தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புற்றுநோய்க்கு சைபர்நைஃப் தொழில்நுட்பம்
Page 1 of 1
புற்றுநோய்க்கு சைபர்நைஃப் தொழில்நுட்பம்
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை
லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன்
வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக்
கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது,
சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும்
அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக்
கருவி.
ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை
சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும்
இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி
நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது.
அப்போலோ
ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டி.ராஜா
இதுபற்றிச் சொல்கிறார். ''சில புற்றுநோய்களை மருந்து கொடுத்தே குணப்படுத்த
முடியும். அறுவை சிகிச்சையில் சில வகை குணமாகும். ஒரு சில வகைப் புற்று
நோய்க்கு ரேடியேஷன் சிகிச்சைதான் சிறந்தது. எந்த உறுப்பை புற்று நோய்
தாக்கி உள்ளது, எந்த வகையான புற்று நோய், எவ்வளவு தூரம் தாக்கி உள்ளது
என்பதைப் பொறுத்தே, சிகிச்சை முறையை முடிவு செய்வோம். மார்பகப் புற்று
நோய், வாய்ப் புற்று நோய் என்றால், அறுவை சிகிச்சையே சிறந்த தீர்வு. ஆனால்,
ரத்தப் புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யாமல், கீமோதெரபி செய்ய
வேண்டும். வியாதி அதிகமாகப் பரவி இருந்தால், குறிப்பிட்ட உறுப்பில் புற்று
நோய் காரணமாக வலி அதிகமாக இருந்தால், கதிரியக்கம் கொடுப்பது மட்டுமே உடனடி
ஆறுதல்.
ஆனால், கதிரியக்கம் கொடுக்கும்போது, சுற்றிலும்
உள்ள நல்ல திசுக்களும் கதிரியக்கம் செல்லும் பாதையில் நிற்பதால்
பாதிக்கப்பட்டது. அதனால் குறிப்பிட்ட உறுப்பில் உள்ள புற்றுக் கட்டிக்கு
50-60 கிரே கதிரியக்கம் கொடுக்க வேண்டும் என்றால், மொத்தமாக ஒரே பக்கத்தில்
இருந்து கொடுக்காமல்... நான்கு பக்கங்களில் இருந்து, அந்த 50 கிரேவைப்
பிரித்துக் கொடுத்தார்கள். இப்படி செய்வதால், சுற்றிலும் உள்ள நல்ல
திசுக்களில் ரேடியேஷன் அளவு அதிக பாதிப்பை உண்டாக்காது.
புதிய
தொழில்நுட்பத்தின்படி, ஸ்கேன் மற்றும் கம்ப்யூட்டரை இணைத்து,
புற்றுக்கட்டியின் முப்பரிமாணத்தைத் துல்லியமாக காண முடிகிறது. நான்கு
பக்கம் இருந்து கதிரியக்கம் கொடுத்ததைவிட, தற்போது மொத்த டோஸையும் பல
பங்குகளாகப் பிரித்து பல கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி
அழிக்கப்படுகிறது. இந்த புதிய சிகிச்சை முறையை ஸ்டீரியோடாக்டிஸ்
என்பார்கள். சமீப காலங்களில் மிக வேகமாக வளர்ச்சி அடையும் இந்தத் துறையில்
அடுத்த கட்டமாக ஐ.எம்.ஆர்.டி. மற்றும் ஐ.ஜி.ஆர்.டி. தொழில்நுட்பங்கள்
வந்துள்ளன. மேலும் ரேடியோ சர்ஜரி என்ற தொழில்நுட்பமும் புழக்கத்தில்
வந்துவிட்டது.
பொதுவாக கத்திவைத்து, அறுத்து செய்வதைத்தான் அறுவை
சிகிச்சை என்போம். கத்தி இல்லாமல் உயர் ஆற்றல் பீம் ரேடியேஷனைக்கொண்டு
புற்று நோய்க் கட்டியைப் பொசுக்கும் நுட்பத்தை இந்த அறுவை சிகிச்சையில்
கொண்டுவந்தனர்.
இந்த அனைத்து சிகிச்சைக்கும் உச்சகட்ட வளர்ச்சியாக
வந்து இருப்பது, சைபர்நைஃப். இது அதிக எண்ணிக்கையிலான ரேடியேஷன் பீம்களை
பல்வேறு கோணங்களில் இருந்தும் புற்றுக் கட்டி மீது செலுத்தக்கூடியது.
இதனுடன் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கேமரா, நோயாளிகளைத் துல்லியமாகக்
கண்காணிக்கும். சுவாசித்தல், அசைதல்போன்ற சின்னஞ்சிறு அசைவுகளையும் பதிவு
செய்து, ரோபோ கருவிக்கு அனுப்பிவைக்கும். உடனே ரோபோ தன்னை அதற்கு
ஏற்றதுபோன்று சரிப்படுத்திக்கொண்டு, மிகத் துல்லியமாகப் பல்வேறு கோணங்களில்
இருந்தும் புற்றுக் கட்டி மீது கதிரியக்கத்தைச் செலுத்தும். தாக்க வேண்டிய
பகுதி மில்லி மீட்டரைவிடக் குறைவாக இருந்தாலும், இந்தக் கருவியால்
துல்லியமாகச் சென்றடைய முடியும். இந்த சிகிச்சை மூலம் வலி இல்லாத, ரத்த
இழப்பு இல்லாத, தழும்பு இல்லாத அறுவை சிகிச்சை புற்று நோயாளிகளுக்குக்
கிடைக்கிறது.
இந்த சிகிச்சைக்கு, முதலில் நோயாளியை சி.டி. ஸ்கேன்
செய்வோம். அதன் மூலம் புற்றுக்கட்டியின் அளவு, வடிவம், இடம்போன்றவை
துல்லியமாகக் கண்டறியப்பட்டு, டிஜிட்டல் தகவல்கள் சைபர்நைஃப் கருவிக்கு
அளிக்கப்படும். எப்படி சிகிச்சை அளிப்பது என்று திட்டமிடப்பட்டு, அதன்படி
சைபர்நைஃப் கருவி நோயாளியைச் சுற்றி பல இடங்களில் இருந்து கதிரியக்கத்தைச்
செலுத்தி புற்றுக் கட்டியைத் தாக்கி அழிக்கும். புற்றுக் கட்டியின்
தன்மையைப் பொறுத்து, 30 முதல் 90 நிமிடங்கள் வரை சிகிச்சை நீடிக்கும். பல
கட்டங்களாக சிகிச்சை அளிக்கப்படுவதாக இருந்தால், ஐந்து நாட்கள் சிகிச்சை
அளிக்கப்படும். இந்த சிகிச்சையில் மிக மிகக் குறைந்த அளவே பக்க விளைவுகள்
காணப்படுகின்றன. அதுவும் சிகிச்சை முடிந்த சில வாரங்களிலேயே சரியாகிவிடும்.
இந்த சைபர்நைஃப் கருவி, ப்ராஸ்டேட், நுரையீரல், முதுகுத் தண்டுவடம், மூளை,
கல்லீரல், கிட்னி புற்று நோய்க்கு பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.
புற்றுநோயை பயமின்றி எதிர்கொள்ளும் நிலை சீக்கிரமே வரும் என நம்புவோம்!
- பா.பிரவீன்குமார், படம்: ச.இரா.ஸ்ரீதர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி
» புற்றுநோய்க்கு மருந்தாகும் திராட்சை
» சங்ககாலத் தொழில்நுட்பம்.
» புற்றுநோய்க்கு எதிரான ஆயூதம் கண்டுபிடிப்பு!!!
» "லேப் டாப்'பை மீட்க தொழில்நுட்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum