தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...!
2 posters
Page 1 of 1
தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...!
[You must be registered and logged in to see this link.]
மருத்துவமும்
விஞ்ஞானமும் வளர வளர... சுகாதாரம் தொடர்பான புதுப்புது அச்சுறுத்தல்கள்
பற்றிய செய்திகளும் புறப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. லேட்டஸ்ட் வரவு
ஈ-கோலை (E coli-Escherichia coli) ''உயிருக்கே உலை வைக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான ஒரு வகை பாக்டீரியாதான் இப்போது பரவிவரும் ஈ-கோலை.
இந்தியாவுக்குள்
இந்தப் பாதிப்பு இன்னும் வரவில்லை. இது ஆறுதலாக இருந்தாலும், இந்த
பாக்டீரியா பரவக்கூடிய அபாயத்துக்கான பாதையாக இந்தியாவின் சுகாதாரம்
இருப்பதுதான் வேதனை!'' என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஈ-கோலை பாக்டீரியா பாதிப்பை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கைகள்.
இப்போது வலியுறுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக... ஈ-கோலை பாக்டீரியா
பெண்களிடத்தில் பரவுவதற்கான சாத்தியம் அதிகம் இருக்கிறது. தாம்பத்யம்
வாயிலாகப் பரவி, குடும்பத்தின் நிம்மதியைக் குலைக்கிற அளவுக்கு ஈ-கோலை
மாறும் அபாயம் இருக்கிறது என்பதற்காகவே இந்த விழிப்பு உணர்வு கட்டுரை.
உ.பி.
மாநிலத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஜவஹர்லால் நேரு
மருத்துவக் கல்லூரி இணைப் பேராசிரியரும், சிறுநீரக சிகிச்சை நிபுணருமான
டாக்டர் ஷஹஜாத் ஃபக்ருல் ஹக் இதுகுறித்து விரிவான தகவல்களை இங்கே
விளக்குகிறார்.
''மனித
உடலிலேயே ஈ-கோலை பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இவை, உணவு ஜீரணத்துக்கும்,
கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகின்றன. மலம் கழிக்கும்போது சரியாக
சுத்தப்படுத்தாவிட்டால், மலத்தின் மூலம் வெளியேறும் இந்த பாக்டீரியாவே
நமக்கு தீமை செய்யக்கூடியதாகவும் மாறிவிடும். இதைத் தவிர சுகாதாரமற்ற
குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் வாயிலாகவும்... சுகாதாரமற்ற இடங்களில்
மல, ஜலம் கழிக்கும்போது பிறப்புறுப்புகளில் தொற்றுவதன் வாயிலாகவும் உடலில்
பரவ வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இத்தகைய தொற்று ஈ-கோலையை விரட்டியடிக்க
நவீன மருந்து மாத்திரைகள் நிறைய வந்துவிட்டன. அதனால், அச்சம்
கொள்ளவேண்டாம்!'' என நம்பிக்கையான வார்த்தைகளை சொன்ன டாக்டர் தொடர்ந்தார்.
''யூ.டி.ஐ. ((UTI-Urinary
Tract Infection)யூ.டி.ஐ. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி சிறுநீர்
கழிப்பது, தாங்கமுடியாத எரிச்சல், முதுகுவலி, குளிர் காய்ச்சல்... போன்ற
தொல்லைகளால் அவதிப்படுவார்கள். இதற்குச் சரியான மருத்துவ சிகிச்சை
அளிக்காதபோது... நாளடைவில், சிறுநீரகத்தைப் பாதித்து உயிருக்கே உலை
வைத்துவிடும் அபாயமும் உண்டு. இதில் இருந்து தப்பிக்க சாத்தியமான எளிய வழி
இருக்கிறது. சுத்தமான தண்ணீரை அதிகம் குடித்தாலே... பாதிப்பை ஓரளவுக்குக்
குறைத்துவிடலாம்!
'யூ.டி.ஐ.’
என்பது தொற்று நோய் வகையைச் சேர்ந்தது என்பதால், பாதிக்கப்பட்ட நபர்கள்
நோய் முற்றிலும் தீரும்வரை உடலுறவைத் தள்ளிப் போடுவது நல்லது. அல்லது
ஆணுறையைப் பயன்படுத்தலாம். மனைவிக்கு யூ.டி.ஐ. பாதிப்பு அடிக்கடி
இருந்தால், முதலில் கணவருக்குதான் விந்து பரிசோதனை செய்ய வேண்டும்.
பாதிப்பு இருக்கும்பட்சத்தில், உடலுறவின்போது குறிப்பிட்ட நேரத்துக்கு
முன்னதாகவே விந்து வெளியாகிவிடும். ஏனெனில், ஆண்களின்
சிறுநீரகத்திலிருக்கும் 'புராஸ்டேட்’ எனும் சுரப்பி, சிலசமயம் வயதின்
காரணமாக அளவில் பெருத்துவிடும். அப்போது புராஸ்டேட்டில் ஈ-கோலை தாக்குதலும்
அதிகமாக இருக்கும். இதனால், விந்து முந்துதல், மலட்டுத் தன்மை,
சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் அணிவகுக்கும்.
ஈ-கோலை
பாதித்த தன்மையைப் பொறுத்து ஆன்டிபயாட்டிக் ஊசி மற்றும் மாத்திரைகளைத்
தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் பாதிப்புகளைக் குறைக்கவும்,
அறவே அதன் பிடியில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும் ஒரே வழி'' என்றவர்,
ஈ-கோலை தொற்று நோயைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் சொல்ல
ஆரம்பித்தார்.
''மலம்
மற்றும் சிறுநீர் கழித்தபின் அந்தப் பகுதியை சுத்தமாக கழுவி விடவேண்டும்.
ஆண், பெண் இருவரில் ஒருவர் மலம் கழித்துவிட்டு, தங்கள் உறுப்பை
சுகாதாரமாக வைத்துக் கொள்ளாமலிருந்து, அந்த நேரத்தில் உடலுறவு வைத்துக்
கொண்டாலும்... இந்த ஈ-கோலை பரவக்கூடும். அதேபோல... உடலுறவுக்குப் பிறகு,
பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். அசதியாலோ அக்கறையற்ற போக்காலோ
பலரும் அப்படியே உறங்கிவிடுகிறார்கள். அது தவறு. தாம்பத்தியத்தில்
தொற்றுக்கு வாய்ப்பு ஏற்படாதபடி இயற்கையாகவே சில ஏற்பாடுகள் இருந்தாலும்,
இத்தகைய பாக்டீரியா பாதிப்புகளில் இருந்து தப்பிக்க... உறவுக்குப் பின்னர்
சுத்தம் அவசியமாகிறது. வாழ்கைத் துணை தவிர, மற்றவர்களுடன் உடலுறவு
கொள்வதையும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான முறைகளையும் கடைப்பிடிக்க
வேண்டும். மொத்தத்தில், நம் உடலைச் சுத்தமாக வைத்துக் கொண்டால் யூ.டி.ஐ.
தொல்லை நம்மை நெருங்கவே நெருங்காது!'' என்றார் உறுதியுடன்.
எப்படி வருகிறது ஈ-கோலை?
உடலுக்கு
கேடு விளைவிக்கும் ஈ-கோலை பாக்டீரியா எப்படி பரவுகிறது என மைக்ரோபயாலஜி
நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். ''ஈ-கோலை பாக்டீரியாக்களில் பல வகை
இருக்கின்றன. ஒவ்வொரு பாக்டீரியாவும் ஒவ்வொரு விதத்தில் பரவும். மலத்தில்
உள்ள ஈ-கோலைகளில் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை அதிகம்.
குறிப்பாக... ஆடு, மாடுகளின் சாணங்களிலும் இந்த ஈ-கோலை பாக்டீரியாக்கள்
அதிகம் இருக்கும். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சாணத்தை சுகாதாரமற்ற
முறையில் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாக நடக்கும். மிகச்சுத்தமாகக் கழுவிய
பிறகே இதர வேலைகளில் ஈடுபட வேண்டும். இல்லையேல் அந்தத் தொற்று எளிதாக
நடந்துவிடும்.
மேலை
நாடுகளில் வேகவைக்காத காய்கறிகள், மாட்டுக்கறி மூலமாக ஈ-கோலை பாக்டீரியா
பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. ஈ-கோலை பாதிப்பு ஏற்பட்ட உடன் எந்த
அறிகுறியும் தெரியாது. 24 மணி நேரத்தில் இருந்து 72 மணி நேரத்தில் அதன்
பாதிப்புகள் தெரியத் தொடங்கும். திடீர் வயிற்றுப்போக்கு வந்தால்...
உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது!'' என்கிறார்கள்
உஷார்படுத்தும் விதமாக.
நன்றி அவள் விகடன் மற்றும் சங்கவி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தாம்பத்ய வாழ்க்கையை தடுமாற வைக்கும் ஈ-கோலை...!
நன்றி நன்றி நல்ல தகவல்
சரவணன்- மன்ற ஆலோசகர்
- Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)
Similar topics
» தாம்பத்ய உறவும் நோயெதிர்ப்பு சக்தியும்
» தவறான செய்திகள்... தடுமாற வைத்த இளையராஜா!
» வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள்...
» வாழ்க்கையை வாழ தெரிந்தவன்!
» வாழ்க்கையை அழகாக்க
» தவறான செய்திகள்... தடுமாற வைத்த இளையராஜா!
» வாழ்க்கையை ஒரு வேட்டையாக நினைத்துக்கொள்ளுங்கள்...
» வாழ்க்கையை வாழ தெரிந்தவன்!
» வாழ்க்கையை அழகாக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum