தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி?

2 posters

Go down

உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி? Empty உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 02, 2011 12:57 pm

தாங்கள் உபுண்டு இயங்கு தளத்தை நிறுவிய பின்னர், தமிழில் தடையின்றி தட்டச்சு செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள்
இப்பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. SCIM உள்ளீட்டு முறையை அடிப்படையாகக் கொண்டு இப்பக்கமானது எழுதப் பட்டுள்ளது.

language-pack-ta & language-pack-ta-base ஆகிய பொதிகள் தமிழ் மொழிக்குத் தேவையான அடிப்படைப் பொதிகள். இவற்றை நிறுவிக் கொள்ளவும். முனையத்திலிருந்து,

$ sudo apt-get install language-pack-ta language-pack-ta-base

என்று ஆணையிட்டால் இவ்விரு பொதிகளும் நிறுவப்பட்டுவிடும். இம்முறையில் பொதிகளை நிறுவ இணைய இணைப்பு (Internet Connectivity) பெற்றிருக்க வேண்டும்.

சாதாரணமாக உபுண்டு இயங்குதளத்தை நிறுவும் போதே SCIM உள்ளீட்டு முறை செயலியானதும் இயல்பாகவே நிறுவப் பட்டு இருக்கும். இதனை சரிபார்க்க முனையத்தில் (Terminal),

$ whereis scim

என்ற கட்டளையைக் கொடுக்கவும். அது SCIM நிறுவப்பட்டிருக்கும் அடைவின் (folder) பாதைகளைக் காட்டும்.SCIM நிறுவப்பட்டதை உறுதிசெய்துக் கொண்ட பின்னர் தமிழ் மொழிுக்கான SCIM பொதியினை நிறுவ வேண்டும்.

தமிழ் மொழிக்கான SCIM பொதியினை நிறுவ


இதனை தாங்கள் பல விதங்களில் மேற்கொள்ளலாம், இங்கே Synaptic Package Manager மூலமாக கையாளப்படும் வழி முறையை மட்டும் பார்க்கலாம். இம்முறையில் பொதிகளை நிறுவ இணைய இணைப்பு (Internet Connectivity) பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழிக்கான உள்ளீட்டு வசதிகளை SCIM-ல் பெற்றுக் கொள்ள இரண்டு அடிப்படை பொதிகளை நிறுவ வேண்டும்.

1) scim-tables-additional 2) scim-modules-table

இவற்றை நிறுவினால் தமிழோடு ஏனைய பாரதீய மொழிகளுக்கான உள்ளீட்டு வசதிகளும் கிடைக்கப் பெறும்.

SCIMன் அடிப்படை செயலி நிறுவப் பட்டதை உறுதி செய்துக் கொண்ட பின்னர்,

System ---> Administration ---> Synaptic Package Manager ஐத் தேர்வு செய்யவும்.

நுழைவுச் சொல் (Password) கொடுக்க வேண்டியிருக்கும். இதுவும் தங்களின் பயனர் சொல்லிற்கான(User Name) நுழைவுச் சொல்லும் ஒன்றே.

"Search" படவுருவை (icon) சொடுக்கவும்(Click). Search எனும் பட்டியுடன் சிறு சாளரமொன்று முன் தோன்றும். அப்பட்டியில் "scim" என பதிவுச் செய்து "Ok"வை தேர்வு செய்யவும்.

அனைத்து விதமான SCIM பொதிகளும் திரட்டப்பட்டு வரிசையாக பட்டியலிடப்படும். அவற்றிலிருந்து நமக்குத் தேவையான scim-tables-additional மற்றும் scim-modules-table பொதிகளை மட்டும் தேர்வு செய்யவும்.

இங்ஙனம் தேர்வு செய்த பின்னர் "Apply" என தெரியும் படவுருவை சொடுக்கவும். scim-tables-additional மற்றும் scim-modules-table ஆகிய இரண்டு பொதிகளும் நிறுவப் பட்டுவிடும்.


SCIM தானாகத் துவக்கப்பட


ஒவ்வொருமுறை தாங்கள் இயங்குதளத்தை துவக்கும் போதும் தானாகவே SCIM துவங்கப் பட்டிருப்பது நல்லது. இதற்கு /etc/X11/XSession.d எனும் அடைவினுள் 75custom-scim_init எனும் கோப்பினை உருவாக்க வேண்டும்.

அதற்கு முனையத்தில்,

$ cd /etc/X11/Xsession.d

$ sudo gedit 75custom-scim_init

இக் கோப்பினுள் கீழ்காணும் மூன்று வரிகளை பதிவு செய்து சேமிக்கவும்.

export XMODIFIERS="@im=SCIM"

export GTK_IM_MODULE="scim"

export XIM_PROGRAM="scim -d"

SCIM முறையில் தமிழில் உள்ளீடு செய்யும் திறன் தங்களின் கணினிக்கு கிடைத்துவிட்டது. தற்போதைய அமர்விலிருந்து வெளியேறி மீண்டும் ஒரு புதிய அமர்வினை துவக்கவும்.


SCIM ன் இயக்கத்தைப் பரிசோதிக்க



SCIM துவக்கப் பட்டதற்கான அடையாளமாக அதன் படவுரு பலகையின்(Panel) வலது புறத்தில் தெரியும். தமிழ் உள்ளீடு செவ்வனே இயங்குவதை பரிசோதிக்க,

Applications ---> Accesories ---> Text Editor ஐ துவக்கவும்.

பலகையின் வலது புறத்திலுள்ள SCIM படவுருவை சொடுக்கினால் மொழிகளின் பட்டியல் காட்டப்படும். அதிலிருந்து தமிழில் தாங்கள் விரும்பும் உள்ளீட்டு முறையினை தேரிவு செய்துக் கொள்ளவும். இயல்பாக ஓசையொத்த (Phonetic) உள்ளீட்டு முறையும் Inscript உள்ளீட்டு முறையும் கிடைக்கும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற Ctrl + Space விசைகளை அழுத்தவும். மீண்டும் தமிழுக்குத் தாவ அதே Ctrl + Space விசைகளை அழுத்தவும். இங்ஙனம் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாற்றி மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

GNOME செயலிகள் அனைத்திலும் இதே முறையினைப் பயன்படுத்தி தங்களால் தமிழில் உள்ளீடு செய்ய இயலவேண்டும்.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும். நன்றி உபுண்டு தமிழ் குழுமம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி? Empty Re: உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி?

Post by அரசன் Fri Sep 23, 2011 2:02 pm

மகிழ்ச்சி
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி? Empty Re: உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 23, 2011 4:57 pm

உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி? 878476
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி? Empty Re: உபுண்டுவில் - தமிழ் வசதிகள் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum