தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்

2 posters

Go down

மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்    Empty மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்

Post by உதுமான் மைதீன் Thu May 12, 2011 7:47 pm

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’சிங்கள இனவெறி ஒடுக்குமுறைகளை எதிர்த்து அறவழியில் கால்நூற்றாண்டு காலம் போராடியும் நீதி கிட்டாத நிலையில் ஈழத் தமிழர்கள் ஆயுதவழிப் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டனர்.

ஆயுதவழிப் போராட்டமும் மக்களைப் பாதுகாப்பதற்கான தற்காப்புப் போராட்டமாகத் தொடங்கி பின்னர் விடுதலைப் போராட்டமாகப் பரிணாமம் பெற்றது.


இப்போராட்டம் கால்நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று உலகின் கவனத்தைத் திருப்பியது. எனினும் ஆதிக்க வெறிபிடித்த ஏகாதிபத்திய நாடுகளின் கூட்டு முயற்சியில் ஈழ விடுதலைப் போராட்டம் தற்போதைய நிலையில் நசுக்கப்பட்டுள்ளது.

மொழி, இன அடிப்படையிலான சனநாயகப் போராட்டங்களை அங்கீகரிக்காத நிலையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளும் சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றன.


இந்திய அரசும் தமிழின விரோதக் கொள்கையை தமது வெளியுறவுக் கொள்கையின் அங்கமாகவே ஏற்று வெளிப்படையாகச் செயல்பட்டு வருகிறது.

உழைக்கும் மக்கள் சனநாயகத்திற்கு எதிரான இந்தியா, சீனா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் துணையோடு கடந்த 2009 மே மாதத்தின்போது சிங்கள இனவெறி அரசு ஈவிரக்கமற்ற இனப்படுகொலையை அரங்கேற்றியது. கடைசி ஐந்து நாட்களில் சுமார் ஐம்பதாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தது.


இந்நிலையில் ஐ.நா. பேரவையால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இரு ஆண்டுகள் கழிந்த நிலையில் ஈழத்தில் போர்க் குற்றம் நடந்துள்ளதென அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிங்கள அரசும் விடுதலைப் புலிகளும் சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக போர்க் குற்றம் செய்துள்ளனர் என்று இரு தரப்பின் மீதும் குற்றம் சாட்டியுள்ளது.

அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடந்துவரும் சிங்கள இனவெறி ஒடுக்குமுறைகளின் பின்னணியை ஆராயாமல் அல்லது அதைப் பொருட்படுத்தாமல் கடைசிக்கட்டப் போரில் யார் குற்றம் இழைத்தார்கள் என்கிற கோணத்தில் மட்டுமே இந்த விசாரணைக் குழு ஆய்வு செய்திருக்கிறது.


இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் இருதரப்பாரும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிற நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதாவது தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக பிஞ்சுக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் போன்ற ஆயுதமில்லாத அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை வெறும் போர்க் குற்றம் என்கிற அளவிலேயே அதனைச் சுருக்கிப் பார்ப்பது சனநாயகத்திற்கும் நீதிக்கும் எதிரானதாக அமையும்.

முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய கடைசிகட்ட நிகழ்வுகள் அரை நூற்றாண்டு கால சிங்கள இனவெறி ஆதிக்கத்தின் தொடர்ச்சியேயாகும். முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பானது ஒரு மாபெரும் இனப்படுகொலையேயாகும்.


எனவே சர்வதேசச் சமூகமும், ஐ.நா. பேரவையும் முள்ளிவாய்க்காலில் நடந்தவை போர்க்குற்றம் என்று மட்டும் பார்க்காமல் அது ஒரு கொடூரமான இனப்படுகொலை என ஏற்று அதன் அடிப்படையில் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முன்வரவேண்டும்.


குறிப்பாக, இராஜபக்சேவை "இனப்படுகொலைக் குற்றவாளி' என அறிவித்து தண்டனை வழங்க வேண்டும். அத்துடன் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நிகழ்ந்த மாபெரும் இனப்படுகொலை என்கிற வகையில் தமிழின அழிப்பை நிறைவு செய்த நாளான மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக ஐ.நா. பேரவை அறிவிக்க வேண்டும்.


இதனை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் மே 18ஆம் நாள் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்கிறது.

விடுதலைச் சிறுத்தைகளும் இனமானமுள்ள தமிழர்களும் தமது துக்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்கிற வகையிலும் இராஜபக்சேவைத் தண்டிக்க வற்புறுத்துகிற வகையிலும் மே 18ஆம் நாள் அறவழியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்    Empty Re: மே 18ஆம் நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அறிவிக்க வேண்டும் : திருமாவளவன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri May 13, 2011 11:20 am

தகவலுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics
» பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்: திருமாவளவன்
» ராஜபக்சேவுக்கு சர்வதேச கோர்ட்டில் தண்டனை பெற்றுத் தர வேண்டும்-வைகோ
» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்
» பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் நாளை ஒற்றுமை ஓட்டம்:
» ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum