தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
thaliranna
6 posters

Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by thaliranna Tue Sep 20, 2011 9:15 pm


அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?



[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
இருபது
ஆண்டுகளாக கட்டப்பட்ட கூடங்குளம் அணுமின் நிலையம், வெற்றிகரமாக
உற்பத்தியை துவங்க உள்ள நிலையில், திடீர் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அணு
உலைகளை பாதுகாக்க வேண்டிய நிலை, மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின்
பாதுகாப்பு என்ற பெயரில், போராட்டத்திற்கு பின், அரசியல் பின்னணியும்
உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைக்க, 1988ல் இந்திய பிரதமர் ராஜிவ் மற்றும்
ரஷ்ய அதிபர் கோர்பசேவ் ஆகியோர் முன்பு கூட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
பல்வேறு தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொண்டு, ஒரு வழியாக வி.வி.இ.ஆர்.,-1000
என்ற தொழில்நுட்பத்துடன், பணிகள் துவங்கப்பட்டன.இந்திய அணுமின் கழகத்தின்,
16 ஆயிரத்து 700 கோடி மதிப்பில் திட்டங்கள் துவங்கின. இரண்டு
யூனிட்களில், தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
கடந்த 2001ல், அணு நிலைய கட்டுமான பணிகள் துவங்கி, 2007ல் முடிந்தன. பின்,
தொழில்நுட்ப ரீதியான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு, 2007ல் கொதிகலன்
நிறுவப்பட்டது. அணு மின் உற்பத்திக்கான கருவிகள், 2008ல் நிறுவப்பட்டு,
எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன.

அடுத்த மாதம் உற்பத்தி துவக்கம்: தற்போது, கட்டுமான பணிகள்,
கருவிகள் பொருத்துதல் என, அனைத்தும் முடிந்து, முதல் யூனிட்டில் மின்
உற்பத்தி செய்வதற்கான ஒத்திகை பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம்
முதல், ஒரு யூனிட்டிலும், அடுத்த ஆண்டில், இரண்டாம் யூனிட்டிலும் மின்சாரம்
உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில
தினங்களாக, கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக, திருநெல்வேலி
மாவட்டத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இங்குள்ள மக்களும்,
அரசியல்வாதிகளும், சில தன்னார்வ அமைப்புகளும் போராட்டத்தில்
குதித்துள்ளனர்.இந்த போராட்டத்தில், உள்ளூரை சேர்ந்த ரோமன் கத்தோலிக்க
கிறிஸ்தவ பாதிரியார்கள், மூன்று கன்னியாஸ்திரிகள், 20 பெண்கள் உட்பட 127
பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்னையில், மாநில அரசு உடனடியாக
தலையிட வேண்டுமென, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

எதிர்ப்பின் பின்னணி என்ன?கடந்த இருபது ஆண்டுகளாக நடந்த கட்டுமான
திட்டத்திற்கு, திடீரென எதிர்ப்பு கிளம்பியது ஏன்? என்ற கேள்வி,
அனைவருக்கும் எழுந்துள்ளது. அரசியல் ரீதியாக போராட்டம் நடப்பதாக, அணுமின்
கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசியல் கட்சிகளும், உள்ளூர் பிரமுகர்கள்
சிலரும், போராட்டத்திற்கு பெரிய அளவில் பங்களிப்பு கொடுத்து
வருகின்றனர்.நாட்டின் வளர்ச்சி பெரிதா? அல்லது நாட்டு மக்களின் பாதுகாப்பு
பெரிதா? என்றால், முதலில் மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம். எனவே,
மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து விட்டு, வளர்ச்சி பணிகளை
மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில், கூடங்குளம் அணு மின்நிலையம்
நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான ஒன்றாக கருதப்படுகிறது. "ஒரே நேரத்தில்,
எந்த சுற்றுச்சூழல் சீர்கேடும் இல்லாமல், 2,000 மெகாவாட் மின்சாரம்
உற்பத்தி செய்ய உகந்த திட்டம்' என, கூறப்படுகிறது. புதிய கூடங்குளம் அணு
மின்நிலையத்தால், மக்களுக்கோ, சுற்றுப்புறத்திற்கோ எந்த ஆபத்தும் இல்லை'
என, அணுமின் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்படிப்பட்ட திட்டம், கடந்த
10 ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு, வெளிநாட்டு அதிபர்கள் பேசி,
தொழில்நுட்பம் பறிமாறி, கட்டுமான பணிகள் மேற்கொண்ட பின், வளர்ச்சியை எட்ட
வேண்டிய நேரத்தில், ஏன் இந்த திட்டம் என்ற போராட்டங்கள் வெடித்துள்ளன.

இன்றைய சிக்கலான பொருளாதார நிலையில், 16ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு
என்பது மிக சாதாரணமானதல்ல. இந்த முதலீட்டையும், நாட்டு வளர்ச்சியின்
முக்கிய நடவடிக்கையையும், ஒட்டுமொத்தமாக அரசியல் பின்னணி சீர்குலைக்கிறதோ
என்று, நடுநிலையாளர்கள் கவலைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மக்களிடம்
தேவையற்ற அச்சத்தை உருவாக்கி விட்டு, போராட்டங்கள் நடப்பதாக ஒரு தரப்பு
கூறுகிறது. இதில், எரியும் நெருப்பில் எண்ணெய் விட்டது போல், சில அரசியல்
கட்சிகள் போராட்ட பின்னணிக்குள் நுழைந்து, அரசியல் லாபம் தேடுவது
திட்டவட்டமாக தெரிகிறது.அரசியல்வாதிகள் நுழைந்ததால், இதுவரை மக்களின்
உயிர்பாதுகாப்பு தொடர்பான போராட்டமானது, நடுநிலையை கடந்து, தற்போது,
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக, மத்தியில் ஆளும் காங்கிரஸ்
கட்சிக்கு, நெருக்கடி தரும் அரசியல் போராட்டமாக மாறியுள்ளதாகவே அரசியல்
வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதனால், இதுவரை நடந்த போராட்டத்தின்
நோக்கமும், நம்பகத்தன்மையும் சந்தேகத்துக்குரியதாகியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்தில்லை : திட்ட இயக்குனர் விளக்கம்:ஆபத்து...
ஆபத்து என்று, அச்சத்துடன் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக
போராட்டம் நடக்கிறது. இப்படி, மக்கள் அச்சப்படும் அளவுக்கு, இங்கு ஆபத்து
உள்ளதா என்பது குறித்து, கூடங்குளம் அணு மின்நிலைய திட்ட இயக்குனர்
காசிநாத் பாலாஜியிடம் கேட்டபோது, கூறியதாவது:கூடங்குளம் அணு மின்நிலையம்,
கடந்த 20 ஆண்டுகளுக்கும் முன், ஒப்பந்தம் செய்யப்பட்டு, பார்த்து,
பார்த்து, உருவாக்கப்பட்ட திட்டம். இதற்காக நில எடுப்பு செய்தபோதும்,
கட்டுமான பணிகள் துவங்கியபோதும், பல்வேறு தொழில்நுட்ப வல்லுனர்களுடன்,
கிராம மக்கள் மற்றும் அமைப்புகளை அழைத்து, பொது கருத்து கேட்பு மற்றும்
விளக்கமளிக்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.இதில், அனைவரின்
சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தோம். உலகில் எந்த இடத்திலும் இல்லாத
அளவுக்கு, அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் அடங்கிய மிகப்பெரிய பாதுகாப்பு
திட்டத்தை தயாரித்து, அதன்படி கூடங்குளம் மின்நிலையத்தில்
செயல்படுத்தியுள்ளோம்.எப்படியெல்லாம் விபத்து நடக்கலாம் என, பல கோணங்களில்
சிந்தித்து, எந்த நிகழ்வானாலும், கதிர்வீச்சோ, கட்டடத்திற்கு பாதிப்போ,
சுற்றுப்புற ஊர்களுக்கு சிக்கலோ ஏற்படாத அளவுக்கு நவீன பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்துள்ளோம்.இத்திட்டத்தால், கடல் வாழ் உயிரினங்களுக்கோ,
மீன்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. கடலுக்கும், அணுமின் திட்டத்திற்கோ
தொடர்பில்லை. மீன்வளத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. அதனால் தான்
மீன்வளத்துறை, சுற்றுச்சூழல் துறை, கடல் பாதுகாப்புத்துறை உள்ளிட்டவை
சான்றிதழ் தந்துள்ளன.அணு உலையை ஒட்டிய கடற் பகுதிகளில் மீனவர்கள் மீன்
பிடிக்க தடை இல்லை. அணு உலை பாதுகாப்புக்காக, அதன் கட்டடத்தில் இருந்து,
500 மீட்டர் தூரம் மட்டுமே பாதுகாப்பு வளையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த
பகுதியில் கூட மீன் மற்றும் கடல்வாழ் உயிரின நடமாட்டம் உண்டு.இந்த திட்டம்
மிகசிறந்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டதால், கிராம மக்கள் மிக
நிம்மதியாக வாழமுடியும். சுற்றுச்சூழல் பிரச்னையோ, அணுக்கழிவோ ஏற்படாது.
இத்திட்டம் வந்தால், கூடங்குளம் மற்றும் அதை சுற்றிய பகுதிகள் பெரியஅளவில்
வளர்ச்சியடையும். கதிர்வீச்சு போன்ற ஆபத்துகள் இல்லாத உயர்ந்த தரம் கொண்ட
தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட திட்டம், என்பதால் இதை மற்ற நாடுகளும்
கடைபிடிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பாதிப்பில்லாத விபத்துகள் : அணு உலைகளை பொறுத்தவரை, சுனாமி,
கடல்சீற்றம், வெள்ளம், கனமழை, சூறாவளி, நிலநடுக்கம், பயங்கரவாத தாக்குதல்,
தொழில்நுட்ப செயலிழப்பு, தீ விபத்து போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயம்
உண்டு. இதை கருத்தில் கொண்டுதான், அணு மின்நிலையங்களின் பாதுகாப்பு
ஏற்பாடுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. சென்னை கல்பாக்கம் அணுமின்நிலையம்
இருந்த பகுதியில், 2004ல் சுனாமி தாக்குதல் ஏற்பட்டது. ஆனால், தானாக
செயலிழக்கும் கருவிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அணு உலைக்கு
எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல், 1993ல் உத்தரப்பிரதேசம் நரோரா
அணுமின் நிலையத்தில், கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டது. இதிலும், எந்த
கதிர்வீச்சு அபாயமும் ஏற்படவில்லை. குஜராத் காக்ராபர் அணுமின்நிலையத்தில்,
1994ல் வெள்ள தாக்குதல் ஏற்பட்டது. இதிலும், கதிர்வீச்சு உள்ளிட்ட எந்த
பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த அளவிற்கு இந்திய அணுமின் நிலையங்கள் மிக
பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளன. அணுசக்தி பயன்பாட்டை பொறுத்தவரை, இந்திய
தொழில்நுட்பம், உலக அளவில், அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளே
பொறாமைப்படும் அளவுக்கு சிறப்பாக உள்ளது.

தமிழக மின்பற்றாக்குறையை தீர்க்கும் கூடங்குளம் : கூடங்குளம்
அணு மின் நிலையம் வந்தால், தமிழகத்திற்கு என்ன பயன் என்பது குறித்து,
தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:தமிழகத்திற்கு,
3,000 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. மின்பற்றாக்குறையால்,
தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வர்த்தமும், வளர்ச்சி திட்டங்களும்
முடங்கியுள்ளன. இதை சரிசெய்ய மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதனால், அடுத்த ஆண்டு ஆகஸ்டுக்குள், மின் வெட்டை நீக்க தமிழக அரசு முடிவு
செய்துள்ளது. புதிய மின்திட்டங்கள் இயங்குவதன் மூலம், கூடுதல் மின்சாரம்
கிடைக்கும் என, தமிழக மின்துறை கணித்துள்ளது.மத்திய அரசின்
தொகுப்பிலிருந்து கூடுதலாக 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தர,
முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்திற்கு கூடுதல்
மின்சாரம் வேண்டுமென்றால், புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.



இதில், கூடங்குளம் அணு மின்நிலையமும்
ஒன்று. அனைத்து பணிகளும் முடிந்து, அடுத்த மாதத்தில் உற்பத்தி துவங்கும்
நிலையில், தமிழக மின்துறைக்கு, முதற்கட்டமாக 462 மெகாவாட் மின்சாரம்
கிடைக்கும். அடுத்த ஆண்டில், கூடுதலாக 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.
இதன்மூலம் மட்டும், தமிழக மின்பற்றாக்குறையில், 50 சதவீதம் குறைய
வாய்ப்புள்ளது.ஆனால், திட்டமிட்டு சிலர் திட்டங்களை முடக்க முயற்சிப்பது
போல் தெரிகிறது. நாட்டு வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் இதுபோன்ற
செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு : கடந்த
மார்ச் மாதம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலை வெடித்து சிதறியதையடுத்து,
உலகம் முழுவதும் அனைத்து அணு உலைகளுக்கும், கூடுதல் பாதுகாப்பு மற்றும்
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ள, அனைத்து நாடுகளும் பணிகளை
துரிதப்படுத்தியுள்ளன. இந்தியாவில் அணு உலைகளை பாதுகாக்க வேண்டிய
நடவடிக்கைகள் குறித்து, விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்திய அணுசக்தி
ஒழுங்குமுறை வாரியம்(ஏ.இ.ஆர்.பி.,) கடந்த சில தினங்களுக்கு முன், மத்திய
அரசிடம் தனது வழிகாட்டுதல் அறிக்கையை அளித்துள்ளது. இது, இந்திய அணுசக்தி
மின்கழகத்தின் மூலம், அனைத்து அணு மின்நிலையங்களுக்கும்
அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:இந்தியாவிலுள்ள, 20 அணு மின்நிலையங்களில்,
இயக்கத்தில் உள்ள 18 நிலையங்களின் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. இதில்,
பழமையான மகாராஷ்டிரா தாராப்பூர் அணு நிலையம் மற்றும் கடலை ஒட்டி இருக்கும்
கல்பாக்கம் அணுமின்நிலையம் ஆகியவற்றிற்கு, கூடுதல் முன்னெச்சரிக்கை
மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.கடந்த, 2004ல் சுனாமி
ஏற்பட்ட பின், கல்பாக்கம் அணு மின்நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில்,
கடல்நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலையத்தில் உள்ள
வெப்பமூட்டும்"ரியாக்டர்' உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க
வேண்டும். இது, நிலநடுக்கம் மற்றும் சுனாமி அபாயம் உள்ள சுமத்ரா தீவில்
ஏற்படும் மாற்றங்களால், பாதிக்கப்படும் பகுதி என்பதால், கூடுதல் ஏற்பாடுகள்
செய்ய வேண்டும். மற்ற அணு உலைகளுக்கு எந்த விதமான பாதிப்புகளுக்கும்
வாய்ப்பில்லை.

இந்திய அணு உலைகள், கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதியிலிருந்து,
மேற்கு கடல் பகுதியில் 800 கிலோமீட்டர் தூரத்திலும், கிழக்கு கடல்
பகுதியிலிருந்து, 1,300 கிலோமீட்டர் தூரத்திலும், அமைந்துள்ளதால், சுனாமி
அபாயம் இல்லை. எனவே, ஜப்பானை போன்ற நிலை இங்கு ஏற்படாது.ஆனாலும், ஆய்வு
மதிப்பீடுகளை தாண்டி, இயற்கை பேரிடர் ஏற்பட்டால், சமாளிக்ககூடிய வகையில்,
அணு உலைகளின் கட்டடங்கள், அமைப்புகள், குளிர்விப்பான், வெப்பமூட்டும்
கருவி, தொழில்நுட்ப கருவிகள் ஆகியவற்றை உயர்தரமான ஆய்வு செய்து அமைக்க
வேண்டும். கடலுக்கருகில் வைக்கப்படும் குளிர்விப்பான்களை பாதுகாக்க
வேண்டும்.தற்போதைய நிலையில், இந்திய அணு உலைகள் முழு பாதுகாப்புடன் உள்ளன.
அவற்றால் தீங்கு ஏற்படாத தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. இன்னும்
கூடுதல் ஏற்பாடுகள் செய்து, சர்வதேச அளவில், உச்சபட்ச கூடுதல் பாதுகாப்பு
அம்சங்கள் கொண்டதாக, இந்திய அணு உலைகள் செயல்படும்.இவ்வாறு அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
[You must be registered and logged in to see this link.]

நிலநடுக்கம், சுனாமியையும் சமாளிக்கும் :

இந்திய அணுமின் சக்தி கழகம் மற்றும் அணுமின் ஒழுங்குமுறை வாரியம் வெளியிட்ட தகவல்கள்:ரிக்டர்
அளவில், 6.7க்கும் மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால், இந்திய அணு உலைகள்,
தானாகவே செயலிழக்கும் வகையில் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. எந்த
நிலையிலும், கதிர்வீச்சு வெளியேறாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடல் மட்டம் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட அளவு உயர்ந்தால், நிலையம்
தானாகவே செயலிழக்கும். இயற்கை பேரிடர் நேரத்தில், பேட்டரி மூலம்
கண்காணித்து இயக்கும், நவீன தொழில்நுட்ப கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.அணு
உலையை சுற்றி, பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதற்கான கண்காணிப்பு மற்றும்
கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. கல்பாக்கத்தில், 14 மீட்டருக்கு மேல்
கடல்மட்டம் உயர்ந்தால், தானாக நிலையம் செயலிழக்க ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன. கதிர்வீச்சு வெளியே வராத அளவுக்கு "ரியாக்டர்கள்' பல
அடுக்கு பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர ஜப்பானில் ஏற்பட்ட அணு
உலை விபத்து, பிரான்ஸ் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துகளுக்கு பின், அதுபோன்ற
நிலை ஏற்பட்டாலும், அதற்கும் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு அமைப்புகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர, இந்தியாவில் நிலநடுக்க அபாயம் உள்ள எந்த
பகுதியிலோ, அல்லது அதனால் விளைவுகள் ஏற்படும் பகுதியிலோ, இந்திய அணு
மின்நிலையங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி தினமலர்.
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty Re: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 11:46 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty Re: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by tthendral Wed Sep 21, 2011 1:24 am

அணு மின் நிலையங்களைப் பற்றி வளர்ந்த உலக நாடுகளே கவலை கொண்டுள்ள நிலையில் ஜப்பான் பேரழிவிற்குப் பிறகு உள்ளூர் மக்கள் கவலைப்படுவதில் அரசியல் ஏதுமில்லை. பத்து வருடங்க்களாக இந்த அணுமின் திட்டத்திற்க்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. இப்போது அதன் அளவு அதிகரித்துள்ளது. அது தான் உண்மை. [You must be registered and logged in to see this image.]
tthendral
tthendral
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 27
Points : 36
Join date : 23/11/2010
Location : பெங்களூரு

Back to top Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty Re: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by கலைநிலா Wed Sep 21, 2011 1:33 am

இயற்கைக்கு மாற்று எப்போதும் ஆபத்து தான் .இனி நாம் மின்சாரமில்லாம்
இருக்க இயலுமா ?நேற்றைய காலிடங்களே இன்றைய மக்கள் வாழுமிடமாய்
மாறியிருக்கு .

மின்சாரமே நேற்றைய ஆட்சி மாற்றத்துக்கு காரணம் .

வேற எங்கு தான் அமைப்பது .இது வரை கட்டமைப்பு பணிக்கு நமது வரிப்பணம் தான் சிலவு செய்யப்பட்டு இருக்கு.

யெல்லாம் முடிந்த பிறகு தடுப்பது என்ன அர்த்தம் .அரசியலே காரணம் .

இது தான் உண்மை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty Re: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 21, 2011 10:59 am

இயற்கைக்கு மாற்று எப்போதும் ஆபத்து தான் . உண்மைத்தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty Re: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by thaliranna Wed Sep 21, 2011 5:29 pm

இரு வேறு கருத்துக்கள் இருப்பினும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான திட்டத்திற்கு இடையூறு செய்யலாமா மக்கள் என்பதே என் கேள்வி? [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty Re: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 21, 2011 6:34 pm

போராட்டத்திற்கு என்ன சாயம் பூசினாலும் அல்லது எதற்காகப் போராட்டம் நடத்தப் பட்டிருந்தாலும் சரி... நமக்குப் பாதுகாப்புதான் முக்கியம்.

பணம் நாளை சம்பாதித்துக் கொள்ளலாம். உயிர்கள் போனால்... வேண்டாம் அணு உலை... மாற்றாக மின்சாரம் பெறும் வழி முறைகள் நம்மிடம் இருக்கின்றன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty Re: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by அரசன் Wed Sep 21, 2011 8:47 pm

சாயம் பூச முயலுவதில் நம்மாட்கள் கில்லாடிகள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?  Empty Re: அணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பின்னணியில் அரசியலா? பாதுகாப்பா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்: ஸ்டாலின்
» 'டாஸ்மாக்' கடைக்கு எதிராக 7 வயது சிறுவன் போராட்டம்
» தேர்தலில் பிரதமர் வெற்றிக்கு எதிராக ஹங்கேரியில் 1 லட்சம் பேர் போராட்டம்
» அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு: விசாரணைக்கு ஏற்பு
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum