தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
மாத்தியோசி: இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?
2 posters
Page 1 of 1
மாத்தியோசி: இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?
பரபரப்பான, பதற்றமான இன்றைய வாழ்க்கைச் சூழல், நமது இதயத்தை நாளுக்கு
நாள் பலவீனமாக்கி வருகிறது. மன அழுத்தம் மாரடைப்புக்கு முக்கிய காரணம் என,
சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நாம் குண்டாக இல்லை, அதிக
கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிடுவதில்லை. நமக்கு மாரடைப்பு வராது என்று,
யாரும் சொல்ல முடியாது. மன அழுத்தத்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய
ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, மன மகிழ்ச்சி முக்கியம். மாரடைப்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்குத்
தான் வரும் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி வருகிறது. 25 வயது, 30 வயது
இளைஞர்கள் மாரடைப்பு நோய்க்கு பலியாவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில், 4
கோடி பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மூன்றில் ஒரு பங்கு,
ஓரிரு நிமிடங்களிலேயே இறந்துவிடுகின்றனர்.
எதிர்மறை எண்ணங்கள், கோபம்,பொறாமை, ஆவேசம், ஆத்திரம், போன்ற
உணர்வுகளால், மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன்
விளைவாக, வேண்டாத அட்ரீனலின், கார்டிசால் போன்ற கெட்ட ஹார்மோன்கள் உடலில்
அதிகமாகச் சுரந்து, ரத்தத்தில் கலக்கின்றன. இது, ரத்தக் குழாய்
அடைப்புக்கு, முக்கிய காரணமாகிறது. நல்ல சிந்தனை, அக மகிழ்ச்சி, மன
அமைதி போன்றவற்றால், உடல் சீராக இயங்கும்போது, மூளையின் அலைகள் ஆல்பா
நிலையில் செயல்பட்டு, என்டார்பின், செரடோனின், மெலடோனின் போன்ற, நல்ல
ஹார்மோன்கள் அதிக அளவில் சுரந்து ரத்தத்தில் கலப்பதால், ரத்தக் குழாய்களில்
அடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதோடு, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அடைப்புகளை
ஓராண்டில் கரைத்து, பூரண குணமடைய வழி கிடைக்கும்.
மது குடிப்பது இதயத்துக்கு நல்லதா?
தினமும்,
மிகக் குறைந்த அளவில் (30 மி.லி.,) மது குடிப்பது, இதயத்துக்கு நல்லது
என்பது உண்மை தான் என்றாலும், டாக்டர்கள் குறிப்பிடும் மிகக் குறைந்த அளவு
மதுவோடு, யாரும் நிறுத்துவது இல்லை. மது அதிகமாகக் குடிப்பது,
இதயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுவில்
உள்ள நச்சு, இதயத் தசைகளைப் பாதித்து, இதயத்தின் செயல் திறனை
குறைத்துவிடும். மது உடலுக்கு எல்லா வகையிலும் தீங்கு ஏற்படுத்துகிறது.
புகைப் பழக்கமும் கெடுதல் என்பது நமக்குப் பாலபாடம். ஆனால்,
புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தான் வேதனை.
ஆண்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும்
தவறு.
மாதவிடாய் காலத்துக்குப் பின், பெண்களுக்கும் மாரடைப்பு நோய் வரும்
வாய்ப்பு அதிகம். பாரம்பரிய மரபணு குணாதிசயங்களால், பல பெண்கள் இளம்
வயதிலேயே மாரடைப்பு நோய் வருகிறது. மேலும், சிலருக்கு கர்ப்பப்பையோடு
சினைப் பைகளும் நீக்கப்படுவதால், அவர்களுக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்பு
அதிகம்.
எல்லா கொலஸ்ட்ராலும் கேடு ஏற்படுத்துமா?
இல்லை.
ரத்தத்தில் எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், எல்.டி.எல்., கொலஸ்ட்ரால் என, இரு
வகை கொலஸ்ட்ரால் உண்டு. இதில், எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால்
என்றும், எல்.டி.எல்., கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும்
அழைக்கப்படுகிறது. எச்.டி.எல். கொலஸ்ட்ரால் எவ்வளவுக்கு எவ்வளவு ரத்தத்தில்
அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மாரடைப்பு அபாயத்தில் இருந்து
நாம் தப்பிக்க முடியும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க, மாத்திரைகள் இல்லை.
ஆனால், உடற்பயிற்சிகள் மூலம் அதிகரிக்க முடியும். கெட்ட குணங்களைக் கொண்ட
எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும்
அதிரோஸ்க்ளீரோஸினை உருவாக்கும். இந்த கொலஸ்ட்ராலை குறைக்க, மருந்துகள்
உள்ளன. சீரான உடற் பயிற்சியும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
"பேஸ் மேக்கரின்' பயன் என்ன?
இதய ரத்த
நாளங்களில் அடைப்பு, இதய இயக்க பாதிப்பு, சீரற்ற இதய
துடிப்புள்ளவர்களுக்கு, பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்படும். துடிப்பு
இயக்கக் கருவி மற்றும் லீட் ஆகியவற்றை, உள்ளடக்கியது இக்கருவி. இதயத்துடன்,
லீட் இணைக்கப்பட்டிருக்கும். கருவி, இதயத்திற்கு மேல், உடலின் வெளித்
தோலுக்கு அடியே பொருத்தப்பட்டி
ருக்கும்.
கவனமாய் இருக்கணும்: பேஸ் மேக்கர் கருவியில் உள்ள பேட்டரி, 5 முதல் 10
ஆண்டுகள் வரை நீடிக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில், பேட்டரியை மாற்றிக்
கொள்வதோடு, வேறு சிகிச்சைகளின் போது, இது குறித்து தெரிவிக்க வேண்டும்.
மின் சாதனங்கள், சக்தி வாய்ந்த காந்தங்கள் அருகே செல்லக் கூடாது. பேஸ்
மேக்கர் மீது மொபைல்போனை வைக்கக் கூடாது.
உங்களுக்கு தெரியுமா?: உடலில் உள்ள ரத்தக்
குழாய்களின் நீளம், 60 ஆயிரம் மைல் தூரம். இதயத்தில் இருந்து பம்ப்
செய்யப்படும் ரத்தம், இந்த 60 ஆயிரம் மைல் தூரத்தைக் கடக்க எடுத்துக்
கொள்ளும் நேரம் 1 நிமிடம். இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கிறது.
ஒரு நாளைக்கு, 7,200 லிட்டர் ரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது. நம் உடலில்
உள்ள 5 லிட்டர் ரத்தத்தை சுத்தப்படுத்த, இதயம் தொடர்ந்து பம்ப் செய்து
கொண்டே இருக்கிறது. இதனால் தான், ரத்தம் உடலில் ஓடிக் கொண்டேயிருக்கிறது.
இயந்திரங்கள் இயங்குவதற்கு மின் விசை தேவை. அதைப்போன்று, இதயமும் உடலில்
உள்ள மின் விசை மூலம் தான் இயங்குகிறது. எந்த இயந்திரத்துக்கும் ஓய்வு
உண்டு. ஓய்வில்லா இயந்திரம் இதயம்.
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மாத்தியோசி: இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?
அரசனின் கவனத்திர்க்கு :
மிகக் குறைந்த அளவில் (30 மி.லி.,) மது குடிப்பது, இதயத்துக்கு நல்லது
என்பது உண்மை தான் என்றாலும், டாக்டர்கள் குறிப்பிடும் மிகக் குறைந்த அளவு
மதுவோடு, யாரும் நிறுத்துவது இல்லை. மது அதிகமாகக் குடிப்பது,
இதயத்துக்குத் தீங்கு விளைவிக்கும்

தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» கொலஸ்ட்ரால் நண்பனா? பகைவனா?
» அதிகமா கூல்டிரிங்க் குடிக்காதீங்க! இதயத்துக்கு ஆபத்து !!
» இதயத்துக்கு இதமானது எது?
» இதயத்துக்கு தான் வலி ...!
» ஊறுகாய் இதயத்துக்கு டேஞ்சர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum