தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என் புது வீடு

+4
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அப்துல்லாஹ்
8 posters

Go down

என் புது வீடு Empty என் புது வீடு

Post by அப்துல்லாஹ் Sun Sep 18, 2011 7:20 pm

[You must be registered and logged in to see this image.]

கலைத்துப் போடடப்பட்ட
நெகிழி(பிளாஸ்டிக்) குச்சிகளை
அவற்றின் வண்ணங்களையும்
வடிவங்களையும் மனதில் கொண்டு
வேகமாக ஒன்றோடொன்று
பொருத்தினான் என்மகன்

அவை நான் அவனுக்காக
வாங்கித்தந்த
பொம்மை வீடு கட்டும்
விளையாட்டுப் பொருள்.

கொஞ்சமான நேரத்தில்
குதித்துச் சத்தமிட்டான்
வாப்பா இது என்வீடு ! என்று
அருகில் சென்றேன்
வலதுகை முஷ்டி மடக்கி
வலது நெஞ்சில் அழுத்திய
அவனது முகத்தில்
அப்படி ஒரு பெருமிதம் ...
சுட்டிக்காட்டிச் சொன்னான்

வாசற்படி தொடர
தலைவாசலும் தரைத்தளமும்
சன்னலும் மேல்முகடும்
ஒவ்வொரு வண்ணங்களில்
மிளிர்ந்தது.

செல்லமாய் அவன் தலை கலைத்து
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது

இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்

கரையேற நிற்கும்
இரு சகோதரிகளும்
பிணி வயப் பட்ட
பெற்றவர்களும்
பொறியியல் படிக்கும்
இளைய தம்பியும்
வீட்டுச் செலவுகளும்
விசேச நாட்களும்...

சிதிலமடைந்து
காரை பெயர்ந்த
கரையான் தினப்பட்ட
பழைய வீட்டில்
பழகிப் போன
இதே கவலையுடன்
நான்......

எப்போது சொல்வேன்
இது என் புது வீடு!!!


Last edited by அப்துல்லாஹ் on Sun Sep 18, 2011 7:58 pm; edited 1 time in total
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Sep 18, 2011 7:38 pm

உணர்வுகள் வரிகளாக அருமையாக உள்ளது அருமை நண்பரே.. தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by அ.இராமநாதன் Sun Sep 18, 2011 7:43 pm

விட்டுச்செலவுகளும் என்பது வீட்டுச் செலவுகளும்
என இருக்க வேண்டும்...
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Sep 18, 2011 7:47 pm

திருத்தம் செய்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by அப்துல்லாஹ் Sun Sep 18, 2011 7:51 pm

அ.இராமநாதன் wrote:விட்டுச்செலவுகளும் என்பது வீட்டுச் செலவுகளும்
என இருக்க வேண்டும்...
-
கவிதை நல்லா இருக்கு...
ஆமாம் அய்யா
இணையத்தில் பார்த்துப் பார்த்து தட்டச்சிட்டாலும் சில நேரம் நம் காட்சியைத்தப்பி ததும்பிவிடுகின்றன. சுட்டிய உங்களின் வாசித்தலும் வார்த்தைகளும் என்னை செதுக்கும்.
நன்றி ஐயா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 18, 2011 8:45 pm

செல்லமாய் அவன் தலை கலைத்து
மெல்லக் கன்னம் தடவிய போது
என் கண்களில் நீர் அரும்பியது

இது என் புது வீடு
நான் எப்போது சொல்வேன்
--- சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது என்ற கருத்தை பிரதிபலிக்கும் கவிதை அடிகள் சிறப்பாக உள்ளன... பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by அப்துல்லாஹ் Sun Sep 18, 2011 8:48 pm

வரிகளை நுகர்ந்து வாழ்த்தினை பகிர்ந்த ரமேசுக்கு என் அன்பும் மகிழ்ச்சியும் ....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by கலைநிலா Mon Sep 19, 2011 1:37 am

வாழ்க்கையோடு ,உங்கள் வார்த்தைகள் இணையும்.
இதயத்தை இணைக்கும்
சுழ்ல்நிலையை படம் பிடித்துக்காட்டும் .

கல்வியாளருக்கு சொல்லவா வேண்டும் !

பாராட்டுக்கள் தோழரே !தொடருங்கள்

தோட்டம் உங்கள் பூக்களை சுமக்க காத்திருக்கிறது .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by நிலாமதி Mon Sep 19, 2011 3:02 am

அடிமன உணர்வுகள் கவிதையாக .....

......காலம் ஒருநாள்கை கொடுக்கும் கவலை வேண்டாம்.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by gomathykomu Mon Sep 19, 2011 3:18 pm

மிக விரைவில் நீங்களும் புதுவீடு குடி புகும் பாக்கியம் கிடைக்கும் நன்பரே.
avatar
gomathykomu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 44
Join date : 27/12/2010
Location : mumbai

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by manjubashini Mon Sep 19, 2011 5:04 pm

மனதை தாக்கிய வரிகள் அப்துல்லாஹ் சார்....

ஒவ்வொருவருக்கும் இப்படி ஒரு லட்சியம் இருப்பதை உணரமுடிகிறது... நமக்கே நமக்கென்று ஒரு வீடு இருப்பது எத்தனை இன்பம்?

அன்று பாரதி வேண்டியதும் இப்படி ஒரு தனக்கே தனக்கான வீடு....

குட்டிப்பிள்ளை இது எனது வீடு என்று சொல்லும்போது ஏற்படும் பெருமிதம் உணரமுடிகிறது..... பிள்ளைகளால் பொம்மை வீடு கட்டிவிட முடிகிறது வேகமாக...

ஆனால் நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கும் நம்மால் அப்படி முடிவதில்லை... அதற்கான காரணங்களை மிக அழகாக வரிகளில் எளிய நடையில் சொல்லி இருக்கீங்க அப்துல்லாஹ் சார் சிறப்பாக....

அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்.. எல்லோரின் வேண்டுதலும் வாழ்த்தும் சீக்கிரமே புதிய வீட்டுக்கு உங்களுக்கே உங்களுக்கான வீட்டுக்கான வழியை காட்டட்டும்....

manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

என் புது வீடு Empty Re: என் புது வீடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum