தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எதிரியை வெல்வது எப்படி ?
2 posters
Page 1 of 1
எதிரியை வெல்வது எப்படி ?
நம்மை அவமானப் படுத்துவதன் மூலம், எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.
துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள்.
புல் சாதாரணமானதுதான். அற்பமானதுதான். ஆனால், எத்தனை அற்புதமானது தெரியுமா? இந்த புல் யாரையும் காயப்படத்துவதுமில்லை. தான் யாராலும் காயப்படுவதுமில்லை. அகந்தை (Ego) இல்லாத வளைந்து கொடுக்கும் அதன் தன்மையால் அது அழிந்துவிடாமல் நிலைத்து நிற்கிறது.”- முனைவர் பர்வின் சுல்தானா.
நாம் யாவரும் நல்ல பெயர் வாங்க எத்தனை பாடுபடுகிறோம். நல்லவன் என்று நம்மைப்பற்றி நாமே எத்தனை கதை விடுறோம். யாராவது நம்மை நல்லவன் என்று பாராட்டினால் நாம் உச்சி குளிர்ந்து போகிறோம்.
ஒரு இளவரசி அழகாக தோன்ற வேண்டுமென்பதற்காக அவளைச் சுற்றியுள்ள பெண்கள் மேல் கரிபூசி அலங்கோலப்படுத்தி வைத்தார்கள். அப்போதுதானே அந்தப் பெண்களின் மத்தியில் இந்த இளவரசி பளிச்சென்று தெரிவாள்.
“ உலகமே நாடகமேடை, நாம் யாவரும் நடிகர்கள்”-ஷேக்ஸ்பியர்
வாழ்வில் நமக்கு நாம் கதாநாயகர்களாக வாழ்கிறோம். நமக்கு சில எதிரிகள் (வில்லன்கள்) ஏதோ ஒரு வகையில் முளைக்கிறார்கள்.
நாம் இறைவனின் படைப்பு என்றும் நம் எதிரிகள் சாத்தானின் படைப்பு என்றும் நாம் நினைக்கிறோம். உண்மையில் நம்மை படைத்த இறைவன்தான் நம் எதிரிகளையும் படைத்தான்.
நம்மை அவமானப் படுத்துவதன் மூலம் , எதிரிகள் நமக்கு உதவுகிறார்கள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த நம்மை எழச் செய்கிறார்கள். அரைத் தூக்கத்தில் இருந்த நம்மை ஒரு விழிப்புணர்வு நிலைக்கு கொண்டு வருகிறார்கள்.
துருபிடித்த கத்தியைப் போல இருந்த நம்மை பட்டை தீட்டுகிறார்கள். நம் பயத்தை வெல்ல நமக்கு சோதனை வைக்கிறார்கள். அவர்களால் நம் திறமைகள் வெளிப்படுகின்றன.
அவர்களின் கொடூரமான செயல்களால் நமக்கு நற்பெயர்கள் கிடைக்கின்றன. கனத்துப்போன நமது ஆணவம் நம் எதிரிகளால் உடைக்கப் படுகிறது.
விமானம் மேலே எழுவதற்கு அளவான எதிர்காற்று வேண்டும். இழுத்து பிடித்திருக்கும் கயிறு, பட்டத்தை மேலே செல்ல விடாமல் தடுப்பது போல தோன்றும் அந்தக் கயிறு அறுந்து போனால் பட்டம் மேலே நிற்குமா? இது போலவே தங்கள் எதிர்ப்பின் மூலம் எதிரிகள் நமக்கு சேவை செய்கிறார்கள்.
சாலைகளில் சில திருப்பங்களும் , சில இடையூறுகளும் இருப்பது நம்முள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வாழ்விலும் சில தடைகள், சில சிக்கல்கள், சில விரோதிகள் வரும்போதுதான் வாழ்க்கை பயணத்தில் சப்பு இல்லாமல் செல்கிறது. ஒரு சாதிப்பு இருக்கிறது.
பதிலுக்கு பதில்
நம்மை ஒருவன் திட்டிவிட்டால் பதிலுக்கு நாம் இரண்டு திட்டு திட்டினால்தான் காயப்பட்ட நம் மனது ஆறுகிறது. அன்று இரவு நல்ல தூக்கம் வருகிறது. நம்மை ஒரு அடி அடித்தால் அதற்கு நாம் ஏதாவது திருப்பிக் கொடுத்தால் தான் நம் மனம் தேறுகிறது.
இப்படி பதிலுக்கு பதில் , பழிக்குப் பழி நாம் செய்யாவிட்டால், நம்மால் செய்ய முடியாவிட்டால் நம் மனத்தில் காயத்தின் வடுக்கள் பதிவாகின்றன. அது வஞ்சனையாக உருவெடுக்கின்றது. நம் மனத்தில் அமைதி கெடுகிறது.
இப்படி பதிலுக்குப்பதில் என்று நாம் ஆரம்பிக்கும்போது அது ஒரு சங்கிலிபோல தொடர்கிறது. அப்போது ஒரு சக்கர சூழல் மாட்டிக் கொள்கிறோம். அப்போது நமது இலக்குகள் காணாமல் போய்விடுகின்றன.
இரண்டு சேவல்கள் சண்டை போடுகின்றன. மாறி மாறி கொத்தி மணிக்கணக்கில் சண்டை போட்டு முடிவில் இரண்டுமே சக்தியிழந்து இரத்தக் காயங்களுடன் கீழே சாய்கின்றன. இதுபோல் அநேகரின் வாழ்வு வசந்தங்கள் இல்லாமல் சண்டைகளால் வறண்டு போகின்றன.
நம் எதிராளியின் செயல்கள் அல்லது பேச்சுக்கள் மட்டுமல்ல , அவர் நம்மை பார்க்கும் பார்வைகள் கூட ஏளனமாக இருந்தால் அவரிடம் நேரில் பேச வேண்டும். வெளிப்படையாக பேச வேண்டும்.
உங்களுக்கு என் மீது ஏதாவது வருத்தம் இருந்தால் , நேரடியாக என்னிடம் பேசலாம். அதைவிட்டு நீங்கள் பேசும் விதம், பேசும் வார்த்தைகள் என் சுய மரியாதையை பாதிக்கிறது. நீங்கள் பார்க்கும் ஏளனப் பார்வை என் மனதை புண்படுத்துகிறது.
நீங்கள் இப்படி நடந்து கொள்வதை நான் கொஞ்சமும் விரும்பவில்லை. இதை என்னால் அனுமதிக்க முடியாது. இது போன்ற உங்கள் செயல்களை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்று கண்டிப்புடன் பேசிவிட வேண்டும்.
இப்படி பேசும்போது , இதை சற்றும் எதிர்பாராத அவர்கள், நம்மைப் பொறுத்தவரை தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வார்கள். நமக்கு வேண்டிய மரியாதையை கொடுப்பார்கள்.
பிறரிடமிருந்து நமக்கு வேண்டிய மரியாதையை நாம்தான் தெளிவாக முடிவு செய்யவேண்டும்.
அவர்கள் , புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தால் நாம் எடுத்துச் சொல் நம் மரியாதையை நாம் காப்பாற்றவேண்டும். நம் மரியாதை, கௌரவம் காற்றில் பறக்கும்போது நாம் விழிப்புணர்வு இல்லாமல் மந்தமாக இருந்துகொண்டு பின்பு வருத்தப்படவும், பிறர் மீது கோபப்படுவதும் ஆகாது. இதனால் நம் மனதில் சஞ்சலங்கள் உருவாகும்.
சமுதாயத்தில் நம் சுயமரியாதை (Image) பாதிக்கப்படும். நம் அனுமதி இன்றி யாரும் நம்மை அவமானப்படுத்திவிட முடியாது.
மதிமிக்க மனிதர்கள் பழிக்குப் பழி என்ற அந்த சக்கர வளையத்துக்குள் சிக்குவதில்லை.
நீரு பூத்த நெருப்பு:
நீரில் இருந்து நெருப்பு வருமா ? நீரை கொதிக்க வைத்தால்கூட, அந்த சூடான நீர் கூட நெருப்பை அணைக்கவே செய்யும். அதே நீர் தன் அடுத்த நிலையில் நெருப்பை கக்குகிறதே! அது நமக்குத் தெரியுமா!
ஆம்! நீர் சூடாகி நீராவியாக மாறுகிறது. நீராவிகள் மேகங்களாக ஆகாயத்தில் சுற்றுகின்றன. அந்த மேகங்கள் என்ற நீர்த்துளிகளுக்குள் மின் காந்தங்கள் கலக்கின்றன. அந்த மேகங்கள் ஒன்றோடொன்று மோதும்போது நெருப்பு மிகப் பெரிய நெருப்பு உண்டாகின்றன. அதுவே இடி மின்னல்.
அது போலவே மனிதர்கள் தெளிந்த நிலையில், அன்பு நிலையில் இருக்கும் போது அவர்கள் உறவுகளில் உரசல்கள் வருவதில்லை. பதிலுக்குப் பதில் என்ற நெருப்பு பற்றுவதில்லை.
அகந்தை என்ற மின் காந்தம் இல்லாத மனதில் எதிரிகளின் தீ நாக்குகளால் தீயை பற்ற வைக்க முடிவதில்லை.
வலிமை மிகுந்த மிகப்பெரிய விமானம்கூட பறக்கும்போது ஒரு மிகச் சிறிய பறவை மீது மோதும் போது பலத்த சேதமடைகிறது. மிகச் சிறிய பறவை தானே விமானத்தை ஒன்றும் செய்து விடாது என்று நாம் உறுதி கூறமுடியுமா?
நாம் அற்பமாக நினைக்கும் மிகச்சிறிய பலமற்ற எதிரிகூட நம் வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும். சிறியவரானாலும், பெரியவரானாலும் நம் எதிரியின் எதிர்ப்புத் தன்மையை எக்காரணம் கொண்டும் நாம் கூர்மை படுத்தக்கூடாது.
அவர்களின் கொம்பைச் சீவி விடும் வேலையை, அவர்களை சீண்டிவிடும் மதியற்ற வேலையை தப்பித் தவறிக்கூட செய்ய மாட்டான் புத்திசாலி.
எதிரிகளை வெல்ல சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதே. அப்போது அவர்கள் பலமும் நம் பலமாகிறது.
முகமது நபியை, அவரது கொள்கைகளை எதிர்த்து நின்ற அவரது எதிரி பின்பு அவரின் மிகப்பெரிய தோழர் ஆனார். அவர்தான் மிகச்சிறந்த கலீபாவான உமர்.
மிகச்சிறந்த மன்னர்கள் தங்கள் எதிரி நாட்டை வென்ற பின்பு அந்த அரசர்களை அவமானப்படுத்துவதில்லை. அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்கிறார்கள். மகா அலெக்ஸாண்டர் கூட போரஸ் மன்னனை மரியாதையுடன் நடத்தினார்.
நம் உள்ளத்தில் கேடான எண்ணங்கள் இல்லையென்றால் நமக்கு இந்த உலகிலும் கேடான மனிதர்கள் இருக்க மாட்டார்கள்.
ஒரு மனிதனின் உயர்ந்த பண்பு எங்கே வெளிப்படுகிறது. அவன் நண்பர்களிடம் நடந்துகொள்ளும் தன்மையிலா? இல்லை அவன் தன் எதிரிகளிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதில்தான் அவனது உண்மையான மறுபக்கம் வெளிப்படுகிறது. –
நன்றி . தே.சௌந்தரராஜன். மற்றும் வாஞ்சூரார் வலைதளம் !
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எதிரியை வெல்வது எப்படி ?
உண்மை .இன்று திமுகவை தட்டி எழுப்பிய அதிமுக நினைவுக்கு வருகிறது .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ‘குடும்ப சண்டையில் மாமியாரை வெல்வது எப்படி’..!
» வெல்வது யார்.?
» எதிரியை வீழ்த்தும் வார்த்தைகள் தேடி...
» தன் எதிரியை இனங்கண்டு தாக்கும் தன்மை எறும்புகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்
» Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது எப்படி?
» வெல்வது யார்.?
» எதிரியை வீழ்த்தும் வார்த்தைகள் தேடி...
» தன் எதிரியை இனங்கண்டு தாக்கும் தன்மை எறும்புகளுக்கு உண்டு: ஆய்வில் தகவல்
» Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum