தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
செய்தாலி
6 posters
Page 1 of 1
ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
[You must be registered and logged in to see this image.]
மணமாலை சூடலுக்குப் பின்
மங்கள கர்மமாக அரங்கேறுகிறது
கடமையான கட்டில் சடங்குகள்
உறவுகள் தாம்பத்யம் உணரும்முன்
நடுவீட்டில் அவிழ்க்கப் படுகிறது
சில தொட்டில் கயிறுகள்
மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம்
தொடரும் நெட்டோட்டம் முடிவில்
உதிர்கிறது நல்ல பருவங்கள்
காலச் சக்கரத்தில் விழுந்து
செல்லரித்துப் சிதைந்து விடுகிறது
அந்த நாட்களின் நிகழ்வுகள்
தலை தூக்கும் வாரிசுகள்
உறவுக் கடமைகள் குறைந்து
சற்று இளைப்பாறும் தருணங்கள்
பழுத்து நரைத்த பருவம்
தனிமைகளில் எட்டிப் பார்க்கிறது
அகத்தில் புதைந்த ஆசைகள்
பருவம் மறந்த ஆசைகள்
ஒத்துழைக்க மறுக்கும் உடல்
காலம் போர்த்திய நோய்கள்
ஒவ்வொரு இரவுக்கும் காரணங்கள்
உறவுகளில் விழும் இடைவெளிகள்
காலம்கடக்கும் கட்டில் பந்தம்
இருளை இம்சை செய்யும்
வெட்டங்களை அணைத்த பின்னும்
அணையாமல் கட்டில் ஏக்கம்
அகத்தில் சுவசமுட்டும் ஆசைகள்
நாளத்தில் ஸ்தம்பிக்கும் குருதி
மௌனமாகிறது துடிக்கும் இதயங்கள்
உறவில்கிட்டா உறவுத் தேடல்
நடுவீதிகளில் நாணம் கெட்டு
எங்கோ வேலிதாண்டும் ஆசைகள்
உறவு விலக்கப் படுகையில்
வாழ்நாளின் ஆயுள் குறைகிறது
நவ மருத்துவ குறிப்புக்கள்
உறவில் உறவை நீட்டுங்கள்
உடலில் நோயை துரத்துங்கள்
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
மணமாலை சூடலுக்குப் பின்
மங்கள கர்மமாக அரங்கேறுகிறது
கடமையான கட்டில் சடங்குகள்
உறவுகள் தாம்பத்யம் உணரும்முன்
நடுவீட்டில் அவிழ்க்கப் படுகிறது
சில தொட்டில் கயிறுகள்
மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம்
தொடரும் நெட்டோட்டம் முடிவில்
உதிர்கிறது நல்ல பருவங்கள்
காலச் சக்கரத்தில் விழுந்து
செல்லரித்துப் சிதைந்து விடுகிறது
அந்த நாட்களின் நிகழ்வுகள்
தலை தூக்கும் வாரிசுகள்
உறவுக் கடமைகள் குறைந்து
சற்று இளைப்பாறும் தருணங்கள்
பழுத்து நரைத்த பருவம்
தனிமைகளில் எட்டிப் பார்க்கிறது
அகத்தில் புதைந்த ஆசைகள்
பருவம் மறந்த ஆசைகள்
ஒத்துழைக்க மறுக்கும் உடல்
காலம் போர்த்திய நோய்கள்
ஒவ்வொரு இரவுக்கும் காரணங்கள்
உறவுகளில் விழும் இடைவெளிகள்
காலம்கடக்கும் கட்டில் பந்தம்
இருளை இம்சை செய்யும்
வெட்டங்களை அணைத்த பின்னும்
அணையாமல் கட்டில் ஏக்கம்
அகத்தில் சுவசமுட்டும் ஆசைகள்
நாளத்தில் ஸ்தம்பிக்கும் குருதி
மௌனமாகிறது துடிக்கும் இதயங்கள்
உறவில்கிட்டா உறவுத் தேடல்
நடுவீதிகளில் நாணம் கெட்டு
எங்கோ வேலிதாண்டும் ஆசைகள்
உறவு விலக்கப் படுகையில்
வாழ்நாளின் ஆயுள் குறைகிறது
நவ மருத்துவ குறிப்புக்கள்
உறவில் உறவை நீட்டுங்கள்
உடலில் நோயை துரத்துங்கள்
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
Last edited by செய்தாலி on Tue Sep 20, 2011 12:54 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
வாழ்வியல் கவிதைக்கு பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
கவிதைக்கு பாராட்டுக்கள். பக்குவபட்ட் மன உணர்வு தெரிகிறது .
மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம்
தொடரும் நெட்டோட்ட முடிவில்
உதிர்கிறது நல்ல பருவங்கள் ...........
..... இப்படி இருந்தால் நன்று இதைதான்கருதுகிறீர்களென எண்ணுகிறேன்.
மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம்
தொடரும் நெட்டோட்ட முடிவில்
உதிர்கிறது நல்ல பருவங்கள் ...........
..... இப்படி இருந்தால் நன்று இதைதான்கருதுகிறீர்களென எண்ணுகிறேன்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்வியல் கவிதைக்கு பாராட்டுக்கள் நண்பரே
நன்றி யூஜின்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
nilaamathy wrote:கவிதைக்கு பாராட்டுக்கள். பக்குவபட்ட் மன உணர்வு தெரிகிறது .
மூன்றாம் வயிற்றுக்கான ஓட்டம்
தொடரும் நெட்டோட்ட முடிவில்
உதிர்கிறது நல்ல பருவங்கள் ...........
..... இப்படி இருந்தால் நன்று இதைதான்கருதுகிறீர்களென எண்ணுகிறேன்.
உறவுக்காக ஓடி உழைத்து தங்கள் நல்ல பருவத்தை இழந்து
ஐம்பதுக்கு பின்னுள்ள கால தருணங்களில்
துணையுடன் கூடும் தருணங்கள் இல்லாமல் சில குடும்பங்களில்
இவர்கள் புறந்தள்ளப் படுகிறார்கள் அது அவர்களை மனஅழுத்தம் உளைச்சல் இப்படி கொண்டுபோக
நோய்கள் சீக்கிரமே அவர்களை ஒட்டிக் கொள்கிறது அது தவிர்க்க கெண்டும்
நல்ல தாமத்தியம் இருப்பதில் மட்டுமல்ல ஐம்பதிலும் தொடரவேண்டும்
பேரன் பேத்தி ஆனபின்னும் எண்ண துள்ளல் என்று மனைவியும்,கணவனும்
அவர்களின் பிள்ளைகளும் எண்ணுதல் தவறு அந்த என்னத்தை மாற்றவேண்டும்
அதற்கு அவர்களின் துணையோ ,பிள்ளைகளோ தடையாகுதல் மிகத் தவறு
அரோக்கியமான தாம்த்தியம் நம்மை நோய்களில் இருந்து காக்கும் என்று மருத்துவங்கள் சொல்கிறது
துணையாளர்கள் ஒத்துழைத்தால் நல்ல தாம்பத்தியம் கிட்டியால் ஐம்பதிலும் இளமையாக வாழலாம்
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி
சிறு பிழையை திருத்தியமைக்கும் மிக்க நன்றி தோழி
Last edited by செய்தாலி on Tue Sep 20, 2011 12:56 pm; edited 1 time in total
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
அன்பு செய்தாலி அளித்த அருமையான கவிதை..
நிலாமதி சொல்வது போல் நான் அவ் வெழுத்துகளின் மிகச்சிறிய பிழைகளை சரி செய்து கொண்டே வாசித்தேன்...
நான் வாசிக்குந்தோருமெல்லாம் என் மனதை வசியம் செய்வது இவரின் வார்த்தை வழியான வாழ்க்கை நிகழ்வுகள்...
நிலாமதி சொல்வது போல் நான் அவ் வெழுத்துகளின் மிகச்சிறிய பிழைகளை சரி செய்து கொண்டே வாசித்தேன்...
நான் வாசிக்குந்தோருமெல்லாம் என் மனதை வசியம் செய்வது இவரின் வார்த்தை வழியான வாழ்க்கை நிகழ்வுகள்...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
உறவில் உறவை நீட்டுங்கள்
உடலில் நோயை துரத்துங்கள்
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
உண்மையை சொல்லும் உன்னத வரிகள் .பாராட்டுக்கள் தோழருக்கு .
உடலில் நோயை துரத்துங்கள்
ஐம்பதில் இளமையை சுவையுங்கள்
உண்மையை சொல்லும் உன்னத வரிகள் .பாராட்டுக்கள் தோழருக்கு .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
ஒரு புதிய ஹைக்கூ தொடர் வடிவம் (நான் அந்த வடிவத்தின் பெயர் மறந்து விட்டேன். மீண்டும் ஒரு முறை புத்தகங்களைப் புரட்டி பெயரைக் கண்டு பிடித்து சொல்கிறேன்.) உங்களுக்குக் கை வரப்பெற்றுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. செய்தாலி அவர்களே உங்களுக்கு இந்த வடிவ வகையின் பெயர் தெரிந்தால் சொல்லவும். அல்லது நீங்கள் அந்தத் தொடர் ஹைக்கூ வடிவத்தைத்தான் கருத்தில் கொண்டு எழுதினீர்களா? நான் பல வடிவங்களை எழுதி வந்தாலும் இந்த வடிவத்தை (நீங்கள் பயன்படுத்திய இந்த வடிவம்) எழுத முயன்று விட்டுவிட்டேன். கவிஞரே உங்களுக்கு அந்தத் தொடர் ஹைக்கூ வடிவத்தின் பெயர் உள்ளடக்கம் தெரிந்து கவிதை புனைந்தீரா? அல்லது புதுக்கவிதைபோல் கவிதை புனைந்தீரா?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
ம. ரமேஷ் wrote:ஒரு புதிய ஹைக்கூ தொடர் வடிவம் (நான் அந்த வடிவத்தின் பெயர் மறந்து விட்டேன். மீண்டும் ஒரு முறை புத்தகங்களைப் புரட்டி பெயரைக் கண்டு பிடித்து சொல்கிறேன்.) உங்களுக்குக் கை வரப்பெற்றுள்ளது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. செய்தாலி அவர்களே உங்களுக்கு இந்த வடிவ வகையின் பெயர் தெரிந்தால் சொல்லவும். அல்லது நீங்கள் அந்தத் தொடர் ஹைக்கூ வடிவத்தைத்தான் கருத்தில் கொண்டு எழுதினீர்களா? நான் பல வடிவங்களை எழுதி வந்தாலும் இந்த வடிவத்தை (நீங்கள் பயன்படுத்திய இந்த வடிவம்) எழுத முயன்று விட்டுவிட்டேன். கவிஞரே உங்களுக்கு அந்தத் தொடர் ஹைக்கூ வடிவத்தின் பெயர் உள்ளடக்கம் தெரிந்து கவிதை புனைந்தீரா? அல்லது புதுக்கவிதைபோல் கவிதை புனைந்தீரா?
ஒரு விஷயத்தை வரிகளில் சொல்ல வேண்டும்
அது வாசிப்பவர்களிடம் எழுதில் போய் சேரவேண்டும்
அதற்கு புதுக்கவிதை சரியானதாக இருக்கும் என்று எண்ணினேன்
அதன் பிறகு புத்துக் கவிதையில் ஹைக்கூவை சிறு பங்களிப்பை புகுத்திப் பார்த்தேன்
ஒன்பது சொற்கள் மூன்று வரிகள் அதில் நின்றுகொண்டு
ஒரு விஷயத்தை சொல்லலாமா என்ற என் சிறு முயற்சி
எல்லாரும் சங்க இலக்கியம் ,மரபுக் கவிதை ,கவிதை ,புதுக் கவிதை ,ஹைக்கூ ,இப்படி எழுதுகிறார்கள்
அதில் இருந்து மாறுமட்டு எழுதலாம் என்ற என் முயற்சி
25 / அதில் வெற்றி கண்டுள்ளேன் வரும் காலத்தில் எல்லா தரப்பு மக்களும் ஏற்பார்கள் என்று நம்புகிறேன்
நிறைய நல்ல கவிஞர் தோழமைகள் எனக்கு நம்பிக்கையூட்டி உள்ளார்கள்
இதில் வேற ஒரு விஷயம் என்ன வென்றால்
நான் நடைமுறை தமிழ் (கலவை),சங்கத் தமிழ் ,மரபுவழித் தமிழ் இப்படியான தமிழைக் கொண்டு
வரிகள் கோர்ப்பது இல்லை அதற்கு மாறாக நம் தமிழிலேயே எந்த ஒரு கலவையையும் சேர்க்காமல்
எழுதுகிறேன்
புக்கவிதை ,ஹைக்கூ இரண்டையும் சேர்த்து எழுதுவதால் என் எழுத்தை கிறுக்கல் என்று அழைக்கிறேன்
நீங்கள் ஹைக்கூ ,கஸல்,ஜென் கவிதைகள் இப்படியான கவிகளை ரெம்ப அருமையாக எழுதுகிறீர்கள்
கவிதை பற்றி நிறை அறிவு உள்ளவர் நீங்கள்
உங்கள் வினா எழுப்புதலுக்கு மிக்க நன்றி கவிஞரே
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
மிக்க மகிழ்ச்சி நண்பரே... கண்டிப்பாகத் தமிழ்க் கவிதை உலகம் மற்றும் தமிழ் இலக்கிய வரலாற்று உலகமும் உங்களை மதிக்கும். அதற்கான தகுதி உங்கள் கவிதையில் என்னால் காண முடிந்தது. விரைவில் அதற்கான வெகுமதியைப் பெறுவீர்கள்.
மற்றொன்று,
"புக்கவிதை ,ஹைக்கூ இரண்டையும் சேர்த்து எழுதுவதால் என் எழுத்தை கிறுக்கல் என்று அழைக்கிறேன்"
--என்று சொல்கிறீர்கள். அது கிறுக்கல்கள் அல்ல. மிகச் சிறந்த கவிதை வடிவத்திற்கு நீங்கள் இப்பெயரைச் சூட்டி இருக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.
அதற்கு புதுக்கவிதை சரியானதாக இருக்கும் என்று எண்ணினேன்
அதன் பிறகு புத்துக் கவிதையில் ஹைக்கூவை சிறு பங்களிப்பை புகுத்திப் பார்த்தேன்
ஒன்பது சொற்கள் மூன்று வரிகள் அதில் நின்றுகொண்டு
ஒரு விஷயத்தை சொல்லலாமா என்ற என் சிறு முயற்சி
--என்று நீங்கள் கூறுவதால் அவ்வடிவத்தின் பெயரைத் தாங்கள் அறிய வில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நான் அந்தக் கவிதையின் வடிவத்தை 2007ல் படித்திருக்கிறேன். பெயர்தான் நினைவில் இல்லை. விரைவில் அப்பெயரை தெரிவிக்கிறேன். வேண்டுமானால் அப்பெயரிலேயே நீங்கள் இதுபோன்ற உங்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடலாம். அப்படி வேண்டாம் என்றால் கிறுக்கல் என்ற தலைப்பை மாற்றி புதிய பெயரிடுங்கள்.
நன்றி.
(யப்பா எவ்ளோ திறமையானவங்க எல்லாம் தோட்டத்துல இருக்கறாங்கப்பா. வியப்பா இருக்கு... நடத்துநரே திருஷ்டி சுத்திப் போடுமையா)
மற்றொன்று,
"புக்கவிதை ,ஹைக்கூ இரண்டையும் சேர்த்து எழுதுவதால் என் எழுத்தை கிறுக்கல் என்று அழைக்கிறேன்"
--என்று சொல்கிறீர்கள். அது கிறுக்கல்கள் அல்ல. மிகச் சிறந்த கவிதை வடிவத்திற்கு நீங்கள் இப்பெயரைச் சூட்டி இருக்கக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.
அதற்கு புதுக்கவிதை சரியானதாக இருக்கும் என்று எண்ணினேன்
அதன் பிறகு புத்துக் கவிதையில் ஹைக்கூவை சிறு பங்களிப்பை புகுத்திப் பார்த்தேன்
ஒன்பது சொற்கள் மூன்று வரிகள் அதில் நின்றுகொண்டு
ஒரு விஷயத்தை சொல்லலாமா என்ற என் சிறு முயற்சி
--என்று நீங்கள் கூறுவதால் அவ்வடிவத்தின் பெயரைத் தாங்கள் அறிய வில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் நான் அந்தக் கவிதையின் வடிவத்தை 2007ல் படித்திருக்கிறேன். பெயர்தான் நினைவில் இல்லை. விரைவில் அப்பெயரை தெரிவிக்கிறேன். வேண்டுமானால் அப்பெயரிலேயே நீங்கள் இதுபோன்ற உங்கள் கவிதைகளுக்குத் தலைப்பிடலாம். அப்படி வேண்டாம் என்றால் கிறுக்கல் என்ற தலைப்பை மாற்றி புதிய பெயரிடுங்கள்.
நன்றி.
(யப்பா எவ்ளோ திறமையானவங்க எல்லாம் தோட்டத்துல இருக்கறாங்கப்பா. வியப்பா இருக்கு... நடத்துநரே திருஷ்டி சுத்திப் போடுமையா)
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
//(யப்பா எவ்ளோ திறமையானவங்க எல்லாம் தோட்டத்துல
இருக்கறாங்கப்பா. வியப்பா இருக்கு... நடத்துநரே திருஷ்டி சுத்திப்
போடுமையா)//
அவ்வளவுக்கு பவர் உங்களிடம் இருக்கா?
இருக்கறாங்கப்பா. வியப்பா இருக்கு... நடத்துநரே திருஷ்டி சுத்திப்
போடுமையா)//
அவ்வளவுக்கு பவர் உங்களிடம் இருக்கா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
ரொம்ப குறைவுதான். நான் தான் ஒத்துக் கொண்டேனே... அந்த வகைக் கவிதையை எழுத முடியவில்லை என்று. சோ நோ பவர்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஐம்பதின் கட்டில் ஏக்கங்கள்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தொடரும் ஏக்கங்கள்
» குழந்தையின் ஏக்கங்கள்
» இத்தனை ஏக்கங்கள் ..
» கட்டில் - ஒரு பக்க கதை
» கட்டில் இரகசியம்
» குழந்தையின் ஏக்கங்கள்
» இத்தனை ஏக்கங்கள் ..
» கட்டில் - ஒரு பக்க கதை
» கட்டில் இரகசியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum