தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

5 posters

Go down

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா Empty 106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

Post by மதுரைஅருண் Wed Jun 29, 2011 3:06 pm

படம் : சிம்லா ஸ்பெஷல் ( Simla Special )
பாடல் : உனக்கென்ன மேலே நின்றாய் ( Unekenna Maele Nindrai )
பாடியவர் :
பத்ம பூஷன் திரு.S.P.பாலசுப்ரமணியம்
இசை : மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன்
வருடம் : 1982
இயக்குநர் : முக்தா சீனிவாசன்
நடிகர்கள் :
கமல்ஹாசன், எஸ்.வி .சேகர், ஒய்.ஜி ,ஸ்ரீபிரியா மற்றும் மனோரம்மா

பாடல் வரிகள் : வாலி




காற்றில் தவழும் காலத்தால் அழிக்க முடியாத இசை கீதங்களின் முதல்வர் மெல்லிசை மன்னர் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 83வது பிறந்த நாளின் சிறப்புப் தொகுப்பாக இந்த பதிவு.

[You must be registered and logged in to see this image.]

இசை என்னும் வெள்ளத்தை தமிழ்நாட்டில் பாய வைத்த மெல்லிசை மன்னர் பிறந்தது கேரள மாநிலத்தின் பசுமை படர்ந்த பகுதிகளைக் கொண்ட பாலக்காட்டில்.
மெல்லிசை மன்னரின் முதலெழுத்தொப்பமான (M.S.) M என்பது அவருடைய பிறந்த வீட்டின் பெயரான "மனயங்கத்"-தின் சுருக்கம் தான். பினெழுத்தான S என்பது அவரது
தந்தையின் பெயரான "சுப்ரமனியன்". தனது நான்காம் வயதில் தனது தந்தையை இழந்த
மெல்லிசை மன்னருக்கு அடுத்த சோகம் அவரது தாய் ரூபத்தில்... ஆம்.. அவரை
வளர்க்க தன்னிடம் தெம்பு இல்லை எனக்கூறி இசைத்தாயகத்தை கொல்வதற்கு முடிவு
எடுத்த தருணத்தில் அவரது தாத்தாவின் மூலம் காப்பாற்றப்பட்டு தனது இசை
பயனத்தை ஒரு திரையரங்கில் இடை வேளையின் போது சிற்றுண்டி விற்பவராக
தொடங்கினார் மெல்லிசை மன்னர்.(அந்த தாத்தாவிற்கும் திரையரங்கிற்கும் நாம் நன்றிக்கடன் பட்டவர்கள்தான்).
நீலகண்ட பாகவதரிடம் தனது இசைத் தேடலை முறையாக கற்று தனது 13வது வயதில் நாடக மேடை நடிகராக தனது பயணத்தை தொடங்கினார்.

இசை உலகில் ஒரு பாடகரவும் மற்றும் நடிகராகவும் ஆக வேண்டும் என்றுதான் திரு.C.R.சுப்புராமன் அவர்களை சந்திக்க ஹார்மோனியத்துடன் சென்றிருக்கிறார்..
அந்த சந்திப்பு தான் அருமையான சுவடுகளை வரலாற்றில் பதித்திருக்கிறது. அங்குதான் திரு.ராமமூர்த்தியை சந்த்தித்தார் விஸ்வநாதன்.
C.R.சுப்புராமன் அவர்களின் திடீர் மறைவால் அப்பொழுது அவர் ஏற்றுக்கொண்ட
படத்தின் மீதி வேலைகளை முடிப்பதற்காக இரண்டு இமயங்களும் ஒன்றாக இணைந்தனர்.
ஆனால் அப்பொழுது வரை இருவரும் தொழில் ரீதியாக எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை.

A.L ராகவன் தயாரிப்பில் N.S.கிருஷ்ணன் இயக்கத்தில் [You must be registered and logged in to see this link.]
என்ற படம் எடுக்க முடிவாகி A.L ராகவன் அவர்களின் முயற்சியால் இரண்டு
இமயங்களும் ஒன்றாக இணைக்கப்பட்டு இசை வரலாற்றில் ஒரு இதிகாசத்தை
பதித்தார்.இந்த படம் தான் இருவரும் இணைந்து இசை அமைத்த முதல் படமாக
வெளிவந்தது. இந்த படம் தான் நடிகர் திலகம் திரு.செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் இரண்டாவது படம்.




திரு.ராமமூர்த்தி
அவர்கள் வயதில் திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை விட பெரியவராக
இருந்தாலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்று முதலில் விஸ்வநாதன்
பெயர் வருவதை புன் முறுவலுடன் ஏற்றுக்கொண்டார் திரு.ராமமூர்த்தி.

விஸ்வநாதன்-ராமமூர்த்தி இருவரின் இசை மழையில் தமிழ் இசை ”பணம்” என்ற படத்தின் மூலம் 1952 முதல் நனைய ஆரம்பித்தது.இந்த படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இருவராலும் இசையமைக்கப்பட்டது. 16 June 1963-ல் சிவாஜி கணேசனால் மெல்லிசை மன்னர்கள் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
9 July 1965-ம் ஆண்டு வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” என்ற திரைப்படம் வரை இணைந்து இசை அமைத்த இவர்கள் இப்படத்திற்கு பின் சற்று விலகி 29 வருடங்களுக்குப் பிறகு 1995-ல் சத்யராஜின் ”எங்கிருந்தோ வந்தான்” என்ற திரைப்படம் மூலம் இணைந்தனர்.

மெல்லிசை மன்னர் ஒரு பேட்டியில் "வாத்தியங்களுக்காத்தான் இசையே தவிர இசைக்காக வாத்தியங்கள் கிடையாது.. இதுதான் என் பாடல்களின்
மென்மைக்கான ரகசியம்" என்றார்.

மொழிகள் பல கண்டும்,
பல தலைமுறைகள் கடந்தும்,
மாற்றங்கள் பல தந்தும்,
ஆயிரம் ஸ்வரங்கள் தொடுத்தும்,
பல பாடகர்களை கொடுத்தும்,
காலத்தால் அழிக்க முடியாத இசைகளை காற்றலைகளுக்கு தாரை வார்த்த இசைத்தாயின் தலை மகனாம் நம் மெல்லிசை மன்னர் பல்லாண்டு வாழ
”மதுரையின் பாடும் நிலா பத்ம பூஷன் Dr.SPB” தளத்தின் சார்பாக இதயங்கனிந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...


மெல்லிசை மன்னரும் பாடும் நிலாவும் இணைந்தது ”சாந்தி நிலையம்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “இயற்கை என்னும் இளையக்கன்னி”
என்ற பாடல் மூலம் தான். பாலுஜியின் தமிழ் திரைஉலக முதல் பாடலும் இதுதான். ஆனால் இந்த படம் வெளிவருவதற்கு முன்னரே “அடிமைப்பெண்” படம் வெளி வந்துவிட்டது.


சிம்லா ஸ்பெஷல் (1982) ஒரு வெள்ளித் திரை நாடகம். முக்தா சீனிவாசன் அவர்களின் இயக்கத்தில் வந்த படம்.
நகைச்சுவைக் காட்சிகளுக்கு கொஞ்சமும் பஞ்சம் இல்லாத அருமையான படம்.
கமல்ஹாசன், எஸ்.வி சேகர், ஒய்.ஜி ,ஸ்ரீபிரியா மற்றும் மனோரம்மா அவர்களின்
நடிப்பு இன்றும் படத்தை நம்மிடையே திரையிட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் இன்றும் பலரது விருப்பம்.வாலி எழுதியதுபோல், திரு.விஸ்வநாதன் அவர்களே ”உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா”
என்றும் நீர் இசையமைத்தை பாடல்கள் உலகம் உள்ள வரைக்கும் ஒலிக்கும்.
வாலியின் அர்த்தம் பொதிந்த இனிய வரிகளில் பாலு அட்டகாசமாகப்
பாடியிருக்கும் அருமையான பாடல் இதோ!



பாலு பாடும் போது வரிகளின் நடுவே உதிர்க்கும் சிரிப்புக்கே பல தடவை அந்த
பாடலை விரும்பிக் கேட்கலாம்.. அப்படி இந்த பாடலிலும் ஒரு இடத்தில்
அவருடைய தனிச் சிறப்பை வெளிப்படுத்தியிருப்பார்.. கேட்டு ரசியுங்கள்...


இரண்டு இசை இமயங்களுக்கு ஒரு பொன் விழா...



பாலுவின் பொன்னான குரலில் அவரே பாடியிருக்கும் ”உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா” மேடை பாடல்...



கமல்ஹாசன் நடிப்பில் சிம்லா ஸ்பெஷல் திரைப்படத்திற்காக...



பாடல் வரிகள்



SPB :
1......2........3........4..........

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகரென மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம் த
தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மே.......டை இல்லை போடாத வேஷம் இல்லை

சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆ...டும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்...டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா (ஹ) நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு

பூவென்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று

பால் போ..லக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நானென்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா

உனக்கென்ன மே....லே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா

தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம்
தகதினதக தகந்தோம் ததோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின
தோம்த தோம்த தோம்த தோம்த தகதின தோம்

உனக்கென்ன மே....லே நின்றா......ய் ஓ...... நந்த....லா.......லா.........


இங்கு வந்தும் உங்கள் கருத்துக்களை பதிந்து ஊக்கப்படுத்தலாமே....

[You must be registered and logged in to see this link.]
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா Empty Re: 106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

Post by arony Wed Jun 29, 2011 11:51 pm

ஓஓ.. எம் எஸ் வி அவர்களின் பிறந்தநாளோ... அதுவும் 83 வயதோ.. சொல்லவே முடியாது... தொடரட்டும் அவர் சேவை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவருக்கு.

அழகாக சுருக்கமாக அவர்பற்றிச் சொன்னமைக்கு நன்றி அருண். அழகான நெஞ்சில் இடம்பிடித்த பாடல்.
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா Empty Re: 106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

Post by கோவை ரவி Thu Jun 30, 2011 1:02 pm

இனிமையான பாடல் வாழ்த்துக்கள்.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா Empty Re: 106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Jun 30, 2011 11:58 pm

மகிழ்ச்சி 106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா 69767
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா Empty Re: 106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

Post by மதுரைஅருண் Sat Jul 02, 2011 12:37 am

arony wrote:ஓஓ.. எம் எஸ் வி அவர்களின் பிறந்தநாளோ... அதுவும் 83 வயதோ.. சொல்லவே முடியாது... தொடரட்டும் அவர் சேவை. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவருக்கு.

அழகாக சுருக்கமாக அவர்பற்றிச் சொன்னமைக்கு நன்றி அருண். அழகான நெஞ்சில் இடம்பிடித்த பாடல்.

மிக்க நன்றி.....
மதுரைஅருண்
மதுரைஅருண்
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 168
Join date : 09/03/2011
Age : 38
Location : மதுரை, சென்னை

Back to top Go down

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா Empty Re: 106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

Post by mravi Sat Jul 02, 2011 8:56 pm

காலத்தால் மறக்கமுடியாத மனிதரை நினைவு கூர்ந்தது ஒரு மிகப் பெரிய விஷயம். :héhé:
mravi
mravi
மல்லிகை
மல்லிகை

Posts : 98
Points : 158
Join date : 28/06/2011

Back to top Go down

106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா Empty Re: 106- உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum