தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை !
3 posters
Page 1 of 1
மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை !
பொருளாதாரம் பற்றிப் பேசுவோர் மத நம்பிக்கையின் காரணமாக மக்களின் பணம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதுபற்றி வாய் திறப்பதில்லை.
உண்மையைச் சொல்லவேண்டுமானால் அரசுக்கு மக்கள் செலுத்தும் வரியைவிட மதக் காரணங்களுக்காக - பண்டிகைகளுக்காக - கோயில் குளங்களுக்காக - சடங்குகளுக்காக மக்கள் செலவிடும் தொகைதான் அதிகம் - மிக அதிகம்.
பாமர மக்களிடம் பணம் எந்த விதத்திலும் தங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளும் மூடத்தனம் தான் இந்த விசேட நாள்.
அட்சயதிதி என்று சொல்லி ஏழை மக்கள்கூட கடன் வாங்கியாவது நகை வாங்கிட வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.
வழக்கம்போல இதற்கென்று புராணக் கதைகள் - அவற்றைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து விளம்பரம் செய்யும் விவரம் கெட்ட ஊடகங்கள் - எந்த வகையிலும் மக்களை மொட்டை அடித்தே தீருவது என்பதில் மட்டும் உறுதியாக - மிக உறுதியாக இருக்கிறார்கள்.
அட்சயம் என்றால் பூரணத்துவம் பெற்ற - அள்ள அள்ளக் குறையாது வளரக் கூடிய வல்லமை பெற்றது என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் திருதியை திதியில் வரும் நாளே; அட்சய திதியன்று ஒரு தவிட்டுப் பானை வாங்கினாலும் தங்கம் நிறைந்த பானையாக மாறும் என்பது ஜோதிட மொழியாகும்.
[திரவுபதை சூரிய பகவானை வேண்டிப் பெற்ற அட்சய பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தைத் தானம் செய்து புண்ணியம் பெற்றார் என்கிறது மகாபாரதம். ஒருமுறை கிருஷ்ண பரமாத்மா திரவுபதையைக் காணப் பசியோடு வந்தார். அந்நேரம் அட்சய பாத்திரம், கழுவிக் கவிழ்க்கப்பட்டிருப்பினும், அதில் ஒட்டியிருந்த ஒரு கீரை மட்டும் கண்டு விஷ்ணுவைப் பிரார்த்திக்க, மீண்டும் அன்னம் பெருகி, அதை கிருஷ்ணருக்குப் பரிமாறிப் பசியாற்றியதோடு அதி திதேவோபவா எனும் உயர்ந்த அறமான விருந்தோம்பலும் நிறைவேறப் பெற்ற புனித நாளும் அட்சய திருதியையாகும் எனக் கூறப்படுகிறது.
வறுமையில் வாடிய குசேலர் பால்ய நண்பன் கண்ணபிரானை பிடி அவலுடன் காணச் சென்றார். அந்த அவலை கண்ணபிரான் மகிழ்ந்து உண்டு அய்ஸ்வர்யம் பெருகச் செய்ததும் இந்நாளே. விஜய சாமுண்டீஸ்வரி மகிசாசுரனை வதம் செய்த நாளாகக் கொண்டாடப் படுவதும் இந்நாளே!
மகாகவி காளிதாசனும் தன்னுடைய உத்திர காவாமாமிருதம் எனும் நூலில் திதியிலேயே மிகச் சிறந்தது அட்சய திருதியை என்பார். ஆராதனைக்கும் சுப நிகழ்ச்சிக்கும் ஏற்ற நாள்.
அட்சய திருதியை நாளில் வெள்ளை, மஞ்சள் ஆடை உடுத்தி இஷ்ட தேவதையை வழிபடுவதும் மாதுளை முத்துக்களை சிவலிங்கத்துக்கு அர்ச்சித்தும், குபேர பூஜை செய்ததும் குண்டுமணித் தங்கம் குன்றளவு பெருகிட அட்சய திருதியையை ஆராதிப்போம் - இவை அத்தனையும் புராணக் கதைகளாகும்.]
இவற்றில் எள் மூக்கு அளவுக்காவது அறிவு ஏற்றுக் கொள்ளும் சங்கதிகள் உண்டா?...
சரி...வேண்டாம்... இவை யாவும் நடந்த கதைகளாகவே இருக்கட்டும்..இன்றைய காலத்துக்கு பொருந்துமா?
முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி ஏமாந்துகொண்டே இருக்கப்போகிறோம்?
இந்த நாளில் ஒரு குன்றிமணி அளவுக்கு நகை வாங்கினால்; குன்று அளவு பெருகுமாமே! அப்படியானால் கடந்த ஆண்டு இதே நாளில் நகை வாங்கியவர்களுள் எத்தனைப் பேருக்குக் குன்று அளவுக்குப் பெருகி யிருக்கிறது - கணக்குக் கொடுக்க முடியுமா?
நகை வாங்கியவர்கள் வீட்டில் தங்கம் பெருகிற்றோ இல்லையோ, நகைக் கடைக்காரர்களுக்கு மட்டும் கொள்ளை வியாபாரமும், வருமானமும் பெருகியது என்பது மட்டும் தான் உண்மை. இந்த நாள் வருவதற்கு முன் நகை வியாபாரிகள் ஏடுகளில் முழு பக்கம் விளம்பரம் கொடுத்து மக்களின் வாயில் எச்சில் ஊற வைக்கின்றனர். இதற்கு முன் ஒரே ஒரு நாள் என்ற நிலை இருக்க - இவ்வாண்டு இரண்டு நாள் அட்சய திருதியை என்று சரடு விட்டு, வியாபாரத்தை இரண்டு மடங்கு பெருக்கிக் கொண்டார்கள்.
தங்கம் என்பது அரசின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டிய ஒன்று. பண வீக்கம் கட்டுக்குள் இருப்பதற்கு இது இன்றியமையாத நிலைப்பாடாகும்.
பணவீக்கத்தை உண்டாக்கும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளைத் தடை செய்ய வேண்டியது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தலும் மிக அவசியமே
நன்றி
"விடுதலை" தலையங்கம்

உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
Re: மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை !
சென்ற ஆண்டில் தங்கத்தில் முதலீடு செய்தவரகள்
(மூட நம்பிக்கையோடு செய்திருப்பினும்) ஒரே ஆண்டில்
வங்கியில் முதலீடு செய்திருந்தால் என்ன லாபம் வருமோ
அதைவிட பன்மடங்கு லாபத்தை( தங்கம் விலையேற்றத்தால்)
அடைந்துள்ளார்கள் எனபதும் மறுக்க முடியாத உண்மை...!

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை !
நல்லது தான் . குறிப்பிட்ட நாள் என்று சொல்லாமல் வருடம் முழுவதும் என்று குறிப்பிடலாம் தானே ஐயா.
உதுமான் மைதீன்- செவ்வந்தி
- Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அட்சய திருதியை விரதம்!
» ஆசி வழங்கும் அட்சய திருதியை!
» அட்சய திருதியை: சென்னையில் ரூ.600 கோடிக்கு தங்க நகைகள் விற்பனை
» 3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்
» அக்சய திருதியை ...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum