தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்னால முடியாது!

4 posters

Go down

என்னால முடியாது! Empty என்னால முடியாது!

Post by thaliranna Tue Oct 04, 2011 9:45 pm

என்னால முடியாது!


[You must be registered and logged in to see this link.]
காலை
வேளை! ஏய் சுதா! அங்க என்ன பண்றே? இந்த பாத்திரத்தை எல்லாம் கழுவி வை! வா
இங்க வேலை நிறைய இருக்கு! சதா புத்தகம் படிச்சிகிட்டு இருந்தா எல்லா
வேலையும் ஆகிடுமா? என்று குரல் கொடுத்தாள் சுதாவின் தாய் விஜயா.


“என்னால முடியாது! ரமா என்ன பண்றா? அவளை கூப்பிட்டு கழுவச் சொல்லு! இந்த
வேலையெல்லாம் எனக்குத் தெரியாது! பிடிக்கவும் பிடிக்காது! என்று மறுத்தாள்
சுதா.


ஆமா! வேலைன்னாலே உனக்கு கஷ்டமா இருக்கு! இந்த வயசுல கத்துகிட்டாத்தானே
நாளைக்கு உதவும். எல்லா வேலையும் ரமாவே செஞ்சிகிட்டு இருந்தா நீ எப்ப
கத்துக்கிறது? முதல்ல கஷ்டமாத்தான் இருக்கும் போகபோகப் பழகிடும். வாம்மா!
சுதா கொஞ்சம் ஹெல்ப் பண்ணும்மா!

அதெல்லாம் முடியாது ரமாவை கூப்பிட்டுக்க நான் காமிக்ஸ் படிச்சிகிட்டு இருக்கேன் என்று கதை புத்தகத்தில் மூழ்கினாள் சுதா.

அவ தண்ணி கொண்டு வர போயிருக்கா! உன்னால முடியுமா முடியாதா? அம்மா கத்த
என்னால் முடியாதுன்னு சொல்லிட்டேன் இல்லே ஏன் தொந்தரவு பண்றே? என்று
மீண்டும் புத்தகத்தில் மூழ்கினாள் சுதா.


பாவம் ரமா அவளையே எவ்வளவு வேலை வாங்கறது அவ தண்ணி எடுத்து வர போயிருக்கா!
ஒரு நாளாவது நீ எடுத்து வந்திருக்கியா அட்லீஸ்ட் ஒரு குடமாவது! ஆனா வீட்ல
நீதான் அதிக தண்ணி செலவழிக்கிற ஆளு! நேரம் ஓடுது கொஞ்சம் ஹெல்ப்
பண்ணாத்தான் என்ன?


அதெல்லாம் எனக்குத் தெரியாது! நானா அவளை தண்ணி கொண்டு வரச் சொன்னேன்.
அவளாலே முடியலைன்னா முடியலைன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே!

இனி
இவளோடு பேசிப் பயனில்லை என்று தானே பாத்திரம் கழுவி முடித்தால் தாய். இவளை
எப்படி வழிக்கு கொண்டு வருவது எனவும் யோசிக்க ஆரம்பித்தாள்.


மறுநாள் காலை சுதா பள்ளிக்குச் செல்ல குளித்துவிட்டு ஆடைகளை எடுத்தாள் அவை
துவைக்கப் படாமல் அழுக்காக இருக்க அம்மா ட்ரெஸ்ஸ துவைக்கலையா? என்றாள்.


என்னால முடியாதும்மா இனி உன் டிரெஸ் துவைக்க! நேத்து நீதானே சொன்னே?
முடியலைன்னா முடியலைன்னு சொல்லிட்டுப் போன்னு! அதான் துவைக்க முடியலைம்மா
சொல்லிட்டேன் என்றாள் தாய்.


கண்களில் நீர் மல்க அழுக்கடைந்த துணியை போட்டுக் கொண்டு ரமா தலையை வாரி
விடேன் என்றாள் ஐயையோ என்னால முடியாதும்மா! எனக்கு கையெல்லாம் வலிக்குது
என்றாள் ரமா.


வேறு வழியின்றி தானே பின்னிக் கொண்டு அழுக்கான டிரெஸ்ஸோடு பள்ளிக்கு
சென்றாள் சுதா. அங்கே அழுக்கு துணிபோட்டு வந்ததால் வெளியே நிறுத்தினர்.
மதிய உணவு இடைவேளையில் தன் பையில் டிபன் பாக்ஸை தேடிய சுதா அதிர்ந்தாள்.


அங்கு டிபன் பாக்ஸ் இல்லை! வழக்கமாக அம்மாதான் பையில் வைப்பது இன்று
வைக்கவில்லை போலும் அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. மாலையில்
சோர்வோடு வீடு திரும்பியவள் அப்படியே படுக்கையில் விழுந்தாள்.


அப்போது அங்கு வந்த அவள் தாய் சுதா! ஒரு நாள் எங்க உதவியில்லாம உன்னால
சமாளிக்க முடியலை பார்த்தியா? நானும் ரமாவும்தான் உன்னோட வேலையெல்லாம்
பார்த்து பார்த்து செய்யறோம். பதிலுக்கு ஒரு சின்ன உதவி கேட்டாலும் நீ
செய்ய மறுக்கிறே? உன் வேலைகளோட வீட்டு வேலைகளையும் செய்யற எங்களுக்கு நீ
இந்த சின்ன உதவி கூட செய்யலைன்னா எப்படி? நாங்க உன்னோட வேலைகளை செய்யாத
போது உன் கதி என்னாச்சு பார்த்தியா? இது போல வீட்டு வேலைகளை செய்யாம விட்டா
வீட்டோட கதி என்னாகும்னு யோசிச்சுப் பார்! அழாதே வா சாப்பிடலாம் காலையில
சாப்பிட்டவள் ரொம்ப சோர்வா இருக்கே! என்று அவளை வருடிக் கொடுத்தாள் அந்த
தாய்.

அம்மா என்னை மன்னிச்சுடும்மா! இனி கட்டாயம் வீட்டு வேலைகளில் என்னோட பங்கும் இருக்கும் என்று அன்னையை அணைத்துக் கொண்டாள் சுதா.


thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

என்னால முடியாது! Empty Re: என்னால முடியாது!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 04, 2011 9:46 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

என்னால முடியாது! Empty Re: என்னால முடியாது!

Post by தங்கை கலை Tue Oct 04, 2011 9:48 pm

:héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

என்னால முடியாது! Empty Re: என்னால முடியாது!

Post by யுவாதமிழ் Sat Oct 08, 2011 12:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
யுவாதமிழ்
யுவாதமிழ்
ரோஜா
ரோஜா

Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35

Back to top Go down

என்னால முடியாது! Empty Re: என்னால முடியாது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum