தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என் இனிய பொன் நிலாவே!பகுதி 5
2 posters
Page 1 of 1
என் இனிய பொன் நிலாவே!பகுதி 5
என் இனிய பொன் நிலாவே!பகுதி 5
[You must be registered and logged in to see this link.]
என் இனிய பொன் நிலாவே!
பகுதி 5
“ப்ரியம்வதா”
முன்கதை சுருக்கம்} மதுமிதா இக்கால இளைஞி. இண்டர்வியு
அட்டெண்ட் பண்ண அவளுக்கு உடனே வேலை வழங்கி ஆச்சர்யம் கொடுத்த அபிஷேக் அவளை
விரும்புவதாக கூறுகிறான். அதை மறுத்து பஸ் ஏறிய மதுமிதா பர்ஸை தொலைத்துவிட
கண்டக்டர் கீழே இறக்கிவிட்டார்.
இனி}
[You must be registered and logged in to see this link.]
கையில்பர்ஸுடன் புன் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த அபிஷேக்கை பார்த்ததும்
ஆத்திரமாக வந்தது மதுவிற்கு இது இவன் வேலைதானோ? ஆளைப் பார்த்தால் டீசண்டாய்
இருந்துகொண்டு இந்த வேலையா செய்கிறான்? என்று நினைத்தவள் மறுகணம் நாக்கை
கடித்துக் கொண்டாள். ஒரு மல்டி லெவல் நிறுவனத்தை நடத்தும் அவன் இந்த
கேவலமான் வேலை செய்ய மாட்டான் என்று நினைத்துக் கொண்டு ஆனாலும் அவன் மனதை
நோகடிக்க வேண்டுமென்றே கேட்டாள்.
இந்த வேலை எத்தனை நாளாய் நடக்கிறது! கம்பெனி நிலவரம் சரியில்லையோ? என்றாள் நக்கலாக.
ஒரு கணம் அப்படியே இறுகிப் போன அபிஷேக் சட்டென இயல்புக்கு வந்து உனக்கு எல்லாவற்றையும் தவறாக நினைப்பதே வேலையாகிவிட்டது மது என்றான்.
நான் அப்படி என்ன தவறாக நினைத்து விட்டேனாம்?
இப்போ நீ என்னை பார்த்து கேட்டது சரியான கேள்வியா?
பின்னே என்னுடைய தொலைந்து போன பர்ஸ் உங்களிடம் இருந்தால் பின் எப்படிக் கேட்பதாம்? என்றாள் மது.
பெண்புத்தி
பின் புத்தி என்பது சரியாகத்தான் இருக்கிறது! எந்த திருடனாவது திருடிய
பொருளை திருட்டுக் கொடுத்தவரின் முகத்தின் எதிரில் காட்டுவானா? என்று
மடக்கினான் அபிஷேக்.
அ. அ..அது வந்து..
என்ன வந்து போயி ! இப்போதாவது ஒரு சாரி கேட்டால் என்ன உன் அக்கவுண்டில் பணமா குறைந்து போய்விடும் என்றான் அபிஷேக்.
எதற்கு நான் சாரி கேட்க வேண்டும்?
என்னை தவறாக எண்ணியதற்கு!
நீங்கள் தவறு செய்ய வில்லை என்று என்ன ஆதாரம்?
அம்மணி
போட்டு வறுத்து எடுக்காதே நீ சாரி கேட்காவிட்டால் போகிறது நடந்தது
இதுதான்.நீ என்னிடம் கோபமாக பேசிவிட்டு உன் கைப்பையை எடுக்கும்போது அதனுடன்
வெளியே வைத்திருந்த பர்ஸ் நழுவி உள் பக்கமாக விழுந்துவிட்டது.
கடைசிப்பந்தி
கவனித்து எடுத்துக் கொடுத்தான். உங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்களே ஒர்
பெண் அதான் சார் உங்கள் சினேகிதியாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஜெய்ஹோ கேட்டார்களே அவர்களுடைய பர்ஸ் அவசரத்தில் விட்டுப் போய்விட்டார்கள்
நீங்கள் கொடுத்துவிடமுடியுமா என்று கேட்டான்.
அவனே
உன்னை என் சினேகிதி என்று சொல்லிவிட்டான் மறுத்தால் நன்றாக இராது நீ
என்னுடைய சினேகிதியாக இல்லாவிட்டாலும் ஸ்டாப் உன்னுடைய பொருளை உன்னிடம்
ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளதல்லவா? என்றான் அபிஷேக்.
என்னது நான் உங்கள் சினேகிதி என்றா சொன்னான்?
ஐயோ
தெரியாமல் சொல்லிவிட்டான் விடேன். நீ என் சினேகிதி இல்லாமல் வேறு எவளோ
ஒருத்தியாக கூட இருந்து தொலையேன்! இந்தா முதலில் இந்த பர்ஸை பிடிக்கிறாயா?
என்று பர்ஸை நீட்டினான் அபிஷேக்.
பர்ஸை வாங்கிக் கொண்ட மது பிரித்து உள்ளே செக் செய்ய நான் அனாவசியமாக யாருடைய பொருளையும் உரிமை கொண்டாடுவது இல்லை என்றான் அபிஷேக்.
இருக்கட்டுமே!
ஆனால் நான் என்னுடைய பொருளை சரிபார்த்து வாங்கும் பழக்கம் கொண்டவள் இதில்
அனாவசியமாக யாருடைய பொருளாவது இருந்துவிட்டால்? என்றாள் மது.
நியாயம்
தான் என்று ஒத்துக் கொண்டவன் மது நேரமாகிவிட்டது. உன்னுடைய வீட்டில்
கொண்டு விடுகிறேன். யாரோ முன் பின் தெரியாதவன் அல்ல அழைப்பவன். உன்னுடைய
வருங்கால.. இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்திய அபிஷேக் உன்னுடைய வருங்கால
முதலாளி நான் அழைக்கிறேன். என்னுடன் காரில் வருகிறாயா? என்றான்
அவன்
அவனுடைய வேலைகளை பார்த்து செல்லலாம் ஆயிரத்தெட்டு வேலைகள் அவனுக்கு
குவிந்து கிடக்கும் ஆனால் அதையெல்லாம் விட்டு இவள் பின்னால் சுற்றிக்
கொண்டு இவள் விருப்பத்தை கேட்டுக் கொண்டிருக்கின்றானே ஒரு வேளை
நிஜமாகத்தான் காதலிக்கின்றானோ! இல்லை இல்லை இது நமக்கு சரிபட்டு வராது
என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் மது.
என்ன மது யோசிக்கிறாய்? நான் வேறு யாரோ அல்ல உன்
முதலாளி! நாளை நீ என்னுடைய பர்சனல் அஸிஸ்டெண்டாய் பொறுப்பேற்றால் இதே போல்
என்னுடன் பல இடங்களுக்கும் காரில் வர வேண்டியிருக்கும். மேலும் நீ
தைரியசாலியான பெண்தானே நான் என்ன உன்னை கடித்தா தின்று விடப் போகிறேன் நான்
ஒன்றும் அசைவப் பிராணிஅல்ல என்றான் அபிஷேக்.
நீங்கள்
சொல்வது வாஸ்தவம்தான். ஆனால் இப்போது நான் உங்கள் காரிய தரிசி அல்லவே!
திடீரென்று காரில் சென்று இறங்கினால் என்னுடைய தெருவே என்னை தப்பாக பேசும்.
அதனால் தயவு செய்து நீங்கள் கிளம்புகிறீர்களா என்றாள் மது.
அப்புறம்
உன் விருப்பம்! என்னுடன் வந்தால் ஜெய்ஹோவையும் கேட்ட மாதிரி இருக்கும்
வீட்டிற்கும் நேரத்திற்கு சென்றமாதிரி இருக்கும் என்று சொல்லவந்தேன்.
உங்கள்
அழைப்பிற்கு மிக்க நன்றி சார்! ஆனால் நான் பஸ்ஸில் போய் கொள்கிறேன் என்று
அருகில் இருந்த பஸ் நிறுத்தம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மதுமிதா.
மது அட்லீஸ்ட் நான் உன்னை பஸ் ஸ்டாப்பிலாவது டிராப் பண்ணுகிறேனே என்றான் அபிஷேக்.
இனியும் மறுத்தால் நாகரீகமாக இருக்காது என்று சரி விடமாட்டீர்கள் போலிருக்கிறதே என்று காரில் ஏறினாள் மதுமிதா.
காரில்
ஏசியின் காற்று மிதமாக இருக்க ஸ்டீரியோவைத் தட்டினான் அபிஷேக். ஜெய்ஹொ
பாடல் ஒலிக்க அதில் மூழ்கினாள் மது. அதன்பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை!
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அவர்களை கட்டி போட்டிருந்தார்.
பஸ்
நிறுத்தம் வர ஓரம் கட்டி நிறுத்தினான் அபிஷேக் . மது இறங்க கார் கதவை
திறந்தாள். அச்சமயம் ஜீன்ஸும் தொப்புள் தெரிய ஸ்லிவ்லெஸ் டாப்ஸும் அணிந்த
பெண் ஒருத்தி அங்கு வந்தாள்.
அபி!
அபிக் கண்ணா உன்னை எங்கேல்லாம் தேடறது உனக்காக நான் காத்துக் கிடக்க இந்த
பிச்சைக்காரியை எங்கு பிடிச்சே! பணக்காரன் கிடைச்சா விடமாட்டாலுங்களே! ஏய்
இன்னும் என்ன பார்த்துகிட்டு இறங்கி ஓடிப்போ! என்றவளை முறைத்தாள் மது.
நிலவு வளரும்(5)
டிஸ்கி உடல்
நலம் சரியில்லை மீண்டும் ஜுரம் வந்து விட்டது. அதனால் இன்று நிறைய பதிவிட
முடியவில்லை! இந்த கதைக்கு பொருத்தமான படங்கள் இருந்தால்
[You must be registered and logged in to see this link.] மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவலாமே! நன்றி!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: என் இனிய பொன் நிலாவே!பகுதி 5
அருமையான கதை பகிர்வுக்கு நன்றி நண்பரே
உடல் நலனைக் கவனித்துக்கோங்க
உடல் நலனைக் கவனித்துக்கோங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: என் இனிய பொன் நிலாவே!பகுதி 5
நன்றி யூஜின்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» என் இனிய பொன் நிலாவே! பகுதி 2
» என் இனிய பொன் நிலாவே!பகுதி 6
» என் இனிய பொன் நிலாவே! பகுதி 9
» என் இனிய பொன் நிலாவே! பகுதி 10
» என் இனிய பொன் நிலாவே!
» என் இனிய பொன் நிலாவே!பகுதி 6
» என் இனிய பொன் நிலாவே! பகுதி 9
» என் இனிய பொன் நிலாவே! பகுதி 10
» என் இனிய பொன் நிலாவே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum