே நடிகை ஷோபாவுடன் சர்ர்ச்சைக்கு ஆளானவர். சோபா இறந்தபின், “ஷோபாவும் நானும்” எனும் தலைப்பிலே... அவர்கள் ௌண்மைக் கதையை ஏதோ ஒரு மாதாந்த சஞ்சிகையிலே தொடராக எழுதியிருந்தார்... அதன் தொகுப்பு என் கைக்குக் கிடைத்துப் படித்தேன்... நெஞ்செல்லாம் அடைக்கும் சோகம்... அதன் பின்பு எங்கு தேடியும் அது எனக்கு கிடைக்கவில்லை.

இணையத்தில் எங்காவது இருப்பின் எனக்கு ஆராவது அறியத் தருவீங்களோ? [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun May 01, 2011 11:47 pm

//இணையத்தில் எங்காவது இருப்பின் எனக்கு ஆராவது அறியத் தருவீங்களோ?// நிச்சயமாக நமது உறவுகள் யாருக்காவது கிடைத்தால் பகிர்ந்து கொள்ளுவாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by அ.இராமநாதன் Mon May 02, 2011 1:11 pm

[You must be registered and logged in to see this image.]
-

'நடிகை ஷோபா தற்கொலை செய்துகொண்டார். அதையொட்டி
கைது செய்யப்பட்டவர் இயக்குநர் பாலு மகேந்திரா...
'ரிமெம்பர் ஷோபா' என்று விழாவில் ஒரு பெண் நிருபர்
பாலு மகேந்திராவிடம் ஒரு கேள்வி கேட்டார்:

'பலரும் ஷோபாவைப் படமெடுத்திருக்கிறார்கள்.ஆனால் நீங்கள்
அவரைப் படமெடுக்கும்போது மட்டும் அவர் இன்னும் அழகாகத்
தெரிகிறார். ஏன்?' என்பது கேள்வி.

'மற்றவர்கள் ஷோபாவை காமிரா, பிலிம், வெளிச்சத்தைக் கொண்டு
படமெடுத்தார்கள். நான் அவளை காமிரா, பிலிம், வெளிச்சம், காதலுடன்
படமெடுத்தேன்'. பாலு மகேந்திராவின் இந்த பதிலுக்குப் பிறகு யாரும்
அவரைக் கேள்வி கேட்கவில்லை....

source:
[You must be registered and logged in to see this link.] - Cached - Similar
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 1:13 pm

நன்றி ஐயா தகவலுக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by கவிக்காதலன் Sat May 07, 2011 3:53 am

தகவலுக்கு நன்றி !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்.. Empty Re: கே.பாலசந்தர் பற்றி சுவையான சிறு குறிப்புகள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum