தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையம்
3 posters
Page 1 of 1
சுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையம்
சாப்பிடுவதற்காக என்று ஒரு ஊருக்கு செல்ல வேண்டும் என்று நீங்கள் எண்ணியதுண்டா?அல்லது அந்த ஊர் சாப்பாட்டை சுவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் உங்களிடம் இருக்கிறதா?
ஆம் எனில் ஸ்பூன்டிரிப் இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தி விடும். மாறாக சுவைக்கும் சுற்றுலாவுக்கும் என்ன தொடர்பு என்று கேட்பவராக நீங்கள் இருந்தால் ஸ்பூன்டிரிப் உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும்.
காரணம் ஸ்பூன்டிரிப் சுவை பயணங்களை மேற்கொள்ள உதவும் இணையதளமாக இருப்பது தான். அதாவது சுவையின் அடிப்படையில் பயணங்களை மேற்கொள்ள வழி செய்யும் இணைய மேடையாக உருவக்கப்பட்டுள்ளது.
சுவை பயணங்கள் என்றால் உணவுக்காக மேற்கொள்ளப்படும் பயணங்கள். அதாவது எந்த இடத்திற்கு செல்கிறோமோ அந்த இடத்தின் பிரத்யேக உணவு வகைகளை சுவைத்து மகிழ்வதற்கான பயணங்கள். குறிப்பிட்ட அந்த உணவு வகைகளை சுவைப்பதற்காக என்றே மேற்கொள்ளும் பயணங்களாகவும் வைத்து கொள்ளலாம்.
இப்படி தேடி தேடி உணவு வகைகளை சுவைத்து பார்க்கும் விருப்பம் கொண்டவர்கள் எண்ணற்றவர்கள் இருக்கின்றனர். அத்தகைய விருப்பம் கொண்டவர்களை உள்ளூர் உணவு பிரியர்களோடு சேர்த்து வைப்பது தான் ஸ்பூன்டிரிப் தளத்தின் வேலை.
உலகை சுற்றிப்பார்க்க வேண்டும், ஆனால் உள்ளுர் உணவை சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த தளத்தில் தாங்கள் அடுத்தாக செல்ல உள்ள இடத்தை குறிப்பிட்டு அந்த இடத்தில் வழங்கப்படும் உணவு சுற்றுலா திட்டங்களை தெரிந்து கொண்டு அவற்றில் பங்கேற்கலாம்.
அதற்கேற்ப சுற்றுலா பயணிகளை வரவேற்று உணவளிக்க தயாராக இருப்பவர்கள் இந்த தளத்தில் உறுப்பினராகி தங்களை பற்றிய விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். அவர்கள் சமையல் கலைஞர்களாகவும் இருக்கலாம்.
சமையலில் ஆர்வம் கொண்டவர்களாகவும் இருக்கலாம். உணவை தயாரித்து விருந்தளிக்க விருப்பம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இந்த பட்டியலில் இருந்து சுற்றுலா பிரியர்கள் தங்களுக்கு பொருத்தமான ஊரை தேர்வு செய்து கொள்ளலாம்.
எந்த ஊரில் என்ன வகையான உணவு வகையை சுவைக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானமாக அறிந்திருப்பவர்கள் ஊரையும், உணவு வகையையும் குறிப்பிட்டு அதற்கேற்ற திட்டத்தை தேடிப்பார்க்கலாம். சுற்றுலா செல்ல உத்தேசித்துள்ள காலத்தையும் குறிப்பிட்டு தேடிப்பார்க்கலாம்.
இதற்கு மாறாக பொதுவாக இங்கே பட்டியலிடப்பட்டுள்ள உணவு திட்டங்களிலும் பொருத்தமானதை தேடிப்பார்த்து முடிவு செய்து கொள்ளலாம். நாடுகளின் அடிப்படையில் இந்த திட்டங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
எந்த நாட்டிற்கு செல்ல இருக்கிறோமோ அந்த நாட்டில் உள்ள விதவிதமான உணவு வகைகளை சுவைத்து பார்க்க இந்த பட்டியலை பயன்படுத்தி கொள்ளலாம். உதாரணத்திற்கு ஜப்பான் நாட்டு உணவில் நாட்டம் கொண்டவர்கள் ஜப்பான் நாட்டை கிளிக் செய்து அதில் உறுப்பினர்கள் சமர்பித்துள்ள திட்டங்களில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
அதே போல விருந்து ரகங்களின் அடிப்படையிலும் தேர்வு செய்து கொள்ளலாம். பண்ணை வீட்டில் இருந்து அமர்ந்தபடி உணவை சுவைத்து மகிழ்வது, உயர்தரமான வைன் மதுவை சுவைத்த படி விருந்து சாப்பிடுவது என பலவகையான திட்டங்கள் இருக்கின்றன.
இவற்றோடு உணவு சார்ந்த பயணங்களான உணவுலாக்களும் இருக்கின்றன. சுவைப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் அதன் செய்முறையை கற்று கொள்ளும் திட்டங்களும் இருக்கின்றன.
அவரவர் தங்கள் விருப்பத்திற்கேற்ற திட்டத்தை தேர்வு செய்து கொண்ட பின் அந்த நபரோடு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு நம்ம ஊர் உணவு கிடைக்குமா என்று கவலைப்படுவதை விட்டு விடுங்கள், எந்த இடத்திற்கு சென்றாலும் அங்குள்ள அழகான இடங்களை சுற்றிப்பார்த்தால் மட்டும் போதாது அந்த இடத்தின் கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களே உண்மையில் சுற்றுலாவில் ஆர்வம் கொண்டவர்கள்.
அதே போல எந்த உருக்கு செல்கிறோமோ அந்த ஊரின் கைமணத்தை சுவைத்து பார்க்காவிட்டால் அந்த பயணம் முழுமையானதாக ஏற்றுக் கொள்ளவே முடியாது.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சுவை உண்டு. ஒரு மணம் உண்டு. அந்த சுவையையும் மணத்தையும் ரசித்து ருசிக்க வேண்டும் என்று நினைக்கும் உணவு பிரியர்கள் இந்த தளத்தை பெரிதும் விரும்புவார்கள்.
இணையதள முகவரி
http://spoontrip.com/en

jesudoss- மல்லிகை
- Posts : 77
Points : 215
Join date : 19/09/2011
Age : 41
Location : JEDDAH,SAUDIARABIA
Re: சுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையம்
புதுவித தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சுவை பயணங்களை உருவாக்கி தரும் இணையம்
தமிழ் நாட்டு சாப்பாடு மாதிரி எனக்கு ஏதும் ரொம்ப சுவை யா தேறியலா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» புதுப் புது அணிகளை உருவாக்கி இருக்காங்களாம்...!
» குட்டி சுவாமியாரை உருவாக்கி சரிவை சமாளிக்கணும்...!!
» வீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கும் பயனுள்ள இணையதளம்
» பாதுகாப்பான கடவுச்சொல்லை உருவாக்கி மற்றவர்கள் ஹாக் செய்ய முடியாதபடி தடுக்க ஒரு இலவச மென்பொருள் ?
» இணையம் வழி உரையாடலுக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum