தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்

2 posters

Go down

கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம் Empty கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 24, 2011 10:10 pm

[You must be registered and logged in to see this image.]
கரு
நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த
உலகத்தில் இருப்பது சாத்தியமா?! கூந்தல் நீளமா... அடர்த்தியா... கருமையா
வளர தவம் கிடக்கும் பெண்களுக்காக இந்த குட்டிக் குட்டி டிப்ஸ்...

* வைட்டமின் 'பி' காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்.

*
நெல்லிக் காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து அந்த விழுதைத்
தலையில் தடவி ஊற வைப்பது குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

*
முடி எல்லோருக்கும் அடர்த்தியாக வளரும் என்று சொல்லமுடியாது. இது
பரம்பரையாக வருகின்ற சொத்து என்பதுதான் உண்மை. அதேபோல்தான் வழுக்கை
விழுவதும், அதைப் புரிந்து கொண்டால் கவலைப்படுவதனால் முடி கொட்டுவதை
தவிர்க்கலாம்.

* அழுகின தேங்காயைத் தூக்கி எறியாமல் சிறிது சுடு
நீருடன் அரைத்துத் தலையில் தடவி ஊறவைக்கவும். பிறகு நன்றாக 'மசாஜ்'
செய்யவும். மயிர்க்கால்கள் வலுப்பெற சரியான வழி இது.

* இரண்டு
ஸ்பூன் வினிகருடன் கடலைமாவைக் குழைத்துக் கால்மணி நேரம் ஊறவைக்கவும். இதை
நன்றாக மயிர் கால்களில் படும்படித் தடவி அரைமணி நேரம் ஊறிய பிறகு அலசி
விடவும். பொடுகுத் தொல்லை போயே போச்சு.

* நீங்கள் உபயோகிக்கும் ஷாம்பூவுடன் சில துளிகள் கிளிசரின் சேர்த்துக் கொண்டால் முடி அறுந்து போகாது.

*
சீப்பு உங்களுக்கென்று தனியாக வைத்துக்கொள்ளவும். வாரத்தில் மூன்று தடவை
அதைக் கழுவ வேண்டும். உலோகத்தால் ஆன சீப்புகளைத் தவிர்க்கவும்.

*
தேங்காயைத் தண்ணீ­ர் சேர்க்காமல் அரைத்துப் பால் பிழியவும். இதை இரும்புக்
கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயைத் தலையில் தடவி
ஊறிய பின் சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.

* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால் மயிர்க் கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.

*
விளக்கெண்ணையைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை.
விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன். தேங்காய் எண்ணைய் ஒரு டேபிள் ஸ்பூன்
எடுத்து இலேசாகச் சுடவைத்து மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி
விடவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது
சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு
செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க
முத்தான வழி இது.

* கூந்தல் வறண்டு இருந்தால ஒரு கிண்ணத்தில்
மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத்
தலையில் மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

* அங்கங்கே தலையில் சிறு பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் முடி வளரும்.

*
தலை முடிக்குப் போஷாக்குத் தரும் ஷாம்பூ பவுடரை வீட்டிலேயே தயாரிக்கலாம்.
ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப்பயறு அரைப்பங்கு,
புங்கங்காய் கைப் பிடி எடுத்து மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ரசாயனப் பொருள்கள் இல்லாத பொடி, எந்த விதத் தீங்கும் ஏற்படுத்தாது.
முடியும் வளரும்.

* நேரமில்லை என்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக்கொள்ளலாம்.

*
பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம
அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய
பின் குளித்தால் விரைவில் குணம் தெரியும்.

* தேங்காய் எண்ணெய்
தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்தத் தேங்காய் எண்ணெயில் காய வைத்த
செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களையும் பொடி செய்து கலந்து
வைத்துக் கொண்டு பயன்படுத்தினால் முடி கறுப்பாக வளரும்.

* ஓடி ஆடி
வெயிலில் அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம்
இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல் சுத்தமானவிளக்கெண்ணெயைத்
தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.

* தலைக்கு
சீயக்காய்த்தூள் தேய்த்துக்கொள்ளும் போது, சீயக்காய்த் தூளுடன்
தண்ணீ­ருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தேய்த்துக் குளித்தால், தலை
முடியில் உள்ள அழுக்கு சுத்தமாக நீங்கி விடும். சீயக்காயும் குறைந்த அளவே
போதும்.

இதோ, முடி பளபளப்பாக காய்கறி வைத்தியம்:

*
வெங்காயத்தையும், முட்டைக் கோசையும் பொடிப் பொடியாக நறுக்கி (ஒரு கப்) அதை
இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும். காலையில்
சிறிது யூடிகோலன் சேர்த்தால் வெங்காய வாசனை போய்விடும். இந்தச் சாறுடன்
தேங்காய் எண்ணெய் கலந்து மயிர்க் கால்களில் படும்படி நன்றாக மசாஜ்
செய்யவும். சீயக்காய்ப் பொடி போட்டுக் குளித்தால் முடி பளபளப்பாக மென்மையாக
மாறும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம் Empty Re: கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்

Post by arony Thu Aug 25, 2011 12:55 pm

இது ரொம்ப ஓவர்ர்ர்ர்ர்.... நான் கூந்தலைச் சொன்னேன்... [You must be registered and logged in to see this image.]
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம் Empty Re: கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 25, 2011 12:56 pm

பொறாமையால சொல்லுறீங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம் Empty Re: கரு கரு' கூந்தலுக்கு காய்கறி வைத்தியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum