தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?

3 posters

Go down

தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?  Empty தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Aug 10, 2011 1:54 pm

சமச்சீர் கல்வியில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் முன்பாகவே, "தீர்ப்பைத் தமிழக அரசு ஏற்கும்' என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து விட்டதால், இக்கல்வியாண்டு முதலாக தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி உறுதியாகிவிட்டது. இனி பள்ளிகள் எல்லாவற்றிலும் பாடநூல் விநியோகமும், கற்பித்தல் பணியும் தொடங்கிவிடும். தமிழகப் பள்ளிகளில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவிய இரண்டும்கெட்டான் நிலைமைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்பதுவரை மகிழ்ச்சி.

தமிழகத்தில் அனைவருக்கும் பொதுவான பாடத்திட்டம் வேண்டும் என்பதற்காக, 2006-ம் ஆண்டு முதலாகத் தொடர்ந்து குரல் கொடுத்தது மற்றும் வழக்குத் தொடுத்ததில் பொதுவுடைமைக் கருத்துச் சார்புள்ள அறிவுஜீவிகளுக்கும், சில கல்வியாளர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. இவர்களது கோரிக்கை தி.மு.க. அரசால் ஏற்கப்பட்டு, 2010-ல்தான் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளி அளவில் ஒரு வகுப்புக்கு மட்டும் சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வந்தது. இதுநாள்வரை, சமச்சீர் கல்விக்காகக் குரல் கொடுத்த இவர்கள், தற்போது தங்கள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் அது தவறு. இப்போதுதான் அவர்கள் களத்தில் நின்று காணவும், குரல்கொடுக்கவும் வேண்டிய உண்மையான தேவை மேலதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி முழுமையாக அமலுக்கு வந்துள்ளதன் மூலம் மாநில கல்விச் சூழலில் இரண்டு வகையான புதிய நிலைமைகள் இயல்பாக உருவெடுத்துள்ளன.

முதலாவதாக, அனைத்துப் பள்ளிகளும் (சுமார் 45,000 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுமார் 11,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகள், 25 ஓரியண்டல் பள்ளிகள், 50 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் அனைத்தும்) ஒரே பாடத்திட்ட முறைமைக்கு மாறிவிடுவதால், பயிற்றுமொழியைக் கொண்டு, "தமிழ்வழிப் பள்ளிகள்', "தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகள்' என்ற இரு வகையாக மட்டுமே அவற்றை அடையாளப்படுத்த முடியும். ÷அதேபோன்று, பயிற்றுமொழி மட்டும்தான் வேறு, பாடத்திட்டம் ஒன்றே என்பதால், கல்விக் கட்டணம்கூட, தமிழ்வழிப் பள்ளிகளுக்கானவை, ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கானவை என்று இரு விதமாக அமைக்கப்பட ஏதுவான நிலைமை உருவாகியுள்ளது. இரண்டாவதாக, மெட்ரிகுலேஷன் என்பதற்கு வணிக பலம் இல்லாமல் போனதால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு மாறவும், அதுதான் சிறந்த கல்வி என்கிற தோற்றத்தை உருவாக்கவும் தனியார் பள்ளிகள் முயலும். சி.பி.எஸ்.இ. பள்ளியாக மாறுவதற்கும், புதிதாக இன்டர்நேஷனல் பள்ளிகளைத் தொடங்கவும் முயலும். வசதிபடைத்தவர்கள் தங்களது குழந்தைகளை அதிகமான கட்டணத்தில் வசதியான பள்ளியில் படிக்க அனுப்புவதை யாரும் குறை சொல்ல முடியாது. அது அவரவர் விருப்பம். உரிமையும்கூட. ஆனால், ஓர் ஏழைக் குழந்தைக்கும் அதே தரத்திலான பாடத்திட்டம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது கருத்து. அதுதான் ஒரு ஜனநாயக நாட்டில் அரசின் கடமையும்கூட. அதற்கேற்ப சமச்சீர் பாடத்திட்டத்தையும், குறைகள் இருப்பின் நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்பதுடன் கற்பித்தலில் ஆசிரியர்களைப் பொறுப்பேற்கச் செய்வதும் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஏனெனில், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசாணை காரணமாக, எந்தவித நிபந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல், வகுப்புக்கே வராத மாணவர்களையும் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும் நிலைமை - குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ளது. வகுப்புக்கே வராத "ஆல் பாஸ்' மாணவர்கள் 9-ம் வகுப்புக்கு வரும்போது, தமிழைக்கூட படிக்கத் தெரியாதவர்களாக வருகிறார்கள். இவர்களையும் எப்படியோ 10-ம் வகுப்புக்குத் தள்ளிவிடும் வேலையையும் ஆசிரியர்கள் செய்துவிடுகிறார்கள்.

மாணவர் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியர் பணியிடங்கள் குறையும்; இடமாற்றம் நேரிடும் என்பதற்காக, பள்ளிக்கே வராத மாணவர்களையும் வருகைப் பதிவேட்டில் தொடர்ந்து வைத்திருந்து பாஸ் போடுவதும், பாடங்களை நடத்தாமல் இருப்பதும் ஊரகப் பள்ளிகளில் பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கற்பித்தலுக்குப் பொறுப்பேற்கச் செய்யாமல் பாடத் திட்டங்களை சி.பி.எஸ்.இ.க்கு இணையானதாக, தரமானதாக, சமச்சீராக அளித்தாலும், ஏமாற்றத்துக்கு ஆளாவது ஏழைக் குழந்தைகள்தான். பள்ளிகளில் மாணவர்களை மதிப்பீடு செய்வதைப் போல, ஆசிரியர்களின் கற்பித்தலையும் மதிப்பீடு செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.

தற்போது சமச்சீர் கல்வியால் ஒரே பாடத்திட்டம் என்பதால், 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை, அந்தந்தக் கல்வி மாவட்ட அளவில், பொது வினாத்தாள் மூலம் (ஒரே வினாத்தாளில் ஆங்கிலம், தமிழில் கேள்விகள் இருக்கும் வகையில் தயாரித்து) தேர்வு நடத்தி, விடைத்தாள்களை வேறு பள்ளிகளில் கொடுத்து திருத்திப்பெற்று, ஆசிரியர்களின் கற்பித்தலை மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை உருவானால் மட்டுமே, மக்கள் நம்பிக்கையுடன் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வருவார்கள். கற்பித்தல் குறைபாடுகளைக் களையவும், களைய முடியாத நிலையில் அத்தகைய ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும் அதிகாரமுள்ள அமைப்பாக பெற்றோர்-ஆசிரியர்- அமைப்போ அல்லது ஏதாவது ஒரு பாரபட்சமற்ற கண்காணிப்பு அமைப்போ செயல்படுவதுதான் இதற்கு ஒரே வழி.

செல்வந்தர் வீட்டுப் பிள்ளைக்குத் தனியார் பள்ளியில் கிடைக்கும் அதே கல்வி, சாதாரண ஏழைக்கும் கிடைக்கச் செய்யும் ஒரே விதமான பாடத்திட்டத்துக்குப் பெயர்தான் சமச்சீர் கல்வியே தவிர, தரம் குறைந்த கல்வித்திட்டமல்ல. கடையனுக்கும் கடைத்தேற்றம் என்கிற வகையில், அடித்தட்டு மக்களுக்கும் சர்வதேச அளவிலான தரமான கல்வியை அரசு வழங்குவதுடன், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளையும், தகுந்த ஆசிரியர்களையும் உறுதிப்படுத்துவதன் மூலம்தான் சமச்சீர் கல்வி என்பது உறுதிப்படுத்தப்படும்.

தனியார் பள்ளியில் கற்பித்தலுக்கு ஆசிரியரைப் பொறுப்பேற்கச் செய்யும்போது, அரசுப் பள்ளிகளில் மட்டும் ஏன் தயக்கம்? இந்தத் தயக்கம்தானே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கத் தயங்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ÷சமச்சீர் கல்வி அவசியம். அதே நேரத்தில், கற்பித்தலில் சமநிலையை உறுதிப்படுத்துவதும் மிகமிக அவசியம்.


[You must be registered and logged in to see this link.]
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?  Empty Re: தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?

Post by thaliranna Wed Aug 10, 2011 9:45 pm

அருமையான தலையங்கம்! :héhé:
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?  Empty Re: தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 10, 2011 11:12 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?  Empty Re: தலையங்கம்: எது சமச்சீர் கல்வி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum