தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எது நன்மை..?

3 posters

Go down

எது நன்மை..? Empty எது நன்மை..?

Post by அ.இராமநாதன் Wed Jun 22, 2011 9:34 am

ஒருவரிடம் அபரிமிதமான அறிவு காணப்படுகிறது. மகா ஞானியாக
அவர் பரிமளிக்கிறார். எதைப் பற்றியும் எப்போதும் எங்கேயும் அவரால்
பேச முடியும்; எளிதில் புரியாத தத்துவங்களெல்லாம் அவருக்குக்
கைவந்தவை. ஐந்தே ஐந்து நிமிடங்கள் அவர் பேசினால் போதும்,
அவருக்குத் தெரியாதவை ஒன்றுமேயில்லை என்கிற எண்ணத்துக்குக் கூட
இருப்பவர் கண்டிப்பாக வந்துவிடுவார்.
-
அவ்வளவென்ன, எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், அவரோடு
பத்து நிமிடங்கள் பேசினால், தமக்கு ஒன்றுமே தெரியாது என்கிற
தீர்மானத்தைக் கட்டாயம் எடுத்துவிடுவார். நிறையத் தெரியும் என்பது
மாத்திரமில்லை; அவற்றைப் பற்றி அழகாக விளக்கவும் அவரால் முடியும்.
அவர் பேசப் பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரே ஒரு நெருடலைத்
தவிர!
-
என்ன, பேசத் தொடங்கிய அடுத்த நொடியிலிருந்தே, தன்னெதிரில்
இருக்கும் அத்தனை பேரும், அண்டை அயலில் உள்ள அனைவரும்,
உலகத்தின் மக்கள் எல்லோரும் "வடிகட்டின முட்டாள்கள்' என்னும்
தொனியோடே பேசுவார். விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்
என்கிற ஆர்வத்தில் போகிறவர்கள்கூட, அவருடைய குத்தல் பேச்சில்
குன்றிப் போய் ஓடிவிடுவார்கள்.
-
இன்னொருவர். பலசாலி. மலையையே தூக்கக்கூடிய அளவுக்கு ஆற்றல்
படைத்தவர். கிள்ளச் சொன்னால் அள்ளக் கூடியவர்; வெட்டிக் கொண்டுவரச்
சொன்னால் கட்டிக் கொண்டு வரக்கூடியவர். ஆனாலென்ன, தம்முடைய
பலத்தால், யாரை வேண்டுமானாலும் அடித்து நொறுக்கிவிடலாம் என்று
எண்ணுபவர். தான் வலுவானவன் என்ற நினைப்பிலேயே, பலரையும்
ஓட ஓட விரட்டுவார்.
-
மற்றும் ஒருவர். பிறருக்குக் கொடுப்பதில் சிறந்தவர். எதை வேண்டுமானாலும்
கொடுப்பார். அவர் போட்டிருந்த புத்தம் புது சட்டையைப் பார்த்து
"நன்றாக இருக்கிறது' என்று அவருடைய பணியாளர் ஒருவர் சொல்லி
விட்டார். பணியாளரின் கண்களில் ஏக்கம் தெரிவதாக உணர்ந்த நம்முடைய
நல்ல மனிதர், உடனடியாக அந்தச் சட்டையை அவருக்கே கொடுத்தார்.
-
கொடுத்துவிட்டுச் சொன்னார்: "ஆஹா, கண்களில் பாருங்கள் எவ்வளவு
மகிழ்ச்சி. அப்படியே சந்தோஷம் கொப்பளிக்கிறது.' முதலாளியின்
மகிழ்ச்சியோடு தம்முடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று
நினைத்த பணியாளர், அந்தச் சட்டையை அடிக்கடி அணிந்தார். ஆனாலும்,
இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
ஆமாம், ஒவ்வொரு முறை அவர் அந்தச் சட்டையை அணியும்போதும்,
வருவோர் போவோர் நிற்பவர் நடப்பவர் என்று எல்லோரிடமும்
"பணியாளரின் ஏக்கத்தைக் கண்டு, தான் பெருந்தன்மையோடு கொடுத்த
கொடை அது' என்பதை விலாவாரியாக விளக்குவதற்கு நல்ல மனிதர்
தயங்கியதில்லை.
-
அது மட்டுமில்லை, இப்படியொரு புத்தம் புதுச் சட்டையை வேறு யார்
கொடுப்பார்கள் என்றும், சுற்றியிருப்பவர்களிடம் தமக்கு அப்படியொரு அன்பு
என்றும் அவர் பீற்றுகிற பீற்றல். அதன் பிறகு அந்தச் சட்டையை பார்த்தாலே
பணியாளர், மாரடைப்பின் எல்லைக்குச் சென்றுவிடுவார்.
-
மேற்கூறியவர்களையெல்லாம் "நல்ல மனிதர்கள்' என்றுதான் சொல்ல
வேண்டும்; ஏனெனில், ஒருவர் ஞானி, ஒருவர் சக்திமான், ஒருவர்
கொடையாளி. ஆனாலும், இவர்களின் "நல்ல தன்மைகள்', உண்மையிலேயே
நன்மைகளைச் செய்துள்ளனவா?
-
ஆனால், இதே நன்மைகளை, இரட்டிப்புச் சிறப்புகள் ஆக்கமுடியுமா?
முடியுமாம். காளிதாசர் கூறுகிறார்.
-
ஞானே மௌனம் க்ஷமா ஷக்தௌ
த்யாகே ஷ்லாகாவிபர்யய:
குணா குணானுபந்தித்வாத்தஸ்ய
ஸபிரஸவா இவ
(காளிதாசர் - ரகுவம்சம் - பிரதம ஸர்கம் - 22)
-
திலீபன் என்கிற மன்னனைப் பற்றிப் பேசுகிற காளிதாசர், இப்படிக்
கூறுகிறார். "திலீபனிடத்தில் ஞானம் இருந்தது; மௌனம் கலந்திருந்தது;
சக்தி இருந்தது; மன்னிக்கும் மனப்பான்மை சேர்ந்ததாக இருந்தது;
பெருந்தன்மையும் தியாகத் தன்மையும் இருந்தன; தம்மைத்தாமே தட்டிக்
கொள்ளும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்தன. குணம் குணத்தோடு சேர்ந்த
நிலையில், ஒவ்வொரு குணமும் இருமுறை பிறந்ததைப் போன்று சிறப்புத்
தன்மை வாய்ந்து சிறந்தது.' மௌனத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல்,
ஆர்ப்பாட்டமின்மையால் கட்டுப்படுத்தப்பட்ட கொடைத்தன்மை, நல்ல
குணங்களுக்கும் சரியான கடிவாளங்கள் இட்டால், அவை இரண்டு மடங்கு
நன்மையாகும்.
-
===============================================
- டாக்டர். சுதா சேஷய்யன்
நன்றி: கல்கி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எது நன்மை..? Empty Re: எது நன்மை..?

Post by அரசன் Wed Jun 22, 2011 2:14 pm

பகிர்வுக்கு நன்றிங்க அய்யா
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

எது நன்மை..? Empty Re: எது நன்மை..?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 30, 2011 9:43 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எது நன்மை..? Empty Re: எது நன்மை..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum