தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டெய்ஸி எனும் பூச்செடி
Page 1 of 1
டெய்ஸி எனும் பூச்செடி
ஒரு கிராமத்தின் சாலையோரத்தில் ஒரு வீடு
இருந்தது. அந்த வீட்டின் வாசலில் நிறையப் பூச்செடிகள் இருந்தன. வாசலைச்
சுற்றி வண்ணம் பூசிய வேலி அமைத்திருந்தார்கள். வேலிக்கு அப்பால் அழகான
பச்சைப் புற்களின் நடுவில் ஒரு சிறிய டெய்ஸி பூச்செடி இருந்தது. அந்தச்
செடியிலும் சூரிய வெளிச்சம் பதிந்தது. செடி வளர்ந்துகொண்டிருந்தது.
ஒரு காலைப் பொழுதில் அந்தச் செடியில் ஒரு அழகான பூ மலர்ந்தது. நடுவில்
மஞ்சள் நிறத்துடனும் சுற்றிலும் வெள்ளை நிறத்துடனும் இருந்தது அந்தப் பூ.
அதுதான் சின்னஞ்சிறிய டெய்ஸி பூ. அது மகிழ்ச்சியுடன் சூரியனைப்
பார்த்துக்கொண்டு நின்றது. அதே நேரம் உயரத்தில் பறக்கிற வானம்பாடியின்
பாட்டைக் கேட்டு ரசித்தது.
விடுமுறை நாட்களென்றால் நமக்கு மகிழ்ச்சியாக இருக்குமல்லவா, அதுபோல டெய்ஸி
எப்போதும் சந்தோஷத்துடன் இருந்தது. ஆனாலும் அன்று திங்கட்கிழமை. குழந்தைகள்
எல்லோரும் பள்ளிக்கூடத்தில் இருந்தார்கள்.
அவர்கள் படித்துக்கொண்டிருக்கும்போது டெய்ஸி, சூரியனையும் தனக்குச்
சுற்றிலுமுள்ள அனைத்தையும் பார்த்துப் படித்துக்கொண்டிருந்தது. "நான்
அமைதியாக அனுபவிக்கிற அதே மகிழ்ச்சி, அந்த வானம்பாடியின் பாட்டிலும் உண்டு'
என்று நினைத்த டெய்ஸி சிரித்தது. பறக்கவும் பாடவும் செய்கிற அந்தப்
பறவையை டெய்ஸி பெருமையுடன் பார்த்துக்கொண்டிருக்கும். அது இப்படி
நினைத்தது:
"எனக்கு பார்க்கவும் கேட்கவும் முடியும். சூரியன் என்மீது ஒளி வீசுகிறது. எனக்கு இயற்கை நிறையப் பரிசுகளை வழங்கியிருக்கிறது!'
வேலிக்கு உள்ளே வீட்டு வாசலில் அழகான நிறையப் பூக்கள் கர்வத்துடன்
நின்றுகொண்டிருந்தன. பெரிய பூக்கள். வண்ணங்கள் நிறைந்த பூக்கள்.
மற்றவர்களின் கவனத்தைக் கவர்வதற்காகவே உயர்ந்து நின்றிருந்தன. அந்தப்
பூக்கள், வேலிக்கு வெளியே நிற்கிற டெய்ஸியைக் கவனிக்கவே இல்லை. ஆனால்
டெய்ஸி அந்தப் பூக்களைப் பார்த்துச் சொன்னது:
""நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்! உங்களின் அருகே நிற்பதே எனக்குப் பெருமைதான். உங்கள் அழகைப் பார்த்து ரசிக்கலாமே!'
அப்போதுதான் வானம்பாடி பறந்து வந்து தரையில் நின்றது. அது மற்ற பூக்களின்
அருகே செல்லவில்லை, டெய்ஸிக்குப் பக்கத்தில் வந்து நின்றது. டெய்ஸியைச்
சுற்றிவந்து நடனமாடிப் பாடியது. பிறகு தனக்குத் தானே சொல்லிக்கொண்டது:
""இந்தச் சிறிய பூ மிகமிகவும் அழகாக இருக்கிறதே! இது மிகவும் இனிய அன்பான மனதைப் பெற்றிருக்கிறது!''
இதைக் கேட்டு அந்த டெய்ஸி பூ எவ்வளவு சந்தோஷப்பட்டதென்று யாராலும் சொல்ல
முடியாது. வானம்பாடி டெய்ஸியை முத்தமிட்டது. அதற்காக நிறையப் பாடல்களைப்
பாடியது. பிறகு பறந்து சென்றது. டெய்ஸிக்குப் பெருமை தாங்க முடியவில்லை.
சற்று வெட்கத்துடனும் மனம் நிறைந்த சந்தோஷத்துடனும் அது, வேலிக்குள்
இருந்த பூக்களைப் பார்த்தது. டெய்ஸிக்கு வானம்பாடி அளித்த கெüரவத்தையும்,
அதனால் டெய்ஸி அடைந்த மகிழ்ச்சியையும் வாசல் வேலிக்குள் இருந்த பூக்கள்
பார்த்துக்கொண்டுதான் இருந்தன. அதைப் பார்த்து சில பூக்கள் புன்னகைத்தன,
சில பூக்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டன. முகத்தைத்
திருப்பிக்கொண்டதற்குக் காரணம் பொறாமைதான்.
அப்போது ஒரு சிறுமி சிறிய கத்தியுடன் வந்தாள். வாசலில் நின்றிருந்த சில
பூக்களை அறுத்தெடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள். அதைப் பார்த்து டெய்ஸி,
"ஐயோ பாவம்! அவர்களின் கதை முடிந்துவிட்டதே!' என்று வருந்தியது.
தான் இன்னும் உயிருடன் இருப்பதற்காக டெய்ஸி இயற்கைக்கு நன்றி சொன்னது.
சூரியன் மறைந்தபோது அது இதழ்களை மடக்கிக்கொண்டு உறங்கியது. இரவு முழுதும்
அது வானம்பாடியைக் குறித்தும், சூரியனைக் குறித்தும் கனவு கண்டது.
அடுத்த நாள் காலையில் அது மகிழ்ச்சியுடன் மீண்டும் தன் இதழ்களை
மலர்த்தியது. காற்றைச் சுவாசித்தது. சூரிய ஒளியில் குளித்தது.
வானம்பாடியின் பாடலை ஆர்வத்துடன் கேட்டது. ஆனால் இப்போது அந்தப் பறவையின்
பாட்டு துயரத்துடன் இருந்தது. ஏனென்றால் யாரோ அந்தப் பறவையைப்
பிடித்துக் கூண்டில் அடைத்துவிட்டார்கள்.
அந்தக் கூண்டை, திறந்த சன்னலின் அருகே தொங்கவிட்டிருந்தார்கள். வானம்பாடி
இப்போது எதைப் பற்றிப் பாடிக்கொண்டிருக்கிறது? சுதந்திரத்தைப் பற்றியும்,
வெளியே ஆனந்தமாக பறந்து திரிவதைப் பற்றியும், வயல்களில் உள்ள தானியமணிகளைப்
பற்றியும் துயரத்துடன் பாடியது. ஆனால் அந்தப் பறவை இப்போது கூண்டிற்குள்
அடைபட்டுக் கிடந்தது.
வானம்பாடிக்கு உதவி செய்ய நினைத்தது டெய்ஸி. ஆனால் அந்தப் பூவால் என்ன
செய்ய முடியும்? அது, கூண்டில் அடைக்கப்பட்ட பறவையைப் பற்றியும், அதற்குத்
தன்னால் எந்த உதவியும் செய்ய முடியவில்லையே என்பது பற்றியும் மிகவும்
வருந்தியது.
அந்த நேரம் இரண்டு சிறுவர்கள் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள்.
அவர்கள் இருவரும் டெய்ஸியின் அருகே வந்து நின்றார்கள். அவர்கள் கையில் ஒரு
கத்தி இருந்தது. அவர்கள் எதற்காக தன் அருகே வந்து நிற்கிறார்கள் என்று
டெய்ஸிக்குப் புரியவில்லை.
சிறுவர்களில் ஒருவன் சொன்னான்:
""நாம் வானம்பாடிக்காக இங்கிருந்து புல்தரை வெட்டி எடுக்கலாம்.''
பிறகு அவன் டெய்ஸிக்குச் சுற்றிலும் சதுரமாக புல்தரையைப் பெயர்த்து
எடுக்கத் தொடங்கினான். தான் வெட்டி எடுக்கும் பகுதியில் பூச்செடி
இருக்கவேண்டும் என்று நினைத்தான் அவன். அப்போது இன்னொரு சிறுவன் சொன்னான்:
""அந்தப் பூவைப் பிடுங்கி எறிந்துவிடு.''
டெய்ஸி பயந்து நடுங்கியது. பிடுங்கி எறிந்தால் அதன் வாழ்க்கை
முடிந்துவிடும். அது இன்னும் வாழ விரும்பியது. குறிப்பாக இப்போது. வெட்டி
எடுக்கப்பட்ட புல் தரையுடன் தான் வானம்பாடியின் கூண்டில் வைக்கப்படுவதை
மிகவும் விரும்பியது அது.
அப்போது இன்னொரு பையன் சொன்னான்:
""வேண்டாம். அந்தப் பூ அப்படியே இருக்கட்டும். அது நல்ல அலங்காரமாக இருக்கும்.''
அப்படி பூ, தான் நின்றிருந்த இடத்துடன் வானம்பாடியின் கூண்டில்
வைக்கப்பட்டது. அப்போது வானம்பாடி தான் இழந்த சுதந்திரத்தைப் பற்றிப்
புலம்பி அழுதது. கூண்டின் இரும்புக் கம்பிகளில் சிறகால் அடித்தது.
வானம்பாடிக்கு ஆறுதல் சொல்ல நினைத்தது டெய்ஸி. ஆனால் அதற்கு பேசத் தெரியாது
அல்லவா!
மதியப் பொழுதானது. வானம்பாடி தனக்குத்தானே பேசிக்கொண்டது: ""கூண்டிற்குள்
தண்ணீர் இல்லை. அந்தப் பையன்கள் வெளியே சென்றிருக்கிறார்கள். எனக்குத்
தண்ணீர் வைப்பதற்கு அவர்கள் மறந்துவிட்டார்கள். என் தொண்டை மிகவும்
வறண்டுவிட்டது. நான் இப்போது இறந்துவிடுவேன்! சூரிய வெளிச்சம், புற்பரப்பு,
இயற்கையின் எல்லா அழகுகளையும் விட்டு நான் போகப்போகிறேன்!''
வானம்பாடி தன் அலகை புற்களோடு சேர்த்து வைத்தது. சற்றுக் குளிர்ச்சி
கிடைப்பதற்காகத்தான் அப்படி செய்தது. அது டெய்ஸியைப் பார்த்தது. அதன் இதழை
முத்தமிட்டுச் சொன்னது:
""பாவமான பூவே, நீயும் இங்கிருந்து உலர்ந்துபோய்விடுவாயே...வெளி உலகம்
முழுதும் என்னுடையதாயிருந்தது. அதற்குப் பதிலாக நீ நிற்கும் சிறிய தரையை
அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். நான் எவ்வளவு இழந்திருக்கிறேன்
என்பதை உன்னைப் பார்த்துத்தான் தெரிந்துகொள்கிறேன்...''
"என்னால் இந்தப் பறவையைச் சமாதானப்படுத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று நினைத்தது டெய்ஸி.
வானம்பாடிக்குத் தாகத்தால் மயக்கம் வருவதுபோலிருந்தது. அது டெய்ஸியையே
பார்த்துக்கொண்டிருந்தது. மாலை நேரமானது. அப்போதும் வானம்பாடிக்கு யாரும்
நீர் தரவில்லை. அது மயக்கத்துடன், பைத்தியம்பிடித்ததுபோல கூண்டிற்குள்
சுழன்றது. இறக்கைகளைப்போட்டு அடித்துக்கொண்டது. அப்போதும் அது
பாடியது. ஆனால் அது சோகம் மிகுந்த பாடலாக இருந்தது. கடைசியில் அது தன்
தலையை டெய்ஸியின் மீது சாய்த்தது. அப்படியே இறந்துவிட்டது.
துக்கத்தின் சுமை தாளாமல் டெய்ஸி துவண்டு வானம்பாடியின் மீதே விழுந்தது.
அடுத்த நாள் காலையில்தான் அந்த இரண்டு சிறுவர்களும் வந்தார்கள். இறந்துபோன
வானம்பாடியைக் கண்டு அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்கள் ஒரு குழி
தோண்டினார்கள். அதைச் சுற்றி பூக்களால் அலங்கரித்தார்கள். வானம்பாடியை ஒரு
சிறிய பெட்டியில் வைத்து மிகவும் மரியாதையுடன் அடக்கம் செய்ய
நினைத்தார்கள்.
வானம்பாடி பாட்டுப்பாடி மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும்
வாழ்ந்துகொண்டிருந்தபோது அதைச் சிறைப்படுத்தியவர்கள், அது
இறந்ததற்குப் பிறகு அழுகிறார்கள். அதன் சவஉடலை அலங்கரிக்கிறார்கள்.
டெய்ஸி நின்றிருந்த புல்தரையை அவர்கள் பாதையில் வீசி எறிந்தார்கள்.
வானம்பாடிப் பறவையை நேசித்த, அதற்கு ஆறுதல் சொல்ல ஆசைப்பட்ட அந்தப் பூவைப்
பற்றி யாருக்கும் தெரியவில்லை.
ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆன்டர்சன்
தமிழில்: கதிரவன்
[You must be registered and logged in to see this image.] தினமணி

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பூச்செடி!!!!!!!!!!!!!
» பூச்செடி நண்பன்
» காதலன் கொடுத்த பூச்செடி _ ம.ரமேஷ் ஹைகூ
» ஆசை எனும் வறுமை
» இசை எனும் இன்பவெள்ளத்தில்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum