தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

3 posters

Go down

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி. Empty மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

Post by ANEETH AIR Mon May 09, 2011 3:27 pm

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
ஐந்து வருடங்களுக்கு முன் 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து அஹமதாபாத்துக்குத் திரும்பிய 40 வயது பெண் அனுரிதாவுக்குக் கணவனை இழந்த துயரம் ஒருபக்கம் இருந்தாலும் கணவனின் வாரிசைத் தன்னால் சுமந்து பெற முடியும் என்ற நம்பிக்கையும் அதிகம் இருந்தது. ஏனெனில், கணவனின் உறைந்த விந்தணுக்கள் அடங்கிய திரவ நைட்ரஜன் குடுவைகளை அவர் எடுத்து வந்திருந்தார்.
இங்கிலாந்தில் பணிபுரிந்துவந்த இந்தியரான அனுரிதா, 2001 ல் அங்கே இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரைத் திருமணம் புரிந்திருந்தார். ஆனால், விதிவசத்தால் 2006 ல் குருதிப் புற்றுநோய் காரணமாக மைக்கேல் மரணம் தழுவிய போது, அனுரிதா மிகவும் உடைந்து போனார். "மைக்கேல் என்மீது மிகவும் அன்பு கொண்டிருந்தார். அவருக்குப் பின்னரும் இன்னொருவரை மணக்க நான் விரும்பவில்லை" என்கிறார் அனுரிதா.

இங்கிலாந்தில் ரத்தப் புற்று ஆண் நோயாளிக்குக் கீமோ தெரபி சிகிச்சை மேற்கொள்ளுமுன் அவருடைய விந்தணுக்களைச் சேகரிப்பது என்பது ஒரு வழக்கம். அப்படித்தான் மைக்கேலின் உறைந்த விந்தணுக்கள் அனுரிதாவுக்குக் கிடைத்தன.

இறந்து விட்ட அன்புக் கணவனின் நினைவாக ஒரு குழந்தை வேண்டும் என்பதில் அனுரிதா தீவிரமாக இருந்தார். ஐந்து வருடங்களுக்குப் பின்னர் அவருடைய எண்ணம் நிறைவேறப் போகிறது இப்போது. ஆம், அனுரிதா இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.

கணவனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரிப்பு செய்து கொண்ட அனுரிதாவின் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. அவர் மிகவும் கலங்கித்தான் போனார். ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை.

இரண்டாம் முறையாக கடந்த பிப்ரவரி 2011 ல் தனது கணவனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்தி செயற்கையாக கருத்தரிப்பு முயற்சியினை அனுரிதா மேற்கொண்டபோது, பலருக்கும் இது வீண் முயற்சி என்றே தோன்றியது. ஆனால், அனுரிதாவின் நம்பிக்கை வீண் போகவில்லை. "இதோ, இறந்து விட்ட தன் கணவனின் குழந்தையை ஐந்து ஆண்டுகள் கழித்து தன் வயிற்றில் வெற்றிகரமாகச் சுமக்கிறார் அனுரிதா" என்று சொல்கிறார் டாக்டர் ஃபால்குனி பாவிஷி. அகமதாபாத்திலுள்ள பாவிஷி கருத்தரிப்பு மருத்துவ மையத்தின் தலைவர்.

"அனுரிதாவின் கருமுட்டைகளுடன் இறந்த கணவரின் உறைந்த விந்தணுக்கள் 'செயற்கை'யாக இணைக்கப்பட்டு பின்னர் அந்தக் கலவை அனுரிதாவின் கருவறையில் செலுத்தப்பட்டது. IVF எனப்படும் இந்த செயற்கை முறை கருத்தரிக்கும் மற்ற பெண்களைப் போலில்லாமல் அனுரிதா மிகவும் மன அழுத்தத்துடனே தான் காணப்பட்டார். ஏனெனில், கணவனின் உறைந்த விந்தணுக்கள் மிகக் குறைந்த அளவே இருப்பில் இருந்தன; அதுவுமில்லாமல், இங்கிலாந்து, துருக்கி, மும்பை ஆகிய இடங்களில் அவர் மேற்கொண்ட செயற்கை முறைகள் தோல்வியைச் சந்தித்திருந்தன. இம்முறை அவருடைய பிரார்த்தனை பலித்துவிட்டது" என்கிறார் டாக்டர் ஹிமான்ஷு பாவிஷி.
avatar
ANEETH AIR
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 4
Points : 11
Join date : 15/04/2011

Back to top Go down

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி. Empty Re: மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon May 09, 2011 4:43 pm

தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி. Empty Re: மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

Post by நிலாமதி Mon May 09, 2011 11:26 pm

விஞ்ஞான விந்தை . :héhé:
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி. Empty Re: மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum