தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» சிந்தனை சிகிச்சை-6by ராஜேந்திரன் Thu Jun 16, 2022 3:20 pm
» கற்றபின் நிற்க அதற்கு தக! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:10 pm
» எங்கண்ணே! - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:09 pm
» ஏமாற்றம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:08 pm
» மிதியடி - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» காரணம் - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:07 pm
» நம்பிக்கை - கவிதை
by அ.இராமநாதன் Tue Feb 22, 2022 8:06 pm
» விதை முத்தங்கள் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:42 am
» தியானம் கலைக்காதீர் - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:41 am
» காதல் தோல்வியொன்று...! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:40 am
» பேச நினைக்கிறேன்!
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:39 am
» அழியா நினைவு! - கவிதை
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» மனிதரில் இத்தனை நிறங்களா?
by அ.இராமநாதன் Fri Feb 11, 2022 12:38 am
» அழகு – கவிதை
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:55 pm
» பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்…
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» சினி மசாலா
by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 20, 2021 5:52 pm
» நடிகை ராஷ்மிகா…
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:42 pm
» சினி மசாலா (தொடர்ச்சி)
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:40 pm
» சினிமா செய்திகள்
by அ.இராமநாதன் Sat Dec 11, 2021 3:39 pm
» இரண்டு பேரோ .... மூன்று பேரோ எங்க கூடினாலும் ...கொரான இருக்கும்
by ராஜேந்திரன் Mon Oct 04, 2021 3:25 pm
» ஹைக்கூ புதையல்! நூல் ஆசிரியர் : கவிஞர் பேனா தெய்வம் நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 24, 2021 11:49 pm
» வேறென்ன வேண்டும் களவு போக! நூல் ஆசிரியர் : கவிதாயினி தீபிகா சுரேஷ் ! நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
by eraeravi Thu Sep 16, 2021 7:24 pm
» அடித்தட்டு மக்களின் அரிமா திருமா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Sep 10, 2021 10:18 pm
» புலமைப்பித்தன் பாடல்களில் வாழ்கிறார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Sep 10, 2021 10:01 pm
» பரணி சுப. சேகரின் காலை வணக்கம்!விடியல் வணக்கம் மூன்றாவது தொகுதிக்கான வாழ்த்து . கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Sep 07, 2021 9:48 am
» கிளிக் 3 கவிதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் மதுரை முரளி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 04, 2021 6:46 pm
» நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ் ஜெர்மனி !
by eraeravi Sat Aug 28, 2021 4:25 pm
» விரலிடுக்கில் வெளிச்சம்! நூல் ஆசிரியர் : கவிதாயினி ராஜிலா ரிஜ்வான்.அலைபேசி 6381096224. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 19, 2021 10:50 pm
» ஹைக்கூ! கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Aug 14, 2021 8:32 pm
» ஏழு ராஜாக்களின் தேசம்! நூல் ஆசிரியர் : அபிநயா ஸ்ரீகாந்த் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Aug 13, 2021 10:09 pm
» கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் சக்தி ஜோதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 9:07 pm
» தங்கமகன் நீரஜ் சோப்ரா வாழ்க! கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Aug 09, 2021 8:43 pm
» தொலைந்து கொண்டே இருக்கிறேன் – உன்னுள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி பவித்ரா நந்தகுமார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Thu Aug 05, 2021 7:48 pm
» ஹைக்கூ 500 நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா, உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை.
by eraeravi Mon Aug 02, 2021 9:58 pm
» கொரோனா – தொடாதே, தொற்றே ! இரண்டாம் அலை ! நூல் ஆசிரியர் : மருத்துவர் S.G. பாலமுருகன், M.S., MCH., FRCS., Ph.D., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 31, 2021 11:51 pm
» பலாச்சுளை! நூல் ஆசிரியர் : சொற்பொழிவுச் சுடர் கவிஞர் பேனா தெய்வம்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Fri Jul 30, 2021 10:43 am
» இளங்குமரனார் என்றும் வாழ்வார்! கவிஞர் இரா. இரவி !
by eraeravi Mon Jul 26, 2021 9:24 pm
» கிண்ணத்தில் நிலாச்சோறு! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 24, 2021 11:03 pm
» அன்னைத் தமிழின் பெருமைகள்! கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Jul 23, 2021 7:56 pm
» இன்சுவை இப்ரான் வாழ்க ! வாழ்க ! கவிஞர் இரா .இரவி !
by eraeravi Fri Jul 16, 2021 10:26 pm
» காமராசர் ஓர் அரசியல் அதிசயம்! கவிஞர் இரா.இரவி !
by eraeravi Wed Jul 14, 2021 11:02 pm
» அழகின் ஆடல்! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:13 pm
» அழகியல் நூறு! நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்! நூல் மதிப்புரை கவிஞர் இரா.இரவி!
by eraeravi Sat Jul 10, 2021 4:08 pm
» நூறாண்டு கடந்தும் பாவாண்ட பாரதி! கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Jul 03, 2021 10:21 pm
» இப்பவே கண்ணை கட்டுதே! நூல் ஆசிரியர் : ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
by eraeravi Sat Jul 03, 2021 6:29 pm
மனம் என்னும் இயங்குதளம்.
4 posters
Page 1 of 1
மனம் என்னும் இயங்குதளம்.
http://gunathamizh.blogspot.com/2011/05/blog-post.html
மனம் இருப்பதாலேயே நாமெல்லாம் மனிதரானோம்.
மனிதனை மாதிரியாகக் கொண்டே கணினியின் ஒவ்வொரு பகுதிகளும் உருவாக்கப்பட்டன. நாளுக்கு நாள் கணினி புதிய புதிய தொழில்நுட்பங்களுடன் வந்துகொண்டிருக்கிறது. இருந்தாலும்...
மனிதனுக்கு இணையான, மனிதனை விட அதிக கொள்திறனும், செயல்திறனும் கொண்ட கணினியை இனி வரும் காலங்களிலும் கூட உருவாக்க இயலாது என்பது என் கருத்து.
மனமானது இயங்குதளம் (ஆப்ரேட்டிங் சிசுடம்) போன்றது. இயங்குதளம் என்றதும் ஒவ்வொருவருக்கும் தாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயங்குதளங்கள் நினைவுக்கு வரும்.
லினெக்சு, விண்டோசு என ஒவ்வொரு மனிதக் கணினிகளும் ஒவ்வொரு இயங்குதளங்களைக் கொண்டு இயங்குகின்றன.
சில இயங்குதளங்கள் சில மென்பொருள்களை ஏற்றுக்கொள்ளாது.
சில இயங்குளங்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு உடன்படாது.
என இந்த இயங்குதளங்களைப் போலவே..
மனித மனங்களும் சில புதிய மரபுகளையும், நாகரீகங்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.
புதிய தலைமுறையின் எண்ணங்களுடன் உடன்பாடாது நிற்கின்றன.
எதிர்பாராத சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்வதில் வேறுபட்டுநிற்கின்றன.
கண்ணுக்குத் தெரியும் கணினி என்னும் வன்பொருள் கண்ணுக்குத் தெரியாத இயங்குதளத்தோடு ஒத்து செயல்பாட்டால் தான் கணினி நன்கு செயல்படும்.
அதுபோல கண்ணுக்குத் தெரியாத மனம் என்னும் இயங்குதளம் மனித உடல் என்னும் கணினியுடன் (வன்பொருளுடன்) இணைந்து செயல்பட்டால்தான் மனிதன் மனிதன் என்னும் பெயர் பெறமுடியும்.
ஒரு நகைச்சுவை..
குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது.
இதோ இந்த இயங்குதளம் இயங்குவதில் மனித வன்பொருளோடு வேறுபட்டு நிற்கிறது.
கண்ணுக்குத் தெரியாமல் இருப்பதால் பலநேரங்களில் நாம் இயங்குதளங்கள் இருப்பதையே மறந்துபோவோம்.
பழைய கணினி – பழங்கால மனிதன் – செயல்திறன்
புதிய கணினி – இக்கால மனிதன் – செயல்திறன்
என ஒப்பிட்டு நோக்கினால் ஒரு உண்மை புரியும்.
ஆம் மனம் என்னும் இயங்குதளம் பெற்றதாலேயே விலங்குகளிலிருந்து நாம் இன்று வரை வேறுபட்டு வாழ்கிறோம்.
இந்த உண்மை, இதனை,
இரண்டு துறவிகள் ஒரு கொடியைப்பற்றி விவாதம் புரிந்தனர்.ஒருவர் கூறினார்,''கொடி அசைந்து கொண்டிருக்கிறது..''அடுத்த துறவி சொன்னார்,''காற்று அசைந்து கொண்டிருக்கிறது.''அப்போது அந்தப்பக்கம் ஒரு ஞான குரு வந்து கொண்டிருந்தார்.அவர் கூறினார்,''கொடியுமல்ல,காற்றுமல்ல, உங்கள் மனம் அசைந்து கொண்டிருக்கிறது.''
இந்தக் காட்சி அறிவுறுத்தும். இங்கு மனம் – இயங்குதளத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
சங்கக் காட்சி ஒன்று....
தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணினான் தலைவன். ஆனால் பாலைநிலத்தின் கொடுமை தலைவி அதனைத் தாங்க மாட்டாள் என்பதை அறிவுறுத்தியது. அதனால் வழியருமை கூறித் தலைவியைத் தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தான்.
உன்னை நீங்கித் தலைவி தனித்து இருந்து படும் துன்பத்தைவிட பாலை நிலம் அத்தகைய கொடுமையானதன்று என்பதைத் தலைவனுக்குப் புரியவைக்கிறாள் தோழி....
தலைவ!!
உன்னுடன் வந்தால் கொடிய பாலை வழி கூட தலைவிக்கு இனிமையுடையதாகும். அவளும் விழாக் கோலம் கொண்டவளாக மகிழ்ந்திருப்பாள்.
ஆனால் உன்னை நீங்கி அவள் தனித்திருந்தால்,
உமணர்கள் தங்கி்ச சென்ற பாழ்பட்ட ஊர்போலக் காட்சியளிப்பாள்.
(தங்கள் பொருள்களுடன் கூட்டம் கூட்டமாகப் பல ஊர்களுக்கு இடம்பெயர்ந்து செல்வர். உப்பு வண்டிகளைத் தாம் தங்கும் .இடத்தில் நிறுத்துவர். எருதுகளைத் தறிகளில் கட்டுவர். இரவு தங்கி உணவு உண்டு மகிழ்ந்து பிற இடங்களை நாடிச் செல்வர். அவர்கள் நீங்கிச் சென்ற பின் அவர்கள் தங்கிய இடமானது, பாழ்பட்ட ஊர்போலக் காட்சிதரும்.)
பாடல் இதோ..
உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின், அகன்தலை
ஊர் பாழ்த்தன்ன ஓமைஅம் பெருங்காடு
இன்னா என்றிர் ஆயின்,
இனியவோ – பெரும – தமியர்க்கு மனையே!
124 குறுந்தொகை (பாலை)
பாலை பாடிய பெருங்கடுங்கோ.
புணர்ந்துடன் போக நினைத்த தலைமகள் ஒழியப் போகலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.
(தலைவியை உடன்போக்கில் அழைத்துச் செல்ல எண்ணிய தலைவன் பாலைநிலத்தின் கொடுமை எண்ணி அஞ்சிய சூழலில், தோழி சொல்லியது.)
பாடலின் நுட்பம்
இங்கு கொடிய பாலை நிலம் இனிமையுடையதாகவும்.
இனிய வீடு கொடிய பாலை நிலத்தின் தன்மைகொண்டதாகவும்.
உணர்ந்துகொள்ளப்படுகிறது.
மனம் என்னும் இயங்குதளம் இங்கு சூழல் என்னும் மென்பொருளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மாற்றிப்புரிந்துகொள்கிறது.
இயங்குதளத்தோடு ஒவ்வாத மென்பொருள்களை நாம் கணினியில் நிறுவக்கூடாது அதுபோல மனதுக்கு ஒவ்வாத செயல்களை நாம் செய்யக் கூடாது. சில நேரங்களில் நாம் மனம் சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்.
இங்கு உண்மை என்னவென்றால் பாலை கொடுமையானது.
வீடு இனிமையானது என்பதுதான்.
ஆனால் மனமோ (இயங்குதளம்) தனித்து வீட்டில் இருப்பது தான் கொடுமையானது பாலை இனிமையானது என்று சொல்கிறது.
இங்கு மனம் என்னும் இயங்குதளம் சொல்லும்படி கேட்டால்தான் உடல் என்னும் வன்பொருள் செயல்படமுடியும். இல்லாவிட்டால் இவ்வியங்குதளம் வன்பொருளை (உடல்) முடக்கிவிடும்.
பாடல் வழியே..
மனம் – இயங்குதளம் ஆகியன ஒப்புநோக்கியரைக்கப்பட்டுள்ளன.
உடன்போக்கு – தலைவன் தலைவியை பெற்றோர் அறியாது கூட்டிச் செல்வது என்னும் அகத்துறை விளக்கப்பட்டுள்ளது.
உமணர்களின் பழக்கவழக்கம் உரைக்கப்பட்டுள்ளது.
பாலை நிலத்தின் கொடுமை சொல்லப்பட்டுள்ளது.
ஆழ்மனதின் நுட்பமான நிலைகள் இயம்பப்பட்டுள்ளன.
தமிழ்சசொல் அறிவோம்
உமணர் – உப்பு வணிகர்
கழிந்த – நீங்கிய.
தமியர் – தனித்திருப்போர்

Last edited by gunathamizh on Tue May 24, 2011 3:46 pm; edited 1 time in total
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: மனம் என்னும் இயங்குதளம்.

புணர்நதுடன் போக என்பது புணர்ந்து என திருத்துக..
-
பாலை பாடிய பெருங்கடுங்கோ:-
இவர் ஒரு சேர மன்னன்...
-
தனித்து வீட்டில் இருப்பது தான் கொடுமையானது,
அதை விட பாலை இனிமையானது...
விளக்கங்கள் அருமை
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 77
Re: மனம் என்னும் இயங்குதளம்.
பதிவிட்டரால் சொற்பிழையை சரி செய்ய
வசதி உள்ளது...
வசதி உள்ளது...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31351
Points : 68803
Join date : 26/01/2011
Age : 77
Re: மனம் என்னும் இயங்குதளம்.
நல்ல வசதி
திருத்திக்கொண்டேன் ஐயா
நன்றி.
திருத்திக்கொண்டேன் ஐயா
நன்றி.
gunathamizh- ரோஜா
- Posts : 251
Points : 374
Join date : 08/12/2009
Re: மனம் என்னும் இயங்குதளம்.
குழந்தையைத் தூக்கிக் கொண்டே இருந்தால் கை நோகிறது.
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது
இறக்கி விட்டாலோ மனம் நோகிறது

kavithaigal- செவ்வந்தி
- Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 42
Location : Nagercoil
Re: மனம் என்னும் இயங்குதளம்.
அ.இராமநாதன் wrote:பதிவிட்டரால் சொற்பிழையை சரி செய்ய
வசதி உள்ளது...
பதிவிட்டரால் புரியவில்லை இது எந்த தளத்தின் சுட்டி?
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 64
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

» 3 MB அளவுள்ள மிகச்சிறிய இயங்குதளம் (Operating System)
» Android KitKat இயங்குதளம் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை உயர்வு
» வாழ்க்கை என்னும்
» சோகம் என்னும்...
» அழகு என்னும் நீ !!!
» Android KitKat இயங்குதளம் பயன்படுத்தப்படும் சாதனங்களின் எண்ணிக்கை உயர்வு
» வாழ்க்கை என்னும்
» சோகம் என்னும்...
» அழகு என்னும் நீ !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|